Breaking
June 5, 2026

December 2025

“சிறை” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை”

வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா , இன்று படக்குழுவினருடன் தமிழ்த்திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில் படைப்பின் மீதான பெரும் மகிழ்ச்சியில், பட வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* தயாரிப்பாளர் SS லலித் குமார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.

இந்நிகழ்வில்..

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் பேசியதாவது..,

முதலில் திருப்பூர் சுப்பிரமணியன் அண்ணனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் அவரிடம் இரண்டு வருடங்களாக பேச வில்லை, ஆனால் நான் அழைத்தவுடன் எனக்காக நான் இல்லாமல் விழா நடக்குமா எனக் கேட்டு வந்தார். எஸ் ஏ சி சாரை சுப்பிரமணி அண்ணன் தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். இப்போது அவரது குடும்பத்தில் ஒருவனாக நான் இருக்கிறேன். கலைப்புலி தாணு, அம்மா சிவா, சுரேஷ் காமாட்சி என அனைவருக்கும் நன்றி.

சிறை ஒரு நிறைவான அனுபவம். முதன் முதலில் கதை கேட்ட போது, இயக்குநர் தமிழ் ஒரு ஒன் லைன் இருக்கிறது என்றார். அவர் சொல்லி முடித்தவுடன் இதில் என் பையனை நடிக்க வைக்கலாமா ? எனக்கேட்டேன், அவர் யோசித்துக் கொள்ளுங்கள் என்றார். இல்லை எனக்கு வெற்றிமாறன் படங்கள் பிடிக்கும் என் பையன் இந்த மாதிரி படத்தில் தான் அறிமுகமாக வேண்டும் என்றேன். பின் அவர் இயக்க முடியாத சூழலில் யாரை இயக்குநராக்கலாம் என்றபோது, சுரேஷை பரிந்துரைத்தார். வெற்றிமாறன் சாரிடம் கேட்டோம் தாராளமாகச் செய்யுங்கள் என வாழ்த்தினார். அடுத்து யாரை ஹீரோவாக போடலாம் என்ற போது, தமிழ் விக்ரம் பிரபு மட்டும் தான் இதற்குப் பொருத்தமானவர் என்றார். எடிட்டிங் பணிகளுக்கு பிலோமின் ராஜ் தான் வேண்டும் என்றேன், அவரும் சிறப்பாகச் செய்துள்ளார். மியூசிக் முதற்கொண்டு பிலோமின் மேற்பார்வையில் விட்டுவிட்டேன், இப்படத்தைத் தூக்கி நிறுத்தியது பிலோமின் தான். மாதேஷ் கேமரா அருமையாக செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியில் தெரிய ஒரே காரணம் விஜய் சார் தான். அவர் படம் மாஸ்டர் லியோ தான் எங்களுக்கு அடையாளம் அதை மறக்கவே மாட்டேன். இந்தப்படத்தை நீங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பீர்கள் எனத் தெரியும் அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசியதாவது..,

இந்த புராஜக்டில் இருப்பது எனக்கு பெருமை. பிலோமின் தான் இந்த கதையை என்னிடம் கொண்டு வந்தார். இயக்குநர் சுரேஷிடம் நான் இல்லாவிட்டாலும் இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் எனச் சொன்னேன். அவ்வளவு அருமையான கதை. இந்தப்படத்திற்கு உயிர் தந்தது நடிகர்கள் தான். விக்ரம் பிரபு, அனந்தா அக்‌ஷய் குமார் எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப்படத்தில் என்னுடன் உழைத்த என் இசைக் கலைஞர்களுக்கு என் நன்றிகள், முக்கியமாக யுவன் சங்கர் ராஜாவுடன் வேலை பார்த்தது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. அவருக்கு என் நன்றி. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.

நடிகை ஆனந்தா பேசியதாவது..,

சிறை என் முதல் படம், எனக்கு மிகப்பெருமையாக உள்ளது. நான் விக்ரம் பிரபு சார் ஜோடியாக நடித்துள்ளேன். எனக்கு வாய்ப்பு தந்த லலித் குமார் சார், சுரேஷ் சார் எல்லோருக்கும் நன்றி. நான் திரைக்குடும்பம் இல்லை. நான் ஆசையில் தான் இந்தப்பட ஆடிஷன் சென்றேன். தமிழ் சார் தான் என்னைத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு என் நன்றி. ஒரு கனவு நனவானது போல இருக்கிறது அனைவருக்கும் நன்றி.

நடிகை அனிஷ்மா பேசியதாவது..,

இந்த மேடையில் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் சின்ன வயதிலிருந்து நிறைய ஆசைப்பட்டுள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பு தந்த சுரேஷ் சாருக்கு, லலித் சாருக்கு நன்றி. விக்ரம் பிரபு சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியான அனுபவம். என்னை மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். அக்‌ஷய் எனக்கு மிக ஆதரவாக இருந்தார். இப்போது நல்ல நண்பராகி விட்டார். இருவருக்கும் மதுரை சென்றது ஒரு ஸ்கூல் போன மாதிரி இருந்தது. சூரி சார் தான் எங்களை வழிநடத்தினார். இப்படம் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் தமிழ் பேசியதாவது..,

நன்றி சொல்லத்தான் இந்த மேடைக்கு வந்துள்ளேன். பிலோமின் தான் லலித் சாரிடம் என்னை அனுப்பி வைத்தார். அவர் என்னிடம் விசாரணை மாதிரி ஒரு படம் செய்ய வேண்டும் என்றார். அவர் நினைத்திருந்தால் அவர் மகனை எப்படி வேண்டுமானாலும் ஒரு படத்தில் நடிக்க வைக்கலாம் ஆனால் அவர் வெற்றிமாறன் படம் மாதிரி வேண்டும் என்றார். ஒரு ஒன்லைன் இருக்கிறது என்று உண்மை சம்பவமாகத் தான் இந்தக் கதை பற்றிச் சொன்னேன். இந்தக்கதையை நாம் செய்வோம் என்றார். அதன் பிறகு சுரேஷ் சார் வந்தார் வெற்றிமாறன் உதவியாளர் என்றால் ஓகே என்று லலித் சார் சொன்னார். நம் எழுதிய கதையை நாமே பார்த்து அழ வைப்பது மிகப்பெரிய விசயம், அதை சுரேஷ் சார் செய்துள்ளார். நாம் போய் கதை சொன்னால் கதை கேட்க ஒருத்தர் இருக்கிறார் என விக்ரம் பிரபு சாரிடம் போனேன், அவரும் கதை கேட்டு செய்கிறேன் என்றேன். இந்தக்கதை உண்மை சம்பவம். உண்மையானவர்களைப் பார்த்த ஒரே ஆள் நான் தான், ஆனால் அவர்கள் முகம் மறைந்து இப்போது அக்‌ஷய், அனிஷா முகம் தான் ஞாபகத்தில் வருகிறது. இதில் எல்லோரும் அவ்வளவு உழைத்தார்கள். பிலோமின், மாதேஷ் எல்லோரும் எங்களுடைய குடும்ப டீம். என்னை வடிவமைத்தவர் வெற்றிமாறன் சார் தான். விசாரணை ஷீட்டிங்கில் ஏதாவது கதை வைத்திருக்கிறாயா? என்றார். நான் டபுள் ஹீரோ கதை சொன்னேன். உன் பலமே போலீஸ் தான் அதில் உனக்குத் தெரிந்ததை வைத்துக் கதை எழுது என்றார். அப்படி உருவானது தான் டாணாக்காரன், இப்போது சிறை. நான் செய்திருந்தால் கூட இப்படி எடுத்திருக்க மாட்டேன். நான் வெற்றி சார் மாதிரி லாஜிக் பார்ப்பேன் ஆனால் சுரேஷ் மேஜிக்கை செய்து அசத்திவிட்டார். சுரேஷ் சார் என்னை விடச் சிறப்பாகச் செய்து ஜெயித்தது எனக்கு சந்தோசம். படம் ஜெயித்தால் இன்னும் சந்தோசம் நன்றி.

நடிகர் அக்‌ஷய் குமார் பேசியதாவது..,

எக்ஸாம் ஹாலுக்கு போனது போல் எல்லாம் மறந்து விட்டது. முதலில் பிலோமின் சாருக்கு நன்றி. அவர் மகனுக்குக் கூட இவ்வளவு செய்திருக்க மாட்டார். மாதேஷ் சாரும் அவர் டீமும் அவ்வளவு எனர்ஜியாக உழைப்பார்கள் அவர்களுக்கு நன்றி. ஜஸ்டின் சார் உங்கள் இசையில் நடித்தது மகிழ்ச்சி. சுரேஷ் சார், தமிழ் சார், எந்த நம்பிக்கையில் என்னை நடிக்க வைத்தீர்கள் எனத் தெரியவில்லை, நீங்கள் இது கஷ்டமாக இருக்கும் எனச் சொன்னீர்கள், ஆனால் எல்லாவற்றையும் சொல்லித் தந்தீர்கள் நன்றி. விக்ரம் பிரபு சார் என் முதல் ஷாட்டே உங்களுடன் தான். எனக்கு நிறைய நடிக்க கற்றுத் தந்தீர்கள். நன்றி. சூரி சார் என்னையும், அனிஷாவையும் வீட்டு வேலை செய், சமை என்றெல்லாம் சொன்னார் எதுக்குடா எனத் தோன்றியது, ஆனால் நடிக்கும் போது தான் புரிந்தது. நன்றி. அனிஷா எனக்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கும் தமிழில் அறிமுக படம். வாழ்த்துக்கள். இறுதியாக அப்பா, கண்டிப்பான புரடியூசர். அவர் கண்டிப்பாக இருந்தது எனக்கு உதவியாக இருந்தது. என அம்மா மற்றும் குடும்பத்திற்கு நன்றி. கஷ்டமாக இருந்தாலும் எனக்குப் பிடித்துச் செய்தேன் எல்லோரும் உதவி செய்தார்கள் நன்றி.

இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசியதாவது..,

சிறை உண்மைக்கதை, உண்மையான மனிதர்களைப் பற்றிய படம். தமிழ் என்னிடம் சொல்லும்போது அப்படித்தான் சொன்னார். ஒரு படைப்பு அதற்குத் தேவையானதை அதுவே செய்து கொள்ளும் என்பார்கள் இப்படத்திலும் அது தான் நடந்தது. லலித் சார் வெற்றிமாறன் அஸிஸ்டெண்ட் என்றால் ஓகே என்றார், அவர் நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன் என நம்புகிறேன். ஐஸ்டின் எத்தனை சண்டை போட்டாலும் அவர் மிகச்சிறப்பான இசையைத் தருவார். பிலோமின் மிகப்பெரிய உதவியாக இருந்தார். நடிகர்களை கையாள்வது எனக்குக் கஷ்டம் சூரி அதைப்பார்த்துக்கொண்டார். மாதேஷ் முதல் அனைத்து கலைஞர்களும் முழு உழைப்பைத் தந்துள்ளனர். ஒவ்வொரு டெக்னீஷியனும் அவரவர் வேலையை வெகு அர்ப்பணிப்புடன் செய்துள்ளார்கள். நடிகர்கள் எல்லோரது பெயரையும் சொல்வது கஷ்டம். எல்லோரும் குறிப்பிட்டு காலகட்டத்தில் முடிக்க பெரும் ஒத்துழைப்பு தந்தனர். விக்ரம் பிரபு சார் கிடைத்தது எனக்கு பெரும் அதிர்ஷ்டம். இக்கதாபாத்திரத்திற்காக உடலை ஏற்றி, மெச்சூர்டான ஏட்டாக அற்புதமாக நடித்தார். அக்‌ஷய் கதைக்குள் வந்து, இக்கதாப்பாத்திரத்திற்காக மிக கடினமாக உழைத்தார். உடலை குறைத்து, தாடி மீசை வளர்த்தி, அந்த கதாபாத்திரமாக மாறினார். ஒரு இன்னொசன்ஸ் முகம் தேவைப்பட்டது அனிஷ்மாவிடம் அது இருந்தது, நன்றாக நடித்துள்ளார். அனந்தாவும் அவர் பாத்திரத்தைச் சிறப்பாக செய்துள்ளார். நான் வீட்டிலிருந்ததை விட வெற்றிமாறன் சாருடன் இருந்தது தான் அதிகம். ரஞ்சித் அண்ணன் தான் என்னை வெற்றிமாறனிடம் அனுப்பினார். அவருக்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்தும் அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி. இந்த படத்திற்குள் ஒரு பொறுப்பு இருக்கிறது அதைச் சரியாகச் செய்துள்ளேன் என நம்புகிறேன். அந்த பார்வையை எனக்குத் தந்த வெற்றிமாறன் சாருக்கு நன்றி. ரொம்ப முக்கியமான படம், நெருக்கமான படம். அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது..,

தம்பி வெற்றிமாறன் பட்டறையில் தீட்டப்பட்ட இரு திறமைகள் சுரேஷ், தமிழ். இருவரும் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. படம் பார்த்தேன் மிக அற்புதமாக உள்ளது. விக்ரம் பிரபு காவலராகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் தந்தையிடம் பெருமையாகச் சொன்னேன். இப்படத்தைப் பற்றி எல்லோரிடமும் சொல்லி விளம்பரம் செய்து வருகிறேன். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் அருண் விஸ்வா பேசியதாவது..,

இந்த வருடம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நான் தயாரிப்பாளராக ஆக ஆசைப்பட்டதில்லை, இயக்குநராக ஆசைப்பட்டு ஏதோ ஒரு வழியில் தயாரிப்பாளர் ஆகிவிட்டேன். என்னை மிக மரியாதையாக நடத்திய லலித் சாருக்கு என் நன்றி. அக்‌ஷய் சில வருடங்கள் முன் துக்ளக் தர்பார் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தார். அவர் மீண்டும் நடிப்பார் என நினைக்கவில்லை. இந்தப்படம் பார்த்துவிட்டேன், சமீபத்தில் ஒரு படம் பார்த்து விட்டு நண்பர்களுடன் 2 மணி நேரம் பேசியது இந்தப்படம் தான். லலித் சார் ஆரம்ப காலத்தில் பால் போட்டுக்கொண்டிருந்தார், அவர் சொந்த உழைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக இத்தனை பெரிய தயாரிப்பாளராக மாறியுள்ளார். அவர் மிக கண்டிப்பான தெளிவான தயாரிப்பாளர். அவர் ஒரு விசயத்தில் இறங்கினால் கண்டிப்பாக அதை முழுமையான படைப்பாக முடித்துக் கொண்டு வரும் தெளிவு இருந்தால் தான் செய்வார். இந்த வருடத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் என்றால் அது சிறை தான். உங்களுக்கு முழுமையாக முக்கியமான கருத்தை வலுவாக சொல்லி, உங்களைத் திருப்தி படுத்தும் படமாக இருக்கும். யாருமே இதை முதல் இயக்குநரின் படமென சொல்ல முடியாது. சுரேஷ் அற்புதமாக இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு சாரில் ஆரம்பித்து, ஒவ்வொருவரும் அத்தனை சிறப்பாக நடித்துள்ளனர். முதல் ஃப்ரேமிலேயே இந்தப்படம் உங்களைக் கவர்ந்து விடும். இஸ்லாமிய பெயரை மையப்படுத்தி கடைசியாக வந்த படம் மாநாடு தான், ஆனால் இந்தப்படம் அதைத்தாண்டி ஒரு முக்கிய அம்சத்தைப் பேசும் படமாக வந்துள்ளது. வசூலிலும் இப்படம் ஜெயிக்கும் படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது..,

சிறை படம் பார்க்கும் வாய்ப்பு லலித் சார் மூலம் வாய்ப்பு கிடைத்தது. படம் பார்த்ததும் மிகவும் பிடித்துவிட்டது. தமிழை நினைத்து எனக்குப் பெருமையாக இருந்தது. எங்கள் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வந்து, இந்த கதையை இவ்வளவு அழுத்தமாக எழுதியுள்ளார் என பெருமையாக இருந்தது. சுரேஷ் எனக்குப் பிடித்த படைப்பாளிகளின் லிஸ்டில் வந்துவிட்டார். விக்ரம் பிரபுவை மிகவும் பிடித்துவிட்டது. அன்னை இல்லம் இனி பிஸியாகிவிடும். வெங்கட்பிரபு My name is Khan, I am not a terrorist என சொன்ன
ஒன்லைன் தான் மாநாடு படம் செய்யக்காரணமாக இருந்தது. அதைப்போல வலுவான விசயத்தை இப்படம் பேசியுள்ளது. நாம் தமிழ் சினிமாவில் முஸ்லீம் இனத்தவரை கொடுமையாகவே காட்டி வருகிறோம். அதைப்பற்றி அழுத்தமாக இப்படம் பேசுகிறது. தமிழ் சினிமாவுக்கு நல்ல நடிகராக அக்‌ஷய் கிடைத்துள்ளார். இளம் நடிகர்கள் தமிழில் இல்லை அந்தக்குறையை அக்‌ஷய் போக்கவேண்டும். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும்.

