Breaking
March 7, 2026

July 2025

“மகா அவதார் நரசிம்மா” திரை விமர்சனம்

பெருமாளின் ஒன்பது அவதாரங்களில் மூன்றாவது அவதாரம் மற்றும் நான்காவது அவதாரம் வராக, நரசிம்ம அவதாரம் இந்த இரண்டு அவதாரங்களை வைத்து அனிமேஷன் மூலமாக சொல்லப்பட்ட கதை மகா அவதார் நரசிம்மா.
காசிபர் முனிவர் மற்றும் திதி ஆகியோரின் மகன்களாக இரண்யகசிபுவும், இரண்யாட்சனும்பிறக்கிறார்கள். ஒரு தவறான நேரத்தில் அவர்கள் இருவரும் இணைவதால் அரக்கர்களின் வரம் பெற்று குழந்தைகளாக பிறக்கிறார்கள் அவர்கள் பிறக்கும் பொழுது அவர்கள் அனைத்து தேவர்களையும் அடிமைப்படுத்தி ஆள்வார்கள் என்றும் அவர்கள் பெருமாளின் அவதாரத்தால் தான் வதம் செய்யப்படுவார்கள் என்பதும் நாம் அறிந்த கதை.
அவ்வாறுஇரண்யகசிபுவும், இரண்யாட்சனும் தேவர்களை நோக்கி கடும் தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று கொடுங்கோல் ஆட்சி செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் இரண்யாட்சன் பூமாதேவியை கடலுக்குள் ஒளித்து வைத்து சிறை பிடிக்கிறான். அப்பொழுது அனைத்து தேவர்களும் பிரம்மனிடம் சென்று முறையிட அவருடைய தும்மலையிலிருந்து வராக அவதாரமாக உருவெடுத்து பூமிதேவியை காப்பாற்றுகிறார் இரண்யாட்சனையும் கொல்கிறார். தன் தம்பியின் மறைவுக்கு விஷ்ணு தான் காரணம் விஷ்ணுவை நான் வதம் செய்வேன் என்றும் இரண்யகசிபு சபதம் செய்துஇறைவனிடம் நான் காலையிலும் சாகக்கூடாது, இரவிலும் சாகக்கூடாது ,வானிலும் சாகக்கூடாது நீரிலும் சாகக்கூடாது, பூமியிலும் சாகக்கூடாது, மிருகங்களாலும் சாகக்கூடாது, ஆயுதங்களாலும் சாகக்கூடாது, வீட்டிற்கு உள்ளே என் சாகக்கூடாது, வெளியேயும் சாகக்கூடாது, என்று வரம் பெறுகிறான். இந்த வரத்தின் பிறகு அவன் ஆடும் அனைத்து கோரத்தாண்டவம் அதே நேரத்தில் அவனுக்கு பிறக்கும் மகன் விஷ்ணுவின் சீடனாக விஷ்ணுவின் பக்தனாக விஷ்ணுவை அடைய நினைப்பவனாக வளரும் பிரகலாதன் ஒரு கட்டத்தில் இரண்யகசிபு தன்மகன்பிரகலாதனையே கொல்ல நினைக்கிரான் ஆனால் அவனுடைய திட்டம் எதுவும் நிறைவேறாமல் விஷ்ணு பிரகலாதனை காப்பாற்றுகிறார் .

கடைசியில் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து எப்படி இரண்யகசிபு வை வதம் செய்கிறார் என்பதுதான் இந்த மகா அவதார் நரசிம்மா.
.இந்தப் படத்தின் அனைத்து கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் அவர்களின் முகபாவனையும் மிகச் சிறப்பாக காட்டியிருக்கிறார்கள் கிராபிக்ஸ் குழுவினர் குறிப்பாக கிளைமாக்ஸ்சில் வரும் நரசிம்மா அவதாரத்தின் சண்டைக் காட்சி மிகவும் பிரம்மாண்டம் ஒருவேளை இதை நிஜ கதாபாத்திரங்களை வைத்து படமாக்கி இருந்தால் நிச்சயம் பிரம்மாண்டமாக காட்டி இருக்கலாம் ஆனாலும் அதைவிட இந்த அனிமேஷன் படம் மிகச் சிறப்பாக நமக்கு நரசிம்மர் அவதாரத்தின் கதையை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறார்கள் நிச்சயம் குழுவினருக்கு ஒரு பாராட்டுக்கள் தான்

“மாரீசன்” திரைவிமர்சனம்

சின்ன சின்ன திருட்டுகளில் அடிக்கடி சிறைக்குச் செல்லும் தயாளன் என்னும் பகத் பாசில் ஒருநாள் சிறையில் இருந்து வெளியில் வருந்து ஒரு வண்டியை திருடிக் கொண்டு செல்லும் அவன், ஒரு வீட்டில் திருடன் திட்டமிடுகிறான் அந்த வீட்டிற்குள் சென்று திருடும்பொழுது அந்த வீட்டில் அல்சைமர் என்னும் நினைவு இழப்பு நோயால் பாதிக்கப்பட்டு வேலாயுதம் பிள்ளை எனப்படும் வடிவேலு அங்கு சங்கலியால் கட்டி வைக்கப்பட்டு இருக்கிறார்.

அவரிடம் வடிவேலு என்னை காப்பாற்றினால் உனக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக பேரம் பேசுகிறார். பணம் கிடைக்கிறது என்பதால் வடிவேலுவை அவரும் விடுவித்து கூட்டி செல்க, ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது வடிவேலின் அக்கவுண்டில் 25 லட்சம் இருப்பதைபார்க்கும் பகத் பாஸில் அதை எப்படியாவது திருடன் நினைக்கிறார்.

அல்சைமரல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வடிவேலு அடிக்கடி அனைத்தையும் மறந்து விடுகிறார், தான் செல்லும் ஊரே மறந்து விடுவார் ஒரு தடவை திருவண்ணாமலை என்கிறார் அதை பிறகு பாலக்காடு என்கிற இப்படி தனக்கு வாயில் வந்த ஊர் பெயர் எல்லாம் சொல்லும் வடிவேலு அவரை நம்பி பகத் பாசில் இருவரும் பயணப்படுகிறார்கள்.

