Breaking
March 7, 2026

August 2025

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் “ரைட்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !!

RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் படமான “ரைட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

நட்டி, அருண் பாண்டியன் கூட்டணியில் வெளியாகியிருக்கும் “ரைட்” படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

எளிய மக்களுக்கு பிரச்சனை என்றால் காவல்நிலையத்தில் உதவி கேட்பார்கள். அந்த காவல் நிலையத்திற்கே ஒரு பிரச்சனை என்றால் என்னவாகும்?, இது தான் இப்படத்தின் மையம்.

ஜில்லா புலி படங்களில் அசோஷியேட் இயக்குநராக பணிபுரிந்துள்ள சுப்ரமணியன் ரமேஷ்குமார் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பரபரப்பான சம்பவங்களை கோர்த்து, விறுவிறுப்பான திரைக்கதையில், அசத்தலான கமர்ஷியல் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

தமிழ் திரையுலகில் கால் பதித்திருக்கும் RTS Film Factory நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் நட்டி, அருண் பாண்டியன் இணைந்து, முதன்முறையாக முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், வில்லனாக ரோஷன் உதயகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வீரம் படப்புகழ் குழந்தை நட்சத்திரம் யுவினா பார்தவி இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார், அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் புதுமுகமாக அறிமுகாகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்
தயாரிப்பு நிறுவனம் – RTS Film Factory
தயாரிப்பாளர்கள் – திருமால் லட்சுமணன், ஷியாமளா
எழுத்து, இயக்கம் – சுப்ரமணியன் ரமேஷ்குமார்
இசை – குணா பாலசுப்ரமணியன்
ஒளிப்பதிவு – M பத்மேஷ்
எடிட்டிங் – நாகூரான் ராமசந்திரன்
கலை – தாமு
ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்
நடனம் – ராதிகா
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

ஜான் ஆப்ரஹாம் நடிப்பில், ‘டெஹ்ரான்’

சுதந்திர தின சிறப்பு முன்னோட்டம் : ஜான் ஆப்ரஹாம் நடிப்பில், ‘டெஹ்ரான்’ திரைப்படம் – பாந்த்ரா -வோர்லி கடல் பாலத்தில், மாபெரும் புரஜெக்சஷனில் இடம் பிடித்துள்ளது!!

சுதந்திர தின ஒளி விழா: ஜான் ஆப்ரஹாம் ‘டெஹ்ரான்’ பட விளம்பரம் பாந்த்ரா-வோர்லி கடல் பாலத்தில் மின்னியது !!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மும்பையின் புகழ்பெற்ற பாந்த்ரா-வோர்லி கடல் பாலம் (Bandra Worli Sea Link) ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவான பெரும் எதிர்பார்ப்புமிக்க திரில்லர் படமான ‘டெஹ்ரான்’ திரைப்படத்தின் மாபெரும் விளம்பர மேடையாக மாறியது. ZEE5-இல் வெளியாகும் முன்பு, பாலம் முழுவதும் ஒளிர்ந்த திரைப்படத்தின் கண்கவர் போஸ்டர், பயணிகள் மற்றும் பாதசாரிகளின் பார்வையை கவர்ந்து, அனைவரும் தங்கள் மொபைலில் அந்த தருணத்தை படம் பிடிக்க வைக்கும், உற்சாக தருணமாக மாறியது.

இந்த அபூர்வமான புரஜெக்சன், சுதந்திர தின வாரத்தின் தேசப்பற்று உணர்வையும், உளவு திரில்லர் திரைப்படத்தின் அதிரடி துடிப்பையும் ஒருங்கிணைத்தது. இரவின் இருளில் ஒளிர்ந்த கடல் பாலம், தேசப்பற்று மற்றும் சினிமா காட்சியின் கலவையாக, ஒரே நேரத்தில் கொண்டாட்டத்தையும் உற்சாக அனுபவத்தையும் அளித்தது. இந்நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்ற ஜான் ஆப்ரஹாம், இதை “பெருமையும் மறக்க முடியாத தருணமும்” என்று விவரித்து, டெஹ்ரான்-படத்தில் பங்கேற்றது ஒரு அற்புதமான பயணமாக இருந்தது என்றார்.