தயாரிப்பாளர் அம்மா சிவா பேசியதாவது..,

இப்படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன், நீங்கள் யார் அஸிஸ்டெண்ட் எனக் கேட்டேன், வெற்றிமாறன் என்றார். உண்மையில் வெற்றிமாறனுக்கு பெருமை சேர்த்துள்ளார். என் பார்வையில் முழுக்க முழுக்க இது இயக்குநரின் படம். சுரேஷ் உழைப்பு இல்லாமல் இது நடந்திருக்காது. ஒவ்வொரு சின்ன விசயத்தையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். அக்‌ஷய் அடுத்தடுத்து இது போல காதல் படங்கள் செய்ய வேண்டும். விக்ரம் பிரபு பார்த்துப் பிரமிப்பாக இருந்தது. போலீஸாக கம்பீரமாக வாழ்ந்திருக்கிறார். படம் மிக இயல்பாக பிரம்மாதமாக இருந்தது. தயாரிப்பாளர் லலித் மரியாதைக்குரிய நண்பர். அவருக்கு என் வாழ்த்துக்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். சிறை தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..,

லலித் எவ்வளவு கண்டிப்பானவரோ அந்தளவு அன்பானவர். கொரோனா காலத்தில் சினிமா மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்தது. எல்லோருக்கும் வேலை இல்லை. நான் தாணு சாருக்கு தான் பேசினேன், அவர் 100 முட்டை அரிசி அனுப்புகிறேன் அடுத்து ஒருவருக்கு, போன் செய் என்றார். லலித் சாருக்கு போன் செய்தவுடன் நேரில் வந்து 10 லட்ச ரூபாய் உதவி அளித்தார். அத்தனை அன்பானவர். தமிழ் சினிமா நன்றாக இருக்கிறது ஆனால் தயாரிப்பாளர்கள் தான் நன்றாக இல்லை. லலித் சார் மாதிரி எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். சிறை படம் பார்த்தேன். முதல் மூன்று நிமிடங்களில் நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டது. விக்ரம் பிரபு தமிழில் முக்கியமான ஹீரோவாக வந்துவிடுவார். படம் பார்த்தவுடன் வெற்றிமாறன் படம் போல் இருக்கிறது என்று தோன்றியது. அவர் உதவியாளர் என்றவுடன் மகிழ்ச்சி. வெற்றிமாறனைத் தாண்டி மனித உணர்வுகளைச் சின்ன சின்ன விசயங்களைப் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். தமிழின் முக்கியமான இயக்குநராக வந்துவிடுவார். அக்‌ஷய் எப்படி இப்படி ஒரு ரோல் செய்தார் என ஆச்சரியமாக இருந்தது. மிக அற்புதமாக நடித்துள்ளார். முஸ்லீம் பெயரை இந்திய ஒருமைப்பாட்டை அழகாகப் பேசும் படைப்பாக இந்தப்படம் இருக்கிறது. இந்தப்படத்தை யாரும் விளம்பரப் படுத்த தேவையில்லை கண்டிப்பாக வெற்றி பெறும், படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பேசியதாவது…,

ஶ்ரீதர் சார் என் மானசீக குரு அதற்குப் பிறகு கவித்துவமான இயக்குநர் பாலுமகேந்திரா, அதற்குப்பிறகு எனக்குப் பிடித்த இயக்குநர் வெற்றிமாறன். பாலுமகேந்திரா சாயல் இல்லாமல் இவர் படம் அதிரடியாக இருக்கும், அவரிடம் 15 வருடம் ஒருத்தர் இருந்துள்ளார் எனில் அவரின் சாயல் இருப்பது ஆச்சரியம் இல்லை. கதையின் கதாப்பாத்திரதை நாம் உருவாக்குகிறோம், அதில் யார் நடித்தாலும் சரியாக இருக்க வேண்டும். அது வெற்றிமாறனிடம் இருக்கும். அவரிடமிருந்து வந்து அருமையான படைப்பை சுரேஷ் தந்துள்ளார். அக்‌ஷய் உங்களுக்கு முதல் படத்தில் நல்ல டீம் கிடைத்துள்ளது. நல்ல ரோல் கிடைத்துள்ளது, உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது, அதைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். தயாரிப்பாளர் லலித் எதற்கு செலவு செய்ய வேண்டுமோ அதற்குச் சரியாக செலவு செய்வார். உலகம் முழுக்க தெரியக்கூடிய தயாரிப்பாளராக இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள். எனக்குக் கல்யாணம் செய்து வைத்தது சிவாஜி சார், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். விக்ரம் பிரபுவுக்கு முதல் படம் நன்றாக அமைந்தது அவருக்கு சமீபமாக நல்ல டீம் கிடைக்கவில்லை என வருத்தம் இருந்தது. இந்தப்படத்தில் கிடைத்தது எனக்கு சந்தோசம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

திருப்பூர் சுப்பிரமணியன் பேசியதாவது..,

ஒரு விழாவில் கதாநாயகனாக நடித்தவரை பற்றி ஆஹா ஓஹோ எனப் பேசுவதை விட, எப்போது இயக்குநரின் திறமையைப் பற்றிப் பேசுகிறார்களோ? அது தான் வெற்றிப்படம். இயக்குநரின் திறமையைப் பேசினால் அது வெற்றிப்படமாக இருக்கும். தமிழ் சினிமாவின் வெற்றிகள் குறைந்ததற்குக் காரணம் நடிகர்களின் தலையீடு தான். அவர்கள் தலையிடாமல் இருந்தால் தமிழ் சினிமா இன்னும் பெரிய வெற்றியைத் தரும். லலித் போன் செய்து வாழ்த்த அழைத்தார். படம் பார்த்தேன், நடிகர்கள் எல்லோரும் படத்தின் பாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளனர். இயக்குநர் அற்புதமாக இயக்கியுள்ளார். இவர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும். அக்‌ஷய் புதுமுகம் போல தெரியவில்லை அதற்குக் காரணம் இயக்குநர் தான். நல்ல கருத்துள்ள படத்தைத் தந்துள்ளார், எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது..,

சிறை மிகவும் முக்கியமான படம். அக்‌ஷய்க்கு இது பிள்ளையார் சுழி அவருக்கு வாழ்த்துக்கள். நல்லவேளை விசாரணை மாதிரி படம் கிடைக்கவில்லை. நீ மாட்டு சாணி தானே அள்ளினாய், நான் யானை சாணி அள்ளினேன். எல்லாமே அனுபவம் தான். டாணாக்காரன் படம் வெயிலில் உழன்று நடித்த போது, ஜிப்ரானிடம் போன் செய்து எப்படியெல்லாம் மியூசிக் செய்யப் போகிறீர்கள் எனப் பேசினேன். ஆனால் அந்தப்படம் கோவிடால் திரையரங்குக்கு வரவில்லை. இப்போது அதே டாணாக்காரன் டீமுடன் மீண்டும் இப்படம் கிடைத்தது சந்தோசம். உங்களுக்கும் வாழ்த்துக்கள். இம்மாதிரி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்தற்கு லலித் சாருக்கு நன்றி. என்னைத் தேர்ந்தெடுத்ததற்குத் தமிழ் சாருக்கு நன்றி. மாதேஷ் உங்கள் டீமுடன் வேலை பார்த்தது சந்தோசம். அனிஷ்மா, அனந்தா நீங்கள் கொஞ்ச நேரம் வந்தாலும் அட்டகாசமாக நடித்திருக்கிறீர்கள். நான் நடிக்கும் போது, சில காட்சிகளில் எப்படி இசை வரும் என நினைத்தேன். ஜஸ்டின் அற்புதமாகச் செய்துள்ளார். பிலோமின் கிரியேட்டிவ் ஹெட்டாக இருந்து இப்படத்தைச் செய்துள்ளார். நன்றி. சூரிக்கு நன்றி. இன்று இங்கு வந்து படத்தை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நான் பெருமைப்படுகிற டீம் அவர்களுடன் இருப்பது சந்தோசம். எல்லோருக்கும் நன்றி.

இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது..,

மிக சந்தோசமான மேடை இது. எங்க காலேஜில் இருந்து, உதவி இயக்குநராக என்னுடன் வந்தவர்களில் ஒருத்தர் சுரேஷ். அவர் வெற்றிமாறனிடம் வேலை பார்ப்பது தெரியும். அவர் சிறை படம் செய்கிறார் என்றவுடன் ஆவலாக இருந்தேன். லலித் சார் பையன் நடித்தது எல்லாம் தெரியாது. படம் பார்த்தேன் அது தந்த எக்ஸ்பீரியன்ஸ் தான் முக்கியம். ஒரு கலைஞனாக ஆர்ட்டுக்கு எவ்வளவு நேர்மையாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். சுரேஷ் கலைக்கு நேர்மையாக மிக முக்கியமான படத்தைத் தந்துள்ளார். வெற்றி சாரிடம் வேலை பார்த்து அவரிடம் கற்றுக்கொண்டு படம் செய்தாலும், இந்தப்படம் எனக்கு ஆச்சரியம் தந்தது. அந்த மனிதர்களுடன் வாழ்க்கைக்குள் நெருங்கி கூட்டிப்போனது. ஒரு வாழ்க்கையாக அதன் இயல்பைப் பேசியதை முக்கியமாகப் பார்க்கிறேன். எனக்கே கதாநாயகி எப்படியாவது கதாநாயகனுடன் சேர்ந்துவிட வேண்டுமென பதட்டம் வந்துவிட்டது. அட்டகாசமான மேக்கிங் இருந்தது. எடிட்டிங் ரிதமுடன் இருந்தது. ஜஸ்டின் பின்னணி இசை அற்புதமாக இருந்தது. கலை இயக்குநர் எங்கள் காலேஜ் செட் தான். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். மாதேஷ் ஊரை காட்டிய விதம் அருமை, இந்தப்படத்தில் நெருங்கி பார்க்க முடிந்தது. மிகவும் பிடித்தது. அக்‌ஷய் நன்றாகச் செய்துள்ளார். விக்ரம் பிரபு இப்படத்தில் மிகவும் எதார்த்தமாகப் புதிதாக நடித்திருந்தார், அவருக்கு வாழ்த்துக்கள். அனிஷ்மா மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். தமிழுடைய திரைக்கதை மிக நன்றாக இருந்தது. காவலர்கள் இவ்வளவு நல்லவர்களா ? என ஆச்சரியமாக இருந்தது. உண்மைக்கதை எனும் போது ஒத்துக்கொள்ளத் தான் சுரேஷ் மிக அழகாக இப்படத்தை எடுத்துள்ளார். இப்படம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. இப்படம் எல்லோருக்கும் பிடிக்குமென நம்புகிறேன், இப்படத்தை நம்பி எடுத்த லலித் சாருக்கு நன்றிகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..,