வழியில் பகத் பசில் 25 லட்சம் திருடினாரா? அல்லது வடிவேலு ஏமாற்றப்பட்டாரா? என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை
இந்த படத்தில் முக்கிய நாயகர்களுக்காக வடிவேலு மட்டும் பகத் பாஸில் வடிவேலுக்கு அல்சைமர் நோய் இருக்கும் என்பதை காட்டும் இயக்குனர் ஆரம்பத்திலேயே அவர் நடிக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது அந்த அளவிற்கு திரை கதையில் தெளிவாக எழுதி இருக்கிறார். மேலும் இவர்கள் பயணப்படும் பொழுது இவர்கள் இருவரும் மட்டுமே சுமார் ஒன்றரை மணி நேரம் பயணப்பட்டு இடைவேளைக்கு முன் ஒரு மூன்று பேர் இறந்து கிடப்பதாக திடீரென காட்டுகிறார்கள். அது காட்டும்போதே தெரிந்து விட்டது அதை செய்ததெல்லாம் வடிவேலு தான் என்று இனி அவர் வேறு யாரையோ ஒருவர் கொலை செய்யத்தான் இரண்டாம் பாகத்தில் பயணப்பட போகிறார் என்பதும் தெரியும்.

அந்தப் பயணத்தில் பகத் பாஸில் திருடனாக இருந்து திருந்தி அந்த நான்காவது நபரை இவர்தான் கொலை செய்வார் என்பது ஆரம்பித்த உடனே நம்மால் யுகம் செய்ய முடிகிறது இந்த அளவுக்கு ஒரு எந்த சஸ்பென்சும் இல்லாமல் ஒரு சஸ்பென்ஸ் கதையை இயக்கி இருக்கிறார் இயக்குனர். மேலும் இந்த படத்தில் இந்த கொலைகளை ஏன் வடிவேலு செய்கிறார் என்பதற்கு ஒரு வலுவான காரணம் இருந்தும் அது நம்மை ஒரு நிமிடம் கூட கண்கலங்க வைக்கவில்லை, ஒரு நெருடலை ஏற்படுத்தவில்லை, அந்த காட்சிகள் முக்கியமாக ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகம் விஷயத்தை அவருடைய தாய் கூறும் போது ஏதோ டயலாக்கை மனப்பாடம் செய்து பள்ளியில் ஒப்படைக்கும் ஒரு மாணவியை போல் கேமராவை பார்த்து ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார். அவர் மகள் இறந்துவிட்டாள் என்ற ஒரு துளி கவலையும் அந்த முகத்தில் காட்டவில்லை இந்த மாதிரியான ஒரு விஷயம் இந்த படம் சொதப்பலுக்கு காரணமாக இருக்கிறது.

இந்த படம் முழுக்க முழுக்க வடிவேலு மட்டும் பகத் பாசிலை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது இருவரும் நடிப்பில் மிகப்பெரிய அரக்கர்கள் ஆனால் அந்த அரக்கத் தன்மையை திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார்கள்.

ஒளிப்பதிவு அருமை அவர்கள் செல்லும் பயணத்தை மிகவும் அருமையாக காட்டுகிறது இது ஒன்று மட்டும் தான் இந்த படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருக்கிறது.

மாரீசன் அந்த கதாபாத்திரத்தின் பெயரில் இருக்கும் சூட்சுமம் திரைக்கதையில்இல்லை

Kauvery Hospital Vadapalani Introduces Full-Spectrum Hypertrophic Cardiomyopathy (HCM) Clinic

Kauvery Hospital Vadapalani Introduces Full-Spectrum Hypertrophic Cardiomyopathy (HCM) Clinic
Bringing Together All Modalities of Treatment in One Place

Chennai, 23 July 2025: Kauvery Hospital, Vadapalani, one of Chennai’s prominent health-care center has announced the launch of its Hypertrophic Cardiomyopathy (HCM) Clinic, a facility designed to offer patients a comprehensive approach to managing this complex cardiac condition. The clinic brings together a range of diagnostic and treatment options, many of which are often offered in isolation across different institutions, now accessible in one integrated setting.

Hypertrophic Cardiomyopathy is a condition where the heart muscle thickens abnormally, often due to genetic factors. This thickening can interfere with the heart’s ability to pump blood effectively, leading to symptoms such as chest pain, breathlessness, fatigue, fainting, and in some cases, sudden cardiac death, especially in younger individuals. Early diagnosis and a structured treatment approach can significantly improve long-term outcomes.

HCM Clinic will be only one of its kind to offer the whole gamut of services;
from a genuine genetic testing, (PGT-M) to genetic counselling, and family screening diagnostics in cardiogenetics, from focused diagnostics from biomarker to advanced echo, and MRI Imaging, from routine diagnostic cath to alcohol septal ablation (ASA) to the latest SESAME tech,
from continous electrical monitoring with holter to advanced electrophysiological studies with ablation and devices like pacemaker and ICDs, from septal myectomy to mitral valve repair. A rare case scenario when patient reaches a burnout phase, patient may need evaluation for heart transplantation. Kauvery Hospital, Vadapalani promises to offer all of the above under one roof within its core competence in personalized, focused, and affordable care.

Speaking about the initiative, Prof. Dr P. Manokar, senior interventional cardiologist, Clinical Lead – Heart Failure & Transplant Program at Kauvery Hospital Vadapalani, said, “HCM is not a one-size-fits-all condition. Each patient presents differently, and the management needs to be tailored accordingly. Our approach focuses on identifying the condition early, especially in families with a known history, and offering every treatment option available medical, procedural, surgical in a structured and coordinated manner.”

Dr. Anbarasu Mohanraj, Clinical Lead & Senior Consultant, Cardiovascular & Thoracic Surgery, added, “Surgical intervention such as septal myectomy or mitral valve procedures can be life-changing for patients with obstructive HCM who do not respond well to medications or other treatments. At our HCM Clinic, we assess each case through a multi-disciplinary lens, ensuring that surgical decisions are precise and aligned with the individual’s long-term prognosis.”

A Heart Team Approach which is lacking in many organizations in India, is the key focus of this HCM Clinic. The Heart Team in Kauvery, Vadapalani is a team based approach to this disease, so that the best possible therapy is offered to our patient, by the best experts in this field – all under one roof.