இப்போது ZEE5-இல் ஸ்ட்ரீம் ஆகும் டெஹ்ரான், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான உலகளாவிய பதற்றத்தை மையமாகக் கொண்ட, இந்தியா அந்த மோதலில் சிக்கிக்கொள்வதைப் பதிவு செய்யும் ஒரு திகில் நிறைந்த பொலிட்டிக்கல் திரில்லர் படமாகும். மாடோக் பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் கோபாலன் இயக்கியுள்ள இப்படத்தில், மனுஷி சில்லர், நீரு பஜ்வா, மதுரிமா துலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விசுவாசம், பொறுமை, அதிரடி, மர்மம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் டெஹ்ரான், சுதந்திர தினத்திற்கு ஏற்ற, பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் ஒரு அட்டகாசமான படம்.

படம் குறித்து நடிகர் ஜான் ஆப்ரஹாம் கூறியதாவது…,
“டெஹ்ரான் திரைப்படத்தில் பங்கேற்றது ஒரு அபாரமான அனுபவம். நான் கடந்த ஆண்டுகளில் நடித்த திரைப்படங்களைக் கவனித்தால், நாட்டின் மீது எனக்கு இருக்கும் பற்று தெளிவாக தெரியும் — அது திரையில் நான் செய்வதில் பெரும்பாலும் பிரதிபலிக்கும். ஜியோ பாலிட்டிக்ஸ் மீது உள்ள ஆர்வம், இந்தக் கதையின் மீது எனக்கு உடனடியாக ஈர்ப்பை ஏற்படுத்தியது. சுஷ்மா ஸ்வராஜ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபாரின் சர்வீஸ் நிபுணர்களுடன் கலந்துரையாடிய அனுபவம், ஒரே நேரத்தில் ஊக்கமூட்டுவதும், உற்சாகம் அளிப்பதாகவும் இருந்தது. டெஹ்ரான் போஸ்டர் பாந்த்ரா-வோர்லி கடல் பாலத்தில் ஒளிர்வதை காண்பது பெருமையும் மறக்க முடியாத தருணமுமாகும். இப்படத்திற்கு ZEE5 இவ்வளவு வலுவான தளத்தை வழங்கியதில் மகிழ்ச்சி. சுதந்திர தின வார இறுதியில் இப்படம் வெளியாகுவது, தேசப்பற்று உணர்வுடன் கூடிய, ஒரு அதிரடி கதைக்குள் பார்வையாளர்களை அழைக்கும் சிறந்த தருணம்.”

இந்த சுதந்திர தினத்திற்கு சிறந்த பார்வை அனுபவமாக டெஹ்ரான் தற்போது ZEE5-இல் ஸ்ட்ரீமாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் வெளிநாட்டு முன்னணி சக்தி மணமுடித்தார்: அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனர் வித்துர்ஸ், லிஷாவுடன் திருமணம்

சென்னை, — தமிழ் திரைப்படங்களை உலகளவில் பரப்பியதில் முக்கிய பங்கு வகிக்கும் அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் வித்துர்ஸ், தனது நீண்டகால துணைவி லிஷாவுடன் திருமணம் செய்து கொண்டார்.

சென்னையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான திருமண வரவேற்பு விழா, தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களை ஒன்றிணைத்த ஒரு பிரமுகமான நிகழ்வாக அமைந்தது. நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த விழா, மறக்க முடியாத ஒரு தருணமாக இருந்தது.

வித்துர்ஸ் மற்றும் அவரது நிறுவனம் அகிம்சா என்டர்டெயின்மென்ட், கடந்த சில ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களை இங்கிலாந்து, ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு சந்தைகளுக்கு வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ளது. புதிய முயற்சிகள், தரமான விநியோகம், புதுமுக இயக்குநர்களுக்கு ஆதரவு ஆகியவற்றின் மூலம், நிறுவனம் உலகளாவிய தமிழ் சினிமா வட்டாரத்தில் நம்பிக்கையான பெயராக திகழ்கிறது.

