இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில் அடுத்தடுத்து பல தரமான படைப்புகள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. ZEE5 வெளியீடாக 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ்,fசீரிஸில் நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் சரவணன்.
அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
கடந்த ஜூலை 18 ஆம் தேதி வெளியான இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சீரிஸ் வெளியான வேகத்தில் … மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
ZEE5 இன் புதுமையான, தனித்துவமான விளம்பரங்கள், மக்கள் மத்தியில் சீரிஸ் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. மக்களை பார்க்கத் தூண்டும் வகையில், ZEE5 ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் முதல் எபிஸோடை, இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் சந்தாதரர்கள் அல்லாத அனைவரும் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் முதல் எபிஸோடை கண்டுகளிக்கலாம்.
சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.
சட்டமும் நீதியும் சீரிஸை ZEE5 தளத்தில் பிரத்தியேகமாக கண்டுகளியுங்கள்.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வந்துவிட்டது. இந்த முறை அதிபயங்கர டிவிஸ்ட், வேற லெவல் சர்ப்ரைஸ், என பல புதுமைகளுடன் அசத்த வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் 11.
தமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து, அவர்கள் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியிருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர். பல இளம் திறமையாளர்களின் வாழ்வின் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி, இந்த முறையும் பல அதிரடி புதுமைகளுடன் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர்.
சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 நிகழ்ச்சியில், இந்த சீசனில் ரசிகர்களுக்கான பெரிய சர்ப்ரைஸ் ஒன்றும் இருக்கிறது. முதன்முறையாக யாருமே எதிர்பாராத ஒரு புதிய செலிபிரிட்டி நடுவர், இந்த பிரபலமான சூப்பர் சிங்கர் நடுவர்கள் குழுவில் இணைகிறார். மேலும் இந்த முறை தமிழகத்தின் பல மண்டலங்களைச் சேர்ந்த இசைத்திறமைகளுக்கு இடையேயான இசைப் போராக அமைய இருக்கிறது.
இந்த முறை டெல்டா தமிழ், கொங்கு தமிழ், எங்கும் தமிழ், சென்னை தமிழ் இந்த முறை பங்கேற்பாளர்கள் மண்டல அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு மண்டலத்தைச் சேர்ந்த பாடகர்களும், தங்கள் இசைத்திறமையை வெளிக்கொண்டு வரவும், பட்டத்தைக் கைப்பற்றவும் களமிறங்கவுள்ளனர்.
பல அதிரடி மாற்றங்கள், முற்றிலும் மாறிய வடிவம், புதிய ஜட்ஜ், வேற லெவல் சர்ப்ரைஸ்கள் என இந்த சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 வெறும் பாடல் போட்டி அல்ல – இது மண்டல வாரியான போட்டியாளர்களின் மாபெரும் இசையுத்தம்!
பொதுவாக கெவி என்னும் வார்த்தை மலைப்பிரதேசங்களில் உள்ள பள்ளத்தாக்கை குறிக்கும் வார்த்தை.
இந்த கெவி திரைப்படமானது கொடைக்கானலில் வெள்ளக் கெவி என்னும் கிராமம், பல நூறு வருடங்களுக்கு முன்பு ஒரு கொடுங்கோல் மன்னர் ஆட்சியில் இருந்து தப்பித்து வரும் மக்கள், அந்த பள்ளத்தாக்கில் கெவி என்னும் கிராமத்தை உருவாக்கி வாழ்கிறார்கள்.
பல வருடங்கள் கழித்து இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட பொழுது அவர்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல், மலைப்பிரதேசங்களில் தங்க முடிவு செய்கிறார்கள். அவர்கள் அவ்வாறு தேடி செல்லும் ஒரு மலையில் கெவி என்னும் கிராமத்தை அடைகிறார்கள் .அந்த மக்களை டோலி கட்டி சுமக்கும் மக்களாக பயன்படுத்தி அந்த பள்ளத்தாக்கிலிருந்து மேலே சென்று ஒரு நகரத்தை உருவாக்குகிறார்கள். அந்த நகரம் தான் இப்பொழுது பிரபலமாக இருக்கும் கொடைக்கானல்.