Dr. Aravindan  Selvaraj, Co-founder and Executive Director of Kauvery Group of Hospitals added, “This clinic brings together all the modalities of HCM care that are usually scattered across departments or even different hospitals. Our aim is to make it easier for patients and families to access every form of treatment they may need, from first consultation to advanced procedures, without unnecessary delays or referrals. We believe such an approach can improve diagnosis, reduce risk, and lead to better quality of life for patients living with this condition.”

By consolidating expertise from multiple disciplines such as cardiology, electrophysiology, genetics, psychology, and cardiac surgery, the HCM Clinic at Kauvery Hospital Vadapalani sets a new direction in how this challenging condition can be addressed especially for patients who may not otherwise receive coordinated care.

“ஹரிஹர வீர மல்லு” திரைவிமர்சனம்

ஹரிஹர வீர மல்லு 1650 ஆரம்பிக்கும் கதையானது,ஒளரங்கசீப் தன்னுடைய கொடுங்கோல் ஆட்சியில் தன் சொந்த மதத்தை பரப்பவும், இந்து மதத்தை அழிக்கவும்,தன்னை எதிர்க்கும் மன்னர்களையும் மக்களையும் கொன்று குவிக்கும் கொடுமையான அரசனாக இருக்கிறார் ஒளரங்கசீப். அதே நேரத்தில் 1650 இல் பிறந்து 1659 இல் வளர்ந்து பெரியாளாகி பெரிய திருடனாக இருக்கும் வீரமல்லு(பவன் கல்யாண்) இவர் ஒரு போராளி இவர் குழந்தையாக இருக்கும் பொழுது சத்யராஜிடம் இருந்து அனைத்தையும் கற்று பணக்காரர்களிடம் இருந்து திருடி ஏழைகளுக்கு கொடுக்கும் ராபின் ஹூட்டாக வருகிறார்.

இந்த நிலையில் ஒரு குறுநில பிரபுவுடன் ஒரு ஒப்பந்தத்தின் பெயரில் வைரம் கொள்ளை அடிக்கும் திட்டத்தை போடுகிறான் வீரமல்லு. அந்த நிலையில் அந்த குறுநில மன்னனின் பிடியில் இருக்கும் நிதி அகர்வாலை காதலிக்கிறார். அவரும் காதலிக்கிறார் பின் நிதி அகர்வாலின் சூழ்ச்சியால் அந்த வைரக்திருட்டில் கோல்கொண்டா மன்னரால் பிடிபடுகிறான். அங்கே கோல்கொண்டா மன்னருடன் ஒப்பந்தம் செய்து கோகினூர் வைரத்தை ஒளரங்கசீப்பிடம் இருந்து திருட திட்டமிட்டு டெல்லிக்கு செல்கிறார். அங்கு கோஹினூர் வைரத்தை கொள்ளையடித்தார்களா? அல்லது வீர மல்லுவின் பின் கதை என்ன அவருக்கு பின்னணியில் என்ன நடக்கிறது? என்பதுதான் கதை
உலக சினிமாவில் இந்த மாதிரி ஒரு வரலாற்று படத்தை எவ்வளவு ……………… எடுக்க தெலுகு இன்டஸ்ட்ரியல் மட்டுமே முடியும் ஏன் உலக அளவில் ஓடிய கிளாடியேட்டர் போன்ற படங்களும் இவர்களுக்கு முன்னால் நிற்காது. அந்த அளவுக்கு ஒரு வரலாற்று கதையை எவ்வளவு ……………..க எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள் இந்த ஹரிஹர வீர மல்லு திரைப்படத்தை.

இந்த திரைப்படமானது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எடுத்துக் கொண்டிருந்தார்கள் ஏன் என்றால் பவன் கல்யாண் அரசியல் பிரவேசம் அது இது என்று படத்திற்கு ஏகப்பட்ட தடங்கல்கள். ஆனால் ஒரு கட்டத்தில் பவன் கல்யாண் பிஜேபியுடன் சேர்ந்த பிறகு இந்த படத்தின் திரைக்கதையில் ஏகப்பட்ட ஹிந்து மதத்தை முன்னணியில் வைத்து முஸ்லிம்களை வில்லன்களாக சித்தரித்து வெறும் ஹிந்து மதவாதிகளை மட்டுமே மனதில் வைத்து எடுக்க முயற்சித்து இருக்கிறார். இந்த முயற்சியின் காரணமாக என்னவோ இந்த படத்தை சிறிது காலம் க்ரிஷ் இயக்கி விட்டு விலகிவிட்டார் .அதன் பிறகு நம்மூர் ஏ எம் ரத்தினத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி இருக்கிறார.

இத்தனை ஆண்டுகள் இவர்கள் காத்திருந்தது ஒரு சிறப்பான கிராபிக்ஸ் காட்சி வரும் என்று இல்லை எவ்வளவு மொக்கையான காட்சிகளை எடுத்து வைக்க எப்படி தான் மனசு வந்தது அதுவும் இந்த படத்தில் அடிக்கடி வீரமல்லியின் காலை க்ளோசபில் காட்டுகிறார்கள் அதை பார்க்கும் பொழுது ஒரு படத்தில் வடிவேலு தீப்பொறி திருமுகமாக வருவார் அந்த காட்சி தான் நமக்கு நினைவில் வருகிறது

மொத்தத்தில் ஹரிஹர வீர மல்லு ஒருவருக்கே வீரம் இருப்பதாக மல்லு கட்டுகிறது, திரைக்கதையிலும் மல்லு கட்டுகிறது

Galaxy Z Fold7, Z Flip7 Pre-orders Match S25 Series, Setting New Benchmark for Flagships in India


  • Pre-orders for Samsung’s seventh generation foldables hit a record high, signaling mainstreaming of foldable smartphones and extraordinary consumer excitement
  • Galaxy Z Fold7, Z Flip7 and Z Flip7 FE secured 210,000 pre-orders in the first 48 hours since their launch on July 9 in India

CHENNAI  – July 22, 2025 – Samsung, India’s largest consumer electronics brand, announced that it’s recently-launched – Galaxy Z Fold7, Galaxy ZFlip7 and Galaxy Z Flip7 FE smartphones – have received record pre-orders, signaling huge consumer demand and excitement for the brand’s seventh generation of foldable smartphones. Galaxy Z Fold7, Galaxy ZFlip7 and Galaxy Z Flip7 FE secured 210,000 pre-orders in the first 48 hours, breaking previous records, and nearly equaling the pre-orders received for Galaxy S25 series earlier this year.