வித்துர்ஸ் மற்றும் லிஷா தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் இந்த நேரத்தில், அகிம்சா என்டர்டெயின்மென்ட் தமிழ் சினிமாவின் சர்வதேச செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து செயல்படும்.

ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் மீண்டும் இணையும் படம்

Origin Studios சார்பில் கண்ணதாசன் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்
இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. Production NO 1 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ராஜ்குமார் ரங்கசாமி இப்படத்தை இயக்குகிறார்.

எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். இவர் பொறியாளன், சட்டம் என் கையில் படத்திற்கு இசையமைத்தவர்.

குட் நைட், லவ்வர் , டூரிஸ்ட் ஃபேமிலி, போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த பரத் இப்படத்துக்கு எடிட்டிங் செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ராஜ்குமார் ரங்கசாமி கூறியதாவது:

இந்த உலகில் காதலும் அன்பும் அதன் இயல்பு தன்மையை மாற்றாமல் இருப்பதை நாம் ஒப்புக் கொள்ளும் அதே வேளையில் அவற்றின் வடிவம் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பதை நாம் மறுக்க இயலாது.

90s கிட்ஸ், 2K கிட்ஸ் .. வரிசையில் இன்றைய இளைஞர்களை ஜெனரேஷன் ஆல்ஃபா என்று சொல்கிறார்கள்..

இவர்கள் 21 ஆம் நூற்றாண்டில் முழுமையாகப் பிறந்த முதல் தலைமுறை மற்றும் COVID-19 தொற்றுநோய் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அதிகரித்து வரும் ஆதிக்கத்தால் வடிவமைக்கப்பட்ட குழந்தைப் பருவத்தை அனுபவித்தவர்கள். எல்லா தருணங்களிலும் CELEBRETING MINDSET – ல் இருக்ககூடியது இந்த ஜென் தறைமுறை. இவர்கள் மிகவும் அட்வான்சாக யோசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சகிப்புத்தன்மை, வெறுப்புணர்வு மேலோங்கி இருக்கும் இந்த சூழலில் உறவுகள் என்பது வேர்களில் இருந்து கற்றுக் கொள்ளப்படாமல் அதை விட்டு விலகிய நிலையில் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இன்னொருவர் கருத்தை ஒத்து கொள்வதை தாண்டி அதை கேட்க கூட யாரும் தயாராக இருப்பதில்லை. ஆனால் அடிப்படையான ஒன்றை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எந்த தறைமுறையாயிருப்பினும் அதன் ரூட் அதாவது வேர் என்பது முக்கியம். வேர்களை விட்டு விலகாத ஒரு வாழ்க்கை வேண்டும். அதுவே
அடுத்த தறைமுறையினரின் மீட்சியாக இருக்கும். சிந்தனைகளிலும், தொழில்நுட்பத்திலும் மிகவும் அட்வான்சாக வாழ்ந்து வரும் இன்றைய இளம் தலைமுறையினர் காலம் காலமாக இருந்து வரும் மனிதர்களின் இயல்பான சில நல்ல விஷயங்களை கற்று கொள்ளாமல், கற்று கொடுக்க படாமல் இருப்பதை மனதில் கொண்டு அதை கருவாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது.

அலட்டி கொள்ளாத, உறவுகள் இன்றி வாழும் ஒருவன்.., குடும்பம், பெற்றோர் என்று சார்ந்திருக்கும் ஒரு இளம் பெண் இவர்கள் இருவருக்கும் இடையே மலரும் உறவு எப்படி செல்கிறது என்பதே இப்படத்தின் கதை.