காலங்கள் எவ்வளவு கடந்தாலும் இந்த கெவி பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் இன்னமும் டோலி சுமந்து கொண்டு அவர்களுக்கான அடிப்படை தேவைகள் ஏதும் இன்றி வாழும் வழியினை கூற வருவதுதான் இந்த கெவி படத்தின் திரைக்கதை. பல தலைமுறைகளாக வாழ்வாதாரத்திற்கு போராடி வரும் இந்த கிராமத்து மக்களுக்கு அரசின் எந்த திட்டங்களும் முழுமையாக இன்னமும் சென்று சேராத சூழல்தான் இருக்கிறது .இப்படி இருக்கும் சூழலில் இதற்கு முந்தைய காலகட்டங்களில் எத்தனை வருடங்களாக அவர்கள் எவ்வாறு வாழ்ந்திருப்பார்கள் என்பதை நம் கண் எதிரே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் இந்த படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள். இந்த கெவியில் வாழும் ஆதவன், ஷீலா கணவன் மனைவியாக வாழ்கிறார்கள் ஒரு நாள் இரவில் ஒரு மண் சரிவில் பலர் இறந்து விட அவர்களில் சிலரை காப்பாற்ற டோலி கட்டி தூக்கிச் செல்லும் பொழுது எதிரில் வரும் அந்த ஊரின் அரசியல்வாதியை எதிர்த்து கேள்வி கேட்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறான் நாயகன். அந்த சூழலில் அந்த அந்த சூழலில் அரசியல்வாதியை அடித்து விடுகிறான் காவல்துறையினர் மீது செருப்பும் வீசப்படுகிறது. இதை வஞ்சம் வைத்துக் கொண்டு காவல்துறை நாயகனை கொல்ல துடிப்பதும் ,,அதே நேரத்தில் பிரசவ வழியில் துடிக்கும் அவரது மனைவி ஷீலாவை அங்கே இருக்கும் மக்கள் டோலிகட்டி பல கிலோமீட்டர் பயணம் செய்த மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள், இடையில் அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர் அந்த கிராமத்திற்கு எல்லாம் வந்து என்னால் வைத்தியம் பார்க்க முடியாது உயிரோடு இருந்தால் கொண்டு வாருங்கள் ,இல்லை வரும் வழியில் செத்தால் புதைத்து விடுங்கள் என்று திமிராக பேசுகிறார் இந்த சூழ்நிலையில் அந்த குழந்தை பிறந்ததா? காவல்துறையின் தாக்குதலில் இருந்து ஆதவன் தப்பித்தாரா? அவர்களுக்கு தேவையான விஷயங்கள் கிடைத்ததா? என்பதுதான் இந்த கெவி படத்தின் திரைக்கதை இதுவரை நாம் எவ்வளவு மலை சார்ந்த படங்களை பார்த்திருந்தாலும் இந்த படம் முழுக்க முழுக்க இரவில் படமாக்கி இருப்பது இந்த படத்தின் சிறந்த சாரம்சம் .இதுவரை நாம் பகலிலேயே மலையின் அழகு ரசித்தோம் இரவில் மலையின் துயரத்தை நாம் இதுவரை அனுபவிக்கவில்லை அதை இந்த திரைப்படம் நம் ரத்தத்தை உரையை செய்யும் வகையிலும் வந்துள்ளது,அந்த இரவு காட்சிகளை படம் பிடித்த ஒளிப்பதிவாளருக்கு நிச்சயம் பாராட்டுக்கள் படத்தில் சில விஷயங்கள் உடன் படாமல் இருந்தாலும் சில முக்கியமான காட்சிகளில் சில பரபரப்பான காட்சிகளில் அந்த கதாபாத்திரங்கள் நின்று நிதானமாக வசனங்கள் பேசிக் கொண்டிருப்பது அந்த பரபரப்பை சற்றே துவள செய்கிறது அது இல்லாமல் இருந்தால் இன்னும் திரைக்கதை வேகமாக இருந்திருக்கும். நிச்சயம் இந்த கெவி திரைப்படம் அந்த மலைவாழ் மக்களின் வலியை வெளியுலகத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதை எந்த சந்தேகமும் இல்லை .
Chennai, July 20, 2025: The VS International Precision Oncology Summit (VIPOS 2025), under the aegis of VS Medical Trust, held from July 18 to 20, 2025 at Hotel Green Park, Chennai, brought together over 500 delegates from across India, including medical, surgical, and radiation oncologists, physicians, pathologists, geneticists, researchers, and postgraduate students, for a powerful and collaborative exchange on the evolving landscape of cancer care.
The summit focused on the growing role of precision oncology, from advanced diagnostics and targeted therapies to patient-specific treatment strategies. Over the three days, participants engaged in insightful sessions, case discussions, panel talks, and research presentations that highlighted real-world challenges, innovations, and solutions.
A key feature of the event was the enthusiastic participation of young minds, with poster presentations by postgraduate students showcasing fresh ideas, emerging research, and field experiences that sparked meaningful discussions.
One of the emotional highlights of the summit was the Prof. Dr. S. Subramanian Oration, delivered by Dr. Ramesh B. V. Nimmagadda, who shared powerful insights on real-world data and collaborative oncology platforms. He was also honoured with the VS Hospitals Award for Excellence in Oncology, in recognition of his impactful work in cancer outcomes through data-driven efforts.
VIPOS 2025 was conceived and conducted by Dr. S. Nithya, Associate Director – Medical Oncology Services, who led the academic planning and coordination of the summit. The event was graced by Prof. Dr. S. Sundar, Medical Director, and Mr. Muthu Subramanian, Executive Director – both of whom played key roles in shaping the summit’s vision and presence.
The event was held under the guiding vision of Prof. Dr. S. Subramanian, India’s Senior Most Practising Medical Oncologist, Founder Chairman and Managing Director of VS Group of Hospitals, whose commitment to making quality cancer care accessible continues to drive the institution’s journey.
The seamless execution and overall success of the summit were made possible through the leadership and strategic oversight of Mr. Prassanna Srinivasan, Group Chief Operating Officer, whose sharp focus on excellence and collaboration brought every detail to life.
More than a scientific conference, VIPOS 2025 was a purposeful gathering, where experience met innovation, and every conversation echoed a shared mission: to make cancer care more precise, compassionate, and impactful for every patient.
பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவையில் அளித்த அபூர்வமான பங்களிப்புகளுக்காக, “பேட்மேன்” என அனைவரும் அன்புடன் அழைக்கும் பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது.
மாநிலங்களின் புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதாரத்தை மாற்றியமைத்த அவர், உலகளவில் பெண்களின் நலனுக்காக போராடும் இயக்கங்களுக்கு தூண்டுதல் அளித்துள்ளார். உலகிலேயே மிகவும் தாக்கம் செலுத்தும் 100 பேரில் ஒருவராக, Time பத்திரிகை அவரை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
அவருடைய வாழ்க்கை கதை அடிப்படையாக கொண்டு, தேசிய விருதுபெற்ற ஹிந்தி திரைப்படமான “Padman” உருவானது. அக் கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடித்தார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் மாதவிடாய் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும், ஆஸ்கார் விருது வென்ற “Period. End of Sentence.” ஆவணப்படம் அவரது கண்டுபிடிப்பு மற்றும் அதன் தாக்கத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.