இம்மேடை எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது. இந்த வருடத்தில் என் உதவியாளராகள் படம் தந்து வருகிறார்கள். சுரேஷ் மாதிரி இயல்பான மிக நிதானமான ஆளைப் பார்க்க முடியாது. நான் செய்வது தவறாக இருந்தாலும், அதை சொல்லும் விதத்தில் அவர் நேர்மை இருக்கும். மனிதர்களைக் கையாளும் திறமை அவரிடம் உண்டு. அவருக்கு லலித் சார் கார் பரிசு தருகிறார். முதல் படம் எடுக்கும் போது இருக்கும் அழுத்தம் எல்லாத்தையும் விட்டுவிட்டு , மிக இயல்பாக அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்தப்படத்தில் போலீஸ் ஸ்டேஷன் சீன் உள்ளது அதைச் சரியாக எடுத்தால் படம் மிகப்பெரிய படமாக வரும் என்றேன். அதைத்தான் ரஞ்சித் பாராட்டினார். ஒரு விசயத்தை பிரச்சனையை அணுகுவதில், தீர்ப்பதில், அவருக்கு தனித்திறமை உள்ளது. ஆடுகளம் முடித்தவுடன் வந்து சேர்ந்தவர், என்னுடனே இருந்திருக்கிறார். சிறை படம் பார்த்துவிட்டேன். என்னுடன் இருந்தவர்கள் படம் செய்தால் என்ன தப்பு இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பேன். ஆனால் படம் பார்த்த எல்லோரும் என்னைக் கூப்பிட்டு பாராட்டினார்கள். படம் எல்லோருக்கும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பெரிய மகிழ்ச்சி தருகிறது. தமிழுக்கு அவர் வாழ்க்கையில் போலீஸ் நடைமுறை சார்ந்து நிறைய அனுபவங்கள் இருப்பதால் அது மிகப்பெரிய தாக்கம் கொடுக்கிறது. படத்தில் எடிட் மிக நன்றாக இருந்தது. படத்திற்கு மிக முக்கிய பலமாக மியூசிக் இருந்தது. முதல் ஐந்து நிமிடம் தான் விக்ரம் பிரபு தெரிகிறார் அதன் பிறகு கதாப்பாத்திரம் தான் தெரிகிறது. எல்லா கதாபாத்திரங்களும் அவ்வளவு அற்புதமாக நடித்துள்ளனர். எல்லாம் ஒன்றாக இணைந்து மிக அழகான படைப்பாக வந்து, நமக்குள் அழுத்தமான கேள்வியைக் கேட்கிறது. அனிஷ்மா சிரிப்பு அவ்வளவு அழகாக இருக்கிறது. அக்‌ஷய் அந்த கதாபாத்திரத்திற்குள் காணாமல் போயிருக்கிறார். அவர் இயல்பாக நடித்துள்ளார். இத்தனை பேரின் உழைப்பும் படத்திற்குப் பலமாக அமைந்துள்ளது. சுரேஷ் எடிட்டரின் உதவி பெரிய பலமாக இருப்பதாகச் சொன்னார், பிலோமின் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். இவ்வளவு நாட்களுள் படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல, அதை சுரேஷ் சாதித்துள்ளார். இப்படம் பார்த்த அத்தனை பேருக்கும் மகிழ்ச்சியைத் தருவது சந்தோசம். இந்த வாய்ப்பை சுரேஷுக்கு தந்ததற்கு நன்றி. படம் வெளியாகும் முன் கார் தருவதும் மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.

சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில் படைப்பின் மீதான பெரும் மகிழ்ச்சியில், பட வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* தயாரிப்பாளர் SS லலித் குமார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.

இப்படம் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கொல்கத்தாவில் எஸ்.ஏ.சிக்கு சிறந்த நடிகர் விருது!

இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது.’கூரன்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அது பற்ற இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது,

“நான் திரை உலகில் 45 ஆண்டுகளாகத் தயாரிப்பாளர், இயக்குநர் என்று இயங்கி வருகிறேன் .இப்போது நடிகராகவும் இருக்கிறேன்.சினிமாவில்
நான் ஓய்வெடுக்க நினைத்தாலும் அது முடிவதில்லை. சினிமா ஒரு காற்று போன்றது. எப்போதும் அதை நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.
தயாரிப்பாளராக, இயக்குநராக நான் பணியாற்றி இப்போது நடிகராகவும் தொடர்கிறேன்.நான் நடித்த திரைப்படங்களில் ‘கூரன்’ என்ற படத்தில் நடித்தது, அதிலும் ஒரு நாயுடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். அது ஒரு நாய்க்கும் மனிதருக்குமான பாசம் சம்பந்தப்பட்ட கதை . அந்த வகையில் அந்தப்
படத்தில் நடித்தது ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது.

‘கூரன்’ படத்தில் நடித்ததற்காக எனக்கு சிறந்த நடிகர் என்ற ஒரு விருது கிடைத்துள்ளது. ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பினர் இணைந்து இந்த விருதை எனக்கு வழங்கியிருக்கிறார்கள்.சினிமாவில் அன்பைப் பற்றிச் சொல்லப்படுவதற்காக
‘சினிகைண்ட்’ என்கிற அந்த விருது வழங்கப்படுகிறது.அந்த விருதைப் பெற்றுக் கொள்ளும்படி எனக்கு அழைப்பு வந்தது.
கொல்கத்தாவில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் எனக்கு விருதை வழங்கினார்கள் .நான் எனது மனைவியோடும் மகிழ்ச்சியோடும் அந்த விழாவில் கலந்து கொண்டு விருதினைப் பெற்றுக் கொண்டேன்.சினிமாவில் நம்பிக்கையோடும் அர்ப்பணிப்போடும் உழைப்பை வழங்கினால் அது நமக்குப் பெருமையையும் அங்கீகாரத்தையும் தேடித் தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று நான் சொல்வேன்.”என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

எலிஃபண்டைன் சர்க்யூட் நடத்திய சைக்ளோத்தான்

தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் சங்கத்துடன் இணைந்து எலிஃபண்டைன் சர்க்யூட் நடத்திய சைக்ளோத்தான் நிகழ்வு சென்னை அடையாறு பகுதியில் இன்று காலை நடைபெற்றது ( CYCLOTHON ) .

பசுமை மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான மிதிவண்டி.

டாக்டர் சைலேந்திர பாபு (பதிவு டிஜிபி/காவல்துறைத் தலைவர்) எலிஃபண்டைன் நிர்வாக இயக்குநர் திரு*ரமணன் பாலகங்காதரன் உடன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கலா அறக்கட்டளையைச் சேர்ந்த 35 மதியிறுக்க (ஆட்டிசம்) நிலையினர் பங்கேற்றுள்ளனர், மேலும் அவர்களில் ஒருவரான 8 மாத கர்ப்பிணிப் பெண் தனது கணவருடன் டேன்டெம் பைக்கில் பங்கேற்றார். மேலும் நகரம் முழுவதும் சுமார் 400 மேற்பட்ட
சைக்கிள் ஓட்டுநர்கள் பங்கேற்று நிகழ்வை வெற்றிகரமாக முடித்தனர்*.

தமிழ் திரையுலக முன்னணி இயக்குநர் சுதா கொங்கரா அவர்கள் சைக்ளோத்தான் டீசர்ட்டை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்நிகழ்வினில் கலந்துகொண்ட
டாக்டர் சைலேந்திர பாபு (பதிவு டிஜிபி/காவல்துறைத் தலைவர்) பகிர்ந்துகொண்டதாவது..,

மாரத்தான் சென்னையில் பரவலாக நடந்து வருகிறது ஆனால் இப்போது முதல்முறையாக சைக்ளோத்தான் நடைபெறுகிறது. 500க்கும் மேற்பட்டவர்கள் சைக்கிள் ஒட்டுகிறார்கள். பெரிய மகிழ்ச்சி. மக்களின் அடிப்படை தேவை மனமகிழ்ச்சி தான் அது சைக்கிளிங்கில் கிடைக்கும். இதில் கலந்துகொள்ளும் போது பல இடங்களை பார்த்த திருப்தி கிடைக்கும். 50, 100 கிலோ மீட்டர் சைக்கிளிங் ஓட்டுபவர்கள் தினமும் எத்தனையோ பேரைச் சந்திப்பார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சி தரும். உற்சாகம் தரும். மேலும் இதன் மூலம் சாதனைகள் இந்திய அளவிலும் உலக அளவிலும் நிகழும் அதற்காக இந்த சைக்களத்தான் நிகழ்வை நாம் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். பைக் ஒரு தானியங்கி இயந்திரம் அதை ஓட்ட உடல் உழைப்பு தேவை இல்லை. சைக்கிள் ஓட்ட உடல் பலம் தேவை, இளைஞர்கள் பைக் மோகத்தை விட்டு விட்டு சைக்ளோத்தானை தேர்ந்தெடுக்க வேண்டும். உண்மையான உடல் தகுதி யோடு இருக்கக்கூடிய விளையாட்டு சைக்கிள் பந்தயம் தான். உலக நாடுகளில் பாரிஸில் 1800 கிலோமீட்டர் சைக்கிள் பந்தயம் ஆனது இருக்கிறது. லண்டனில் கிட்டத்தட்ட 1000 கிலோ மீட்டருக்கு மேல சைக்கிள் ஓட்டக்கூடிய பந்தயங்கள் இருக்கிறது. அங்கு உள்ளவர்கள் அதற்கே தயாராக இருக்கிறார்கள் நமது ஊரில் நாம் இமய மலைக்கு காரில் செல்வதே பெரிய விஷயமாக பார்க்கிறோம். மூன்று நாள் நான்கு நாட்கள் என தொடர்ச்சியாக அவர்கள் சைக்கிள் ஓட்டுவது அவர்களது மன உறுதியை காட்டுகிறது. அந்த வகையில் மோட்டார் சைக்கிளை ஓட்டுவதை விட சைக்கிளை ஓட்டுவதே நல்லது.