“The record pre-orders for our ‘made in India’ foldable smartphones reinforce our belief that young Indian consumers are quick to adopt latest technology. Galaxy Z Fold7 delivers our most advanced smartphone experience yet – powerful, immersive, intelligent, and portable all in one. Galaxy Z Flip7 adapts, anticipates and empowers users, unlocking a smarter, more intuitive way to engage with the world. Powered by the new One UI 8 and Android 16 right out of the box, the new devices deliver true multimodal AI experiences. The success of the new devices are a stepping stone for our larger goal – the mainstreaming of foldable smartphones in India,” said JB Park, President and CEO, Samsung Southwest Asia.

Galaxy Z Fold7 seamlessly blends precision engineering and powerful intelligence to elevate everyday interactions – all in its thinnest and lightest design to date. At just 215 grams, Galaxy Z Fold7 is even lighter than Galaxy S25 Ultra. It is just 8.9 mm thick when folded and 4.2 mm thick when unfolded. It delivers the premium performance and experience of an ultra smartphone, while unlocking new levels of efficiency and productivity with a larger, more immersive display when unfolded.

Galaxy Z Flip7, a compact AI phone with multimodal capabilities, is powered by a new FlexWindow. Small enough to slip into a pocket, yet powerful enough to deliver the handiest assistance, it melds Galaxy AI with a new edge-to-edge FlexWindow, a flagship level camera and an ultra-compact and iconic design. From intuitive voice AI to the best selfie capabilities, Galaxy Z Flip7 is an intelligent pocket-sized companion built for seamless interaction and everyday reliability. Weighing just 188 grams and measuring only 13.7mm when folded, Galaxy Z Flip7 is the slimmest Galaxy Z Flip yet.

While Galaxy Z Fold7 is available in stunning colours such as Blue Shadow, Silver Shadow and Jet Black; the Galaxy Z Flip7 comes in Blue Shadow, Jet Black and Coral Red. Galaxy Z Flip 7FE comes in Black and White colours. Apart from this, consumers buying the Galaxy Z Fold7 and Galaxy Z Flip7 through Samsung.com will have an additional colour to choose from – Mint.

Both devices bring multimodal AI capabilities, delivering experiences that maximize the benefits of the expansive foldable display of the Galaxy Z Fold7 to boost productivity.  Designed as a true multimodal agent, One UI 8 seamlessly combines large-screen multitasking with intelligent tools that understand what users’ type, say and even see. Thanks to Google’s Gemini Live, users can share their screen in real time while speaking with the AI assistant — enabling contextual requests based on what’s visible. In addition, One UI 8 brings enhanced privacy to personalized AI experiences with the new Knox Enhanced Encrypted Protection (KEEP). KEEP creates encrypted, app-specific storage environments within the device’s secures storage area, ensuring each app can access only its own sensitive information and nothing more.

The main display on Galaxy Z Fold7 is 11% larger than the previous generation. The 8-inch Dynamic AMOLED 2X main display offers ultra-rich contrast, true blacks and vibrant detail that makes everything pop. It also gets Vision Booster and up to 2,600 nits of peak brightness.

The Armor FlexHinge on Galaxy Z Fold7 is thinner and lighter, thanks to an enhanced water droplet design and newly implemented multi-rail structure that reduces visible creasing. The cover display is made with Corning® Gorilla® Glass Ceramic 2, a new glass ceramic that has crystals intricately embedded within its glass matrix. Advanced Armor Aluminum in the frame and hinge housing increases strength and hardness by 10%. The main display is restructured to be thinner and lighter — yet stronger. This was achieved by implementing the Titanium plate layer. Additionally, Ultra-Thin Glass (UTG) was increased to be 50% thicker, making the display tougher.

Powered by the Snapdragon 8 Elite for Galaxy, Galaxy Fold7 delivers stupendous performance boosts of 41% in NPU, 38% in CPU, and 26% in GPU compared to the previous generation. This power fuels Galaxy Z Fold7’s ability to process more AI experiences on-device without compromise. In addition, with the first 200MP wide-angle camera in the Galaxy Z series, it captures 4x more detail, producing images that are 44% brighter.In addition, Samsung’s next-generation ProVisual Engine processes images faster.

Galaxy Z Flip7 comes with a stunning FlexWindow display, which brings essentials front and center and makes it easy to type out quick messages. The 4.1-inch Super AMOLED FlexWindow is the largest ever on a Galaxy Z Flip7, with edge-to-edge usability that enables users to see and do more on the cover screen. With 2,600 nits of peak brightness, the FlexWindow gets an upgrade with Vision Booster, enhancing outdoor visibility so users can stay connected wherever they are. The main display is a 6.9-inch Dynamic AMOLED 2X, built for an ultra-smooth, immersive experience.

The cover and back of Galaxy Z Flip7 are protected by Corning® Gorilla® Glass Victus® 2. The Armor FlexHinge is thinner than the hinge on the previous generation and features a restructured design and high-strength materials for smoother folds and long-lasting durability. A robust Armor Aluminum Frame provides a tough exterior for resilience. The 4,300mAh battery is the largest ever on a Galaxy Z Flip, delivering up to 31 hours of video play time on a single charge.

Galaxy Z Flip7 FE features a 6.7-inch Main Display for an immersive viewing experience. The 50MP FlexCam enables high-quality selfies and video in Flex Mode, letting users capture content hands-free, without even opening the device.

‘காந்தாரா: சாப்டர் 1 ‘ படத்தின் மேக்கிங் வீடியோ

‘காந்தாரா : சாப்டர் 1’ படத்தின் மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இது மூன்று வருட சினிமா பயணத்தின் சக்தி வாய்ந்த பார்வையை வழங்குகிறது

‘ ராஜ குமாரா’ , ‘கே ஜி எஃப்’, ‘சலார் ‘ மற்றும் ‘ காந்தாரா’ போன்ற சாதனை படைத்த படங்களுக்கு பின்னால் உள்ள – அனைவராலும் பாராட்டப்பட்ட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், நேற்று ‘காந்தாரா :சாப்டர் 1 ‘ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.‌

படத்தின் பின்னணியில் உள்ள காவிய தன்மையின் அளவையும், அதற்கான கடினமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இந்த வீடியோ வழங்குகிறது.

