• State-of-the-art campus at Keppel One Paramount to host 5,000 employees across key operations; Facility will serve as a center for innovation and collaboration
Chennai, May 19, 2025
Guidehouse, a global advisory, technology, and managed services firm serving the commercial and public sectors,has opened a new 250,000 sq. ft. facility at Keppel One Paramount in Porur, Chennai. The new campus, designed for innovation and efficiency, reflects the firm’s continued investment in India’s skilled talent pool.
“This is Guidehouse’s largest global office, built to our peoples’ and projects’ needs,” said Scott McIntyre, CEO of Guidehouse. “We are excited about the opportunities and expertise our expanded footprint in Chennai will bring, further strengthening our global operations and supporting our long-term growth strategy.”
Designed to accommodate up to 5,000 employees across two shifts, the facility will support Guidehouse’s global operations in healthcare, financial services, technology, and corporate support functions. The inauguration marks a significant milestone in the firm’s expansion journey in Chennai, one of Guidehouse’s key global delivery centers.
Strategically located and spread across nine acres, the LEED Platinum-certified facility offers premium workspace and lifestyle amenities, including flexible workstations, wellness zones, green landscapes, and robust F&B options.
“This expansion represents a major step forward in Guidehouse’s continued growth in Chennai, a vital hub in our global managed services delivery network,” said Mahendra Rawat, Partner and Country Head ofGuidehouse India. “This state-of-the-art facility, which will serve as a center for innovation and collaboration,reinforces our commitment to building a future-ready, people-first organization.”
Guidehouse is also partnering with local NGOs to support school infrastructure and environmental projects, as part of its commitment to sustainable, inclusive development in India.
Founded in 2018, Guidehouse has achieved five-fold growth to over $3 billion and expansion into additional markets with more than 18,000 employees in over 50 locations around the world. Named to the 2024 Inc. 5000 list of the fastest-growing private companies in America, Guidehouse continues to build on its agility, capabilities, and scale with its integrated commercial and public sector business units and AI-led solutions.
பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘. கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது.
திரையரங்குகளை திருவிழாக்கோலமாக்கியுள்ள இப்படத்தின் வெற்றி விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்….
குழந்தை நட்சத்திரம் கமலேஷ் பேசியதாவது… எல்லாருக்கும் வணக்கம். எப்படி சொல்றதுன்னு தெரியவில்லை, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த படத்துக்கு வாய்ப்பு கொடுத்த அபி அண்ணாக்கு ரொம்ப நன்றி. அதுக்கப்புறம் ப்ரொடியூசர்ஸ் யுவராஜ் அண்ணாவிற்கு நன்றி. சசிகுமார் அங்கிள், என்னிடம் ரொம்ப பாசமா இருந்தார், ரொம்ப சந்தோஷம். நன்றி அங்கிள். அப்பறம் சிம்ரன் மேம், உங்க கூட நடித்தது ரொம்ப சந்தோஷம் மேம், அதுக்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி
நடிகர் பகவதி பெருமாள் பேசியதாவது… இந்த மாதிரி ஒரு சக்சஸ் மீட் நீங்கள் நிறைய பார்த்திருப்பீர்கள், நானும் அவ்வபோது பார்த்திருக்கேன். ஆனால் இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இயற்கைக்கு நன்றி. இந்தப் படம் பண்ணும் பொழுதே அந்த பிளஸ்சிங் இருந்துட்டே இருந்தது. இந்தப்படத்தை அவ்வளவு அழகா ஆடியன்ஸ் கிட்ட கொண்டு போன பத்திரிக்கையாளர்களுக்கு ரொம்ப நன்றி. எல்லோருக்கும் நன்றி.