IBM commits to skill 5 million Indian youth in AI, Cybersecurity & Quantum by 2030

New Delhi, India — December 19, 2025: IBM (NYSE: IBM) today announced its commitment to skill 5 million learners across India in Artificial Intelligence (AI), Cybersecurity, and Quantum Computing by 2030. Delivered through IBM SkillsBuild, this initiative advances IBM’s mission to build an equitable, future-ready workforce, broaden access and opportunity to advanced digital skills and employability for students and adult learners.

Through this initiative, IBM will expand AI and emerging technology education across schools, universities, and vocational and skilling ecosystems. It will also collaborate with institutions like All India Council for Technical Education (AICTE) to drive hands-on AI learning pathways and faculty enablement programs, curriculum integration, hackathons and internships.

“India possesses the talent and ambition to lead the world in AI & Quantum. Fluency in frontier technologies will define economic competitiveness, scientific progress and societal transformation,” said Arvind Krishna, IBM Chairman, President and Chief Executive Officer. “Our commitment to skill five million people is an investment in that future. By democratizing access to advanced skills, we are enabling the youth and students to build, innovate and accelerate India’s growth.”

IBM also continues to strengthen school-level readiness by co-developing the AI curriculum for senior secondary students, along with teaching resources including the AI Project Cookbook, Teacher Handbook and explainer modules. These programs are designed to embed computational thinking and responsible AI principles early, while enabling teachers to deliver AI education confidently and at scale.

At the core of this initiative is IBM SkillsBuild, one of the world’s most accessible technology learning ecosystems. The programme offers over 1,000 courses in AI, cybersecurity, Quantum, Cloud, Data, Sustainability and workplace readiness for learners, educators and institutions. With 16 million+ learners globally, SkillsBuild, among other programmes, is central to IBM’s mission to train 30 million people worldwide by 2030, with India as one of the biggest accelerators of that ambition.

பருத்தி இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு !!

கோதண்டம் & கோ மற்றும் லட்சு கணேஷ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் உதவியாளர் குரு A எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “பருத்தி”

டிசம்பர் 25 திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்

தயாரிப்பாளர் நடிகர் கோதண்டம் பேசியதாவது..,
பருத்தி நல்ல படம். இப்படத்தை முழுக்க கஷ்டபட்டு எடுத்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் லட்சு கணேஷ் பேசியதாவது..,
பருத்தி படத்தை படக்குழு மிகச்சிறப்பாக எடுத்துள்ளனர். படத்தில் நடித்த சோனியா அகர்வால் முதலாக அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் குரு A பேசியதாவது..,
என் முதலாளி கோதண்டம், லட்சு கணேஷ் இருவரும் கதை சொன்ன உடனே, எப்போது ஷீட்டிங் போகலாம் என்று கேட்டனர். எனக்கு முழு ஆதரவு தந்து இப்படத்தை எடுத்ததற்கு இருவருக்கும் நன்றி. இப்படத்தில் நடித்த குழந்தை தயாரிப்பாளரின் குழந்தை. அவர்கள் இருவருக்கும் உள்ள நட்பை இப்படத்தில் பேசியுள்ளேன். சின்ன வயதில் குழந்தைகள் மனதில் சாதி எனும் விதையை விதைக்கக் கூடாது என பேசியுள்ளோம். பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் குகன் சக்கரவர்த்தி பேசியதாவது..,
பருத்தி படம் எடுக்கும் முன்பிருந்தே இயக்குநரைத் தெரியும், அவர் நல்ல நடிகர் நன்றாக பேசுவார், அவர் நல்ல இயக்குநர். பருத்தி படத்தின் மிகப்பெரிய தூண் சோனியா அகர்வால், அவருக்கு இப்படம் மூலம் பெரிய வெற்றி காத்திருக்கிறது. இப்படம் அனைவருக்கும் வெற்றியைத் தர என் வாழ்த்துகள்.

நடிகர் பிரஜின் பேசியதாவது..,
சின்ன முயற்சிகளே பெரிய மரமாகும். குரு சாரை எனக்கு மிக நன்றாகத் தெரியும். நன்றாக பேசுவார். அவர் நல்ல நடிகர் எனக்கு கதை சொல்லியிருக்கிறார். அவர் இன்று இருக்கும் நல்ல இயக்குநர்களின் லிஸ்டில் இடம் பிடிப்பார். அவருக்கு மிகச்சிறப்பான இடம் கிடைக்கும். சோனியா மேடம் இன்றும் பார்க்க அப்படியே இருக்கிறார். இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் அனைவருக்கும் நன்றி.

SGR Film Factory சார்பில் ஶ்ரீதர் பேசியதாவது..,
நான் இயக்குநர் குழுவில் இருப்பவன் தான். நண்பனோட பயணத்தில் நானும் இருக்க வேண்டுமென நான் இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறேன். இது மாதிரி நல்ல படைப்புகளை SGR Film Factory மூலம் தொடர்ந்து வெளியிடுவோம். குருவும் நானும் நெருங்கிய நண்பர்கள், இரவு 2 மணிக்கு போன் செய்து என்னிடம் கதை சொல்வார், ரொம்ப ஜாலியாக எல்லோருடனும் பழகுவார். சினிமாவில் அவருக்கும் இன்னும் பெரிய இடம் உள்ளது. கோதண்டம் சார் குருவை முழுதாக நம்பினார். வரும் 25 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். சோனியா அகர்வால் மேடம் ரசிகன் நான். அவர் சூப்பராக நடித்துள்ளார். அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் உதயா பேசியதாவது..,
இயக்குநர் குரு எனக்கு நீண்ட கால நண்பர். தரமான படமெடுத்து விட்டு உங்களை அழைப்பேன் என்றார். அவர் எடுக்கும் எல்லா படமும் தரமான படம் தான். நல்ல படங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். என் தம்பி குருவுக்கு இப்பட வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. சோனியாவுக்கு நானும் ரசிகன். அவர் இப்படி ஒரு கேரக்டர் நடித்திருப்பது அருமை. படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் திலீஷ் பேசியதாவது..,
எல்லோருக்கும் வணக்கம். எனக்கு வாய்ப்பு தந்த அப்பாவுக்கு நன்றி. எல்லோரும் ஒரு குடும்பமாக தான் வேலை பார்த்தோம். பருத்தி மிக அழகான படமாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ராஜா பேசியதாவது..,
பருத்தி என்றால் பூ. நண்பர் குருவுக்கு இப்படம் பெரிய திருப்புமுனை தரட்டும், சோனியா மேடம் இப்படத்தின் மையமாக இருக்கிறார். அவர் விழாவிற்கு வந்தது மகிழ்ச்சி. என் படத்தில் யோகிபாபு நடித்து விட்டு விழாவிற்கு வரவில்லை, அதைப்பற்றி பேசியது பிர்ச்சனை ஆனது. இதை தயாரிப்பாளர் சங்கம் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இசையமைப்பாளர் வரவில்லை என்பது வருத்தம், அவர் சொந்த படத்திற்கு வரமால் இருக்கக் கூடாது. படத்தின் பாடல்கள் தயாரிப்பாளருக்கு தான் சொந்தம். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் நன்றி.