படப்பிடிப்பு நிறைவடைந்ததைக்கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், 250 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பின் உச்சக்கட்டத்தை விவரிக்கிறது. மேலும் இது மூன்று ஆண்டுகளுக்கும் மேலான அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். ஆயிரக்கணக்கானவர்கள் இப்படத்தின் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் அயராது உழைத்திருப்பதால்.. இந்த மேக்கிங் வீடியோ – நடிகர் மற்றும் இயக்குநரான ரிஷப் ஷெட்டியின் கதை சொல்லலை வரையறுக்கும் ஆர்வம் மற்றும் துல்லியத்திற்கு சமர்ப்பணமாக அமைந்திருக்கிறது.

‘ காந்தாரா : சாப்டர் 1 ‘ என்பது ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் திரைப்படங்களில் மிகவும் லட்சியமான திரைப்பட முயற்சிகளில் ஒன்றாகும். படத்தின் பின்னணியில் பணியாற்றிய படைப்புத் திறன் மிக்க குழுவில் இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் – ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ். காஷ்யப் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் தினேஷ் வங்காளன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.‌ இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து படத்தின் சக்தி வாய்ந்த காட்சி மொழி மற்றும் உணர்வு பூர்வமான கதையை நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர்.

அக்டோபர் இரண்டாம் தேதியன்று உலக அளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம் , இந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அதே தருணத்தில் அதன் கலாச்சார மையத்தில் வேரூன்றி பல்வேறு மொழிகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களையும் சென்றடையும்.

‘காந்தாரா : சாப்டர் 1 ‘உடன் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் இந்திய சினிமாவின் எல்லைகளை தொடர்ந்து கடந்து செல்கிறது. நாட்டுப்புற கதைகள், மக்களின் நம்பிக்கை மற்றும் அற்புதமான சினிமா திறமைசாலிகள் ஒன்றிணைந்து.. கொண்டாடும் ஒரு ஆழமான அனுபவத்தை வழங்கும் என இந்தப் படம் உறுதியளிக்கிறது.

IBM Opens Agentic AI Innovation Center in India


New Center will showcase IBM’s AI agents, multi-agent orchestration capabilities and help enterprises co-innovate their AI strategy
CHENNAI, July 18, 2025: IBM (NYSE: IBM) opened its newest Agentic AI Innovation Center at its Bengaluru office. The Center fosters co-creation and offers clients hands-on experience working with autonomous AI agents. At the Center, clients and partners can build AI agents, fine-tune Small Language Models (SLMs) to power them, and audit the entire process—all within a matter of hours.
Clients, partners and startups can explore AI agents on IBM’s platform and solutions. At the heart of the Center and IBM’s agentic AI strategy, is IBM watsonx Orchestrate, a single solution that helps companies build, deploy, and manage all of their AI agents and their assistants – and enable them to work across their existing technology stack.

The Center will help clients, partners, and startups fast-track adoption of AI, foster co-innovation, and empower developers through hands-on learning and collaboration with IBM AI experts. Developer hangouts and AI Accelerator Days will be organized for an ongoing engagement with community to foster learning in the latest advancements in AI technology and deep engagement that leads to building tangible outcomes.
Inaugurating the facility, Dinesh Nirmal, Senior Vice President, IBM Software said, “We are entering a new era of AI—one defined by intelligent agents that don’t just assist but act, adapt, and collaborate in real time. The IBM Agentic AI center brings this vision to life by urging local enterprises to evolve their AI strategy from reactive to proactive. It will empower clients and partners, to identify processes and workflows where AI will significantly boost productivity, elevate customer satisfaction, minimize downtime and enable users to focus on strategic tasks.”
A recent survey by IBM, in collaboration with Oxford Economics, reveals that AI is now a key driver of financial performance. The study found that Indian business leaders are leading the charge globally in adopting AI across core business functions. Notably, 78% of Indian executives believe the greatest value of agentic AI lies in enhancing decision-making. Additionally, 78% of the Indian leaders are actively encouraging employees to experiment with agentic AI tools—underscoring a strong culture of innovation and forward-looking leadership.
Sandip Patel, Managing Director, IBM India and South Asia added, “AI is no longer just the future—it is reshaping India today. To unlock its full potential and realize the vision of Viksit Bharat, Indian enterprises must deepen their understanding and focus on high-impact use cases. The rise of Agentic AI is accelerating innovation to meet evolving business needs. With its new Agentic AI Innovation Center, IBM will drive industry-wide collaboration, nurture homegrown innovation, and ensure scalable, real-world impact within a strong governance framework.”

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் ‘பெத்தி'( Peddi) படத்திற்காக மாற்றியமைத்து கொண்ட உடலமைப்பு தோற்ற புகைப்படம் வெளியீடு

”குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடித்து வரும் ‘பெத்தி’ ( Peddi) படத்திற்காக நாளை முதல் தொடங்கும் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நம்ப முடியாத வகையில் அவரது தோற்றமும், ஒப்பனையும் மாற்றி அமைத்துக் கொண்டு தோன்றும் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘குளோபல் ஸ்டார் ‘ராம்சரண் தற்போது நடித்து வரும் இலட்சிய படமான ‘பெத்தி’ ( Peddi) திரைப்படத்திற்காக ஒப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த திரைப்படம்- இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் வீடியோ கிளிம்ப்ஸ் நாடு முழுவதும் அனைத்து மொழிகளிலும் பெரும் உற்சாகத்தை தூண்டியுள்ளது.

இப்படத்தின் முக்கியமான மற்றும் நீண்ட நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக- இந்த கதாபாத்திரத்திற்காக வடிவமைக்கப்பட்ட சக்தி வாய்ந்த புதிய அவதாரத்தை வெளிப்படுத்த ராம் சரண் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் தன்னை தயார்படுத்தி வருகிறார். அதற்காக அவர் இடைவிடாத பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அவரது கதாபாத்திரம் கோரும் ஆற்றலையும், தீவிரத் தன்மையையும் முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் தன் உடலை செதுக்கி இருக்கிறார். இதற்காக அவர் ஜிம்மில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கரடு முரடான தாடி – இறுக்கமாக இழுத்துக் கட்டப்பட்ட கூந்தல்- ஒழுக்கமும், மன உறுதியும் கொண்ட கம்பீரமான உடல் அமைப்பை கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த மாற்றம் சாதாரண தோற்றத்தை பற்றியது மட்டுமல்ல.. அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மற்றும் கதையின் மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்குச் சிறந்த சான்றாகும். இந்தத் தோற்றத்தில் அவர் உண்மையிலேயே ஒரு கிரேக்க கடவுளைப் போல் இருக்கிறார். வலுவான மற்றும் ஆக்ரோஷமான மனநிலைக்கு முழுமையாக மாறிவிட்டார் என்பதையும் பிரதிபலிக்கிறது.