நடிகை சௌந்தர்யா பேசியதாவது… என் சந்தோசத்தை சொல்ல அளவே கிடையாது. எனது 8 வருட திரைப்பயணத்தில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இப்படிப்பட்ட வெற்றி மேடையில் முதல் முறையாக பேசுகிறேன். முதல் நன்றி அபிக்கு. வேறு யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் அவர் தான் நான் வேண்டும் என, என்னை காஸ்ட் செய்தார். தயாரிப்பாளர்களுக்கு நன்றி. சசிகுமார் சாருடன் நடித்தது மகிழ்ச்சி. சிம்ரன் மாதிரி ஒருவரை பார்த்ததே இல்லை. அவர் அவ்வளவு ஃபிரண்ட்லி. அவருடன் மீண்டும் நடிக்க ஆசை. என் கேரக்டரை தனியாக குறிப்பிட்டு பாராட்டிய, அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. இனிமேல் வரும் காலத்தில் உங்களை மகிழ்விக்கும் பாத்திரங்களை ஏற்று நடிப்பேன் நன்றி.
பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசியதாவது… இந்தப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. நீங்கள் தந்த பாராட்டுக்களுக்கு நன்றி. சசிக்குமார் சார் இது உங்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸ். அயோத்தி படத்திலிருந்து உங்கள் வெற்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய பிரம்மாண்ட வெற்றிப்படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. என் ஆரம்ப காலகட்டத்தில் நீங்கள் தந்த, ஜில்லா விட்டு ஜில்லா பாடல் தான் என் திரை வாழ்க்கையை நிலை நிறுத்தியது. அதற்காக நன்றி. குட் நைட் படத்திற்கு பிறகு தான், என் வெற்றிப்பயணம் துவங்கியது. கடந்த வருடம் லப்பர் பந்து எனக்கும் ஷான் ரோல்டன் அவர்களுக்கும் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இப்படி ஒரு படம் மில்லியன் டாலர் நிறுவனத்திற்கு அமைய வேண்டும் என ஆசைப்பட்டோம் அது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடந்துள்ளது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.
திங் மியூசிக் சார்பில் சந்தோஷ் பேசியதாவது.., பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் நீங்கள் தான். மில்லியன் டாலர் யுவாராஜுக்கு வாழ்த்துக்கள். யுவராஜ் ஒரு திரைக்கதையை தேர்ந்தெடுக்கிறார் என்றால் அது கச்சிதமாக இருக்கும். ஒவ்வொரு படைப்பிலும் அவர் அவ்வளவு உழைக்கிறார். அவருடன் அனைத்து படத்திலும் திங் மியூசிக் இணைந்திருப்பது மகிழ்ச்சி. யுவராஜுடன் இணைந்து இருக்கும் மகேஷுக்கும் நன்றி. ஷான் ரோல்டன் முதல் படமாக எந்தப்படம் செய்கிறார் எனத் தெரியாமலே அவரது மூன்று படத்தை ஒப்பந்தம் செய்தோம், அப்போது இருந்து அவருடன் பணிபுரிகிறோம். அவருக்கு வாழ்த்துக்கள். பாடலாசிரியர் மோகன்ராஜுக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் அபி கதை சொன்னவுடனே இது வெற்றி பெறும் என தெரியும். இப்போது எல்லோரும் கொண்டாடுகிறார்கள் வாழ்த்துக்கள். சசிகுமார் சாரை, இப்படத்திற்காக அபி சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது சுப்பிரமணியபுரம் படத்திலிருந்து அவரைத் தெரியும். இந்தப்படத்திற்கு சசி சார் பெருமை சேர்த்துள்ளார். மொத்தப்படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள் நன்றி.