இவரது பயணம் இன்னும் பல உன்னத இலக்குகளை நோக்கி நகர்கிறது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்களை வலுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள முருகநந்தம், தற்போது ஹாலிவுட் திரைப்படமாக அவருடைய வாழ்க்கையை உருவாக்கும் திட்டங்கள் முன்னேறி வருகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு சாதாரண மனிதன், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும் என்பதை நிரூபித்த உண்மையான மாற்றத்தூண்டிப் புரட்சி வீரர் தான் அருணாசலம் முருகநந்தம்.
இசையமைப்பாளர் தரண்குமார் இசையில், வாஹீசன் ராசய்யா ராப் எழுத்தில், ‘ச்சீ ப்பா தூ…’ சரிகமா ஒரிஜினல்ஸ் இசை ஆல்பம் வெளியானது !!
சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும் சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுதியுள்ள ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் திரை இசையைக் கடந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் இன்டிபென்டன்ட் இசைக்கான வரவேற்பு பெருகி வருகிறது. தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார், பல புதுமையான இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார். அவரின் அடுத்த வெளியீடாக சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது.
இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் திறமையால் ஈர்க்கப்பட்ட தரண் குமார், இந்த புதிய ஆல்பம் பாடலில் அவருக்கு வாய்ப்பளித்து, அவருடன் இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளார். ‘ச்சீ ப்பா தூ…’ பாடலை எழுதியிருப்பதோடு அதில் ராப் வடிவத்தையும் அமைத்துள்ளார் வாஹீசன் ராசய்யா.
இப்பாடலை முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் வாஹீசன் ராசய்யா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடலுக்கு சக்திவேல் நடன அமைப்பை செய்துள்ளார், மாஸ்டர் ராஜூ சுந்தரம் நடனமாடியிருக்கிறார். இந்த வீடியோ இசை ஆல்பத்தை இயக்குநர் அனந்து இயக்கியிருக்கிறார்.
தரண் குமரின் அற்புதமான இசை, பாடலைக் கேட்டவுடன் ஈர்க்கும் வரிகள், இடையில் வரும் அசத்தலான ராப் என இந்த தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் இப்பாடலை, இசை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
நடிகர்கள் உதயா – அஜ்மல் – யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன்-ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் – சச்சின் சினிமாஸ்- ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் உதயா – ‘தயா’ என். பன்னீர்செல்வம் – எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
ஆகஸ்ட் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பன்னீர்செல்வம் பேசுகையில், ”இப்படத்தின் பணிகளை இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதியன்று தொடங்கி, ஆகஸ்ட் ஒன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறோம். ஒரு படத்தை இவ்வளவு விரைவாக நிறைவு செய்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக முழு ஒத்துழைப்பினை வழங்கிய நடிகர் உதயாவிற்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தின் கதையை இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், உதயா மூலமாக எங்களை சந்தித்து சொன்னார். அவர் சொன்ன கதை பிடித்துப் போனதால், அடுத்த நாளே படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கினோம். உதயாவை தொடர்ந்து கதையில் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகர் அஜ்மல் மற்றும் யோகி பாபு ஒப்பந்தமானார்கள். இவர்களைத் தொடர்ந்து நாயகி ஜான்விகா, பவன், பிரபாகர், பெங்களூரூ டானி, சுபத்ரா என அந்தந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்களை இயக்குநரும் உதயாவும் தேர்வு செய்தனர்.
குறிப்பாக யோகி பாபு தலைவர் ரஜினி படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது உதயாவிற்காக பதினான்கு நாட்களை ஒதுக்கி முழு ஒத்துழைப்பை வழங்கினார்.
ஒளிப்பதிவாளர் மருதநாயகம், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, எடிட்டர் ஷ்யாம் என திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கினார்கள். இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் உதயாவின் கடும் உழைப்பை இந்த படத்தில் நாங்கள் நேரில் பார்த்திருக்கிறோம். அவருடைய கடும் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என ரசிகர்களிடமும், ஊடகங்களிடமும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
படத்தொகுப்பாளர் ஷ்யாம் பேசுகையில், ”எடிட்டர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு திரில்லர் ஜானர் ஆக்ஷன் ஜானர் படங்களுக்கு படத்தொகுப்பு செய்ய வேண்டும் என்பது கூடுதல் உற்சாகத்தை அளிக்க கூடியது. அந்த வகையில் அக்யூஸ்ட் திரைப்படத்தின் திரைக்கதை படத்தொகுப்பின் போது உற்சாகத்தை அளித்தது. இந்த திரைப்படம் சீட் எட்ஜ் திரில்லராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் உதயாவும், இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸும் ஒன்றிணைந்து பணியற்றிருக்கிறார்கள். நாங்கள் இந்தப் படத்தின் திரைக்கதையின் வேகத்தை குறைப்பதற்காக சில உத்திகளை கையாண்டிருக்கிறோம். ஏனெனில் இந்தப் படத்தின் திரைக்கதை மிக வேகமாக இருக்கும். இது போன்றதொரு படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை செய்வதற்கு வாய்ப்பளித்த எடிட்டர் பிரவீண் சாருக்கும், உதயா சாருக்கும், இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் சாருக்கும் நன்றி. இப்படத்தின் இசையும் மிகப் பிரமாதமாக இருக்கிறது. இந்தப் படம் உங்கள் அனைவரையும் கவரும் வகையிலான டீசன்டான சீட் எட்ஜ் திரில்லர் படம். அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் டானி பேசுகையில், ”ஓ மரியா பாடலில் நடிகை ரம்பாவுடன் நடனமாடிய பாடல் 1999ம் ஆண்டில் வெளியானது. அதன் பிறகு மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறேன். இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் சினிமா வேண்டாம் என்று அமெரிக்காவிற்கு சென்றார். அவரிடம் கேட்டபோது சின்ன பிரேக் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார். ஆனால் நான் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டேன். அதன் பிறகு அவர் எனக்கு போன் செய்து உதயா நடிக்கும் படத்தை இயக்க வாய்ப்பு வந்துள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்தத் தருணத்தில் விஜய் டிவியில் ‘ஓ மரியா..’ பாடலை ரீ கிரியேட் செய்தனர். அதற்காக பெங்களூரில் இருந்து சென்னை வந்து நடனம் ஆடினேன். அந்தத் தருணத்தில் இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸிடமிருந்து அழைப்பு வந்தது. நான் நேராக இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். அங்கு எனக்கு உதவி காவல் ஆய்வாளர் வேடத்தில் நடிக்க வேண்டும் என சொன்னார்.