96 படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் ஜோடியாக நடிக்கிறார்கள். இயக்குனர் கே பாக்யராஜ் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இவர்களுடன் கிங்ஸ்லி,
டி எஸ் ஆர், ஒளிப்பதிவாளர் ராஜூமேனன் மகள் சரஸ்வதி மேனன், இயக்குனர் சாய் ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி, நாமக்கல் மற்றும் கோவா போன்ற இடங்களில் நடந்திருக்கிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த ஆண்டு படம் திரைக்கு வர உள்ளது.

பட தயாரிப்பாளர் கண்ணதாசன் கூறியதாவது:
இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தேன். இந்நிலையில் எனது நண்பர் ராஜ்குமார் ரங்கசாமி இந்த கதையை என்னிடம் கூறினார். இந்த காலகட்டத்திற்கு ஏற்ப சரியான கதையாகவும், சொல்ல வேண்டிய கதையாகவும் இருந்ததால் அதனை தயாரிக்க முடிவு செய்தேன்.
இப்படத்தை அடுத்து தொடர்ந்து படங்கள் தயாரிக்க எங்களது நிறுவனம் திட்டமிட்டுள்ளது

இவ்வாறு தயாரிப்பாளர் கண்ணதாசன் கூறினார்..

விமல் நடிக்கும், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர்………

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது!!

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, எல்சன் எல்தோஸ் மற்றும் இரட்டை இயக்குநர்கள் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினராக உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்துள்ளது.

சமீபத்தில் காரைக்குடியில் பிரம்மாண்ட பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், படத்தை ஆரம்பித்த வேகத்தில் 45 நாட்களில் ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளது படக்குழு.

மலையாளத் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற “ககனச்சாரி, பொன்மேன்” படங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் நிறுவனம், இந்த புதிய படம் மூலம், தமிழ் திரையுலகில் கால்பதித்துள்ளனர். தயாரிப்பாளர் விநாயகா அஜித் இப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் கதாநாயகனாக விமல் மற்றும் கதாநாயகியாக முல்லை அரசி நடிக்க, விடுதலை சேத்தன், பருத்திவீரன் சரவணன் உட்பட மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து, நடித்துள்ளனர்.

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, குடும்பங்களோடு அனைவரும் கொண்டாடும் வகையில், ஒரு அசத்தலான காமெடி எண்டர்டெயினராக இப்படத்தை, அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கி வருகின்றனர்.

எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். பார்க்கிங் வெற்றிப்பட ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரான்சிஸ் நெல்சன் சேவியர் மற்றும் மருது பெரியசாமி வசனம் எழுதியுள்ளனர். எடிட்டிங் மதன், கலை இயக்கம் ராஜ்கமல், ஸ்டண்ட் தினேஷ் காசி, எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் ரஞ்சித் கருணாகரன் ஆகியோர், தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவக்கியுள்ளது படக்குழு. விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீசர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

நீதிக்கான போராட்டத்தின் வரலாற்றைப் பேசும் படம் “வீர வணக்கம்” பட டிரெய்லர் !!

விஷாரத் க்ரியேஷன்ஸ் வழங்கும், இயக்குநர் அனில் V.நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, தமிழகம் மற்றும் கேரள மண்ணில், அடக்குமுறைக்கான போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில், அருமையான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வீர வணக்கம்”.

சக மனிதனைக் கொடுமைப்படுத்தும், ஜாதிய அடக்குமுறை இன்றும் நாடு முழுவதும் நடந்து வருகிறது. ஆனால் இன்றைய நிலைமையை விட மோசமான முற்காலத்தில் நீதிக்கான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய ஆளுமைகளைப் போற்றும், அவர்களின் வரலாற்றைப் பேசும் படமாக உருவாகியுள்ள “வீர வணக்கம்” திரைப்படத்தின் டிரெய்லரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்திருமாவளவன் அவர்கள், நேற்று வெளியிட்டார். இந்த டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இன்றைய தமிழகத்தின் ஒரு கிராமத்தில், வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒரு அழகான நட்பு, ஜாதிய மனோபாவத்தால் சிதைக்கப்படுகிறது. அதை தடுக்கும் ஒரு பெரிய மனிதரின் வழியே, தமிழகத்திலும், கேரளத்திலும் உண்மையில் வாழ்ந்து நீதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஆளுமையான P கிருஷ்ணபிள்ளை அவர்களின் வரலாற்றின் கதையை இப்படம் சொல்கிறது.