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரணின் பிறந்த நாளான மார்ச் 27 ஆம் தேதியன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ‘பெத்தி’ ( Peddi) திரைப்படம் ராம்சரணின் திரையுலக பயணத்தில் இலட்சிய படங்களில் ஒன்று என்ற உற்சாகத்தை உருவாக்கி வருகிறது. அவரது தீவிரமான தோற்றம்.. தற்போது முழு வீச்சில் இருப்பதால் நடிகரின் நம்ப முடியாத மாற்றத்தை போலவே அவரிடமிருந்து சக்தி வாய்ந்த நடிப்பையும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

‘ கருநாடக சக்கரவர்த்தி’ சிவராஜ் குமாரின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் அவரது பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ஜெகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா ஆகியோர் முக்கியமான துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற மேஸ்ட்ரோ ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

ராம் சரணின் பிறந்த நாளான மார்ச் 27 2026 அன்று இப்படத்தின் வெளியீட்டு தேதி என்பதால்.. படக் குழு அதை நோக்கி விறுவிறுப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது.. ‘பெத்தி ‘ ( Peddi) படத்தைப் பற்றிய உற்சாகம் அதிகரிக்கிறது.‌

நடிகர்கள் :
‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ஜெகபதிபாபு , திவ்யேந்து சர்மா.

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : புச்சி பாபு சனா
வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ் & சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர் : வெங்கட சதீஷ் கிலாரு
இசை : ஏ. ஆர் . ரஹ்மான்
ஒளிப்பதிவு : ஆர். ரத்னவேலு
தயாரிப்பு வடிவமைப்பு : அவிநாசி கொல்லா
படத்தொகுப்பு : நவின் நூலி
நிர்வாக தயாரிப்பு : வி. ஒய். பிரவீண் குமார்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்.

திரு.கமல்ஹாசன் பாராட்டிய சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ இசை ஆல்பம் !!

இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ இசை ஆல்பம் பாடலை திரு. கமல்ஹாசன் பாராட்டியதுடன் அக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இன்றைய இளம் தலைமுறையினரிடையே இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்கள் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. சமீபத்தில்
தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார் இசையில், இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் எழுத்தில் வெளியான, ‘ச்சீ ப்பா தூ…’ பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்பாடலின் வீடியோ ஆல்பத்தை பார்த்த திரு. கமல்ஹாசன் பாடலினால் கவரப்பட்டு, அக்குழுவினரை அழைத்து பாராட்டியதுடன், அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். திரு. கமல்ஹாசனின் பாராட்டினால் இக்குழுவினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் திறமையால் ஈர்க்கப்பட்ட தரண் குமார், இந்த புதிய ஆல்பம் பாடலில் அவருக்கு வாய்ப்பளித்து, அவருடன் இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளார்.

இப்பாடலை முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் வாஹீசன் ராசய்யா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடலுக்கு சக்திவேல் நடன அமைப்பை செய்துள்ளார், மாஸ்டர் ராஜூ சுந்தரம் நடனமாடியிருக்கிறார். இந்த வீடியோ இசை ஆல்பத்தை இயக்குநர் அனந்து இயக்கியிருக்கிறார்.

தரண் குமரின் தனித்துவமான இசை, அற்புதமான பாடல் வரிகள், ராப், துடிப்பான நடனம் என இப்பாடல் இசை ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இசை ரசிகர்கள் இப்போது இப்பாடலை கொண்டாடி வருகிறார்கள்.

நடிகர் வெற்றி நடிக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம் ‘படத்தின் இசை வெளியீடு



நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் ஆகியோர் இப்படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.

அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தில் வெற்றி,  ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கிறார். சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பாளராக இருக்கும் இந்த திரைப்படத்தை மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

ஆகஸ்ட் 1ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான மகேஸ்வரன் தேவதாஸ், இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன், இயக்குநர் அனீஸ் அஷ்ரஃப்,  நாயகன் வெற்றி, நாயகி ஷில்பா மஞ்சுநாத்,  நடிகைகள் நயனா மற்றும் அனிகா, சண்டை பயிற்சி இயக்குநர் நூர், டிரெண்ட் மியூசிக் ஜித்தேஷ், பின்னணி பாடகி கரிஷ்மா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் & நடிகர் மகேஸ்வரன் தேவதாஸ் பேசுகையில், ”ஒன்பது வயதில் நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டேன். என்னுடைய இந்த விருப்பத்தை என் ஆசிரியரிடம் தெரிவித்தேன். அவர் எனக்கு அறிவுரை வழங்கினார்.
நான் கமல்ஹாசனின் ரசிகன் நான். 11 வயதில் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தை தேர்வு நேரத்திலும் பார்த்தேன். ஆசிரியர் நடிப்பின் மீது கவனம் செலுத்தாதே என்று அறிவுரை சொன்னாலும் என் மனதில் அந்த ஆசை பதிந்திருந்தது. .

