Breaking
March 7, 2026

June 2025

“படை தலைவன்”ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

VJ COMBINES தயாரிப்பில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ள படம் படை தலைவன். இப்படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு எஸ் ஆர் சதீஷ்குமார், படத்தொகுப்பு அகமத்

இப்படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனர் எல் கே சுதீஷ் கைப்பற்றுள்ளார்..

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

புதுமையான திரைக்கதையில், முழுவதும் காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. எஸ் ஆர் சதீஷ்குமாரின் கேமரா காடும் காடு சார்ந்த இடங்களை மிகவும் தத்ரூபமாக படம் பிடித்துள்ளது. பெரும் பொருட் செலவில் vj Combines நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, A.வெங்கடேஷ், S.S.ஸ்டான்லி, லோகு N P K S, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு – VJ Combines –

கதை இயக்கம் – U அன்பு

திரைக்கதை வசனம் – பார்த்திபன் தேசிங்கு

இசை – இசைஞானி இளையராஜா

ஒளிப்பதிவு – S R சதீஷ்குமார்

படத்தொகுப்பு – அகமத்

ஸ்டண்ட் – மேத்யூ மகேஷ்

கலை இயக்கம் – P ராஜு

ஸ்டில்ஸ் – சக்திபிரியன்

பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக்

மக்கள் தொடர்பு – சதிஷ் , சிவா )AIM

“மெட்ராஸ் மேட்னி” திரை விமர்சனம்.

சென்னையில், காளி வெங்கட் மனைவி ஷெல்லி கிஷோர், மகள் ரோஷ்னி மற்றும் மகன் விஷ்வா ஆட்டோ ஓட்டிக் கொண்டு மிகவும் எளிமையானவாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.காளி வெங்கட் மகள் ரோஷ்னி பெங்களூருவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.மகன் 12 ஆம் வகுப்பில் நல்லதொரு மதிப்பெண் எடுத்து இன்ஞ்சினியரீங் படிப்பில் சேருவதற்கு தயாராகி வருகிறார். மகள் ரோஷ்னிக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருக்கிறார்.ஆனால், எந்தவொரு மாப்பிள்ளையும் கிடைக்காமல் திருமணம் தொடர்ந்து தள்ளிக் கொண்டே போகிறது.

குடும்ப கஷ்டத்தை மகள் ரோஷ்னி மீது திணித்ததால்தான்ரோஷ்னி மனதளவில் தவித்துக் கொண்டிருக்கிறாள் என காளி வெங்கட் கவலை படுகிறார்.

தன்னுடைய தந்தை அனைவரிடமும் மிகவும் தாழ்ந்து போவதையும் பேசுவதையும் பணிவாக நடந்து கொள்வதையும் பிடிக்காத மகன் விஷ்வா, தந்தை மீது அதிக கோபத்தில் இருந்து வருகிறான்.

தன்னுடைய குடும்பத்தில் என்ன நடந்தாலும்,தாங்கிச் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தாய் ஷெல்லி இருக்கிறார்.இவர்களின் குடும்பத்தில் அடுத்து என்ன நடந்தது என்பதுதான் “மெட்ராஸ் மேட்னி” திரைப்படத்தின் மீதிக்கதை.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட் எதார்த்தமான நடிப்பை கொடுத்து கண்ணன் என்ற கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.மனைவியாகவும் இரண்டு குழந்தைகளுக்கு தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷெல்லியும் தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாகவே செய்து முடித்திருக்கிறார்.

மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோஷ்னி, தனது குடும்பத்தையும் தனது நிலையையும் நினைத்து கண்கலங்கும் காட்சியில் திரைப்படம் பார்க்கும் நம்மையும் அவருடன் சேர்த்து கண்கலங்க வைத்துவிட்டார்.

விஷ்வா, நாய் மீது வைத்திருக்கும் பாசம், தந்தையை புரிந்து கொள்ளும் தருணம் என பல காட்சிகளில் மிகவும் இயல்பான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதாகைலாசம், இவரின் உதவியாளராக வரும் விஜய் டிவி ராமர், லோக்கல் ரவுடி, ஊறுகாய் விற்கும் சாம்ஸ், HR ஆக வரும் அர்ச்சனா, ட்ரைவிங் கற்றுத் தரும் ஜார்ஜ் மரியன், EB அலுவலர் என அனைவருமே தங்களது கதாபாத்திரங்களை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் :- கே.சி. பாலசாரங்கன்

இரண்டாம் பாதியில் படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்த இயக்குனர் கார்த்திகேயன் மணி அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

“டி என் ஏ”| திரைவிமர்சனம்

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா மற்றும்நிமிஷா சஜயன் நடித்திருக்கும் திரைப்படம் டி என் ஏ
காதல் தோல்வியில் இருக்கும் அதர்வா தினமும் குடித்துவிட்டு போதை பொருள்களுக்கு அடிமையாகி வீட்டில் இருப்பவர்கள் நிம்மதியை கெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் .இந்த சூழ்நிலையில் அதர்வாவின் எதிர்காலத்தை மனதில் கொண்ட அவரை ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கின்றனர் குடும்பத்தினர். அதன் பிறகு அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். அவர்கள் பார்க்கும் பெண் நிமிஷா சஜயன் . ஓவர் ஆட்டிட்யூட் கொண்ட ஒரு பெண் துருதுருவென்று இருக்கும் இவரை அவரது உறவினர்கள் பைத்தியம் என்று கூறி குடிகாரன் ஆன அதர்வாவிற்கு திருமணம் செய்து வைத்தால் தான் செட் ஆகும் என்று திருமணம் செய்து வைக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தன் மனைவியை சரியாகப் புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையை துவங்குகிறார் அதர்வா. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது மருத்துவமனையில் தாயிடம் குழந்தையை கொண்டு வந்து தரும் பொழுது நிமிஷா சஜயன் இது தனது குழந்தை இல்லை என்று கூறுகிறார். குடும்பத்தினர் அனைவரும் அவரை பைத்தியம் என்று கூற அதர்வா மட்டும் தன் மனைவியை நம்பி அந்த குழந்தை தனது தானா என்று டி என் ஏ டெஸ்ட் மூலம் தெரிந்து கொள்கிறார். அப்பொழுது அவருக்கு அந்த அதிர்ச்சிகரமான தகவல் தெரிகிறது அந்த குழந்தை தனது இல்லை என்றும் மருத்துவமனையில் அந்த குழந்தையை மாற்றி உள்ளனர் என்றும் தெரிந்து தனது குழந்தையை தேடி பயணப்படுகிறார்.

அவ்வாறு தேடும் அதர்வா காவல்துறை உதவியுடன் தனது குழந்தையை திருடியது யார்? தன்னிடம் உள்ள அந்த குழந்தை யாருடையது? என்று தெரிந்து அதை ஒப்படைத்தாரா? அல்லது தனது குழந்தையை கடத்தியவர்களை கண்டுபிடித்தாரா? என்பது தான் இந்த திரைப்படத்தின் கதை.
இத்திரைப்படத்தின் நாயகனாக அதர்வா நடித்திருக்கிறார் அதர்வாவின் நடிப்பு நிச்சயம் ஒரு அவருக்கு மைல்கல்லாக தான் இருக்கும். காதல் தோல்வியில் இருக்கும் ஒரு சாதாரண மனிதனாக, தனது குழந்தையை தொலைத்த பின் குழந்தையை தேடும் ஒரு தகப்பனாக தனது நடிப்பினை பல்வேறு பரிமாணங்களில் சிறப்பாக வெளிப்படுத்துகிறார் நீண்ட நாள் கழித்து அதர்வாவிற்கு ஒரு சிறந்த திரைப்படமாக சிறந்த நடிப்பாக இந்த படம் இருக்கும்.
நிமிஷா சஜயன் அதர்வாவின் மனைவியாக நடித்திருக்கிறார் ஒரு லூசுத்தனமான கேரக்டர் தான் என்றாலும் இவருக்காகவே இந்த கேரக்டரா அல்லது இந்த கேரக்டருக்காக இவரா என்பது போல் இருக்கிறது அவரது நடிப்பு இதற்கு மேல் இவர் நடிப்பை எதுவும் சொல்ல இயலாது.