தந்தை பெரியாரின் முற்போக்கு சிந்தனையையும், திராவிட சித்தாந்தத்தையும் பேசுவதோடு, தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்பை அன்பை, அழகாக பேசும் ஒரு படைப்பாக, காதல், சண்டைக்காட்சிகள், சஸ்பென்ஸ் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தைத் தயாரித்து, இயக்கியுள்ளார் இயக்குநர் அனில் V.நாகேந்திரன்.

இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சமுத்திரகனி நடித்துள்ளார். நடிகர் பரத் இதுவரை ஏற்றிராத, கிராமத்து பெரிய மனிதர் பாத்திரத்தில் நடித்துள்ளார். ரித்தேஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷாரடி, சுரபி லட்சுமி, பி.கே. மேதினி, ஆதர்ஷ், சித்தாங்கனா, ஐஸ்விகா, அரிஸ்டோ சுரேஷ், சித்திக் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு M K அர்ஜுனன், பெரும்பாவூர் G. ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், C.J.குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் இசையமைத்துள்ளனர். இப்படத்தில் பழம்பெரும் தமிழ்ப் பின்னணிப் பாடகர் T.M. சௌந்தர்ராஜன் அவர்களின் மகன் TMS செல்வகுமார் ஒரு அருமையான பாடல் பாடியுள்ளார்.

இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து, இயக்கம் – அனில் V.நாகேந்திரன்
இசை – M K அர்ஜுனன், பெரும்பாவூர் G. ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், C.J.குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார்
ஒளிப்பதிவு – கவியரசு, சினு சித்தார்த் எடிட்டிங் – பி. அஜித் குமார், அப்பு பட்டத்திரி கலை இயக்கம் – கே. கிருஷ்ணன் குட்டி
இணை இயக்கம் – கே. ஜி. ராம் குமார் ஒப்பனை – பட்டணம் ரஷீத்
சண்டைப் பயிற்சி – மாஃபியா சசி
பாடல்கள் நவீன் பாரதி,
உடைகள் – இந்திரன்ஸ் ஜெயன், ஜி.பழனி சவுண்ட் டிசைன் – என். ஹரி குமார்
மக்கள் தொடர்பு – குணா, சதீஷ், சிவா (AIM)

KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு…………

KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு,  யுவன்சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் புதிய படத்தின் பூஜை , இன்று கோலாகலமாக நடைபெற்றது !!

KRG கண்ணன் ரவியின்  பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதிய படம் “Production no 4”,  படத்தின் பூஜை இன்று துபாயில் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ்  (sam rodrigues) எழுதி இயக்குகிறார்.

இப்படத்தின் பூஜையில் திரைப்பிரபலங்கள், லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன்,   நடிகர் ஜீவா, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, இயக்குநர் நிதீஷ் சகாதேவ் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

தமிழ் திரையுலகில் மறக்க முடியாத காமெடி கூட்டணிகளில் ஒன்று நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு கூட்டணியாகும். இவர்கள் ஒன்றிணைந்தாலே திரையரங்கில் சிரிப்பு மழை பொழியும். வயிறு குலுங்க சிரிக்க வைத்து, ரசிகர்கள் மனதில் இன்றளவிலும் நீங்காத இடம் பிடித்த, இந்தக் கூட்டணியுடன்,  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இந்த புதிய படத்தில்  25 வருடங்களுக்குப் பிறகு  மீண்டும் இணைந்துள்ளார்.