ஒவ்வொரு கலைஞனுக்கும் விமான நிலையத்தில், பொதுவெளியில், வணிக வளாகத்தில் ரசிகர்கள் சந்தித்து, ‘உங்கள் படத்தை நான் பார்த்திருக்கிறேன்’ என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், அது அந்த கலைஞனுக்கு மிகப்பெரிய போதையை தரும். ஆனால் என்னை யாரும் அங்கீகரிக்கவில்லை, அடையாளப்படுத்தவில்லை. அதற்காக ஏங்கிக் கொண்டிருந்தேன். இந்த தருணத்தில் உதவி காவல் ஆய்வாளர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்றால் தலை முடியை கட் செய்ய வேண்டும் என்று சொன்னார். நான் யோசித்தேன்.
‘மின்னலே’ படத்தில் நாகேஷ் உடன் நடித்தேன். ‘காதலர் தினம்’ படத்தில் கவுண்டமணியுடன் நடித்திருக்கிறேன். ‘கவிதை’ படத்தில் வடிவேலுவுடன் நடித்தேன். பல காமெடி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். அந்த வகையில் யோகி பாபு உடன் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காகவும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். யோகி பாபு உடன் மட்டுமல்லாமல் அஜ்மல் – உதயா என அனைவரிடமும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதால் இந்தப் படத்தில் நடித்தால் மீண்டும் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடிக்க ஒப்புக்கொண்டேன். தலைமுடியை கட் செய்யவும் சம்மதித்தேன். இந்தப் படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகஸ்ட் முதல் தேதியன்று இப்படம் வெளியாகிறது. இது எங்களுக்கு முக்கியமான நாள். படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள். நன்றி,” என்றார்.
தயாரிப்பாளர் சேது பேசுகையில், ”நாங்கள் பெரிதாக எதிர்பார்த்து முதல் முதலாக தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் படம் இது. இதற்கு உதயா தான் காரணம். அவருடன் நடைபெற்ற ஒரு சாதாரண சந்திப்பு தான் இப்படத்தில் எங்களை இணைய வைத்தது. இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ் எங்களிடம் என்ன கதையை சொன்னாரோ, அதை அப்படியே எடுத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு எல்லாம் பாசிட்டிவ் ஆகவே அமைந்தது. இந்தப் படத்தின் கதை தனக்கு என்ன தேவையோ,பாஅதை அதுவே இழுத்துக் கொண்டது . நாங்கள் எதையும் செய்யவில்லை. அதை என்ன கேட்டதோ அதை நாங்கள் செய்து கொடுத்தோம். படம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும் , நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் பேசுகையில், ”அக்யூஸ்ட் படத்தில் பணியாற்றியது எனக்கு நல்லதொரு அனுபவம். ஜனவரியில் தான் இப்படத்திற்கான பாடல்களை உருவாக்கினோம். ஆறு மாதத்திற்குள் ஃபர்ஸ்ட் காப்பி ரெடி ஆகிவிட்டது. நான் இந்த குழுவில் இணைந்ததற்கு முக்கியமான காரணம் உதயா தான். அவருக்கு என்னுடைய முதல் நன்றி. இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்று இருக்கின்றன. இந்தப் படத்தின் திரைக்கதையை மேம்படுத்தும் வகையில் பின்னணி இசை அமைத்திருக்கிறேன் என நம்புகிறேன். நீங்கள் அனைவரும் ஆகஸ்ட் முதல் தேதியன்று இப்படத்தை திரையரங்குகளில் பார்த்து உங்களது விமர்சனத்தை முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் பிரபாகர் பேசுகையில், ”கன்னடத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் நான் நடித்திருக்கும் முதல் படம் இது. இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியான கன்னட திரைப்படங்களில் நான் நடித்திருக்கிறேன். அவர்தான் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கினார். அவர் உன் திறமையை வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக்கொள்கிறேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். இப்படத்தின் கதையை அவர் சொன்னதும் சந்தோஷமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் இங்கு வந்த பிறகு தமிழைக் கற்றுக் கொண்டேன். அத்துடன் இப்படத்தில் தமிழக-கர்நாடக எல்லையோரத்தில் உள்ள கதாபாத்திரம் என்பதால் படத்திலும் நான் நடித்த காட்சிகளுக்கு சொந்தக் குரலில் பின்னணி பேசவும் வாய்ப்பளித்தனர். இதற்காக நடிகர் உதயாவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பஸ், கார், ஓட்டம் என சேசிங்கிலேயே இருக்கும். இதனால் நான் மிகவும் விரும்பி நடித்தேன்.
படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம். இந்த அனுபவம் மறக்க இயலாது,” என்றார்.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் பேசுகையில், ”கன்னடத்தில் திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் என்னுடைய திரையுலக வாழ்க்கை தமிழில் தான் தொடங்கியது. சுந்தர் சி – தனுஷ் – அர்ஜுன் – ஆகியோர் நடித்த படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். கிட்டத்தட்ட 400 பாடல்களுக்கு மேல் நடன இயக்குநராக பணியாற்றிவிட்டு, கன்னடத்தில் திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு சென்று படத்தை இயக்கினேன். ஒரே தயாரிப்பாளருடன் தொடர்ந்து ஐந்து திரைப்படங்களை இயக்கினேன். அதன் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து இயக்கினேன். இது என்னுடைய இயக்கத்தில் வெளியாகும் ஏழாவது படம். ஆனால் தமிழில் முதல் படம்.