மேலும் இந்த படத்தில் காவல்துறை ஏட்டாக பாலாஜி சக்திவேல் இன்னும் இரண்டு ஒரு நாட்களில் ஓய்வு பெறும் கேரக்டர் அதர்வாவுடன் சேர்ந்து அந்த குழந்தையை கண்டுபிடிக்க அவர் அலைவது அவரது நடிப்பு நன்றாக இருக்கிறது மேலும் இந்த படத்தில் பல கேரக்டர்கள் இருக்கிறார்கள். வில்லனாக பிரபல இயக்குனர் சுப்பிரமணிய சிவா நிச்சயம் அவர் இனிவரும் நாட்களில் முழு நேர நடிகராக மாறிவிடுவார் ரித்திகா, விஜய் சந்திரசேகர் ,போஸ் வெங்கட், சேத்தன்,ரமேஷ் திலக் பலரது நடிப்பும் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது
படத்தின் திரைக்கதையில் அங்கங்கே பல குறைகள் இருக்கிறது உதாரணமாக அதர்வா தனது குழந்தையை தேடி செல்லும் போது அவருடன் பாலாஜி சக்திவேல் மட்டுமே செல்கிறார் இந்த குழந்தை கடத்தலின் பின்னணியில் பல சதிகளும் பல பெரிய கும்பல்களும் இருப்பது தெரிந்தும் அந்தக் காவல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். ஓரிடத்தில் பல குழந்தைகள் பிச்சை எடுக்க ஒரு குடோனில் அடைத்து வைத்திருக்கும் குழந்தைகள் என்னவானார்கள் என்று தெரியவில்லை இவ்வாறாக பல திரைக்கதை ஓட்டைகள் இருந்தாலும் திரைக்கதை ஓட்டம் சற்று விறுவிறுப்பாக தான் இருக்கிறது இயக்குனர் இன்னும் முழுமையாக வேகத்தை கூட்டி இருந்தால் நிச்சயம் இந்த டி என் ஏவின் ஸ்ட்ரக்சர் என்னும் திரைக்கதை விறுவிறுப்பாக இருந்திருக்கும் மேலும் இந்த படத்திற்கு இசையும் ஒழிப்பது மிகப்பெரிய பலமாக இருக்கிறது

“பரமசிவன் பாத்திமா” திரைவிமர்சனம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மலை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் மதம் மாற்றம் காரணமாக மூன்று பிரிவுகளாக பிரிந்து இந்து கிறிஸ்தவர், இஸ்லாமியர், என மூன்று கிராமங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கிறிஸ்தவர்கள் வாழும் கிராமத்திற்கும், இந்துக்கள் வாழும் கிராமத்திற்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.இதற்கிடையே, இந்த இரண்டு கிராமங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு திருமணம் நடந்தால் மாப்பிள்ளை மட்டும் கடத்திச் சென்று கதாநாயகன் விமல் மற்றும் கதாநாயகி சாயாதேவி இணைந்து கொலை செய்வதோடு, மட்டுமல்லாமல் மேலும் சிலரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.

இந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறையினர் கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் கிளறிக் கொண்டிருக்கிறார்கள்.மறுபக்கம் இரண்டு கிராமங்களுக்கு இடையே நடக்கும் மோதல் தொடர்கிறது.கதாநாயகன் விமல் மற்றும் கதாநாயகி சாயாதேவியும் திருமணம் நடக்க இருக்கும் இளைஞர்களை கடத்தி எதற்காக கொலை செய்கிறார்கள்? கொலை செய்யப்பட்டவர்களுக்கும் கதாநாயகன் விமல் மற்றும் கதாநாயகி சாயாதேவியும் என்ன தொடர்பு? என்பதுதான் இந்த ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த பரமசிவன் பாத்திமா திரைப்படத்தில் கதாநாயகனாக விமல் நடித்திருக்கிறார்.வாத்தியார் கதாப்பத்திரத்தில் நடிப்பின் மூலம் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சாயாதேவி நடித்திருக்கிறார் ‌ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாயாதேவியும் கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார்.

கிறிஸ்தவ தேவாலய பாதிரியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன் இருவரும் வெட்டித்தனமாக அதிகளவில் வசனங்களை பேசிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் பேசும் வசனங்கள் மூலம் திரைப்படத்திற்கு என்ன சொல்ல முயற்சிக்கிறார்கள், என்பது தான் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு எதுவுமே புரியாமல் இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், நடிப்பு வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஒரு முகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நடிப்பின் மூலம் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் துபாய் மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கூல் சுரேஷ், கதாநாயகி சாயாதேவியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மனோஜ்குமார், கதாநாயகி சாயாதேவியின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதிரா, சேஷ்விதா, ஸ்ரீரஞ்சனி, வி.ஆர்.விமல்ராஜ், மகேந்திரன், காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் சுகுமார், ஆறு பாலா, ஊருக்குள் குடிகாரனாக சுற்றுத் திரியும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வீரசமர், களவாணி கலை உள்ளிட்ட அனைவரும் கொடுத்த வேலையை எந்த விதமான குறையும் இல்லாமல் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் இந்த பரமசிவன் பாத்திமா திரைப்படத்தில் ஒளிப்பதிவு தனது உதவியாளரிடம் கேமராவை ஒப்படைத்ததால் ஒளிப்பதிவில் பெரிய வேலை கொடுக்கவில்லை என நினைக்கத் தோன்றுகிறது.

இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்களும், மற்றும் பின்னணி இசை சொல்லும் அளவுக்கு இல்லை இந்த திரைப்படத்திற்கு இசை மட்டுமே சிறப்பு சேர்த்திருக்கிறது.

இந்து மதம் மட்டுமே உயர்ந்த மதம், என்ற கொள்கையை கூறுவதும் மற்ற மதங்கள் அனைத்தும் பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி மதமாற்றம் செய்து தங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதையும், அப்படி இழுக்கப்பட்ட மக்கள் பலர் தங்களுடைய அடையாளமான பெயர் அளவில் மட்டுமே மதம் மாறியிருக்கிறார்களே தவிர மனதளவில் மாறவில்லை என்பதையும் பிரச்சார பாணியில் இது பிரச்சார படமாக மட்டுமே இயக்கி இருக்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.

கணவனும் வேண்டாம், தகப்பனும் வேண்டாம் அதிரடி காட்டிய தமிழ்செல்வி

கணவனும் வேண்டாம், தகப்பனும் வேண்டாம் அதிரடி காட்டிய தமிழ்செல்வி ! பரபரக்கும் விஜய் டிவியின் சின்ன மருமகள் நெடுந்தொடர் !!

தன்னம்பிக்கையின் சிலையாக தமிழ்ச்செல்வி – விஜய் டிவி “சின்ன மருமகள்” தொடரின் நெஞ்சைத் தொடும் கதை!

வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!

தமிழ் சின்னத்திரை உலகில், மக்களின் பேராதரவைப் பெற்ற, தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் “சின்ன மருமகள்”. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

பொதுவாகவே தமிழில் நெடுந்தொடருக்கு, தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப கதைகள், குடும்பத்தில் சிக்கி உழலும் பெண்களின் வலிகளைச் சொல்லும் கதைகளுக்கு, நம் தமிழ்ப்பெண்களிடம் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் உழலும், தமிழ்செல்வியின் கதையை சொல்லும், “சின்ன மருமகள்” தொடர், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

இத்தொடரின் கதை, இப்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. மருத்துவருக்குப் படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் தமிழ்ச்செல்வி, திருமணமான நிலையில், மாமியார் வீட்டின் சிக்கல்களால், தான் கர்ப்பமாக இருப்பதாகப் பொய் சொல்கிறாள். அந்த உண்மை தெரியவர, அவள் தந்தை வீட்டுக்கு விரட்டப்படுகிறாள். ஆனால் தந்தையும் கடன் வாங்கி குடித்துவிட்டுத் திரிய, தந்தை வீட்டை உதறுகிறாள். அவள் உண்மையிலேயே கர்ப்பம் என்பது தெரிய வர, அதை நம்ப மறுக்கும் கணவனையும் உதறி, நான் தனியாக என் கனவை அடைவேன் எனச் சவால் விட்டுக் கிளம்புகிறாள்.

தனியாகக் கணவனையும், தந்தையையும் எதிர்த்து வெளியே வரும் தமிழ்ச்செல்வி எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வாள்? தடைகளை மீறி அவள் ஜெயிப்பாளா?, அவள் மருத்துவகனவு என்னவாகும்? என, இந்தத் தொடர் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தொடரின் புதிய எபிஸோடுகளை, விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்

நடிகை லிசி ஆண்டனி நடிக்கும் ‘குயிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியீடு

B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குயிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ‘எழுச்சித் தமிழர்’ தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘குயிலி’ திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க தொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார். 

விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன் மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல், இயக்குநர் ஸ்ரீஜர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் அருண் குமார் பேசுகையில், ”இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த அனைவரையும் வரவேற்கிறேன். இப்படம் சிறப்பாக உருவாவதற்கு உழைத்த படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  

முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் ‘ஏமாற்றாதே’, ‘பொய் சொல்லாதே’, ‘திருடாதே’, ‘கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும்’ என்ற விஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்த்தனர். அவற்றை பின்பற்றி இப்படத் தயாரிப்பின் போது பல தடைகள், தாமதங்கள் ஏற்பட்டாலும் அனைத்தையும் கடந்து வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறோம். இதற்காக கடினமாக உழைத்த ‘குயிலி’ பட குழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த திரைப்படத்திற்காக முதலீடு செய்த நண்பர்களையும் வாழ்த்துகிறேன், வரவேற்கிறேன், நன்றி தெரிவிக்கிறேன். 

இந்தத் திரைப்படம் ஒரு அம்மாவின் வலியை பேசுகிறது. ஒரு அம்மா தன் மகனை வளர்ப்பதற்காக எவ்வளவு சவால்களை எதிர்கொள்கிறார்கள்?எவ்வளவு போராட்டங்களை சந்திக்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கையில் இறுதிவரை எப்படி போராடுகிறார்கள்? என்பதை இப்படம் விவரிக்கிறது. குயிலியாக நடித்த நடிகை லிசி ஆண்டனி உள்ளிட்ட இப்படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

இது கமர்ஷியல் படமாக இல்லாமல் சமூகத்திற்கான படமாக உருவாகி இருக்கிறது.‌ இதற்காக இயக்குநரை பாராட்டுகிறேன். இந்த திரைப்படம் வெளியான பிறகு படத்தை பார்த்தவர்களில் ஐந்து சதவீத மக்களாவது தங்களை திருத்திக் கொண்டால்.. அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறோம்,” என்றார். 

நடிகை தாஷ்மிகா பேசுகையில், ”இந்தப் படத்தில் நடிப்பதற்கு எனக்கு திடீரென்று வாய்ப்பு கிடைத்தது. அதனால் எனக்கு இந்த தருணம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதோ ஒரு படப்பிடிப்பில் சிறிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இப்படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்தது. குடிக்கு எதிரான படத்தில் நீங்கள் நாயகியாக நடிக்க வேண்டும் என படக் குழுவினர் சொன்னவுடன் உற்சாகம் அடைந்தேன். என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி,” என்றார். 

மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், ”குறிப்பிட்ட சமுதாயத்திற்கோ, குறிப்பிட்ட சாதிக்கோ இல்லாமல்,  எல்லாருக்குமான தலைவராகவும், ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் தலைவராக திகழும் தொல் திருமாவளவனை வருக, வருக என வரவேற்கிறேன். 

அவர் சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே எனக்கும், அவருக்கும் பழக்கம் உண்டு. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் தருணத்தில் நாங்கள் தினமும் சந்தித்துக் கொள்வோம். 

இந்தியா கூட்டணி உருவாவதற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை போல் இவருக்கும் பங்கு இருக்கிறது. பாராளுமன்றத்தில் இவருடைய குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது, ஒலித்துக்கொண்டே இருக்கிறது. 

பி எம் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த ‘குயிலி’ திரைப்படம் அற்புதமான குடும்ப படம். ஒரு தாய் தன் குடும்பத்திற்காக எப்படி போராடுகிறார் என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள். இதற்காக இயக்குநர் முருகசாமியையும் இப்படத்தை துணிச்சலுடன் தயாரித்த தயாரிப்பாளர் அருண்குமாரையும் பாராட்டுகிறேன். 

இந்தத் திரைப்படம் குடிகாரர்களை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் கவர்ச்சி இல்லை, ஓரளவு அறிமுகமான நடிகர்களை வைத்து இயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள். குடியினால் என்ன கொடுமை நடைபெறுகிறது என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள். 

நான் தமிழக முதல்வருடனும், திருமாவுடனும் நெருக்கமாகத் தான் இருக்கிறேன். ஆனால் இந்த மது விஷயத்தில் சற்று விலகியே இருக்கிறேன். குடி பல குடும்பங்களை கெடுத்திருக்கிறது. பல குடும்பங்கள் பலியாகி இருக்கிறது. அதனால் குடியை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதற்கு தடை விதிக்க வேண்டும். 

தற்போதுள்ள சூழலில் 20 முதல் 25 சதவீத பெண்களும் குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நாடு மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது.

அதனால் தமிழக முதல்வரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் ஒரு வழியில் மதுவை ஒழிக்க வேண்டும்.  

இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஆனால் என்னை பொருத்தவரை இந்த படத்திற்கு இத்தனை பாடல்கள் தேவை இல்லை. திரையரங்கத்தில் பாடல் காட்சிகளை ரசிகர்கள் விரும்பி பார்ப்பதில்லை. ஆனால் இந்த பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. கருத்துள்ள பாடல் இருக்கிறது, மது ஒழிப்பை பற்றி பேசுகிறது, மதுவால் தாய்மார்கள் படும் வேதனையை பேசுகிறது. இதனால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதை பெருமிதமாக கருதுகிறேன். இப்படம் வெற்றி பெற வேண்டும். படத்திற்கு முதலீடு செய்த பணம் தயாரிப்பாளருக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இதற்கு தமிழ் ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

முன்னணி நடிகர்கள் திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என தயாரிப்பாளர்களிடத்திலும் , இயக்குநர்களிடத்திலும் பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் ப. முருகசாமி பேசுகையில், ”இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் உதவியாளராக பணியாற்றும் போது தான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை பற்றி வாசித்தேன். அதன் மூலமாக பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு கூகை திரைப்பட இயக்கத்தில் இணைந்து கொண்டு திரைப்படக் கல்வியைக் கற்றேன். அதைவிட முக்கியமான அரசியல் கல்வியையும் கற்றேன். எளிய மக்களின் வாழ்வியலையும் அங்கு தான் கற்றுக் கொண்டேன். அதன் மூலமாகத்தான் நல்லதொரு படைப்பை உருவாக்க முடிந்தது. 

இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், உதவி இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

நான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், பெரியார் ஆகியோரை பார்க்கவில்லை. இந்த மூவரும் ஒன்றாக இருக்கும் எழுச்சித் தமிழர் தொல் திருமாவை பார்க்கிறேன். சிறிய வயதிலிருந்து அவருடைய போராட்டத்தையும், பேச்சையும் கேட்டு பார்த்து வளர்ந்தவன். பா ரஞ்சித்தைப் பார்த்தும் வளர்ந்திருக்கிறேன்,” என்றார். 

இசையமைப்பாளர் ஜூ ஸ்மித் பேசுகையில், ”முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி படிப்பை முடித்த பிறகு, நான் இசைத்துறையில் பயணிக்க விரும்புகிறேன் என்ற என் விருப்பத்தை தெரிவித்ததிலிருந்து இதுவரை எதையும் அவர்கள் கேட்டதில்லை.  இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளரான அருண்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர் ஒவ்வொரு முறை தொலைபேசி மூலம் பேசும்போது நலம் விசாரித்து நான் படம் தயாரித்தால் நீ தான் இசையமைப்பாளர் என உற்சாகப்படுத்துவார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தயாரிப்பாளரானதும் அழைப்பு விடுத்து இப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும் வழங்கினார். 

சினிமாவில் இருந்து தோல்வி அடைந்தவர்களை விட, சினிமாவை விட்டுவிட்டு சென்று தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். என்னை சினிமாவில் அழைத்து வந்தவர்கள் யாரும் தற்போது என்னுடன் இல்லை. அவர்கள் சினிமாவிலும் இல்லை. வேறு துறைக்கு சென்று விட்டார்கள். இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர் அருண்குமார் மட்டுமே எனக்கு நம்பிக்கை அளித்து வாய்ப்பளித்தார். 

இப்படத்திற்கு இசையமைக்கும் அனுபவம் வித்தியாசமாக இருந்தது. மறக்க முடியாததாகவும் இருந்தது. இயக்குநர் முருகசாமி, ‘குயிலி’ கமர்ஷியல் திரைப்படம் அல்ல,vகருத்து சொல்லும் படம். அதற்கேற்ற வகையில் இசையமைக்க வேண்டும் என சொன்னார். அதன் பிறகு நான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் அவருக்கு பிடித்தது. 

இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஐந்து பாடல்களும் மதுவை குடிக்காதே என்பதை சொல்லும் விதமாகத்தான் இருக்கும். இந்தப் படத்தின் பாடல்களை நான்கு புதுமுக பாடகர்கள் பாடி இருக்கிறார்கள்,” என்றார். 

இயக்குநர் ஸ்ரீஜர் பேசுகையில், ” சினிமாவும் அரசியலும் ஆண்டாண்டு காலமாக இணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்றன. சமீப காலமாக சினிமாவில் அரசியல் பேசு பொருளாக மாறி இருக்கிறது. 

‘குயிலி’ திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் , கலாச்சாரத்தையும் பேசும் என நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் குடிக்கு அடிமையானவர்களைப் பற்றி ஒரு பாடம் எடுத்திருக்கிறார்கள். தாய்ப்பாசத்தை மிக அழகாக சித்தரித்திருக்கிறார்கள். 

இந்த விழாவின் நாயகனான ஜூ ஸ்மித் பத்து ஆண்டுகளுக்கு முன் என்னால் அடையாளம் காணப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டவர். இந்தத் திரைப்படத்தில் நிறைய பாடல்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். இதுபோன்ற படங்களுக்கு இரண்டு பாடல்களே போதுமானது. பரபரப்பான இந்த வாழ்க்கை சூழலில் சினிமாவையே ஒன்றரை மணி நேரமாக சுருக்கி விட்டோம். இதுவே போதும் என்றும் நினைக்கிறோம். 

‘குயிலி’ திரைப்படம் நல்ல கலாச்சாரத்தையும், நல்ல பண்பாட்டையும் போதிக்கும் படமாக இருக்கிறது. வலியை பதிவு செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. படத்தின் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்”” என்றார். 

இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், ”எல்லோருக்குமான தலைவர் தொல் திருமாவளவன் வாழ்க்கை வரலாறு சுயசரிதை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன். யாரேனும் இதற்கு முயற்சி செய்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன். 

இப்படத்தின் இயக்குநர் முருகசாமி, ‘கல்லூரி’ படத்தில் இருந்து என்னிடம் உதவியாளராக இருக்கிறார். அவர் ஒரு குறும்படத்தை இயக்கி என்னிடம் காண்பித்து அதன் பிறகு உதவியாளராக சேர்ந்தார். இன்று வரை என்னுடன் பயணிக்கிறார். அவர் ஒரு நடிகரும் கூட, இந்தப் படத்திலும் நடித்திருப்பார் என நினைக்கிறேன். 

‘பொன்னியின் செல்வன்’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் நான் நடிக்கும் போது என்னுடன் வருகை தந்து அங்கு நடைபெறும் விஷயங்களை உள்வாங்கிக் கொள்வார். அதையெல்லாம் செய்த பிறகு தான் அவர் இந்த படத்தை உருவாக்கி இருப்பார் என நம்புகிறேன்.  

இயக்குநர் முருகசாமி மிக எளிமையான பின்புலம் கொண்டவர். மறைந்த நடிகர் மயில்சாமி உடன் இணைந்து ஏராளமான தொண்டுகளை செய்திருக்கிறார். எளிமையாக பழகக்கூடிய முருகசாமி இயக்குநராக உயர்ந்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் அருண்குமாரை மனதார பாராட்டுகிறேன். 

இந்தப் படத்தை எளிய மனிதர்களின் பார்வையில் இருந்து இயக்கியிருக்கிறார். அதில் வீரியம் இருக்கும். இதுதான் இப்படத்தின் பலம். இப்படத்தின் திரைக்கதையும் நன்றாக அமைத்து இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப் படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார். 

நடிகை லிசி ஆண்டனி பேசுகையில், ”சுய விருப்பம், கடின உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை ஆகிய நான்கு விஷயங்கள் மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருப்பவள். இதைத்தான் நான் என் வாழ்க்கையில் தற்போது வரை கடைப்பிடித்து வருகிறேன். இந்த விஷயங்களை தயாரிப்பாளர் அருண்குமாரிடமும் நான் பார்த்தேன். 

இந்தப் படத்திற்கான அழைப்பு அவரிடம் இருந்து தான் எனக்கு முதலில் வந்தது. அவரே இப்படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். என் வாழ்க்கையில் முதல் முதலாக தயாரிப்பாளர் ஒருவர் கதையை அழகாக சொன்னது என்றால் அது இவர் தான். அந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. இந்த திரைப்படம் பேசும் விஷயமும் எனக்கு பிடித்திருந்தது. 

இந்தப் படத்திற்கு ‘குயிலி’ என்று தான் தலைப்பு இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். உடனே அவரும் சரி என்று ஒப்புக்கொண்டார்.  

இந்தப் படம் வெற்றி பெறுவதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், ”சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதால் இங்கு இந்நிகழ்ச்சிக்கு வர தாமதமானது. இப்படத்தின் பாடல் ஒன்றை மேடையிலேயே கேட்டேன். படம் எதைப் பற்றி வலியுறுத்துகிறது என்பதனை அண்ணன் ராஜனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். 

இந்த கால சூழலில் சமூக பொறுப்புடன் மதுவிற்கு எதிராக ஒரு திரைப்படம் எடுக்கும் துணிச்சல் இயக்குநர் முருகசாமிக்கும், தயாரிப்பாளர் அருண்குமாருக்கும் இருப்பதை பாராட்டுகிறேன். நெஞ்சார வாழ்த்துகிறேன். 

வணிக நோக்கில் திரைப்படங்களை தயாரிக்க வேண்டும், அதில் வெற்றி பெற வேண்டும், அதில் லாபம் பெற வேண்டும் என்று எண்ணாமல் சமூகப் பொறுப்புணர்வோடு மக்களுக்கு வழி காட்ட வேண்டும், இந்த குடியின் துன்பத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும், விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கையுடன் இளைய தலைமுறையினர் இந்த படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்பதை விட பெருமை அளிக்கிறது. இந்த குழுவினரை பார்த்து பெருமிதம் கொள்கிறேன். அவர்களை ஆரத் தழுவி என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு ஒன்றினை நாங்கள் நடத்தினோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அது பேசு பொருளாகவும் மாறியது. கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது. 

அண்ணன் ராஜன் பேசும்போது, ‘தேசிய அளவில் மதுவை ஒழிக்க வேண்டும்’ என்றும் , இது தொடர்பாக திருமாவளவன் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அவர் பேசியிருக்க கூடும் என்றும் குறிப்பிட்டார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. நான் மக்களவையில் இது குறித்து பேசி இருக்கிறேன். அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வியப்பளிக்கிறது. 

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் பேசிய போது குறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இது தொடர்பாக அரசியல் ரீதியான விமர்சனத்தை முன் வைத்தார். நாம் அதை கடந்து சிந்திக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள நம் தேசத்து மக்கள் குடியினால் பாதிக்கப்படக்கூடாது என்ற பரந்துபட்ட பார்வை நமக்கு உண்டு. ஆகவே மது ஒழிப்பு கொள்கையை தேசிய கொள்கையாக இந்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நான் நீண்ட காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.  

மகாத்மா காந்தியை நாம் தேசிய தலைவராக ஏற்றுக் கொள்கிறோம். அவருடைய திருவுருவ படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்கிறோம். அவருடைய கொள்கைகளில் முக்கியமானது மதுவிலக்கு. மகாத்மாவை தேசத் தந்தை என்று ஏற்றுக் கொண்டிருக்கும் நாம் அவருடைய உயிர் மூச்சான கொள்கையான மதுவிலக்கை பொருட்படுத்துவதில்லையே? 

இதனை மாநிலங்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒன்றிய அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல ஏனைய மாநில அரசுகளும் இதனை தங்களுடைய வருவாய்க்கான வழியாகத்தான் பார்க்கிறது. யார் கெட்டுப் போனால் என்ன ? என்ற அலட்சியப்போக்குத்தான் நீடிக்கிறது. இது தொடர்பான கவலை பல பத்தாண்டுகளாக எனக்கு இருக்கிறது. இதை பல மேடைகளில் பேசி இருக்கிறேன். பல மாநாடுகளில் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம். 

இன்றைக்கு மது மட்டுமல்ல கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களும் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறன. நகர்ப்புறங்களில் மட்டுமே புழக்கத்தில் இருந்த போதைப் பொருள்கள்..தற்போது கிராமங்களிலும் ஊடுருவி இருக்கிறது.  இதற்காக ஒரு மாநாடு நடத்தி, அதில் இந்தியா முழுவதும் மது ஒழிப்பு தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசினை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். இது விமர்சனத்திற்கு உள்ளானது. அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்பட்டது. 

