Breaking
June 5, 2026

October 2025

சன் நெக்ஸ்ட் தளத்தில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது “ராம்போ” !!

தென் இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான சன் நெக்ஸ்ட், தனது அடுத்த நேரடி OTT வெளியீடாக “ராம்போ” திரைப்படத்தை, வரவிருக்கும் தீபாவளி சிறப்பு படமாக அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடுகிறது.

அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற அழுத்தமான கிராமப்புற கமர்ஷியல் படங்களைத் தந்த, புகழ் பெற்ற இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள “ராம்போ” நகர பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.

ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு (தன்யா ரவிச்சந்திரன்) உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முத்தையாவின் முத்திரை இயக்கத்தில், உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன், அதிரடி, ஆக்சன் நிரம்பிய அழுத்தமான படமாக இப்படம் வெளிவரவுள்ளது.

படம் குறித்து இயக்குநர் முத்தையா கூறியதாவது.., “இந்தப் படம் எனது பாணியிலிருந்து மாறுபட்டு, ஒரு புதிய கதையை வேறு பாணியில் சொல்லும் வாய்ப்பை எனக்கு வழங்கியது. அருள்நிதியுடன் இணைந்து பணிபுரிந்தது உற்சாகமான அனுபவமாக இருந்தது. ‘ராம்போ’ படத்தை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.”

பிக் பாஸ் புகழ் ஆயிஷா இந்த படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமாகிறார். மேலும் மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹரீஷ் பேரடி மற்றும் VTV கணேஷ் முக்கியமான வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நகரப் பின்னணியில் ஆக்சன், அதிரடி மற்றும் உணர்ச்சிரமான பொழுதுபோக்கு படமாக “ராம்போ” உருவாகியுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

டிரெய்லர் லிங்க்: https://youtu.be/t1huaCOto2k?si=cizZwmf5am-m_p5j

இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தை வீட்டிலிருந்தபடியே அனுபவிக்க, அக்டோபர் 10ஆம் தேதி முதல் “ராம்போ” படத்தை சன் நெக்ஸ்ட் தளத்தில் பார்த்து ரசியுங்கள்!

“ரஜினி கேங்” ஃபர்ஸ்ட் லுக்

MISHRI ENTERPRISES திரு செயின்ராஜ் ஜெயின் அவர்களின் தயாரிப்பில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற “ஜெய்ஹிந்த்” (முதல் பாகம்) மற்றும் சமீபத்தில் வெளியான “அஷ்டகர்மா” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில் கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரஜினி கேங்”.

நேற்று வெளியான இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மறைந்த எஸ். செயின்ராஜ் ஜெயின் அவர்களால் நிறுவப்பட்ட MISHRI ENTERPRISES, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக திரைப்பட பைனான்ஸ், விநியோகம் மற்றும் தயாரிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஜெய் ஹிந்த், அஷ்டகர்மா ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, ரஜினி கேங் அவர்களின் மூன்றாவது பெரிய தயாரிப்பாக, பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில், அவர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள், அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என கலகலப்பான திரைக்கதையில், கமர்ஷியல் ஹாரர் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது.

பிஸ்தா திரைப்படம் மற்றும் உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குநர் M ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக திவிகா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ்,கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ப்ளூ எனும் நாய் படம் முழுக்க வரும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் அசத்தியுள்ளது.

பொறியாளன், போங்கு, சட்டம் என் கையில் போன்ற படங்களின் இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் 4 அற்புதமான பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து 2.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் படப்பை, மறைமலைநகர் போன்ற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த வருட இறுதியில் இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

தொழில் நுட்ப குழு
இயக்கம் : M. ரமேஷ் பாரதி
இசை : M.S. ஜோன்ஸ் ரூபர்ட்
எடிட்டிங் : R K . வினோத் கண்ணா
ஒளிப்பதிவு : N. S. சதீஷ்குமார்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

விருஷபா – நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும்………..