கன்னடத்தில் ஆக்ஷன் ஃபிலிம் டைரக்டர் என்ற பெயரை சம்பாதித்து இருக்கிறேன். தமிழில் அறிமுகமாகும் போது மிக பிரம்மாண்டமான படத்தை இயக்க வேண்டும் என்று தான் எண்ணியிருந்தேன். இதற்காக லாரன்ஸ், விஷால் போன்ற சில ஹீரோக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன். ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. இந்தத் தருணத்தில் என் குடும்ப உறுப்பினர்கள் ‘நீங்கள் அப்படி நினைக்க கூடாது. நீங்கள் கன்னடத்தில் படத்தை இயக்கும் போது சின்ன படமாகத் தான் இருந்தது. ஆனால் அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனால் நீங்கள் இயக்கும் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என நினைத்து உருவாக்குங்கள்’ என ஆலோசனை சொன்னார்கள். அதன் பிறகு ஆறு மாதம் அமெரிக்காவிற்கு சென்று விட்டேன்.
அதன் பிறகு பிஆர்ஓ நிகில் முருகன் தான் இந்த அக்யூஸ்ட் படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார். அவர்தான் உதயா கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரை சந்தித்து கதையை சொல்லுங்கள் என்றார். அதன் பிறகு அவரை சந்தித்து கதையைச் சொன்னேன். கதையை முழுவதுமாக கேட்டுவிட்டு, கதை நன்றாக இருக்கிறது. குறிப்பாக என்னுடைய கேரக்டர் நன்றாக இருக்கிறது. நாளை தயாரிப்பாளரை சந்திக்கிறோம் என்றார். அடுத்த நாள் தயாரிப்பாளர்கள் பன்னீர்செல்வம் – தங்கவேல்- உதயா – ஆகியோர் இருந்தனர். தயாரிப்பாளர்களுக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால் அனைவரும் பட்ஜெட் அதிகம் என சொன்னார்கள். ஆனால் படப்பிடிப்பு நடைபெற்ற 60 நாட்களிலும் எந்த குழப்பமும் இல்லாமல் நான் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து படப்பிடிப்பை நிறைவு செய்தனர். எனக்கு கிடைத்த தொழில்நுட்ப கலைஞர்களும் திறமையானவர்கள். அதனால் படத்தை உருவாக்குவதற்கு எனக்கு முழு சுதந்திரம் இருந்தது. ஒன்றரை கோடி ரூபாய்க்கு பஸ் ஒன்றை விலைக்கு வாங்கி, அதனை படப்பிடிப்புக்கு பயன்படுத்திய பின் ஸ்கிராப்பிற்கு அனுப்பினோம். இதற்கும் உதயா தான் முழு காரணம்.
இந்தக் கதையில் நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் அஜ்மல் நடித்தார். அவருக்கு கதை சொன்ன தருணத்திலிருந்து தற்போது வரை முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
கதையில் இடம்பெறும் மற்றொரு கதாபாத்திரத்திற்கு யோகி பாபு விடம் பேச்சுவார்த்தை நடத்தினோம் கதையைக் கேட்ட அவர் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தொடர்ந்து 14 நாட்கள் கால்ஷீட் கொடுத்து ஒத்துழைப்பு அளித்தார்.
இந்தப் படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். என்னுடைய உறவினர் இசையமைப்பாளராக இருந்தாலும் இந்தப் படத்திற்கு புது இசையமைப்பாளர் வேண்டும் என விரும்பினேன் இதற்காக உதயா அவருடைய ‘உத்தரவு மகாராஜா’ படத்திற்கு இசையமைத்த நரேன் பாலகுமாரை அறிமுகப்படுத்தினார். அவரது பாடலைக் கேட்டவுடன் பிடித்து விட்டது. இந்தப் படத்தில் அவரின் இசையில் உருவான பாடல்கள் எனக்கும் பிடித்தது. என் மகன்களுக்கும் பிடித்தது. ஒரு பாடலை சிறிய வயதில் இருக்கும் பிள்ளைகள் பாடினால் அந்தப் பாட்டு ஹிட் ஆகும். பாடல்களைப் போல் பின்னணி இசையிலும் நரேன் மெஸ்மரைஸ் செய்திருக்கிறார். இந்தப் படத்தைப் பற்றி நான் எதையும் மிகையாக சொல்லவில்லை, நீங்கள் படம் பார்த்தால் புரியும்.
இந்தப் படம் அனைவரையும் மெஸ்மரைஸ் செய்யும். இந்த படத்தைப் பற்றிய ஏதேனும் எதிர்பார்ப்பு இருந்தால் அதைவிட அதிகமாகவே இருக்கும். திரைக்கதையில் யாரும் யூகிக்காத திருப்பங்கள் இருக்கும். படம் தொடக்கம் முதல் இறுதி வரை கண் இமைக்காமல் பார்க்கும் படி இருக்கும்,” என்றார்.
நாயகி ஜான்விகா பேசுகையில், ”இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம். ‘அக்யூஸ்ட்’ ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் அன்பும் தேவை. இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்த தயாரிப்பாளருக்கும் , இயக்குநருக்கும், உதயாவிற்கும் நன்றி.