இந்தியா முழுவதும் மது ஒழிக்கப்பட வேண்டும் போதைப் பொருள்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமில்லை ஏராளமான இளைய தலைமுறையினரும் குடிப் பழக்கத்திற்கு ஆளாகி தங்களது வாழ்க்கையை பாழாக்கி கொள்கிறார்கள். குடும்பம் நடத்துவதற்கான ஆளுமையையே இழந்து விடுகிறார்கள். ஏதோ பெயரளவில் தாம்பத்திய உறவை கொண்டு, இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களை பராமரிக்கவும்… பாதுகாக்கவும்,.படிக்க வைக்கவும், எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கவும், பொறுப்புணர்வு கொண்ட ஆளுமையாக அவர்கள் இல்லை. நிற்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அதிகாலையில் இருந்து படுக்கைக்கு செல்லும் வரை போதையில் மிதக்கிறார்கள். அவ்வளவு குடும்ப பாரத்தையும் மனைவி சுமக்கிறாள். அது எவ்வளவு கொடிய துயரம் என்பதை களத்தில் நேரடியாக சென்று சந்தித்தால்தான் உணர முடியும். 

இந்த நாட்டை பீடித்திருக்கின்ற பேரவலங்களுள் இதுவும் ஒன்று. 

இந்தப் படத்தில் இடம்பெற்ற முதல் பாட்டை கேட்டேன். இந்த அவலங்களை எல்லாம் வரிகளாக ஆக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடல் நம் நெஞ்சை ஆழமாக தொடுகிறது. மிக மிக இன்றியமையாத ஒரு பாடல். எல்லா கிராமங்களிலும் கட்டாயமாக ஒலிக்க வேண்டிய பாடல். எல்லோரும் தங்களுடைய அலைபேசியில் வைத்திருக்க வேண்டிய பாடல். விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பாடல். இசையும் மிகச் சிறப்பாக இருக்கிறது. வேட்டவலம் த. ராமமூர்த்தி இப்பாடலை எழுதியிருக்கிறார். அவருக்கும் என் பாராட்டுக்கள்.

இந்த விஷயத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இதில் அரசியலை நுழைத்து மதிப்பீடு செய்ய வேண்டியதில்லை. 

தமிழக முதலமைச்சரிடத்தில் இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் பேசும் போது அவருக்கும் இது தொடர்பான கவலை இருக்கிறது.‌ ஆனால் இது ஒரு சமூக கட்டமைப்பு, சிஸ்டம். அரசு அரசு சார்ந்த கட்டமைப்புகள் சில தருணங்களில் நம்முடைய விருப்பங்களை மீறி இயங்கக் கூடியவையாக அமைந்து விடுகின்றன.‌ 

மக்களிடத்தில் பரந்துபட்ட அளவில் இதற்கான விழிப்புணர்வு தேவை. இன்று மதக் கலவரங்களும், வன்கொடுமைகளும் அதிகரிப்பதன் பின்னணியில் மதுவும் ஒரு காரணம் என்பதை நாம் காண முடிகிறது. 

‘குயிலி’ படத்தால் என்ன சாதிக்க முடியும் என்று கருதாமல் விழிப்புணர்வை இன்னும் விரிவுபடுத்திக் கொண்டே செல்ல வேண்டும். சில இளைஞர்களையாவது இத்தகைய பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். துயரத்திற்கு ஆளாகாமல் தடுக்க முடியும். இளம் தலைமுறையினரை பாதுகாக்க முடியும். 

மதுக்கடைகளை மூடும் வரை ஒவ்வொரு மருத்துவமனையிலும் போதை மறுவாழ்வு மையம் இடம்பெற வேண்டும், இது என்னுடைய கோரிக்கை. இதனை தமிழக முதலமைச்சரிடமும் தெரிவித்து இருக்கிறேன். அனைத்து மருத்துவமனைகளிலும் உளவியல் ஆலோசனை மையம் இடம்பெற வேண்டும். இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும்.  

மதுப்பழக்கம் ஒரு தனி மனிதனை மட்டும் பாதிப்பதில்லை. சமூகத்தையே பாதிக்கிறது.‌ எனவே மது மற்றும் போதைப்பொருள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பிறகு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்,’ என்றார். 

பாடலாசிரியர் வேட்டவலம் த. ராமமூர்த்தி பேசுகையில், ”நான் இந்தப் படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. 

மதுவால் ஏற்படும் பிரச்சனை என்ன என்பது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும்போது தான் பொருத்தமாக இருக்கும். ஒரு சில தருணங்களில் உண்மையை சொல்லலாம். அது அனைவருக்கும் பயன்படும்…

நானும் மது பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு இப்படத்தின் பாடல்களை எழுதி இருக்கிறேன். இதற்கு உறுதுணையாக என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர்…

மதுவை தொடாதீர்கள். தொட்டாலும் அதனை விட்டு விடுங்கள். அப்போதுதான் உங்களிடம் மகிழ்ச்சி இருக்கும்,” என்றார்.

“jinn the pet” திரை விமர்சனம்.

மலேசியாவில் உள்ள ஹோட்டலில் முகின் ராவ் தனது நண்பர்களோடு சேர்ந்து மியூசிக் குரூப்பில் பாடகராக இருந்து வருகிறார். முகின் ராவுக்கு மலேசியாவில் வேலை பார்ப்பதற்கு விசா முடிந்ததால் அங்கிருந்து தனது சொந்த ஊரான சென்னைக்கு வருகிறார்.சென்னைக்கு கிளம்பும் சமயத்தில் மலேசியாவில் உள்ள பழங்கால பொருட்கள் விற்கும் கடைக்கு செல்கிறார்பெட்டி ஒன்றை பார்க்கிறார்.அந்த பெட்டியில் ஜின் ஒன்றை அடைத்து வைத்திருப்பதாகவும் இது மனிதர்களைப் போலவே, ஆனால் அவர்களுக்குத் தெரியாத ஒரு வேறுபட்ட உலகத்திலிருந்து வந்தவை.நல்ல ஜின் எடுத்துக் கொண்ட முகேன் ராவ் அதை வாங்கிக் கொண்டு சென்னைக்கு திரும்பிக்கிறார்.

சென்னைக்கு வந்ததும்பவ்யா தரிகாவை சந்திக்கிறார் முகேன் ராவ் கதாநாயகி பவ்யா தரிகாவை காதலிக்க தொடங்குகிறார். இவர்களின் காதல் திருமணத்தில் முடிவடைகிறது.

முகேன் ராவ் மலேசியாவில் இருந்து எடுத்து வந்த ஜின்’னை, அவருடைய வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை.

இந்த வீட்டிற்கு ஜின் வந்ததில் இருந்து அபசகுணங்கள் நடந்து கொண்டே இருக்கிறது என வீட்டில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள்.வீட்டில் தனியாக இருக்கும் பவ்யா தரிகா தலையில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கிறார்.

பவ்யா தரிகாவின் இந்த நிலைக்குக் காரணம், இந்த ஜின் தான் என்று வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கூற, கோபத்தில் ஜின்’ஐ தூக்கி வெளியே வீசி விடுகிறார்.

அதன்பிறகு, முகேன் ராவின் வாழ்க்கையில் என்ன நடந்தது.? என்பதுதான் ஜின் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஜீன் திரைப்படத்தில் கதாநாயகனாக முகேன் ராவ் நடித்திருக்கிறார்???????????????????

இந்த ஜீன் திரைப்படத்தில் கதாநாயகியாக பவ்யா தரிகா அழகாகவும் அளவாகவும் நடித்து வரும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

பால சரவணனின் காமெடி??????????????????????

ராதாரவி, இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, வினோதினி வைத்தியநாதன் என அனைத்து சீனியர் நடிகர்களும் தங்களது நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் விவேக் மெர்வின்

அடுத்த காட்சி இதுதான் என எளிதாக திரைப்படத்தின் கதையை யூகிக்கும் வண்ணம் எழுதியிருப்பது திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துள்ளது.

திரைப்படத்தின் ஆரம்பத்தில் ஒரு பெண்ணின் உடம்பிற்குள் இருக்கும் ஜின்’னை வெளியேற்றும் காட்சிகள் மிரள வைத்தது போல மற்றும் எந்த காட்சிகள் திரைப்படத்தில் மிரள வைக்கவில்லை.