இந்தியாவெங்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “விருஷபா” திரைப்படம் வரும் நவம்பர் 6, 2025 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிடப்படவிருப்பதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காதல், விதி, பழி ஆகியவை ஒன்றாக கலந்த ஒரு காவியமாக உருவாகியுள்ள இந்தப் படம், தந்தை–மகன் பந்தத்தின் ஆழத்தையும் உணர்வையும் வலியுறுத்துகிறது.

இப்படத்தின் தயாரிப்பாளரான ஏக்தா R கபூர் கூறியதாவது:

“எங்களின் மிக பிரம்மாண்ட படைப்பான ‘விருஷபா’ நவம்பர் 6 அன்று வெளியாக இருப்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது என் மனதுக்கு நெருக்கமான கதை – அழுத்தமான எமோஷன், டிராமா, காதல் ஆகிய அம்சங்களுடன் இந்திய சினிமாவின் மாபெரும் காவியமாக உருவாகியுள்ளது. இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு  கொண்டு வர  வெகு ஆவலாக உள்ளோம்.”

இயக்குநர் நந்த கிஷோர் கூறியதாவது..,

“விருஷபா மூலம் எமோஷன் நிறைந்த பிரம்மாண்ட காவியத்தை  உருவாக்க விரும்பினோம். இது உறவுகள், தியாகம், விதி ஆகியவை மோதிக்கொள்ளும் ஒரு உணர்ச்சி மிகுந்த கதை. இப்படம் உருவாக படக்குழு முழுவதும்   மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். நவம்பர் 6, 2025 அன்று உலகம் முழுவதும் இதை பார்வையாளர்கள் காணப்போகிறார்கள் என்பது  எனக்கு பெரு மகிழ்ச்சி தருகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர், போர்வீர அரசராக மோகன்லால் அவர்களை வலிமையான தோற்றத்தில் காட்டியது. “When Destiny Calls, Blood Must Answer” என்ற வாக்கியமும், “Reborn Love – A Love So Strong, It Defies Death” என்ற உணர்ச்சி பூர்வமான டேக்லைனும் ரசிகர்களை கவர்ந்தன. டீசரின் இறுதியில் கடந்தகாலம் மற்றும் நிகழ்காலம் ஒன்றிணையும் காட்சிகள் கதையின் இரு உலகங்களையும் சுவாரஸ்யமாக வெளிப்படுத்தியுள்ளது.

இப்படத்தில் மோகன்லாலுடன் சமர்ஜித் லங்கேஷ், ராகினி திவேதி, நயன் சரிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பல முக்கிய நடிகர்களும் இணைந்துள்ளனர். இசை – சாம் C.S., ஒலி வடிவமைப்பு – ரசூல் பூக்குட்டி, வசனம் – SRK, ஜனார்த்தன் மகரிஷி, கார்த்திக், ஸ்டண்ட் இயக்கம் – பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா, நிகில்.

கனெக்ட் மீடியா ( Connekkt Media )மற்றும் பாலாஜி டெலிபிலிம்ஸ் (Balaji Telefilms Ltd), அபிஷேக் S வியாஸ் ஸ்டுடியோஸ் (Abishek S Vyas Studios)  நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இப்படத்தை, ஷோபா கபூர், ஏக்தா R கபூர், CK பத்மகுமார், வருண் மாதுர், சௌரப் மிஸ்ரா, அபிஷேக் S. வியாஸ், ப்ரவீர் சிங், விஷால் குர்னானி, ஜூஹி பாரேக் மேத்தா ஆகியோர் தயாரிக்கின்றனர்.

“விருஷபா” ஒரு தந்தை–மகன் பந்தத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சி பூர்வமான ஆக்ஷன் அதிரடி திரைப்படம். கதை சொல்லல், டிராமா, எமோஷன், காட்சியமைப்பு ஆகிய அனைத்திலும் இது மறக்க முடியாத சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது.