இந்தப் படத்தில் அழகான காதல் கதை இருக்கிறது. அற்புதமான பாடல்கள் உள்ளன. சில்வா மாஸ்டர் அமைத்த சண்டை காட்சிகளும் உள்ளன. யோகி பாபுவின் காமெடி இருக்கிறது. அத்துடன் இந்தத் திரைப்படம் ஒரு ஃபேமிலி என்டர்டெய்னர். அதனால் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் அஜ்மல் பேசுகையில், ”ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்று துணிந்து செயலில் ஈடுபட்டால், அவருக்கு இந்த உலகமே துணை நிற்கும் என்பார்கள். இதற்கு மிகப்பெரிய உதாரணம் உதயா. அவர் இந்த படத்திற்காக எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதை படத்தின் பணிகள் தொடங்கிய முதல் நாளிலிருந்து எனக்குத் தெரியும்.
இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்களும் நடிகைகளும் தொழில்நுட்ப கலைஞர்களும் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து பணியாற்றினார்கள். இந்தப் படத்திற்கு கடவுளின் மிகப்பெரிய ஆசீர்வாதம் இருக்கிறது. அந்த ஆசி இன்று வரை தொடர்கிறது.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் என் கதாபாத்திரத்தை மட்டுமல்ல மலர் என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தையும் உதயாவின் கதாபாத்திரத்தையும் நன்றாக செதுக்கியிருந்தார். படத்தில் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றியிருக்கிறார்கள்.
‘அஞ்சாதே’ படத்தில் பணியாற்றிய போது எனக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது. ‘கோ’ படத்தில் பணியாற்றிய போதும் பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது அதேபோன்று பாசிட்டிவ் எனர்ஜி இந்தப் படத்தில் பணியாற்றிய போதும் எனக்கு கிடைத்தது. அதனால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஊடகங்களில் பேராதரவு தேவை. அதை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நாயகன் உதயா பேசுகையில், ”மூன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அக்யூஸ்ட் ‘ திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று வரை எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஊடகங்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மேடை எனக்கு மிகவும் பிடித்த மேடை. நிறைய போராட்டங்களுக்குப் பிறகு சினிமாவை நிறைய நேசித்ததன் காரணமாக இங்கு நின்று கொண்டிருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டு காலத்தில் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறேன். அதன் பிறகு மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் பயணிக்க தொடங்கிய போது கேட்ட கதை தான் இந்த அக்யூஸ்ட் படத்தின் கதை.
இன்றைய தமிழ் சினிமாவில் கன்டென்ட் தான் முக்கியம். அதற்காக நல்ல கன்டென்டுக்காக காத்திருந்தேன். நான் இன்று வரை எந்த படமாக இருந்தாலும் தியேட்டருக்கு சென்று பார்த்து ரசிப்பவன். எது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது, பிடிக்கும் என்பதனை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் தான் கதையை கேட்கத் தொடங்கினேன்.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் முதலில் கன்னடத்தில் வெளியான படம் ஒன்றை தமிழில் ரீமேக் செய்யலாம் என்று சொன்னார். அது டார்க் காமெடி, எனக்கு ஒத்து வராது என்று சொல்லி புதிதாக கன்டென்ட் இருந்தால் அதை சொல்லுங்கள் என்றேன் . அத்துடன் எனக்கான பட்ஜெட் இதுதான் என்றும் சொன்னேன். ஆனால் அவர் சொன்ன அக்யூஸ்ட் கதை பெரிய பட்ஜெட் படம். இதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவர்கள் தான் இதற்கு ஆதரவாக இருந்தார்கள். அதனால் தான் இந்த படம் உருவானது.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் கிளாரிட்டியான டைரக்டர். அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் எதிர்காலம் இருக்கிறது. அத்துடன் பிரபு ஸ்ரீநிவாஸ் தயாரிப்பாளர்களின் இயக்குநராகவும் இருக்கிறார்.
இந்தப் படத்தினை பத்திரிகையாளர்களாகிய நீங்கள் பார்த்து பாராட்டு தெரிவித்து விட்டால், தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டு வெற்றி பெற செய்து விடுவார்கள்.
இன்றைய சூழலில் ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் அவசியம் தேவை. சினிமாவிற்கு மூன்று நாட்கள் விமர்சனம் தேவையில்லை என்று சொன்னாலும் கூட சினிமா என்றால் விமர்சனம் வரத்தான் செய்யும். அதனால் ஒவ்வொரு சினிமாவிற்கும் விமர்சனம் அவசியம் தேவை தான். அவை ஆரோக்கியமாக இருந்தால் நன்றாக இருக்கும். சம்பந்தப்பட்ட கலைஞர்கள் தங்களது தவறை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும்.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் என் குடும்பத்தை போன்றவர்கள் தான். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்விற்கு வருகை தந்த எடிட்டர் ஷியாம், எஸ்கியூடிவ் புரொடியூசர் சிவசங்கரன், இயக்குநர் ராஜா, நடிகர்கள் பெங்களூர் டானி, பிரபாகர், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஹீரோ அஜ்மல், ஹீரோயின் ஜான்விகா, தயாரிப்பாளர் – தம்பி பன்னீர்செல்வம், தயாரிப்பாளர் – தம்பி சேது, நடிகை சுபத்ரா, ஒளிப்பதிவாளர் மருதநாயகம், ரங்கோலி படத் தயாரிப்பாளர் சதீஷ், தயாரிப்பாளர் - நடிகர் டி. சிவா ஆகியோருக்கும் நன்றி.
இந்த படத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, யோகி பாபு, எடிட்டர் பிரவீண் , இயக்குநர் பிரபு சாலமன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படம் 2 மணி நேரம் 10 நிமிடம் வரை ரசிகர்களை உற்சாகமாக வைத்திருக்கும். படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நல்ல கன்டென்ட், நல்ல படமாக வழங்கியிருக்கிறோம். நீங்கள் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இதனிடையே இந்நிகழ்வில் சண்டை கலைஞர் எஸ் மோகன்ராஜ் – மூத்த நடிகை சரோஜாதேவி – இயக்குநர் வேலு பிரபாகரன் ஆகியோரின் மறைவிற்கு உதயாவின் வேண்டுகோளை ஏற்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கலையரசன் பிரியாலயா .மற்றும் பல நடிப்பில் வெளி வந்திருக்கும் திரைப்படம் ட்ரெண்டிங்
இன்றைய காலகட்டத்தில் ட்ரெண்டிங் என்ற போதையில் சிக்கி கோடி கோடியாக பணம் சம்பாதிக்கலாம் என்ற பேராசையில் சிக்கி சின்னாபின்னமாகும் ஒரு இளம் தம்பதியினரின் வாழ்க்கை தான் இந்த ட்ரெண்டிங் படத்தின் கதை.