வ. கெளதமன் இயக்கி நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’

மாவீரன் “காடுவெட்டி” குரு அவர்களின் வாழ்க்கை வரலாறுதான் படையாண்ட மாவீரா – இயக்குநர் வ.கௌதமன் பிரகடனம்.

நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் வி.கே. புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன், மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுத, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொகுப்பை கவனிக்க, நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் சண்டைப் பயிற்சியை ஸ்டண்ட் சில்வாவும் கையாண்டுள்ளனர். ‘படையாண்ட மாவீரா’ இசை வெளியீட்டு விழா முக்கிய அம்சங்கள் வருமாறு:

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் தயாரிப்பாளர் எம்.ஜே.எஃப். லயன் பி.ஆர்.எஸ். சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றன‌ர். ‘பிக் பாஸ்’ புகழ் முத்துக்குமரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார். தயாரிப்பாளர்கள் கே. பாஸ்கர், E. குறளமுதன், U.M. உமாதேவன், நடன இயக்குநர்கள் தினேஷ் மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர், ஐநா கண்ணன் உள்ளிட்டோர் படக்குழுவினரை வாழ்த்தி பேசினர்.

நடிகர் இளவரசு பேசுகையில், “தமிழகத்திற்கு அறிமுகமான ஒரு மனிதனின் கதை இது. கதையை முன்னெடுத்து செல்லும் கதாபாத்திரம் ஒன்றில் நான் இப்படத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் கெளதமன் எனக்கு சுமார் 25 ஆண்டுகளாக பழக்கம். இந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பாக அவர் உருவாக்கியுள்ளர்,” என்றார்.

இயக்குநர் வி.சேகர் பேசுகையில், “இப்படம் ஒரு கூட்டு முயற்சி என்று அறிகிறேன். என்னுடைய ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ உள்ளிட்டவையும் ஒற்றுமையை தான் வலியுறுத்தின. அத்தகைய ஒற்றுமை தான் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பலம். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.”

வழக்கறிஞர் கே. பாலு பேசுகையில், “கெளதமன் ஒரு படம் எடுக்கிறார் என்று சொன்னால் அதில் உணர்வு இருக்கும், உயிர் இருக்கும் என்று பொருள். அவரது ‘சந்தனக்காடு’ தொடர் மிகுந்த வரவேற்பு பெற்றது. படையாண்ட மாவீரா என்று சொல்லும் போதே உள்ளத்தில் வீரம் கொப்பளிக்கிறது. வீரத்தின் எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஒரு மனிதனை பற்றிய படம் இது என்பது மிகவும் பெருமையான விஷயம். இப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

கார்ட்டூனிஸ்ட் பாலா பேசுகையில், “அண்ணன் கெளதமன் பற்றி சொல்ல ஏராளம் உண்டு. எப்போதும் உணர்ச்சிப்பிழம்பாக இருக்கக்கூடியவர் அவர். மிகச்சிறந்த திரைக்கலைஞரான அவரது ‘படையாண்ட மாவீரா’ படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், “கெளதமன் என்னுடைய நல்ல நண்பர். அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம். ‘படையாண்ட மாவீரா’ படம் மிகவும் பிரம்மாண்டமாக வந்துள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் செயல்கள் சாதாரண மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக, அழுத்தம் திருத்தமாக இப்படம் பேசுகிறது. கெளதமனின் மகன் தமிழ் கெளதமன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். விரைவில் பெரிய நாயகனாக அவர் வருவார்,” என்றார்.

சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா பேசுகையில், “இயக்குநர் கெளதமன் மனிதநேயம் மிக்கவர், துன்பத்தில் தோள் கொடுப்பவர். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிகவும் அருமையாக வந்துள்ளன. அவரது போராட்ட குணம் அவற்றில் வெளிப்பட்டுள்ளது. படம் வெற்றியடைய அனைவரின் ஆதரவையும் கோருகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் மணிவண்ணன் பேசுகையில், “படத்தின் சில காட்சிகளை பார்த்தேன், சிறப்பாக இருந்தன. குறிப்பாக புலிப்பாடல் மிகவும் எழுச்சியாக உள்ளது. இப்படம் வெற்றி பெறும் என நான் மிகவும் நம்புகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் பேசுகையில், “தமிழையும் தமிழ்நாட்டையும், தமிழ் சினிமாவையும் நம்பி வந்த யாரும் கெடுவதில்லை. இப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். தம்பி கெளதமன் சிறந்த மனிதர், சிறந்த படைப்பாளி. ‘சந்தனக்காடு’ தொலைக்காட்சி தொடரையே திரைப்படம் போல எடுத்தவர், ‘படையாண்ட மாவீரா’ பிரம்மாண்டத்தின் உச்சம், ‘புஷ்பா’ படம் போல இது இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெறும்,” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “நல்ல கருத்துகளை தமிழன் கேட்டு தூங்கிவிடக்கூடாது, மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும். தமிழ் மற்றும் தமிழனுக்காக குரல் கொடுப்பவர் இயக்குநர் கெளதமன். அவரது ‘படையாண்ட மாவீரா’ வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் பேசுகையில், “அண்ணன் கெளதமனுக்கும் எனக்கும் நீண்ட நெடிய பழக்கம். இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் சொல்லும் போதே இதை எப்படியாவது உருவாக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தோம். இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும்,” என்றார்.

நீதிபதி கலையரசன் பேசுகையில், “அருமையான வெற்றிப்படத்தை வழங்கியுள்ள கெளதமன் அவர்களை வாழ்த்துகிறேன். அறம் சார்ந்து இப்படத்தை அவர் எடுத்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு பல தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து ‘படையாண்ட மாவீரா’ படத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த திரைப்படம் வெற்றி பெற கடவுளை வேண்டிக்கொண்டு வாழ்த்துகிறேன்,” என்றார்.

‘படையாண்ட மாவீரா’ படத்தின் இயக்குநரும் நாயகனுமான வ. கெளதமன் பேசுகையில், “இந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பது போலவே மற்றொருபுறம் எனது திரைத்துறையையும் நான் நேசிக்கிறேன். இது நான் இயக்கி நடித்திருக்கிற படைப்பு. உண்மையில் ஒரு படைப்பாளியின் படைப்பு தான் பேச வேண்டுமே தவிர அவன் பேசக்கூடாது என நான் நினைப்பேன். ஆனாலும் இந்த படத்தை பற்றி நான் பேசவேண்டியுள்ளது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்த படத்தை உருவாக்க முன்வந்தார்கள். திரைத்துறையின் நான் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் என விரும்பினார்கள். மக்களுக்கான கதையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். இவற்றின் விளைவு தான் ‘படையாண்ட மாவீரா’.

இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து இணைந்து மிகச் சிறந்த பாடல்களை வழங்கியுள்ளார்கள் புலிக்கொடி பாடல் உணர்வுப்பூர்வமாகவும், ஜிவி பிரகாஷும் மது ஸ்ரீயும் பாடிய பட்டாம்பூச்சி பாடல் அழகுணர்ச்சியுடனும் அமைந்துள்ளன. சாம் சி. எஸ். சிறப்பான பின்னணி இசையை தந்துள்ளார்.

இப்படத்தின் முன்னோட்டம், பாடல்கள் மிகுந்த சிலிர்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக அனைவரும் கூறினீர்கள், மிக்க நன்றி. முழுப்படத்தையும் பார்த்ததும் உங்கள் உள்ளங்களில் பேரதிர்வை அது ஏற்படுத்தும், அது உறுதி.

எத்தனையோ படங்களுக்காகவும் எத்தனையோ பிரச்சினைகளுக்காகவும் நான் குரல் கொடுத்த போதெல்லாம் அமைதியாக எனக்கு எந்த சாயமும் பூசாமல் இருந்தவர்கள் காடுவெட்டி குரு அவர்கள் பற்றியும் ஒரு சமுதாயத்தை பற்றியும் தவறாக திரைப்படத்தில் காட்டிய போது அதற்கு எதிராக நான் நியாயமான கேள்விகளை எழுப்பியவுடன் என் மீது சாதி சாயம் பூசினார்கள். அந்த சமயத்தில் கௌதமன் கேட்டதில் என்ன தவறு என்று எனக்குத் தெரிந்த ஒரு ஊடக நண்பர், அப்படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது நான் தான் தாதா போன்று ரவுடி போன்று காட்டிவிட்டேன், வேண்டுமானால் ‘சந்தனக்காடு’ எடுத்தது போன்று குரு அவர்களை வாழ்க்கையை பற்றியும் கௌதமன் ஒரு படம் எடுக்கட்டுமே என்று கூறியுள்ளார். அந்த சவாலை ஏற்று தான் இந்த படமே தொடங்கியது.