இப்படம் மலையாளம்  மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தமிழ், இந்தி மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியிடப்படுகிறது. இப்படம் உலகம் முழுக்க வரும் நவம்பர் 6, 2025 வெளியாகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் படத்தில், தேசிய விருது பெற்ற  இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா நடிப்பில், பூரி ஜெகன்நாத், சார்மி கௌர், JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா, பூரி கனெக்ட்ஸ்,  JB மோஷன் பிக்சர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் #PuriSethupathi படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்,  இணைந்துள்ளார்.

தனித்துவமான இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணையும் பான்-இந்தியா திரைப்படமான இன்னும் பெயரிடப்படாத #PuriSethupathi பட படப்பிடிப்பு வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை பூரி ஜெகன்நாத் தனது பூரி கனெக்ட்ஸ்,  (Puri Connects) நிறுவனத்தின் மூலம், சார்மி கௌர் மற்றும் JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா (JB Motion Pictures) ஆகியோருடன் இணைந்து தயாரித்து வருகிறார்.

தெலுங்கு திரையுலகின் அதிர்ஷ்ட நாயகி சம்யுக்தா, இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இத்திரைப்படத்தின் நடிகர், தொழில்நுட்பக் குழுவின் விபரங்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வரும் நிலையில், சமீபத்தில் “அர்ஜுன் ரெட்டி”, “கபீர் சிங்”, “அனிமல்” போன்ற படங்களில் தனது இசையால் ரசிகர்களைக் கவர்ந்து பிரபலமான தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இப்போது #PuriSethupathi படத்திற்காக இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  எமோஷன் (Emotion) ஆக்‌ஷன்  மற்றும் மாஸ் என அனைத்தும் கலந்த  புதுமையான  இசை அனுபவத்திற்குத் தயாராகுங்கள்.

நடிகை தபு  மற்றும் விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், பிரம்ஹாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை வேடங்களில் தோன்றுகின்றனர்.

படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது, இதில் முக்கிய நடிகர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த பான்-இந்தியா எண்டர்டெய்னர் #PuriSethupathi  படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

நடிகர்கள் : விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, விஜய் குமார்

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்
வழங்குபவர் – சார்மி கௌர்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர்
தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ்,  JB மோஷன் பிக்சர்ஸ்
இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
CEO : விசு ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா

நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடிக்கும் “ஹாய்” (Hi)

நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடிக்கும் “ஹாய்” (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Z ஸ்டூடியோஸ் (Z Studios), தி ரவுடி பிக்சர்ஸ் (The Rowdy Pictures) மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் ‘ஹாய்’ (Hi) படத்தை விஷ்ணு எடவன் (Vishnu Edavan)எழுதி இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் கதாநாயகனாக கவினும் நடிக்கிறார்கள்.

மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குனர் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்

அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் அஸோஸியேட் டைரக்டராக பணியாற்றியவர் இவர் ஹாய் படத்தை எழுதி இயக்குகிறார்.

இப்படத்தை பற்றி இயக்குனர் விஷ்ணு எடவன் கூறும்போது : ஹாய்’ முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலையும் கூறும் படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடந்து வருகிறது. 20 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (08.10.2025) வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிறகு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும். இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. அதில் இரண்டு பாடல்கள் முழுமையாக காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

நயன்தாராவும், கவினும் இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தயாரிப்பாளர்கள்
உமேஷ் குமார் பன்சால்
நயன்தாரா, விக்னேஷ் சிவன்
எஸ்.எஸ். லலித் குமார்

இணை தயாரிப்பாளர்கள்
அக்ஷய் கெஜ்ரிவால் & கே.எஸ். மயில்வாகனன்

தொழில் நுட்ப கலைஞர்கள் :