பிரபுதேவா, வடிவேலு கூட்டணியின் அத்தனை டிரேட் மார்க் அம்சங்களுடன், ஒரு கலக்கலான ஆக்சன் அட்வென்ச்சர் ( Action Adventure ) படமாக இப்படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர்  சாம் ரோட்ரிகஸ்  (sam rodrigues).

முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டண்ட் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கிறார். ஆண்டனி எடிட்டிங் பணிகளை கையாளுகிறார்.

இப்படத்தில் அனிமல், ஏஸ் வெற்றிப்படங்களுக்குப் பிறகு, நடிகர் பப்லு பிரித்திவிராஜ் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் துவங்கவுள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

KRG நிறுவனத்தின் நான்காவது படைப்பாக உருவாகும் இப்படத்தினை தயாரிப்பாளர் கண்ணன் ரவி, மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், மற்றும் படத்தின் அப்டேட் பற்றிய விபரங்கள். ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

“ஹாலிவுட் க்ராஃப்ட் + இந்தியா பவர்: யாஷ் டாக்ஸிக் (Toxic )படத்தில் JJ Perry-யின் 45 நாள் சாகசம்”

ஹாலிவுட் க்ராஃப்டும் இந்திய பவரும் இணையும் – டாக்ஸிக் (Toxic ) படத்தில், 45 நாள் ஆக்ஷன் மராத்தான் ஷூட்டிற்கு ‘ஜான் விக்’ புகழ் JJ Perry முழுக்க இந்திய ஸ்டண்ட் குழுவுடன் இணைகிறார்.

“யாஷ், கீத்து மோகன்தாஸ் (Geetu Mohandas )ஆகியோருடன் பணிபுரிவது என் கரியரில் மறக்க முடியாத தருணம்” – JJ Perry

மும்பையின் இடையறாத மழைக்காலம் காரணமாக பல படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டாலும், “டாக்ஸிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” (Toxic: A Fairytale for Grown-ups) படக்குழு, அதற்கு மாறாக புயலை சவாலாக எடுத்துக்கொண்டு, அன்புடன் தழுவிக்கொண்டுள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை எடுக்கப்பட்ட மிகப் பெரிய ஆக்ஷன் ஷெட்யூல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த 45 நாள் ஆக்ஷன் படப்பிடிப்பை, John Wick, Fast & Furious, Day Shift போன்ற படங்களில் தனது ஆக்ஷன் காட்சிகளால் உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்ற ஹாலிவுட் ஆக்ஷன் இயக்குநர் JJ Perry தற்போது மும்பையின் மத்தியபகுதியில் நடத்தி வருகிறார்.

பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் இதற்கு முன்பு பல்வேறு நாடுகளிலிருந்து சர்வதேச ஸ்டண்ட் நிபுணர்களை இணைத்திருந்த Perry, இப்போது முழுக்க முழுக்க இந்திய ஸ்டண்ட் கலைஞர்களுடன் மட்டுமே பணியாற்றத் தீர்மானித்துள்ளார். அவர்களின் அர்ப்பணிப்பையும் துல்லியத்தையும் நேரடியாகக் கண்ட பிறகு தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து JJ Perry கூறுகையில்..

“இந்திய குழு உலகத் தரம் வாய்ந்தது. அதனால்தான் நான் இவர்களுடன் பணிபுரியத் தீர்மானித்தேன். நாங்கள் தற்போது ஒரு மிகப்பெரிய சீக்குவென்ஸை எடுத்து வருகிறோம். இது ஒரு சவாலான பணி, ஆனாலும் நான் சவால்களை விரும்புவன். இந்தக் குழு அதை நேருக்கு நேர் எதிர்கொள்கிறது. இதுவரையிலான ஆக்சன் காட்சிகளின் எல்லைகளை கடந்து புதியதை உருவாக்குவதே எங்கள் நோக்கம் – அதுதான் சினிமா”.