இது தனி சாதி படமல்ல, தமிழ் சாதி படமாக இருக்கும். சாதி, மதம் கடந்து மனிதனாக இருப்பவர்கள் யார் பார்த்தாலும் அரங்கம் மட்டுமல்ல அவர்கள் ஆன்மாவும் அதிரும், அறம் சார்ந்த ஒரு மாவீரனை அவர்கள் தரிசிப்பார்கள்.

என்னுடைய வாழ்நாள் லட்சியமே மூன்று காடுகள் பற்றிய படங்கள் எடுப்பது தான். ஒன்று வீரப்பன் வாழ்ந்த சந்தனக்காடு, அதை நிறைவேற்றி விட்டேன். இரண்டாவது காடுவெட்டி குரு அவர்களும் தோழர் தமிழரசன் அவர்களும் வாழ்ந்த முந்திரிக்காடு, இதில் ஒருவரை பற்றி தற்போது படம் எடுத்துள்ளேன். மூன்றாவது என்னுடைய தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எனது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வன்னிக்காடு. லட்சிபப் பாதையில் உள்ள இரண்டு படங்களை முடித்துள்ளது போல் இன்னும் இருக்கும் இரண்டு படங்களையும் கட்டாயம் எடுப்பேன். தமிழ் இனத்தின் தலைநிமிர்விற்காக நான் இதை செய்யாமல் சாய மாட்டேன், அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி,” என்றார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “தம்பி கெளதமன் மிகுந்த‌ உரிமையாக அழைத்ததால் வெளியூரில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன், அதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிக்கவும்.

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் மாவீரன் பிரபாகரன் என்று பேசியவர் அண்ணன் திரு காடுவெட்டி குரு அவர்கள். ஒரு மாபெரும் சமூகமே மாவீரன் என்று வணங்கிக் கொண்டிருக்கும் குரு அவர்களே அண்ணன் பிரபாகரனை மாவீரன் என்று சொன்னது நாம் ஒரே ரத்தம் ஒரே மரபணு என்பதை காட்டுகிறது. அப்படிப்பட்ட காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கையை தான் தம்பி கௌதமன் அவர்கள் ‘படையாண்ட மாவீரா’ என்று வீரமும் அறமும் சுமந்த படைப்பாக எடுத்துள்ளார்.

கெளதமனின் படைப்பாற்றலை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். ‘சந்தனக்காடு’, ‘மகிழ்ச்சி’ அவர் திறமைக்கான சான்றுகள். அவரின் அடுத்த படைப்பான‌ ‘படையாண்ட மாவீரா’ மிகவும் அருமையாக வந்துள்ளது. இதை திரைப்படமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. மிகுந்த உழைப்பு, சிரமத்திற்கு பிறகு இப்படம் உருவாகியுள்ளது. முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்த்தேன், மிகச்சிறப்பு, படத்தை பார்க்க தூண்டுகின்றன. ‘படையாண்ட மாவீரா’ மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,” என்றார்.

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பை கையாள, கலை இயக்கத்திற்கு ஆனந்த் மணி பொறுப்பேற்க, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘அக்யூஸ்ட்’ இசை வெளியீட்டு விழாவில் திரையுலக முன்னணியினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், “அக்யூஸ்ட் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்திருக்கும் திரையுலக முன்னணியினர், ஊடக நண்பர்கள், மற்றும் படக்குழுவினரை வரவேற்கிறேன். இந்த படம் நல்லபடியாக நிறைவடைந்ததற்கும் இன்றைய நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுவதற்கும் உதயா தான் முக்கிய காரணம். திரைப்படம் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி,” என்றார்.

தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார் பேசுகையில், “உதயாவின் தந்தை ஏ.எல். அழகப்பன் அவர்களும் நானும் நீண்டகால நண்பர்கள். எனவே உதயாவை எனக்கு சிறுவயது முதலே தெரியும். திரையுலகில் நீண்ட காலமாக போராடி வருகிறார். ‘அக்யூஸ்ட்’ காட்சிகள் பார்த்தேன், உதயாவின் திறமை பளிச்சிடுகிறது. பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. இப்படம் உதயாவின் திரையுலகப் பயணத்தில் திருப்புமுனையாக திகழும். படக்குழிவினருக்கு வாழ்த்துகள்,” என்றார்.

‘அக்யூஸ்ட்’ படத்தில் நடித்துள்ள பவன், பிரபாகர், ஓ மரியா புகழ் டானி, சுபத்ரா, தீபா பாஸ்கர் ஆகியோர் பேசுகையில் இப்படத்தில் பங்காற்றியதற்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, அனைவரின் ஒத்துழைப்போடு ‘அக்யூஸ்ட்’ மிகவும் சிறப்பாக உருவாகியிருப்பதாக கூறினர். படக்குழுவினர் அனைவரும் ஒரு குடும்பம் போல பழகியதாக அவர்கள் தெரிவித்தனர்.

‘அக்யூஸ்ட்’ படத்தின் இயக்குநர் பிரபு ஶ்ரீநிவாஸ் பேசுகையில், “திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவான்கள் இங்கு இருக்கிறீர்கள், அனைவருக்கும் மிக்க நன்றி. நான் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை உதயாவிடம் கொடுத்த சிறிது நேரத்திலேயே அவர் அதை முழுவதும் படித்து ஓகே சொன்னதோடு, அவரது வேறு சில படங்களையும் இதற்காக தள்ளி வைத்தார். அதற்காக அவருக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை தந்தனர்.

படம் தொடங்கிய முதல் நாளிலிருந்து படப்பிடிப்பு நிறைவடையும் வரை உதயா தந்த ஒத்துழைப்பு அலாதியானது. அவர் மற்றும் அனைத்து குழுவினரின் ஒத்துழைப்போடு பிரேக்கே இல்லாமல் தொடர் படப்பிடிப்பை நடத்தினோம். இப்படத்தில் இடம்பெறும் பஸ் சண்டைக்காட்சி மிகவும் பேசப்படும். ஒட்டுமொத்த படமும் ரசிகர்களை கவரும், நன்றி,” என்றார். அவரைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் மருதநாயகம்.ஐ மற்றும் கலை இயக்குநர் ஆனந்த் மணி பேசுகையில் படம் சிறப்பாக வந்திருப்பதாக கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் பேசுகையில், “என் குழுவில் பணியாற்றிய அனைத்து இசை மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கும் மிக்க நன்றி. இங்கு வந்துள்ள அனைவரும் பாடலை பாராட்டினார்கள். அதற்கு முக்கிய காரணம் எனது குழுவினர் தான். ‘அக்யூஸ்ட்’ படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்தோம். எனவே உங்கள் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தயாரிப்பாளர்கள் மிகவும் எளிமையானவர்கள், இயக்குநர் நட்பானவர், உதயா மிகவும் இனியவர். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி, வணக்கம்,” என்றார்.

வீடியோ அழைப்பில் பேசிய நடிகர் யோகி பாபு, “வேறொரு இடத்தில் இரவு படப்பிடிப்பில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த படத்தில் நான் பணியாற்றியது சிறப்பான அனுபவம். வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. படம் வெற்றி பெற வேண்டும் என்று ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

பாடலாசிரியர் பத்மஜா ஸ்ரீராம் பேசுகையில், “இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் மிகுந்த சுதந்திரம் அளிப்பார். இப்படத்தில் பணியாற்றியது ஒரு மிக நல்ல அனுபவம். குழுவினர் அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள், கடவுளுக்கு நன்றி,” என்றார்.

பாடலாசிரியர் ஹைட் கார்த்தி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். நரேன் பாலகுமாரும் நானும் நீண்ட நாளாக ஒன்றாக பணியாற்றி வருகிறோம். இப்படத்தில் சுடச்சுட பிரியாணி என்ற பாடலை நான் எழுதியுள்ளேன், அதற்கு கிடைத்து வரும் வரவேற்புக்கு நன்றி. இந்த பாடலுக்கு நான் நடனமும் ஆடியுள்ளேன். டிரெய்லர் பார்க்கும் போதே ‘அக்யூஸ்ட்’ பெரிய ஹிட் ஆகும் என்று தோன்றுகிறது. பத்திரிகையாளர்கள் ஆதரவளிக்க வேண்டும்,” என்றார்.