அதன் பிறகு திருமணம் ஆனது. பிள்ளைகளும் பிறந்தார்கள். பிசினஸ் இருந்தது. கோவிட் வந்தது. அனைவரும் நெட்பிளிக்ஸ், அமேசான் என டிஜிட்டல் தளங்களில் தங்களது பொழுதை கழித்தனர். அந்த தருணத்தில் எல்லோரும் எல்லா படங்களையும் பார்க்கத் தொடங்கினர். சிங்கப்பூரில் என்ன சிறப்பு என்றால், டாப் 10 என திரைப்படங்களை பட்டியலிடுவார்கள். அங்கு சீனர்கள், மலாய்காரர்கள்  என அனைவரும் படங்களை பார்ப்பார்கள். இதில் டாப் 1, 2  ஆகிய இடங்களில் தமிழ் படங்கள் தான் இருக்கும். எல்லோருக்கும் தமிழ் படங்களை பார்க்கத்தான் ஆசை. இதை நான் உன்னிப்பாக கவனித்தேன். அதன் பிறகு என்னை தயார்படுத்திக் கொண்டு 46 வயதில் சிங்கப்பூரில் கட்டுமஸ்தான தேசிய ஆணழகன் என்ற பட்டத்தை வென்றேன். அதன் பிறகு இந்த உடலமைப்பை எப்படி எங்கு வெளிப்படுத்திக் கொள்வது என யோசித்தேன். எனக்கு வில்லன்களை மிகவும் பிடிக்கும் ‌ ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வில்லன்கள் தான் முதுகெலும்பு போல் இருப்பார்கள். நான் பேட்மேன் படத்தை பார்த்துவிட்டு வில்லனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று வரை நான் கில்லி, துப்பாக்கி, தனி ஒருவன் போன்ற படங்களை திரும்பத் திரும்ப பார்ப்பேன். விஜய்க்காக மட்டுமல்ல அந்தப் படத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், ஹிந்தி வில்லன் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரின் வில்லத்தனமான நடிப்பிற்காக அந்தப் படங்களை பார்ப்பேன்.

எனக்கு தமிழ் திரையுலகம் பற்றி எதுவும் தெரியாது. இதற்காக இரண்டு ஆண்டுகள் ஹோம் ஒர்க் செய்தேன். தமிழ் திரையுலகில் எத்தனை துறைகள் இருக்கின்றன, அவை எப்படி இயங்குகின்றன என்பது குறித்து ஹோம் ஒர்க் செய்தேன். இதில் என்னை ஏமாற்றுவதற்கும் சிலர் முயற்சித்தனர். அதன் பிறகு தான் அஷ்ரஃப் அறிமுகமானார். அங்கிருந்து இந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கு இரண்டு ஆண்டுகளானது.

எனக்கு சிங்கப்பூரில் தொழில் இருக்கிறது, குடும்பம் இருக்கிறது, இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் சர்வதேச அளவிலான மேடைப் பேச்சாளர், எழுத்தாளர். கால்பந்து பயிற்சி அகாடமியை நடத்தி வருகிறேன்.  இத்தனை பணிகளையும் நிர்வகித்துக் கொண்டே இடையில் இந்த படத்தின் பணிகளை கவனித்தேன்.

சரியாக திட்டமிட்டு பணியாற்றினால் நல்ல படத்தை வழங்க இயலும் என்பதில் உறுதியாக இருந்தேன். கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமா தான்.

என்னுடைய தாத்தாவின் பெயரில்தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். ஆபாச காட்சிகள் இடம் பெறக் கூடாது, பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெறக் கூடாது என்ற இரண்டு நோக்கத்தை மனதில் வைத்து தான் என் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். பொழுதுபோக்காகவும் இருக்க வேண்டும், குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து திரையரங்க அனுபவத்தையும் பெற வேண்டும் என்பதற்காக படங்களை தயாரிக்க திட்டமிட்டேன். இதைத்தான் இயக்குநர் அஷ்ரஃப்பிடம் தெளிவாக தெரிவித்தேன். கதை நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இப்படத்தின் டீசர் என்ன, ட்ரெய்லர் என்ன என்பது வரை விவாதித்தோம்.  அதனால் தான் அவரை முதலில் ஒரு குறும்படத்தை இயக்கச் சொன்னேன்.

இந்தப் படத்தில் முக்கியமான சோஷியல் மெசேஜ் இருக்கிறது. இதனை கிரைம் திரில்லர் ஜானரில் சொல்ல முடியும்  என்பதை முதன்முதலாக முயற்சித்து இருக்கிறோம். அந்த வகையில் இது முதல் முயற்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்தின் அனைத்து பணிகளையும் 2023ம் ஆண்டு டிசம்பரில் நிறைவு செய்தோம். அதன் பிறகு இப்படத்தினை நேர்த்தியாக செதுக்குவதற்கு ஓராண்டு காலம் எடுத்துக் கொண்டோம். ஏனெனில் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.

படத்தின் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அன்று வெளியாகிறது அனைவரும் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

சண்டை பயிற்சி இயக்குநர் நூர் பேசுகையில், ”இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. ஆக்ஷன் காட்சிகளில் டூப் எதுவும் வேண்டாம் என்று சொல்லி வில்லனாக அறிமுகமாகும் மகேஸ்வரன் தேவதாஸ் அவரே நடித்தார். நான்காவது மாடியில் இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சியை படமாக்கும் போது டூப் வைத்துக் கொள்ளலாம் என்று விவாதித்தோம். ஆனால் அதனை நானே செய்கிறேன் என்று சொல்லி துணிச்சலுடன் நடித்தார். இந்தக் காட்சியின் போது அவர் ஒரே நாளில் பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்தார். இதன் மூலம் நடிப்பின் அவருடைய அர்ப்பணிப்பும், ஆர்வமும் தெரிந்தது. இந்தக் காட்சி திரையில் வரும் போது பார்வையாளர்கள் ரசிப்பார்கள். இந்த  திரைப்படத்தை ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

படத்தின் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் பேசுகையில், ”இப்படத்தை இயக்குநர் அஸ்ரப் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். அனைத்து கலைஞர்களும் கடின உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படத்தில் நான்கு பாடல்கள் இருக்கின்றன, அனைத்தும் நன்றாக உள்ளன. இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

நாயகி ஷில்பா மஞ்சுநாத் பேசுகையில், ”தொடர்ந்து வாய்ப்பளிக்கும் தமிழ் திரையுலகத்திற்கு நன்றி. தமிழில் அறிமுகமாகும் போது தமிழ் தெரியாது. நடிப்பும் தெரியாது. இருந்தாலும் தமிழ்நாட்டில் தான் திறமைசாலிகளை கண்டறிந்து, வாய்ப்பளித்து அவர்களை பாராட்டுகிறார்கள். தொடர்ந்து ஆதரவும் தருகிறார்கள். ‘காளி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘சிங்க பெண்ணே’ என தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறேன்.