மாதக்கணக்கான முன் தயாரிப்பு பணிகள் மூலம் உருவான இந்தக் காட்சி – Perry, ஹீரோவும் தயாரிப்பாளருமான யாஷ், இயக்குநர் கீத்து மோகன்தாஸ், DNEG மற்றும் தயாரிப்பாளர் வெங்கட் K. நாராயணா ஆகியோரின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது. குறிப்பாக யாஷ் – வெங்கட் கே. நாராயணா கூட்டணி, பெரிய அளவிலான இந்தப் படத்திற்குத் தேவையான பெரும் பட்ஜெட்டையும், வசதிகளையும் பெற்றுத்தருவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

இந்த ஆக்ஷன் சீக்குவென்ஸ் – ஸ்டோரி போர்டுகள், துல்லியமான பயிற்சிகள், கலை தொடர்பான விவாதங்கள் போன்றவற்றின் மூலம் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டது. இந்திய சினிமாவுக்கு புதிதாக, உயிரோட்டமுள்ள, ஒரு முழுமையான ஆக்ஷன் அனுபவத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.

“என் 35 வருட அனுபவத்தில், நான் 39 நாடுகளில் வேலை செய்திருக்கிறேன். நான் இந்திய சினிமாவின் ரசிகன். இந்திய சினிமா படைப்பாற்றலானது, கலைநயம் நிறைந்தது, துணிச்சலானது. யாஷ், கீத்து, வெங்கட் மற்றும் அவர்களின் அற்புதமான குழுவுடன் இணைவது என் வாழ்க்கையின் சிறப்பான தருணம். கீத்துவின் கலைநோக்கு பார்வை அபாரமானது. ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, தயாரிப்பு வடிவமைப்பாளர் மற்றும் கலைக்குழுவின் பங்களிப்பு மிகச் சிறந்தது” என Perry பகிர்ந்துள்ளார்.

மும்பையில் நடைபெற்று வரும் இந்தப் படப்பிடிப்பு, இந்திய சினிமாவில் ஒரு முக்கியக் கட்டமாகும். Toxic இந்தியாவின் முதல் மிகப்பெரிய அளவிலான இருமொழிப் படம் – ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்படுகிறது. இதற்குப் பிறகு இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. இத்தகைய தைரியமான முயற்சி, கதையின் உண்மைத்தன்மையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாது, உலகளாவிய பார்வையாளர்களையும் இணைக்கும்.

“இந்திய கலாச்சாரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது, செழிப்பானது, பல அடுக்குகளால் ஆனது. நான் வாழும் அமெரிக்க கலாச்சாரம் சில நூற்றாண்டுகளே பழமை வாய்ந்தது. ஆனால் இங்கே வந்து, உலகளாவிய சினிமா பாணியை இந்தியக் கதைகளுடன் இணைப்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. அதனால் ஏற்கனவே செய்ததை மீண்டும் செய்ய விரும்பவில்லை – புதிதாக ஒன்றை உருவாக்கவே விரும்புகிறேன். Toxic எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கிறது” என Perry கூறினார்.

வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து தயாரிக்கும் “டாக்ஸிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” (Toxic: A Fairytale for Grown-ups), KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாகும். ஆழமும், அதேசமயம் கவரும் காட்சியமைப்புகளும் கலந்த இந்தப் படம், 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’

மார்க் ஸ்வர்ணபூமியில்,( MARG Swarnabhoomi ) ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’ (Hukum) உலக சுற்றுப்பயணத்தின் பிரமாண்ட நிறைவு விழா, வரலாறு படைத்தது

ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தரின் “ஹுக்கும்”(Hukum)உலக இசைச் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்ட கச்சேரி, 2025 ஆகஸ்ட் 23-ஆம் தேதி, குவாத்தூர்(Kuvathur), ECR-ல் உள்ள மார்க் ஸ்வர்ணபூமியில் நடைபெற்றது. 50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று, சென்னை கண்ட மிகப்பெரிய, சிறப்பாக திட்டமிடப்பட்ட இசை நிகழ்வுகளில் ஒன்றாக, இந்த இசை நிகழ்ச்சி புதிய வரலாறு படைத்திருக்கிறது.