அடுத்ததாக, தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழு உறுப்பினர் அழகன் தமிழ்மணி, செந்தாமரை கண்ணன், ஜெயசீலன், ஜி.எஸ். முரளி, ராமச்சந்திரன், அன்பு, சுரேஷ், சாலை சகாதேவன், சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் மங்கை அரிராஜன் உள்ளிட்டோர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சண்டைக் காட்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா பேசுகையில், “உதயா அவர்களின் குடும்பத்தில் ஒருவன் நான். அவர், அவரது தந்தை ஏ.எல். அழகப்பன் சார், சகோதரர் விஜய் ஆகியோர் எனக்கு மிகவும் நெருக்கம். உதயா சாரின் விடாமுயற்சி எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் அனைத்தும் அருமையாக வந்துள்ளது. படமும் நன்றாக வந்துள்ளது. எனவே, ‘அக்யூஸ்ட்’ மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை,” என்றார்.

நடிகை ஜான்விகா பேசுகையில், “என்னை நம்பி எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் உதயா சாருக்கு நன்றி. சிறப்பான பாடல்களை தந்துள்ள இசையமைப்பாளருக்கு நன்றி. திறமைகளுக்கு தவறாமல் ஆதரவளிக்கும் தமிழ் ரசிகர்கள் எனக்கும் ஆதரவளிப்பாளர்கள் என்று நம்புகிறேன். ‘அக்யூஸ்ட்’ படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி. இந்த வாய்ப்புக்கு நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன். தமிழ் கற்றுக் கொண்டு வருகிறேன், விரைவில் முழுவதும் தமிழில் பேசுவேன்,” என்றார்.

நடிகர் அஜ்மல் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் உதயாவுக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி திரையில் தெரியும். அவரை பார்த்து நிறைய கற்றுக்கொள்ளலாம். படத்தை சிறப்பாக உருவாக்கிய இயக்குநர் பிரபுவுக்கு நன்றி. நல்ல கன்டென்ட் உள்ள படம் இது. கட்டாயம் ஜெயிக்கும்,” என்றார்.

இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன் பேசுகையில், “கஷ்டப்பட்ட அனைவரும் வெற்றி பெற்றதில்லை, ஆனால் வெற்றி பெற்ற அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தவர்களே. உண்மையாக, நேர்மையாக கஷ்டப்பட்டால் நிச்சயம் வெல்லலாம், அப்படிப்பட்ட குழு இது, அனைவரும் மிகவும் திறமையானவர்கள். இவர்கள் வெற்றியடைந்தால் சினிமா மேலும் வெற்றி பெறும். ‘அக்யூஸ்ட்’ வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகர் ஆனந்த்பாபு பேசுகையில், “எல்லோருக்கும் வணக்கம். உதயா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். ஏ.எல். அழகப்பன் எனது தந்தையை போன்றவர். உதயாவின் 25வது ஆண்டு படமான ‘அக்யூஸ்ட்’ வெற்றி விழா கொண்டாடும், நன்றி,” என்றார்.

பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், “அக்யூஸ்ட் படவிழாவின் அழைப்பிதழே அருமை, உதயாவின் உழைப்பு அதிலேயே தெரிகிறது. அவருக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது. அனைவரும் ஒற்றுமையாக இங்கு இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் உதயா மீதும் அவரது தந்தையார் மீதும் நாம் வைத்துள்ள அன்பு தான். உதயாவை எந்த அவமானமும் பாதிக்காது, சிரித்த முகத்துடன் இருப்பார். விக்ரமுக்கு ‘சேது’ போல உதயாவுக்கு ‘அக்யூஸ்ட்’ அமையும். டிரெய்லர் மிரட்டுகிறது, மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. படம் மிகப்பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி பேசுகையில், “இந்தப் படம் எப்படி தொடங்கியது, எப்படி உருவானது என்பது எனக்கு தெரியும். இவ்வளவு கஷ்டப்பட்டு இதை கட்டமைத்த சகோதரர் உதயாவுக்கு பாராட்டுகள். செல்வமணி சார் சொன்னது போல உதயாவுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது, இதை அவர் பிடித்துக்கொள்ள வேண்டும். திறமையான குழு இப்படத்திற்காக இணைந்துள்ளது, டிரெய்லரும் பாடல்களும் அருமை. படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் பேசுகையில், “எனது மகன்களின் முயற்சிகளுக்கு நான் ஆதரவாக நின்றாலும், அவர்களின் முடிவுகளில் நான் தலையிட மாட்டேன். உதயா அவரது உழைப்பு மூலம் சொக்கத்தங்கமாக ஜொலிக்கிறார். அவரது தாயார் இன்று இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார், அதே மகிழ்ச்சி எனக்கும் இருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், நன்றி,” என்றார்.

நடிகர் உதயா பேசுகையில், “எனது தாயார் கடவுளாக இருந்து என்னை வழிநடத்துகிறார். என்னை அவர் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார், ஆசீர்வதித்துக் கொண்டே தான் இருக்கிறார். திரையுலகத்தை விட்டே போய் விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன், ஆனால் எனது தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். எனவே அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

‘அக்யூஸ்ட்’ படம் எனது மிக முக்கிய படம். எனது 25வது ஆண்டில் இப்படி ஒரு படம் கிடைத்திருப்பது எனது பாக்கியம். இந்த படத்திற்காக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி. இயக்குநர் அற்புதமாக ‘அக்யூஸ்ட்’ படத்தை உருவாக்கியிருக்கிறார், அவருக்கு நன்றி. மிகச்சிறந்த இயக்குநர் அவர். நரேன் பாலகுமார் இசை அருமை. உடன் நடித்தவர்களுக்கும், பணியாற்றிய அனைவருக்கும் மிகுந்த நன்றி. இவர்கள் அனைவரும் எனது குடும்ப உறுப்பினர்கள் மாதிரி தான். எங்கள் அனைவரின் உழைப்பில் சிறப்பாக உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ படம் வெற்றி பெறும் என மனமார நம்புகிறேன். உங்கள் அனைவரின் வாழ்த்தையும், ஆதரவையும் கோருகிறேன்,” என்றார்.

கத்தார் அரசு விருதை வென்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் !!


வரலாற்றை திருப்பி எழுதும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன்! தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக உருவெடுத்த அவர், தற்போது கத்தார் அரசு விருதை வென்று சாதனை படைத்துள்ளார். !!

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஒரு பெயர் – அல்லு அர்ஜூன். அவரின் புகழ் காட்டுத்தீப்போல எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமான அவர், தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக வரலாற்றில் இடம்பிடித்தார்.

இப்போது, அல்லு அர்ஜூன், கத்தார் தெலுங்கானா திரைப்பட விருது வென்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். கத்தார் அரசால் வழங்கப்படும் இவ்விருது, தெலுங்கு சினிமாவின் சிறப்பை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது. அல்லு அர்ஜூன் புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்துக்காக சிறந்த நடிகராக இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புஷ்பா 2 திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.1900 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, திரையுலக வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. இது, அல்லு அர்ஜூனின் தனிச்சிறப்பான திரைப்பயணத்தில், இன்னொரு மைல்கல்லாக அமைந்தது.

தெலுங்கு பேசும் மாநிலங்களில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும், அவரின் நடசத்திர கவர்ச்சி, தனித்திறமை மற்றும் விடாமுயற்சி ரசிகர்களை ஈர்த்துவந்திருக்கிறது. கங்கோத்திரியில் தொடங்கி புஷ்பா வரை அவர் கட்டியுள்ள பயணம், முழுமையாக அவர் தன் இரத்தமும், வியர்வையும் செலுத்தி எழுதிய வரலாறாகும்.

ஐந்து ஃபிலிம் ஃபேர் விருதுகள், இரண்டு நந்தி விருதுகள் மற்றும் ஸ்பெஷல் ஜுரி விருது, விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ள அவர், இந்திய திரையுலகின் உண்மையான ‘ஐகான்’ ஆக விளங்குகிறார்.

இப்போது, தேசிய நட்சத்திரமாக மாறியுள்ள அல்லு அர்ஜூன் தனது அடுத்த திரைப்படமான AA22xA6 மூலம் மீண்டும் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தவிருக்கிறார். இந்த படத்தை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் டைரக்டர் அட்லீ இயக்க உள்ளார். தற்போது முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லு அர்ஜூனின் திரை வருகைக்காக உலகமே காத்திருக்கிறது.