அர்ஜுன், மீரா இருவரும் காதல் தம்பதிகள் இன்ஸ்டாகிராமில் தாங்கள் காலையில் தூங்கி எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை அனைத்து நிகழ்வுகளையும் ரீல்ஸ்கலாக செய்து போட்டு லட்சங்களின் பணம் சம்பாதித்து கோடிகளில் வீடு வாங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கென்று நிலையான ஒரு வேலையும் இல்லை. இந்த நேரத்தில் திடீரென்று அவர்களது instagram பக்கம் ஹேக் செய்யப்படுகிறது .அதை சற்றும் எதிர்பாராத அவர்கள் அதிலிருந்து வரும் பணத்தை வைத்து தான் மாதாமாதம் இஎம்ஐ உட்பட அனைத்திலும் இருந்தும் தப்பிக்க வேண்டும் என்று நினைத்து யோசிக்கிறார்கள். புதியதாக ஒரு பக்கத்தை ஓபன் செய்தாலும் விரைவில் பணத்தை சம்பாதிக்க முடியாதுஎன்பதால் கொஞ்சம் துவண்டு போகிறார்கள்.
அந்த நேரத்தில் கடனுக்கு பணம் கொடுத்தவர்கள் வந்து வட்டி கேட்டு மிரட்டி விட்டு செல்கிறார்கள் இந்த நிலையில் அவர்களுக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வருகிறது. அதில் உங்களுக்கு நாங்கள் பணம் தருகிறோம் ஒரு கேம் விளையாடுவோம் என்று கூறுகிறார்கள். முதலில் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் பிறகு ,அவர்கள் கூறும் கண்டிஷன்களை கேட்டு இந்த கேம் நம்ம வீட்டுக்குள்ளே தான் நடக்கிறது நாம் இருவர் மட்டும்தான் இருக்கிறோம் பெரிதாக பிரச்சனை இல்லை பணம் வந்தால் தொடர்வோம், ,இல்லை என்றால் அந்த கேமில் இருந்து வெளிவந்து விடுவோம் என்று அந்த விளையாட்டிற்கு அடிபணிகிறார்கள் .ஆனால் போகப் போக அது அவர்களுடைய ஆரம்பகால வாழ்க்கையும், நிகழ்கால வாழ்க்கையிலும் பல பிரச்சனைகளை உண்டு செய்கிறது. அவர்களுடைய பழைய காதலகள் துவங்கி அனைத்து பிரச்சினைகளிலும் சிக்கி அவர்கள் அதிலிருந்து மீண்டார்களா? இல்லை மீண்டும் அந்த விளையாட்டில் தொடர்கிறார்களா ?அல்லது பணம் சம்பாதித்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.
இப்படி ஒரு வித்தியாசமான கதை கையில் எடுத்த இயக்குனர் படத்தில் இந்த இரண்டு கேரக்டர்களை மட்டுமே முன்வைத்து அனைத்து காட்சிகளையும் எடுத்திருக்கிறார்.
2 மணி நேரம் இவர்கள் இருவரது முகத்தை மட்டுமே பார்க்க முடியவில்லை அட்லீஸ்ட் அந்த விளையாட்டை நடத்தும் முகத்தை யாவது நமக்கு காட்டி இருந்தால் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருக்கும். அதுவும் யார் என்று தெரியவில்லை, திரைக்கதையில் ஆரம்பத்தில் தோசை சுடுவது போல் சாதாரணமாக அந்த விளையாட்டு ஆரம்பித்தாலும் ,பின் செல்லச் செல்ல அவர்களுக்கு பல சிக்கல்களை கொண்டு செல்கிறது அவர்களுக்குள் பல ஈகோ உருவாக்கிறது, ஒருவரை பற்றி ஒருவருடைய நிஜ உருவங்களை தெரிந்து கொள்ள நேர்கிறது .அவ்வாறு நிஜ உணர்வை தெரிந்து கொள்ளும்போது இது ஏதோ பழிவாங்கும் கதையாக யாரோ இவர்களை இயக்குகிறார்கள் என்று நமக்கு தோன்றுகிறது. இதையெல்லாம் தெளிவாக எடுத்து இயக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் இந்த ட்ரெண்டிங் திரைப்படம்
இதில் அந்த இருப்பது 2 கேரக்டர் மட்டுமே என்பதால் பெரிதாக நாம் எதுவும் சொல்ல தேவை இல்லை கலையரசன் கணவனாகவும் பிரியாலயா மனைவியாகும் நடித்திருக்கிறார்கள் அவ்வளவுதான் இசையும் நம் இந்த மாதிரியான ஒரு சஸ்பென்ஸ் திரைப்படத்திற்கு ஏற்றவாறு அமைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது
ட்ரெண்டிங் புதிதாக ஏதோ ட்ரெண்டிங் செய்ய நினைத்திருக்கிறார் இயக்குனர்
பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் சரவணன்,நம்ரிதா மற்றும் பலரது நடிப்பில் Zee 5OTT தளத்தில் வெளிவந்திருக்கும் வெப் சீரியஸ் சட்டமும் நீதியும்.