எடிட்டர் பரத் விக்ரமன் பேசியதாவது.., இந்தப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. நான் மிக சந்தோசமாக இருக்கிறேன். படம் ரிலீஸாகி ஒரு வாரத்தில் என் அம்மா என்னிடம் ஈவ்னிங் ஷோ டிக்கெட் கேட்டார்கள் ஆனால் மறுநாள் வரை ஷோ ஃபுல்லாக இருந்தது. என் சந்தோசத்துக்கு அளவே இல்லை. அபி இன்னும் பல உயரம் செல்வாய். எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது…, ஒரு நல்ல படத்தை ரசிக்கிற வகையில் செய்துவிட்டால், மீடியா எப்படியாவது மக்களிடம் கொண்டு சேர்த்து விடுவார்கள். அதை செய்து காட்டிய பத்திரிக்கைக்கு நன்றி. என் அஸிஸ்டெண்ட் சபரி, அஸ்வின் மற்றும் என் டீம் அனைவருக்கும் நன்றி. எல்லாப்படங்களுக்கும் ஒரே மாதிரி தான் உழைப்போம் ஆனால் சில படம் நமக்கு ரொம்ப பிடித்து விடும். யுவராஜ் பிரதர் நீங்கள் ஜெயிக்க வேண்டும், நீங்கள் நினைத்ததை விட அதிகம் நான் ஆசைப்பட்டேன், தமிழ் சினிமா மரத்தில் ஒரு புது கிளை ஆலமரமாக முளைத்து கொண்டிருக்கிறது. பரத் மிக முக்கியமான ஆளாக வளர்ந்து வருகிறார். வாழ்த்துக்கள். பாடலாசிரியர் மோகன்ராஜன் என் ஃபேமிலி மாதிரி தான். அவருக்கு என் வாழ்த்துக்கள். அபியை இனி பிடிக்கவே முடியாது, முதல் படத்தை வெற்றிப்படமாக தந்து விடலாம் ஆனால் இப்படி ஒரு படத்தை பெரிய நடிகர்களை வைத்து செய்வது கடினம். அதை சாதித்த அபிக்கு வாழ்த்துக்கள். சிம்ரன் மாதிரியான ஃபெர்மாருக்கு இசையமைத்தது பெருமை. சசி என் அண்ணன் அவரது சினிமா பயணத்திற்கான சரியான அங்கீகாரமாக இப்படம் அமைந்துள்ளது. சினிமாவுக்கு நிலைத்து நிற்க நல்ல குணம் தான் முக்கியம் அதை அவரிடம் உணர்ந்துள்ளேன். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் அபிஷன் ஜீவிந் பேசியதாவது… முந்தைய நிகழ்வினில்., என் குழு அனைவருக்கும் நன்றி சொன்னேன். இப்போது பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். உங்கள் பாரட்டில் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு வந்துள்ளார்கள். என் ஃபேமிலியோடு படத்திற்கு போக எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை, இப்படத்தை வெற்றிப்படமாக்கி தந்த யுவராஜ் அண்ணா மகேஷ் அண்ணாவிற்கு நன்றி. சசி அண்ணா இந்தப்படத்தில் வருவது போல தான், உங்களுக்கே தெரியாது, நீங்கள் எனக்கு எவ்வளவு செய்துள்ளீர்கள் என்று, எல்லாவற்றிக்கும் நன்றி. சிம்ரன் மேம் உங்களுடன் வேலை பார்த்தது கனவு மாதிரி உள்ளது, இந்த வாய்ப்பைத் தந்ததுக்கு நன்றி. ஷான் ரோல்டன் அண்ணா எனக்கு ஆதரவாக இருந்ததற்கு நன்றி. என் குழு அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் இது ஒரு நன்றி சொல்லும் விழா. எங்களுக்கு இவ்வளவு பெரிய வெற்றியைத் தந்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. எப்போதும் நல்ல கதைகளை ஜெயிக்க வைக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் அபிக்கு வாழ்த்துக்கள். என் தம்பி ஜெயித்தது போல் உள்ளது. சசி சார் தம்பி எனக்குப் பழக்கம், அவர் வீட்டுக்குப் போய் போட்டோ எடுத்து வந்துள்ளேன் ஆனால் அவரை வைத்து படமெடுப்பேன் என நினைக்கவில்லை. எங்கள் பேனரில் நடித்ததற்கு நன்றி. சிம்ரன் மேமுக்கு நான் மிகப்பெரிய ஃபேன், நான் படிக்கும் காலத்தில் ஷீட்டிங்கில் அவரைப் பார்க்க அலைந்துள்ளேன். அவர் எங்கள் படத்தில் நடித்தது பெருமை. அற்புதமான இசையை தந்த ஷான் ரோல்டன் ஐயாவிற்கு நன்றி. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் மூலம் நல்ல படங்கள் தான் வருமென குட்நைட் பட விழாவில் சொல்லியிருந்தேன், அதே தான் இப்போதும் சொல்கிறேன். தொடர்ந்து நல்ல படங்கள் செய்வோம் நன்றி.