இயக்குநர் திருமலை பேசியதாவது..,

சிறு படங்களுக்கு நாம் எப்போதும் ஆதரவு தர வேண்டும். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குநர் இமயம் பாரதிராஜா அவருடைய உதவியாளர் குரு இயக்கியுள்ள படைப்பு பருத்தி. டிரெய்லர் பார்க்கும் போதே அதில் உள்ள எதார்த்தம் தெரிகிறது. சோனியா மேடம் நடிப்பு அருமையாக உள்ளது. குரு இந்தப்படத்தை எடுத்து இங்கு கொண்டு வர அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் படம் எடுக்கவில்லை என்றால் தமிழ் சினிமா அழிந்துவிடும். அந்த தயாரிப்பாளர்களின் முயற்சியால் தான் இந்த தமிழ் சினிமா இயங்கி வருகிறது. திரையரங்கு வைப்பது தான் இன்று சட்டமாக உள்ளது. சின்ன படத்தை வெளியிடுவதில் அத்தனை பிரச்சனை உள்ளது. சினிமா தயாரிப்பாளர்கள் இயக்குநர்களிடையே ஒரு கட்டுக்கோப்பு இல்லை. இதை தட்டிக்கேட்க ஆளில்லை. இது மாற வேண்டும். வெறும் பத்து பேர் வாழ சினிமா இயங்கி வருகிறது. படம் ரைட்ஸ் விற்கவில்லை ஆனால் ஆன்லைனில் வந்துவிடுகிறது. கோடிகளை போடும் தயாரிப்பாளருக்கு பாதுகாப்பு வேண்டும். விரைவில் மாற்றம் வரும். இப்படம் ஜெயிக்க வாழ்த்துகள் அனைவருக்கும் நன்றி.

நடிகர் ரிஷி பேசியதாவது..,
பருத்தி மிக அழகான படம். சோனியா மேடமை நாம் அழகாக பார்த்திருப்போம். ஆனால் இப்படத்தில் கிராமத்தில் வாழும் ஒரு அம்மாவாக அருமையாக நடித்துள்ளார். இயக்குநர் குரு மிகத்திறமையானவர். நல்ல நடிகர், எல்லா காட்சியையும் அவரே நடித்து காட்டி விடுவார். எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். நாயகன் புதிதாக நடித்தாலும் அட்டகாசமாக நடித்துள்ளார். நாயகி தமிழ் தெரியவில்லை என்றாலும் அருமையாக நடித்துள்ளார். பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக வந்துள்ளது இந்தப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் நன்றி.

நடிகை சோனியா அகர்வால் பேசியதாவது..,
பருத்தி எனக்கு மிக வித்தியாசமான அனுபவம். டார்க் மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன். நான் இயக்குநரிடம் இங்கு இருந்து யாரையாவது நடிக்க வைக்கலாமே எனக் கேட்டேன் ஆனால் உங்களுடைய அனுபவமும் நடிப்பும் இந்தப் படத்திற்கு வேண்டும் என்றார். அவர் வைத்த நம்பிக்கையை நிறைவேற்றியுள்ளேன் என நம்புகிறேன். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் K பாரதி அவர்களை வைத்து, வளையல் என்ற திரைப்படத்தை இயக்கிய குரு A அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சோனியா அகர்வால் மற்றும் திரை பிரபலங்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கிராமத்து வாழ்வியலையும் உணர்வு போராட்டத்தையும், இத்திரைப்படத்தில் கொண்டுவந்துள்ளார் . சமூக சிக்கல்களில் சிக்கி தவித்து பால்ய பருவத்தை கடக்கும் சிறார்களின் மனநிலையை யாதார்த்தத்துடனும் மிகவும் உணர்வு பூர்வமாக கிராமத்திலிருந்து வாசம் மாறாமல் இயக்குநர் எடுத்து வந்திருக்கிறார்.

இப்படத்திற்கு ரஞ்சித் வாசுதேவன் இசையமைத்துள்ளார். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திரைப்படம் பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு ஓசூர் தேன் கனி கோட்டாவில் நடைபெற்றுள்ளது வரும் டிசம்பர் 25 திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

பராசக்தி திரைப்பட உலகை அறிமுகப்படுத்தும் விழா !!

Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”.

1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இன்பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது.

வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தில் 60களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால அத்தியாவசிய பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் உயிர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பராசக்தி பட உலகம் ஒரு கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு படம் வெளிவருவதற்கு முன்னதாக, அதன் உலகம் மக்களுக்காக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுமக்கள் அடுத்த மூன்று நாட்கள் (19, 20, 21 டிசம்பர்) பராசக்தி உலகை கண்டுகளிக்கலாம் .

பராசக்தி படத்தின் இந்த உலகை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, வள்ளுவர் கோட்டம் அரங்கில், ரசிகர்கள் சூள, படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

இயக்குநர் சுதா கொங்கரா பேசியதாவது..,
திரைப்படம் மூலம் நாம் ஒவ்வொரு வாழ்வியலில் போய் வாழலாம். அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். இறுதிச்சுற்று படத்தில் ஒரு குத்துச்சண்டை உலகில் வாழ்ந்தது போல், பராசக்தி படத்தில் நம் வரலாற்றுக் காலத்தில் நுழைந்து பார்த்திருக்கிறோம். நம் உரிமைக்காக நாம் சண்டையிட வேண்டும் எனும் கருத்து என்னை மிகவும் பாதித்தது. வரலாற்று உலகைத் திரும்பக் கொண்டு வர ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளோம். அந்த காலகட்டத்தை மீண்டும் உருவாக்கியுள்ளோம். 1960 காலகட்டத்தில் மீண்டும் வாழ்ந்து விட்டு வந்தது போல் இருக்கிறது. கண்டிப்பாக அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.

ஜீவி பிரகாஷ் பேசியதாவது..,
பராசக்தி ஒரு பெரிய உலகம். சுதா கொங்கரா எனக்கு சூரரைப் போற்று படத்தில் தேசிய விருது வாங்கி தந்தார். நான் ரஹ்மான் சாரிடம் இருக்கும் போதே, சுதா எனக்குப் பழக்கம். அவருடன் நிறையப் படங்கள் செய்யவில்லை. நீண்ட காலம் கழித்து சூரரைப் போற்று படம் செய்தோம். அது எனக்கும் சூர்யா சருக்கும் மிகப்பெரிய படமாக அமைந்தது. அதற்கான நன்றிக்கடன் தான் பராசக்தி. பராசக்தியில் மீண்டும் என்ன செய்யப்போகிறோம் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. ஏற்கனவே பீரயட் படங்களில் மதராஸப்பட்டினம் படம் செய்துவிட்டோம், அதிலிருந்து மாறுபட்டு என்ன செய்யப்போகிறோம் என்பது தான் கேள்வியாக இருந்தது. அதைத் தர உழைத்திருக்கிறோம். சிவா உடன் அமரனுக்குப் பிறகு மீண்டும் இணைகிறேன். ரவி மோகன், அதர்வா ஶ்ரீலீலா என எல்லோருக்கும் நன்றி. இவ்வளவு பெரிய படத்தைத் தாங்க ஆகாஷ் போன்ற தயாரிப்பாளர் இருக்க வேண்டும். இப்படத்தில் ஒரு பீரியட் ஃபீல் இருக்கும். ஒரு பெரிய புரட்சியைப் படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். அதை இசையாகக் கொண்டு வர முயற்சித்திருக்கிறோம். இதில் எல்லோரும் பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள். கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.

நடிகை ஸ்ரீலீலா பேசியதாவது..,
எல்லோருக்கும் நன்றி. பராசக்தி எனக்கு மிக முக்கியமான படம். என் அறிமுகத் தமிழ்ப்படம். சுதா மேடமுக்கு நன்றி. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளுக்குப்பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது, ஒரு அர்த்தம் இருக்கிறது. அது படம் பார்க்கும் போது உங்களுக்குப் புரியும். பராசக்தி உலகிற்குள் தரிசித்து கொண்டாடுங்கள் நன்றி.

நடிகர் அதர்வா பேசியதாவது..,
இந்த மாதிரி விழா எல்லா படத்திற்கும் எளிதாக நடக்காது. இது பிரம்மாண்டமான படம். ஜீவி பிரகாஷின் 100 வது படம், ரவிமோகன் சார் வில்லனாக நடிக்கும் படம், சிவகார்த்திகேயன் சாரின் 25 வது படம். ஶ்ரீலீலாவின் முதல் தமிழ்ப்படம். இப்படி எல்லோருக்கும் முக்கியமான படம். ஷீட்டிங் போன போது மிகவும் சந்தோசமாக இருந்தது. இவ்வளவு பெரிய படத்தை எடுத்துத் தயாரித்திருக்கும் ஆகாஷ் அவர்களுக்கு நன்றி. படம் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்