கோர்ட்டில் சாதாரண நோட்டரி ஆக இருக்கும் சரவணன் அவருடைய சிபாரிசின் பெயரில் பல வக்கீல்களிடம் ஜூனியர் ஆக சேர முயற்சிக்கிறார் நம்ரிதா. ஆனால் யாரும் அவரை ஜூனியராக சேர்த்துக் கொள்ளாத நிலையில் ,மீண்டும் சரவணன் இடமே வந்து உங்களிடமே ஜூனியர் ஆக சேருகிறேன் என்று கூறுகிறார்.ஆனால் அவர் எனக்கே வேலை இல்லை இதில் நீ எங்கே எனக்கு ஜுனராக என்று நிராகரிக்கிறார். இந்த சூழ்நிலையில் அந்த கோர்ட் வளாகத்தில் குப்புசாமி என்பவர் தன் மகளை காணவில்லை அவரை கண்டுபிடித்து தர வேண்டும் எனக்கு நீதி வேண்டும் என்று கூறி தீக்குளித்து இறக்கிறார்.
அந்த வழக்கை பொதுநல வழக்காக தொடர்கிறார் சரவணன் .அந்த வழக்கை விசாரிக்க செல்லும் போது அவருக்கு பல திடக்கிடும் தகவல்கள் வருகிறது,ஏனென்றால் குப்புசாமி 20 வருடங்களாக மனநல காப்பகத்தில் இருந்து வெளிவந்தவர் என்றும்,அவருடைய மகள் காணாமல் போய் 20 ஆண்டுகள் ஆகிறது என்றும் தெரிய வருகிறது, இந்த மாதிரி பல இடியாப்ப சிக்கல்கள் கொண்ட வழக்கில் பல வருடங்கள் கழித்து வழக்கிற்காக அங்கிஅணியும் சரவணன் இந்த வழக்கில் ஜெயிக்கிறாரா? அந்த சாதாரண குப்புசாமிக்கு நீதி கிடைக்கிறதா? என்பதுதான் இந்த தொடரின் கதை சாராம்சம்,
பாலிவுட்டில் இதே மாதிரி பல டைப்பான ஹிந்தி வெப் சீரியஸ்கள் பல வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தமிழில் ஒரு கோர்ட் தொடர்பான ஒரு நெடுந்தொடர் வந்திருப்பது இதுவே முதல் முறை .
இது எப்படி இருக்கிறது இந்த கதையை கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் பல இடங்களில் கதையில் ஏதோ ஒரு குறை தெரிகிறது கதையை இன்னும் பலமாக அமைத்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் .வக்கீலாக நடித்துள்ள சரவணன் தன் உடல் மொழியை அதற்கு ஏற்றார் போல் மாற்றி நடித்திருக்கிறார் நம்ரிதாவின் நடிப்பும் எங்கும் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே நேர்கோடாக தான் செல்கிறது.
சரவணனுக்கு ஆப்போசிடாக வாதாடும் அருள் டி தாஸ் அவருடைய நடிப்பு வீணடிக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம் படத்தில் பல கேரக்டர்கள் இருந்தும் சரவணன் நடிப்பு மட்டுமே பார்க்க வைக்கிறது இந்த வெப் சீரியஸில் மிகவும் பலமான விஷயம் என்றால் ஒவ்வொரு தொடரும் 20 நிமிடங்களில் முடிவடைகிறது மொத்தம் ஏழு எபிசோடுகளும் கிட்டத்தட்ட2.45 மணி நேரத்துக்குள் முடிந்து விடுவதால் எந்த ஒரு தொய்வும் இல்லாமல் படம் பார்க்க நேர்கிறது OTT தளம் என்பதால் சற்று போர் அடிக்காமல் ஓடும் என்பது தான் நிச்சயம்
புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில், மனித குணத்தின் விசித்திரங்களை அழுத்தமாக பேசி, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்த “மனிதர்கள்” திரைப்படம், ஜுலை 17 இன்று முதல், சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது.
Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், உருவான “மனிதர்கள்” திரைப்படம், கடந்த மே மாதம் 30 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியானது.
ஒரு இரவில் ஒன்று சேர்ந்து, மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்கும் ஏற்படும் ஒரு சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், வித்தியாசமான களத்தில் அசத்தலான திரில்லராக, சொன்ன இப்படம், திரை ஆர்வலர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.
தற்போது இப்படம் சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா என இரண்டு ஓடிடி தளங்களில், ஸ்ட்ரீமாகி வருகிறது. இப்படத்தினை திரையரங்குகளில் தவறவிட்ட ரசிகர்கள், இப்போது வீட்டிலிருந்தே பார்த்து ரசிக்கலாம்.
இப்படத்தினை Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures சார்பில் இராஜேந்திர பிரசாத், ஜெ.நவீன் குமார், மு.கி.சாம்பசிவம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் அறிமுக நடிகர்கள் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப குழுவில் ஒளிப்பதிவு – அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ், இசை – அனிலேஷ் எல் மேத்யூ , படத்தொகுப்பு – தின்சா, கலை – மகேந்திரன் பாண்டியன், பாடல் – கார்த்திக் நேத்தா, ஒப்பனை – அ சபரி கிரிசன், துனைத்தயாரிப்பு – தரணிதரன் பரிமளா குலோத்துங்கன், நா யுவராஜ், உதவி இயக்கம் – லோகேஷ் க கண்ணன், சண்டை பயிற்சி – வின் வீரா, ஒளிக்கலவை – ஆனந்த் இராமச்சந்திரன், சப்தம் – சதீஷ், வண்ணம் – வசந்த் செ கார்த்திக், வரைகலை – ஆன்டனி பிரிட்டோ, விளம்பர வடிவமைப்பு – ரிவர் சைடு ஹவுஸ் மக்கள் தொடர்பு : AIM சதீஷ், சிவா ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
அருமையான திரை அனுபவமான “மனிதரகள்’ திரைப்படத்தை, சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் கண்டு ரசியுங்கள் !.