நிறைய படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் பத்திரிகையாளராக நடித்திருக்கிறேன். இதற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் மூலம் மகேஸ்வரன் தேவதாஸ் நடிகராக அறிமுகமாகிறார். அவரை தமிழ் திரையுலகம் சார்பில் வரவேற்கிறேன். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் அனீஸ் அஷ்ரஃப் பேசுகையில், ”நான் ஏ ஆர் முருகதாஸிடம் உதவியாளராக பணிபுரிந்திருக்கிறேன். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘பிசாசு ‘ திரைப்படத்தை கன்னடத்தில் ‘ராட்சசி’ என்ற பெயரில் இயக்கி இருக்கிறேன்.  தமிழில் முதன் முதலாக நான் இயக்கி இருக்கும் படம் இது. படத்தின் பெயர் ‘சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்’.  தமிழில் எனக்கு இது முதல் பக்கம். என்னுடைய தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாசுக்கும் இதுதான் முதல் படம்.

இது ஒரு முக்கியமான மேடை. இந்த மேடை மீது விருப்பப்படாத உதவி இயக்குநர்கள் ..இணை இயக்குநர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனக்கு இன்று இந்த மேடை சாத்தியமாகி இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் விரைவில் சாத்தியமாக வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

எனக்கு சிங்கப்பூரில் உள்ள ஒரு நண்பர் வாயிலாக தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் போன் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் தெரிவித்தார். அவரது புகைப்படத்தை பார்த்த பிறகு உங்களை வில்லனாக அறிமுகப்படுத்துகிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தேன். ஏனென்றால் அவருடைய கட்டுமஸ்தான உடலமைப்பு தான் முக்கிய காரணம். அதன் பிறகு அவருக்காக குறும்படம் ஒன்றை இயக்கினேன். அந்தக் குறும்படத்தில் அவர் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பிறகு இப்படத்தின் கதையை அவரிடம் முழுமையாக விவரித்தேன். அவருக்கும் பிடித்திருந்தது. படத்தின் பணிகள் தொடங்கின. தயாரிப்பாளராக இருந்தாலும் நண்பராகவும், நடிகராகவும் பழக தொடங்கினார். அவருடைய ஈடுபாடு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
திட்டமிட்டபடி படத்தின் படப்பிடிப்பை தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்புடன் நிறைவு செய்தோம்.

முதல் பக்கம் என்பது கதைக்கு பொருத்தமானதாக இருந்ததால் வைத்திருக்கிறோம். சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் என்பது சென்னையில் நடைபெற்ற ஒரு குற்ற சம்பவத்தின் முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கும் தகவல் என வைத்துக் கொள்ளலாம்.

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸுடன் பணியாற்றிய போது அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் என்னவெனில், அவர் ஒரு கதையை விவாதிக்க தொடங்குவதற்கு முன் சோஷியல் மெசேஜ் ஒன்றை தீர்மானித்து, அதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என முடிவு செய்வார். இதற்காகத்தான் அவர் கதையையும், காட்சிகளையும், திரைக்கதையையும் உருவாக்குவார். அதனால் தான் நானும் இந்த படத்தில் ஒரு சோஷியல் மெசேஜை வைத்து கதையையும், திரைக்கதையையும் உருவாக்கி இருக்கிறேன்.

கிரைம் திரில்லராக நிறைய படங்கள் வெளியாகி இருக்கின்றன. பேய் படங்களும், திரில்லர் படங்களும் தயாரிப்பாளர்களின் முதலீட்டிற்கு பாதுகாப்பானவை என சொல்வார்கள். க்ரைம் திரில்லர் ஜானரில் சோஷியல் மெசேஜை வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இது ரசிகர்களை கவரும் என நம்புகிறேன்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த், இசையமைப்பாளர் ஏ ஜி ஆர், படத்தொகுப்பாளர் வி எஸ் விஷால் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். அதற்காக அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்திற்கு நாயகனாக வெற்றியை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று என்னிடம் பலர் கேட்டனர். இந்தப் படத்தின் கதையை தயாரிப்பாளரிடம் சொன்ன பிறகு, யார் ஹீரோ என அவர் கேட்டபோது, வெற்றி என்று ஒரே ஒரு பெயரை தான் நான் சொன்னேன். மதுரையிலிருந்து வரக்கூடிய ஒரு கிரைம் நாவலாசிரியரின் மகன் எனும் அந்த கதாபாத்திரத்திற்கு வெற்றி தான் பொருத்தமாக இருப்பார் என நான் உறுதியாகச் சொன்னேன். அத்துடன் இப்படத்தின் வில்லன் உடன் மோத வேண்டும் என்றால் அதற்கு இணையான உடல் தோற்றம், உடல் மொழி கொண்ட நடிகர் வெற்றி மட்டும்தான் என விளக்கமும் அளித்தேன், இதனை தயாரிப்பாளரும் ஒப்புக்கொண்டார்.

அதன் பிறகு வெற்றியை சந்தித்து இப்படத்தின் கதையை முழுவதுமாக சொன்னேன். அவர் கதையை கேட்ட பிறகும் முழு திரைக்கதையை வாசித்த பிறகும் நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாயகி ஷில்பா மஞ்சுநாத்தை தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினேன் அவர் அப்போது டெல்லியில் இருந்ததால் கதை முழுவதையும் போனில் சொன்னேன். அப்போது அவர் நான் நடிக்கும் படத்தில் என் கதாபாத்திரம் வலிமையாக இருக்கிறதா என பார்ப்பேன், அல்லது அந்தத் திரைப்படம் வெற்றி பெறும் திரைப்படமாக இருக்குமா என்பதை பார்ப்பேன். இந்த படத்தில் இரண்டுமே இருப்பதால் நான் நடிக்கிறேன் என்று சொன்னார். இந்தப் படத்தில் அவர் ரிப்போர்டராக தான் நடிக்கிறார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்தத் திரைப்படத்தில் தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நாயகன் வெற்றி பேசுகையில், ”இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘சென்னை பைல்ஸ் – முதல் பக்கம்’ படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று என்னை தேர்வு செய்த இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. அவருடைய குறும்படத்தை பார்த்தேன். பார்த்ததும் நம்பிக்கை பிறந்தது. அதில் அவருடைய திறமை பளிச்சிட்டது.  அதேபோல் சொன்ன நாட்களில் சொன்னபடி படப்பிடிப்பை நிறைவு செய்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படத்தை உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு தளத்தில் குடும்பமாக இணைந்து பணியாற்றினோம். படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்து பார்த்து ரசித்து பேராதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.