நடிகர் ரவி மோகன் பேசியதாவது..,
ஊரே இந்தப்படம் பற்றித் தான் பேசுகிறது. இந்தப்படம் மிகப்பிரம்மாண்ட படம். படத்திற்குள் நான் போகும் முன் எனக்குமே நிறையத் தயக்கம் இருந்தது. ஆனால் இந்த படத்திற்காக உழைப்பைப் போட்ட அனைவரையும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அவ்வளவு உழைத்துள்ளார்கள். என்னை அவ்வளவு அற்புதமாகப் பார்த்துக்கொண்டார்கள். என்னை நன்றாக பார்த்துக்கொண்ட சுதா மேடமுக்கு நன்றி. என்னைச் சரியாக அந்த கதைக்குள் கொண்டு சேர்த்துவிட்டார். ஆகாஷ் பாஸ்கரன், ஒரு ஹீரோ வைத்து படமெடுப்பதே கஷ்டம், அவர் மூன்று ஹீரோ வைத்துப் படமெடுத்துள்ளார். அதர்வாவை இந்தப்படத்தில் கொண்டாடுவீர்கள். அதர்வாவிற்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும். ஶ்ரீலீலாவை ஒரு நல்ல நடிகையாக இப்படத்தில் கொண்டாடுவார்கள். சிவா என்னிடம் அவ்வளவு அன்பாக நடந்து கொண்டார். ஒரு சின்ன அடிபட்டால் கூட என்னையும் அடித்துக்கொள்ளுங்கள் என்பார். சிவாவின் 25 படத்தில் நானும் இருக்கிறேன் என்பது பெருமை. பராசக்தி திரைப்படம் திரைத்துறையில் மிக முக்கியமான படமாக இருக்கும் நன்றி.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது..,
சுதா மேம் 1960 களில் நடப்பதாகக் கதை அமைத்திருந்தார். அவர் தான் இந்தப்படம் பண்ணக்காரணம். இந்தப்படத்திற்காக 4,5 வருடம் அவர் உழைத்திருந்தார். அவர் சொன்னதைச் செய்தால் போதும். இந்தப்படம் செய்வது எல்லோருக்குமே கஷ்டம் தான். அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டு உழைத்துள்ளார்கள். அதர்வாவிற்கும் எனக்கும் உள்ள நட்பு உண்மையான அண்ணன் தம்பி போலத்தான். அவர் முதல் படத்திற்கு புரமோசன் நிகழ்ச்சிக்கு அப்பாவுடன் வந்தார், நான் தான் ஹோஸ்ட் செய்தேன். இந்தப்படத்தில் சேர்ந்து நட்சத்திருப்பது மகிழ்ச்சி. ஶ்ரீலீலாவை தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறேன். அவருடன் நடித்தது நல்ல அனுபவம். அவருடன் கஷ்டமான டான்ஸ் மூவ்மெண்ட் தராததற்கு டான்ஸ் மாஸ்டருக்கு நன்றி. ரவி மோகன் சார் இந்தப்படத்திற்கு ஒத்துக்கொண்டது எனக்கு ஆச்சரியம். ஹீரோவாக கதை கேட்டுத் தேர்ந்தெடுப்பதே கஷ்டம். ஆனால் ஹீரோவாக ஹிட் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் போது, வில்லனாக ஒத்துக்கொள்வது மிகப்பெரிய விஷயம். அவர் எப்போதும் எனக்குக் கல்லூரியில் பார்த்த ஹீரோ தான். அவர் தான் எங்கள் செட்டில் மூத்தவர், அவர் பெயர் தான் முதலில் இருக்கும். அவரை அப்படித்தான் நாங்கள் பார்க்கிறோம். ஜீவி பற்றி என் அம்மா சொன்னார்கள், அந்தப்பையன் சின்ன வயதிலிருந்து இசையமைக்கிறார் போல 100 படம் செய்துவிட்டார் என்றார். 100 படத்திலும் வித்தியாசமான ஜானர்கள் செய்து அசத்தியுள்ளார். இது 25 வது படமாக நடக்கக் காரணம் ஆகாஷ் தான். அவர் தான் இந்தப்படம் 25வதாக இருக்கட்டும் என்றார். இந்த மாதிரி ஒரு டீம், இந்த மாதிரி ஒரு கதை, எனக்கு 25 வது படமாக கிடைத்தது என் வரம் தான். பராசக்தி அருள் தான் காரணம். பராசக்தி ஒரு முக்கியமான பிரச்சனையைப் பேசும் படம். காதல், பாசம், வீரம், புரட்சி என எல்லாத்தையும் பேசும் படமாக இருக்கும். இந்த பொங்கலுக்கு நல்ல கொண்டாட்டமாக இருக்கும் பார்த்து ரசியுங்கள் நன்றி.

பராசக்தி திரைப்படம் வரும் 2026 பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது.

“ரேஜ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் லவ் டிராமா பின்னணியில், ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் திரைப்படமான “ரேஜ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

சென்னையில் வாடகை கார் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் வாழ்வில் நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம், அவன் வாழ்க்கையையே மாற்றுவது தான் இப்படத்தின் மையம். மாறுபட்ட களத்தில், காதல் கதையுடன், பழிவாங்கும் பின்னணியில் அசத்தலான திரில்லராக இப்படத்தை இயக்கியுள்ளார் சிவனேசன்.

நாயகன் ஷான் அடிப்பட்டு இரத்தம் வழியும் முகத்துடன், ஆக்ரோசம் பொங்க பார்ப்பதாக வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் புதுமுகங்களான ஷான் நாயகனாகவும், ஷெர்லி பபித்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர். பவன் ஜினோ தாமஸ், ஆர்யன், பிரதோஷ், விக்ரம் ஆனந்த் ஆகியோர் வில்லன் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர்களான சரவணன், முனிஷ்காந்த், ராமசந்திரன், மணிகண்டன், அஜித் கோஷி, காயத்ரி ரெமா, கிச்சா ரவி, காலா பீம்ஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

அனைத்து ரசிகர்களும் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் திரில்லராக உருவாகியுள்ள இப்படம், சென்னை, கேரளா, பொள்ளாச்சி ஆகிய ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில்நுட்பக் குழு விபரம்

தயாரிப்பு – இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத்
இயக்குநர் – சிவனேசன்
ஒளிப்பதிவு- M.S.நவீன்குமார்.
இசை – விபீன் R
எடிட்டிங் – பிரேம் B
கலை இயக்கம் – நீலகண்டன்
ஸ்டன்ட் – யுனிவர்ஸ் ராஜேஸ்.
பாடல்கள் – மதன் கார்க்கி, விவேக், திருமாலி, அபிலாஷ் பிரிட்டோ.
பாடியவர்கள் – GV பிரகாஷ், கார்த்திக், சைந்தவி, மாளவிகா சுந்தர், திருமாலி.

“தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவல்”

பான்-இந்தியா ரெபெல் ஸ்டார் பிரபாஸ் உலகளாவிய கதை சொல்லும் புரட்சியை “தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவல்”  மூலம் தொடங்கி வைத்தார்!!

பாகுபலி, சலார் , கல்கி 2898 ஏடி போன்ற மெகா ஹிட் படங்கள் மூலம் கொண்டாடப்படும், உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவராக போற்றப்படும் பான்-இந்திய ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இன்று தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவலை ஒரு அற்புதமான அறிவிப்பு வீடியோ மூலம் அறிமுகப்படுத்தினார்.

தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் தளத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்த  முயற்சி, உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பையும், புகழ் பெரும் வாய்ப்பையும் வழங்கி, கனவுகளை சினிமா வாழ்க்கையாக மாற்றும் புதிய காலத்தை உருவாக்குகிறது.

இந்த புரட்சிகர தளத்தை தனிப்பட்ட முறையில் ஆதரித்த பிரபாஸ், திரைப்பட உருவாக்கத்தை ஜனநாயகப்படுத்தும் இதன் சக்தியை வலியுறுத்தி பேசியுள்ளார்.

“தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்,” என்று அவர் அந்த வீடியோவில் பகிர்ந்தார்.

மேலும் அவர் பகிர்ந்துகொண்டதாவது:

ஒவ்வொரு குரலும் ஒரு ஆரம்ப வாய்ப்புக்கு தகுதியானது.
ஒவ்வொரு கனவுக் கதைக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டியது அவசியம்.

TheScriptCraft சர்வதேச குறும்பட திரைப்பட விழா  இது இங்கே உங்களுக்காக,

உலகம் முழுவதிலிருந்தும் கதை சொல்லிகளை தங்கள் பயணத்தைத் தொடங்க அழைக்கிறது.

https://www.thescriptcraft.com/register/director
@TSCWriters #Vaishnav @uppalapatipramod

பாரம்பரிய போட்டிகளிலிருந்து மாறுபட்டு, இந்த விழா உலகின் எந்த மூலையிலிருந்தும் கதை சொல்லிகளை ஆதரிக்கிறது. 2 நிமிடங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட குறும்படங்கள், எந்த ஜானரிலும், 90 நாட்கள் போட்டி காலத்தில் பங்கேற்கலாம். பார்வையாளர்களின் வாக்குகள், லைக்ஸ் மற்றும் ரேட்டிங்ஸ் அடிப்படையில் முதல் மூன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதே சமயம், சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு படமும், புதிய திறமைகளை தேடி வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை பெறும்.

அந்த வீடியோவில் பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கூறியுள்ளதாவது :

“ஒரு திரைப்பட இயக்குநராக உருவாக குறும்படம் எடுப்பதே மிக முக்கியமான அம்சம். காகிதத்தில் நீங்கள் எழுதுவது மற்றும் திரையில் நீங்கள் உருவாக்குவது — இரண்டும் முற்றிலும் வேறு வேறு யதார்த்தங்கள். சாதிக்க ஆசைப்படும் இயக்குநர்களுக்கு இது சரியான நேரம். பதிவு செய்து இதை முழுமையாக பயன்படுத்துங்கள்.”