பரந்த வாகன நிறுத்துமிடம், உணவு மற்றும் குடிநீர் அரங்குகள், அனைத்து பகுதிகளிலும் கழிப்பறைகள், மருத்துவ மையங்கள், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், நிகழ்ச்சி எந்த தடங்கலும், இடையூறுகளும் இல்லாமல் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. பெருமளவிலான காவல்துறை மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, முழு நிகழ்ச்சியிலும் போக்குவரத்து மற்றும் ரசிகர்கள் பாதுகாப்பு மிகச்சிறப்பாக கையாளப்பட்டது.

ராக் ஸ்டார் அனிருத் மேடையை அதிர வைத்தார். ஹிட் பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக பாடி ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தார். குறிப்பாக வானத்தில் காட்சியளித்த ட்ரோன் (drone) நிகழ்ச்சி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, நிறைவு நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக அனைவரையும் ஈர்த்தது. ரசிகர்கள் பலருக்கு இது அவரது சிறந்த கச்சேரியாக நினைவில் நிறைந்தது.

“ஹுக்கும்” Hukum உலக சுற்றுப்பயண இறுதிக்கட்ட கச்சேரி, பிராண்ட் அவதார் நிறுவனத்தால் உலகத் தரத்தில் நடத்தப்பட்டு, சென்னை நேரடி இசை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பதிந்துள்ளது.

MGM Healthcare Commends Organ Donors for Their Selfless Contribution to Saving Lives

Chennai, August 23rd, 2025: MGM Healthcare honoured several organ donors and their family members at a special felicitation programme, recognising their invaluable contributions to saving and transforming lives. The felicitation ceremony was attended by MLA Mr. M.K. Mohan and Indian Actress Ms. Neelima Rani. The hospital also organized a walkathon themed “Miles for Lives” to raise awareness on organ donation.

Organised by MGM Healthcare’s Institute of Liver Diseases, Transplant & HPB Surgery, these events raised awareness about the importance of organ donation, while encouraging people to register as donors. The walkathon began at MGM Healthcare on Nelson Manickam Road and concluded at Tower Park, Anna Nagar, with hundreds of healthcare professionals, hospital staff, and members of the public participating enthusiastically.

In 2024, India had achieved a notable milestone of performing over 18900 organ transplants – the highest recorded in a single year when compared to 2013 which recorded fewer than 5,000 transplants. After the USA and China, India ranks third globally in the total number of organ transplants. Despite the numbers, the demand for organs far exceeds availability, making awareness and pledging essential.

In his comments, Dr. Prashanth Rajagopalan, Managing Director, MGM Healthcare, said, “MGM Healthcare is proud to organise the donor felicitation and a walkathon program. While medical science has advanced tremendously, enabling both living and cadaver donations to be safe and effective. Our organ donation rate remains strikingly low at less than one per million population, compared with over 40 per million in countries like the US and Spain. Living donors can donate a kidney or part of their liver, allowing both donor and recipient to lead healthy, fulfilling lives. Cadaver donations can save multiple lives through organs such as the heart, lungs, liver, kidneys, pancreas, and corneas. The main barrier is not medical feasibility, but social hesitation and lack of awareness”.

Dr. Thiagarajan Srinivasan, Senior Consultant and Director, Institute of Liver Diseases, Transplant and HPB Surgery, MGM Healthcare, said, “Organ donation is one of the greatest gifts of modern medicine, and liver transplantation exemplifies how lives can be saved and restored. The liver’s remarkable ability to regenerate makes both living and deceased donor liver transplants highly effective, with most recipients going on to lead full and productive lives. Brain-dead donors remain the cornerstone of organ transplantation, though organs from donors after cardiac death are also being used successfully worldwide. Both pathways must be promoted more widely in India to meet the growing demand. For this, hospitals must come forward to build structured, sustainable transplant programmes with trained teams, advanced infrastructure, and strong ethical practices.”