இசை – ஜென் மார்ட்டின்
ஒளிப்பதிவாளர் – ராஜேஷ் ஷுக்லா
எடிட்டர் – பிலோமின்ராஜ்
கலை இயக்குனர் – சேகர்.பி
நடனம் – பிருந்தா
சண்டை பயிற்சி – தினேஷ் காசி
ஆடை வடிவமைப்பாளர் – காவ்யா ஸ்ரீராம்
விளம்பர வடிவமைப்பாளர் – வியாகி
புகைப்படங்கள் – ஆகாஷ் பாலாஜி
கூடுதல் திரைக்கதை & உரையாடல்கள் – சி.யூ. முத்துசெல்வன்
இணை இயக்குனர் – டி.எஸ். வினோபாலா
உதவி இயக்குனர்கள் – பத்மன்.எம், தங்கவேல்.எஸ்
தயாரிப்பு நிர்வாகி – ஜி. முருகபூபதி
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – எஸ். கிருஷ்ணராஜ்
தயாரிப்பு நிர்வாகம் – டிவ்ஸ் வேணுகோபால்
லைன் தயாரிப்பாளர் – குபேந்திரன் வி.கே
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – வினோத் சி.ஜே
மக்கள் தொடர்பு – யுவராஜ்

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது !!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள “வா வாத்தியார்” திரைப்படம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படம் அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி ஆகிய இருவரும் இணைகிறார்கள் என்றவுடனே, படத்தின் மீது பலமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த கூட்டணியின் மாயாஜாலத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றும் வகையில், இப்படம் வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்து, ஒரு அசத்தலான போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.

பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.

அறிவிப்பு போஸ்டரின் பின்னணியில் கூட்டம் ஆர்ப்பரிக்க, கார்த்தி சில்லவுட்டில் கையில் சவுக்குடன் நிற்கும், இந்த அறிவிப்பு போஸ்டரில் உலகம் முழுதும் 05.12.2025 என வெளியீட்டு தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகவுள்ளது. பெரும் ஆவலைத் தூண்டியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது

இந்திய ஆண்களின் ஆடைத்தொழில் பிராண்ட் “டஸ்வா”

இந்திய ஆண்களின் ஆடைத்தொழில் பிராண்ட் “டஸ்வா” – சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து திருமண ஆடைத் தொகுப்பு மற்றும் அதன் திருவிழாவை அறிமுகப்படுத்தியுள்ளது

மாடர்ன் இந்திய ஆண்களுக்கான திருமண மற்றும் விழாக்கால ஆடை பிராண்ட் டஸ்வா (Tasva), ABFRL மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் தருண் தாஹிலியாணி இணைந்து தொடங்கிய நிறுவனம், தற்போது சென்னை நகரின் இதயப்பகுதி என்று சொல்லக்கூடிய இடத்தில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தன் பிரமாண்டமான பிரதான ஷோரூம் அமைந்துள்ளது. 2500 சதுர அடியில் பரந்து விரிந்த இந்த மொத்த விற்பனை மையம், நவீன ஆண்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செம்மையான ஆடைகள் மற்றும் பிரமாண்டமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் என டஸ்வா வலியுறுத்துகிறது.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, கோலிவுட் நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய வருகையால் இந்த திருவிழா மற்றும் திருமணத் தொகுப்பை வெளியீட்டார்.
சென்னை கடை வெறும் ஷாப்பிங் இடமல்ல — அது ஒரு அனுபவம். இந்தியாவின் மரபையும், நவீன அழகியலையும் ஒருங்கே பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கடை, இந்திய பாரம்பரியத்திலிருந்து ஈர்க்கப்பட்ட வடிவமைப்புகளால் நிரம்பியுள்ளது, இதன் மூலம் டஸ்வாவை வரையறுக்கும் காலமற்ற அழகை வெளிப்படுத்துகிறது.

இந்த கடையில் டஸ்வாவின் திருவிழா ஆடைத் தொகுப்பு — கண்கவர் குர்தா செட் மற்றும் குர்தா-புண்டி செட்கள், துடிப்பான ஸ்கிரீன் பிரிண்ட்கள் மற்றும் நவீன வடிவமைப்புகளுடன் பாரம்பரிய ஆடைக்கு புதுமையான தோற்றத்தை கொண்டு வந்துள்ளது. திருமணத் தொகுப்பில் அழகான ஷெர்வானிகள், அச்கான்கள், மற்றும் புதுமையான அங்க்ரகா ஷெர்வானிகள் ஆகியவை சிறப்பாக தையலிடப்பட்ட நுண்ணிய எம்பிராய்டரி பணிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