இயக்குநர் நாக் அஸ்வின் கூறியதாவது :

“YouTube-ல் பார்த்த ஒரு குறும்படம் மூலமாகத்தான் நான் அனுதீப்பை கண்டுபிடித்தேன். அதிலிருந்தே ‘ஜதி ரத்னாலு’ படம் உருவானது. ஒரு திரைப்பட பள்ளியை விட, உங்கள் வேலை மற்றும் அதைப் பற்றிய உங்கள் புரிதலே மிகவும் முக்கியம். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி, உங்கள் படங்களை சமர்ப்பித்து, சிறந்ததை சாதிக்க வேண்டும்.”

இயக்குநர் ஹனு ராகவபுடி மேலும் கூறியதாவது:

“பல இளைஞர்களுக்கு திரைப்படத் துறையில் நுழைந்து இயக்குநராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. உங்கள் பார்வையை வெளிப்படுத்துங்கள், உங்கள் கனவுகளை வெல்லுங்கள். வாழ்த்துகள்.”

ஒரு பிரத்யேக கூட்டணியாக, புதிய  இயக்குநர்களுக்கான கூட்டாளியாக க்விக் டிவி இதில் இணைகிறது. க்விக் டிவியின் ஜூரி 15 சிறந்த திரைப்படக் கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையாக நிதியளிக்கப்படும் 90 நிமிட திரைப்பட ஸ்கிரிப்ட், முழு தயாரிப்பு ஆதரவு மற்றும் க்விக் டிவி தளத்தில் உலகளாவிய பிரீமியர் வழங்கப்படும். இதன் மூலம் 15 படைப்பாளிகள் குறும்படங்களில் இருந்து நேரடியாக தொழில்முறை திரைப்பட இயக்குநர்களாக, சர்வதேச அளவில் அறிமுகமாகும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இணையதளத்தில் தற்போது பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன. சரியான சமர்ப்பிப்பு தேதிகள் மற்றும் பிரிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.

தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
“அடுத்த பார்வையாளர்களை கவரும் இயக்குநர் எங்கிருந்தும் வரலாம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த தளம் ஒவ்வொரு கதை சொல்லிக்கும் ஒரு குரல், ஒரு மேடை மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களால் காணப்படும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.”

பிரபாஸ் அவர்களின் துணிச்சலான கனவுத் திட்டமான தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட், தால்லா வைஷ்ணவ் மற்றும் பிரமோத் உப்பலபாட்டி ஆகியோரால் நிறுவப்பட்டது. புதிய திறமைகளை வளர்த்து, எழுத்தாளர்கள், கதை சொல்லிகள் மற்றும் இயக்குநர்கள் தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு வலுவான மேடையை வழங்கும் நோக்கில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களை பொறுத்தவரையில், பிரபாஸ் நடிப்பில் தி ராஜாசாப், ஃபௌஸி, ஸ்பிரிட், கல்கி 2898 ஏடி பாகம் 2, சலார் பாகம் 2. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

துல்கர் சல்மானின்  “ஐ அம் கேம்” படப்பிடிப்பு தளத்தில் மெகாஸ்டார் மம்மூட்டி !!

துல்கர் சல்மான் நடித்து வரும் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தை மெகாஸ்டார் மம்மூட்டி நேரில் பார்வையிட்டார். தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் லொகேஷனுக்கு வந்த மம்மூட்டி, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) , ஆக்ஷன் கோரியோகிராஃபர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ், நடிகர்கள் மிஷ்கின், கயாடு லோஹர், சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.  படப்பிடிப்பு தளத்தில் இருந்து மம்மூட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த படத்தை, துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் Wayfarer Films  சார்பில்  பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து எழுத, வசனங்களை – ஆதர்ஷ் சுகுமாரன், ஷஹபாஸ் ரசீத் ஆகியோர் எழுதுகின்றனர்.

இதற்கு முன்பு ஸ்டைலிஷ் மற்றும் மாஸ் தோற்றத்தில் துல்கர் சல்மான் அறிமுகமான, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்தது. முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

மலையாள சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஐ அம் கேம்’, துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகர்-இயக்குநர் மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, தமிழ் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த பிக்பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லரின் சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைக்கிறார்கள். கபாலி, KGF தொடர், கைதி, விக்ரம், லியோ, சலார் போன்ற பான்-இந்தியா படங்களில் பணியாற்றிய அனுபவம் இவர்களுக்கு உண்டு. ‘RDX’க்கு பிறகு, நஹாஸ் ஹிதாயத்துடன் அன்பறிவ் குழு மீண்டும் இணையும் படமாகவும் இது அமைந்துள்ளது.

தொழில் நுட்ப குழு விவரம்

லைன் புரடியூசர் – பிபின் பெரும்பில்லி
ஒளிப்பதிவு – ஜிம்ஷி காலித்
இசை – ஜேக்ஸ் பெஜாய்
படத்தொகுப்பு – சமன் சாக்கோ
தயாரிப்பு வடிவமைப்பாளர் – அஜயன் சல்லிசேரி
ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்
ஆடை – மாஷர் ஹம்சா
புரொடக்ஷன் கன்ட்ரோலர் – தீபக் பரமேஸ்வரன்
இணை இயக்குநர் – ரோஹித் சந்திரசேகர்,
பாடல் வரிகள் – மனு மஞ்சித் , விநாயக் சசிகுமார்
VFX –  . தௌஃபீக் (எக்வொயிட்) (Taufeeq – Eggwhite)  
போஸ்டர் டிசைன் – டென் பாயிண்ட்
சவுண்ட் டிசைன் – சிங்க் சினிமா
சவுண்ட் மிக்ஸிங் – கண்ணன் கணபத்
ஸ்டில்ஸ் – எஸ்.பி.கே மார்க்கெட்டிங் ஹெட் – விஜித் விஸ்வநாதன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

Lenovo India Enables Businesses in Chennai with Smarter AI

Demonstrating its end-to-end B2B stack including devices, services and solutions for India’s Enterprise Transformation

CHENNAI, INDIA, December 18 2025 – Lenovo, the global technology leader, today showcased its full-stack enterprise AI portfolio in Chennai, reaffirming its commitment to enabling Smarter AI for All. With a focus on simplifying adoption and accelerating transformation, Lenovo’s integrated offerings are designed to help organizations modernize operations, optimize IT, and scale AI with confidence.

Supporting Tamil Nadu’s Tech Acceleration

Chennai continues to lead India’s enterprise-tech landscape as the country’s SaaS Capital, backed by a strong engineering workforce and more than fifty successful SaaS companies. Tamil Nadu as one of India’s top software exporters and the second-largest data centre market with nineteen operational facilities, the city is set to contribute about 25 percent of upcoming national capacity. Chennai also hosts over 250 Global Capability Centres, expected to rise to 450 to 460 by 2030, highlighting its growing global relevance. With this strong momentum in innovation and enterprise demand, Chennai remains a strategic market where Lenovo’s full-stack AI and digital solutions can help organizations scale with confidence.

Enabling Smarter and Secure AI Adoption

Enterprises across India continue to express strong intent to adopt AI, but many are challenged by deployment complexity and scaling constraints. Lenovo’s portfolio has been designed to simplify this journey while ensuring performance, security and flexibility across environments.

Future-Ready Enterprises Enabled by Lenovo Services

The Chennai showcase featured Lenovo’s complete enterprise AI Portfolio, including: 

  • Infrastructure Solutions: Servers, storage, edge, and high-performance computing (HPC) 
  • Software-Defined Infrastructure & Services: TruScale for scalable infrastructure, Digital Workplace Solutions (DWS), Device as a Service (DaaS), and Premier Support Plus 
  • AI-Powered IT Tools: Lenovo Device Intelligence Plus and Care of One for predictive support and intelligent, personalized user experiences 
  • Sustainable Solutions: Lenovo’s portfolio also supports sustainability goals through innovations such as Lenovo Intelligent Sustainability Solutions Advisor (L.I.S.S.A.) for emissions tracking and Neptune Liquid Cooling 2.0 for efficient operations without sacrificing energy efficiency
  • Security Solutions: ThinkShield XDR for endpoint detection and response and Cyber Resiliency as-a-Service, developed with Microsoft 

Accelerating AI Maturity with Hybrid Architecture 

Chennai’s diverse economy spanning SaaS, IT services, automotive manufacturing, data centres and global engineering hubs requires flexible and secure AI architectures. Lenovo’s hybrid AI model supports this shift by allowing organizations to train models in cloud or hybrid environments and run inference at the edge while maintaining control, compliance and high performance.

“Tamil Nadu is witnessing strong momentum in AI adoption and enterprise technology investment, and customers are looking for solutions that can scale quickly and securely.” said S.K. Venkataraghavan, Director, Solutions and Services Group, Lenovo India. “Lenovo’s full-stack AI portfolio helps enterprises convert intent into real outcomes with the right mix of infrastructure, services and intelligent tools. Our hybrid AI architecture brings edge, cloud and on-prem systems together to support faster insights, stronger compliance and more efficient operations. Chennai’s growing SaaS, data centre and GCC ecosystems make it a key market for this next phase of enterprise transformation.”

Lenovo’s hybrid AI architecture supports every stage of AI maturity by enabling organizations to train models in hybrid or multi-cloud environments and run inference at the edge while maintaining robust security and performance.

As Tamil Nadu accelerates its AI journey, Lenovo remains committed to helping businesses build smarter and more resilient operations across the entire technology stack, from devices to the edge to the cloud.