டஸ்வா பிராண்ட் தலைவர் அஷிஷ் முகுல் கூறியதாவது:

“சென்னையில் எங்கள் புதிய திருவிழா மற்றும் திருமண ஆடைத் தொகுப்பு டஸ்வாவின் அடிப்படை மதிப்புகளை பிரதிபலிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் — அது ஸ்டைல், மரபு, மற்றும் கைவினைப் பணியின் சேர்க்கையாகும். ஒவ்வொரு கலெக்ஷனும் வாடிக்கையாளர்களுக்கு சீரான மற்றும் பிரமாண்டமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நன்கு பயிற்சி பெற்ற ஷோரூம் ஸ்டைலிஸ்ட்கள் தனிப்பட்ட ஃபேஷன் ஆலோசனைகளோடு, நவீனத்தன்மை மற்றும் மரபும் இணைவதால் ஒரு தனித்துவமான அனுபவம் டஸ்வா வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.”

தென்னிந்தியாவில் டஸ்வாவின் விரிவாக்கத்திற்கான முக்கியமான படியாக இந்த சென்னை கடை அமைகிறது. பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, மற்றும் சமீபத்தில் புனே ஆகிய நகரங்களில் ஏற்கனவே தன் அடித்தளத்தை வலுப்படுத்திய டஸ்வா, தென்னக சந்தையில் தன் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

“சென்னை நகரம் அதன் செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் ஃபேஷன் மையமாக இருப்பதால், எங்கள் அடுத்த கடைக்கான இயல்பான தேர்வாக இருந்தது. நகரத்தின் தேர்ந்த வாடிக்கையாளர்கள் டஸ்வாவின் கைவினைத் திறனையும், தரத்தையும், ஸ்டைலையும் நிச்சயமாக மதிப்பார்கள்,” என முகுல் கூறியிருக்கிறார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு கூறியதாவது :

“திருவிழா காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சென்னையில் இருப்பது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். இங்கே கொண்டாடப்படும் விழாக்கள் கலாச்சார ரீதியாக பெரும் அர்த்தம் கொண்டவை. டஸ்வாவின் கலெக்ஷன் இதற்குத் தகுந்ததாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். சென்னையில் வளர்ந்த எனக்கு, குடும்ப விழாக்களும், பண்டிகைகளும் எப்போதும் மனதில் சிறப்பு இடம் பெற்றவை. அந்த தருணங்களில் நம்மை நாமே சிறப்பாக உணர்வது முக்கியம். திருமணமாகட்டும், விழாவாகட்டும் — டஸ்வாவின் ஆடைகள் ஆண்களுக்கு வசதியுடன் ஸ்டைலாகக் கொண்டாடும் வாய்ப்பை வழங்குகின்றன. என் சொந்த ஊரில் இதை பகிர்வது எனக்கு இன்னும் தனிப்பட்ட மகிழ்ச்சியை அளிக்கிறது.”

கடை முகவரி: 1வது மாடி, எக்ஸ்பிரஸ் அவென்யூ மால், கடை எண் S157 & 158, பட்டுலோஸ் ரோடு, சென்னை – 600014
நேரம்: காலை 11.00 மணி – இரவு 9.00 மணி
ஆன்லைனில்: www.tasva.com

டஸ்வா பற்றி:
ABFRL மற்றும் தருண் தாஹிலியாணி இணைந்து தொடங்கிய l டஸ்வாவின் பிரத்யேக கடைகள் இந்தியாவின் பல நகரங்களில் உள்ளன மற்றும் ஆன்லைனில் www.tasva.com-இல் கிடைக்கின்றன.

கும்கி 2: மனிதன் மற்றும் யானைக்கு இடையேயான நம்பிக்கையும் நட்பும் சொல்லும் ஒரு கதை

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்கும் – கும்கி 2: மனிதன் மற்றும் யானைக்கு இடையேயான நம்பிக்கையும் நட்பும் சொல்லும் ஒரு கதை

கும்கி படம் வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. மனிதன்–யானை பாசத்தை ஆழமாகச் சொல்லிய உணர்ச்சிப் பூர்வமான அந்தக் கதை, ரசிகர்களின் மனதை வென்றது, மாபெரும் வெற்றியையும் பெற்றது. இன்றும் அது அன்புடன் நினைவுகூரப்படுகிறது. அந்த மரபைத் தொடர்ந்து, இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் கும்கி 2 மூலம், அதே உணர்ச்சிபூர்வமான தீவிரத்தையும், வலிமையான கதையையும், மறக்க முடியாத தருணங்களையும் இப்படம் கொடுக்கும் என்று வாக்குறுதி தருகிறார்.

மீண்டும் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் கும்கி 2 , ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றி பேசுகிறது. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் மதி , தனது அர்ப்பணிப்பு, பொறுமை, கடின உழைப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். கதாபாத்திரத்துக்குத் தேவையான கடினமான காட்சிகளை எளிதாகச் செய்துள்ளார். காட்டுப் பாதைகளில் நடப்பதோ, யானைகளுடன் நேரடியாகக் காட்சிகளில் பணிபுரிவதோ எதுவாயினும், தொடர்ந்து பயிற்சி செய்து யானையுடன் உள்ள தொடர்பை உயிர்ப்பித்துள்ளார். மதி யின் நடிப்பைப் பார்த்து, அவரது ஆர்வமும் முயற்சியும் தெளிவாகத் தெரிகின்றன என இயக்குநர் பிரபு சாலமன் பெருமையாகக் கூறுகிறார்.

இந்த படம், மனிதன்–இயற்கை–யானை இடையேயான பிணைப்பை அழகாகச் சித்தரிக்கும்.

பைசன் ஆடியோ வெற்றியைத் தொடர்ந்து நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை, படத்தின் உணர்ச்சிகளை இன்னும் ஆழமாக்கும். யானைகள் இடம்பெறும் காட்சிகள், மூச்சு வாங்கும் அளவிற்கு அடர்த்தியான காடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. அது பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தரும்.

மைனா, கும்கி 1, மான் கராத்தே, தர்மதுரை, பைரவா , தலைவன் தலைவி உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பணியாற்றிவரும் எம் சுகுமார் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவாகும் கும்கி 2, முதல் பாகம் ரசிகர்களையும் புதிய தலைமுறையையும் கவரும் நோக்கில் வருகிறது.

படத்தில் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரீஷ் பெரடி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:

இயக்கம் – பிரபு சாலமன்
தயாரிப்பாளர்கள் – டாக்டர் ஜெயந்திலால் காடா, தவல் காடா
இசை – நிவாஸ் கே. பிரசன்னா
ஒளிப்பதிவு – எம். சுகுமார்
எடிட்டிங் – புவன்
கலை இயக்கம் – விஜய் தென்னரசு
சண்டை அமைப்பு – ஸ்டண்ட் சிவா
ஆடை அலங்காரம் – வி.பி. செந்தில் அழகன்
தயாரிப்பு நிர்வாகம் – ஜே. பிரபாகர்
ஸ்டில்ஸ் – சிவா
ப்ரமோஷன் – சினிமாபையன்
PRO – யுவராஜ்

“அகண்டா 2: தாண்டவம்” , (#BB4 Akhanda 2: Thandavam) டிசம்பர் 5 முதல் திரையரங்குகளில்!

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா – பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu), கூட்டணியில் 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் அச்சந்தா (Raam Achanta), கோபி அச்சந்தா (Gopi Achanta) ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி ( M Tejaswini Nandamuri) வழங்கும் #BB4 “அகண்டா 2: தாண்டவம்” , (#BB4 Akhanda 2: Thandavam) டிசம்பர் 5 முதல் திரையரங்குகளில்!

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயாபட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக இணையும், அதிரடித் திரைப்படமான “அகண்டா 2: தாண்டவம்”, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார். இந்தப் படத்தின் டீசர், பெரும் வரவேற்பை பெற்று, ரசிகர்களிடையே உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக – அகண்டா 2: தாண்டவம் உலகமெங்கும் வரும் டிசம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியான போஸ்டரில் பாலகிருஷ்ணா – நீண்ட முடி, கரடுமுரடான தாடி, புனித மாலைகள் மற்றும் நகைகள் அணிந்து, பாரம்பரிய காவி மற்றும் பழுப்பு நிற ஆடையில், அலங்கரிக்கப்பட்ட திரிசூலத்தை தாங்கியவாறு, பனிமூட்டம் சூழ்ந்த பின்னணியில் வீரமான பாவனையுடன் காட்சியளிக்கிறார். ஆன்மிகமும் அதிரடியும் கலந்த அவரது தோற்றம் ரசிகர்களை மயக்குகிறது.

எஸ். தமனின் (S Thaman) அதிரடி பின்னணி இசை, படத்தின் அதிரடி மாஸ் காட்சிகளை பல மடங்கு உயர்த்தி, ரசிகர்கள் எதிர்பார்க்கும பிரம்மாண்ட அனுபவத்தை வழங்கப்போகிறது. ஆன்மீக ஆற்றலுடன் கூடிய பாலகிருஷ்ணாவின் தோற்றம், அவரது தீவிர ரசிகர்கள், மற்றும் திரை ஆர்வலர்களை ஏற்கனவே மெய்மறக்கச் செய்துள்ளது.

புதிய வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டதால், படக்குழுவுக்கு வலுவான ப்ரமோஷன் பணிகளை முன்னெடுக்க போதுமான நேரம் கிடைத்துள்ளது. தொடர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அப்டேட்களும் சஸ்பென்ஸ்களும் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன.

படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, ஆதி பினிசெட்டி வலிமையான எதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ஹர்ஷாலி மால்ஹோத்ரா முக்கியமான வேடத்தில் தோன்றுகிறார்.

ஒளிப்பதிவு பணிகளை – C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே செய்துள்ளனர். எடிட்டிங் பணிகளை தம்மிராஜு (Tammiraju) மற்றும் கலை இயக்கத்தை A. S. பிரகாஷ் செய்துள்ளனர்.

வலுவான படக்குழு மற்றும் வானளாவிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் “அகண்டா 2: தாண்டவம்”, ரசிகர்கள் கொண்டாடும் ஆன்மிக அதிரடி மாஸ் அனுபவமாக இருக்கும்

நடிப்பு :

நந்தமூரி பாலகிருஷ்ணா
சம்யுக்தா
ஆதிப் பினிசெட்டி
ஹர்ஷாலி மால்ஹோத்ரா

தொழில்நுட்பக் குழு :

எழுத்து, இயக்கம் : போயபதி ஸ்ரீனு
தயாரிப்பாளர்கள் : ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா
பேனர் : 14 ரீல்ஸ் ப்ளஸ்
வழங்குபவர் : M. தேஜஸ்வினி நந்தமூரி
இசை : S. தமன்
ஒளிப்பதிவு : C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : கோடி பருசூரி
கலை : A.S. பிரகாஷ்
எடிட்டிங் : தம்மிராஜு
சண்டை அமைப்பு : ராம் – லக்ஷ்மன்

நவம்பர் 7ல் வெளியாகும் ‘அதர்ஸ்’

கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘அதர்ஸ்’. மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.
அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தினில், ஜிப்ரான் இசையமைப்பையும், ராமர் படத்தொகுப்பையும், பிரதீப் சண்டை காட்சிகளையும், சந்தோஷ் நடன அமைப்பையும் கையாண்டிருக்கின்றனர்.

இப்படத்தினில் முக்கிய கதபாத்திரங்களில் ‘முண்டாசுபட்டி’ ராமதாஸ், ‘நண்டு’ ஜகன், ஹரிஷ் பெரோடி, வினோத் சாகர், இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்ப்பினை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படம் நவம்பர் 7ம் தேதியன்று வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.