நடிகை சிம்ரன் பேசியதாவது… எல்லோருக்கும் நன்றி. அபி கதை சொன்ன போதே இது சூப்பர் ஹிட் ஆகும் என்றேன். அப்போதே மகேஷை மீட் செய்து இந்தப்படம் செய்கிறேன் என்று சொன்னேன். நான் பல வருடங்களாக இந்த துறையில் உள்ளேன். நீங்கள் தரும் ஆதரவு தான் இந்த வெற்றிக்கு காரணம், உங்களுக்கு நன்றி. சசிகுமார் சார் மிக அற்புதமான மனிதர். அற்புதமான இயக்குநர் அற்புதமான கோ ஸ்டார். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 20 வருடம் கழித்து மீண்டும் என்னை உருவாக்கியுள்ளார்கள். என் குழு அனைவருக்கும் நன்றி.
நடிகர் சசிகுமார் பேசியதாவது…, பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. நீங்கள் தந்த வெற்றி தான் இது. நீங்கள் சம்பளத்தை ஏத்தி விடுவீர்களா எனக்கேட்டீர்கள், கண்டிப்பாக ஏத்த மாட்டேன், இந்தப்படத்தை இந்த பட்ஜெட்டில் தான் எடுக்க வேண்டும், அப்போது தான் அது வெற்றி பெறும். இந்தப்படம் நிறையப்பேரின் கனவை நனவாக்கியுள்ளது, நல்ல கதைகள் வைத்திருப்போருக்கு நம்பிக்கை தந்துள்ளது. ஒரே மாதிரி படம் பண்ண வேணாம் டிஃபரண்ட் டிஃபரண்டா படம் பண்ணலாம், வேறு மாதிரி ஜானர் படம் பண்ணலாம் அப்படின்ற ஒரு நம்பிக்கையை, இந்த படம் கொடுத்திருக்கதான் நான் நினைக்கிறேன். ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வந்துகிட்டே இருக்காங்க. எனக்கு பல ஆண்டுகளுக்கு அப்புறம் இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இது என்னோட வெற்றியா நான் நினைக்கவில்லை. இந்த படம் வெற்றிய வந்து ஒரு சசிகுமார் ஜெயிச்சுட்டான். ஒரு மில்லியன் டாலர் ஜெயிச்சிருச்சு அப்படின்னு நினைக்காதீங்க. புது தலைமுறை ஜெயித்துள்ளது. தோல்வி அடைஞ்ச இயக்குனர்களுக்கு இப்படம் நம்பிக்கை கொடுத்திருக்கிறது.
நாம் வெற்றி பெற, முதலில் நாம் நம்ம தோல்வியை ஒத்துக்கணும். நான் தோல்வி அடைஞ்சிருக்கேன். என் தோல்வியை ஒவ்வொரு தடவையும் நான் ஒத்துக்கிட்டேன். இந்த படம் முதல் நாள் கலெக்ஷன் என்ன என்பது உங்க எல்லாருக்கும் தெரியும். தயாரிப்பாளர்கள் எல்லா நடிகர்கள்கிட்டயும் உண்மைய சொல்லுங்க, எவ்வளவு ஓடி இருக்குன்னு சொல்லுங்க, ஏன் மறைக்கறீங்க… மறைக்காதீங்க எவ்வளவு ஓடி இருக்குன்னு சொன்னாதான் யாரும் சம்பளம் ஏத்த மாட்டாங்க.. அப்பதான் உண்மையா இருப்பாங்க… இந்தப்படம் முதல் நாளை விட இப்போது தான் அதிக வசூல். என்னுடைய ஹையஸ்ட் வசூல் சுந்தரபாண்டியனும் குட்டி புலியும்தான். அந்த குட்டி புலியும் சுந்தரபாண்டியனும் ஹையஸ்ட் கலெக்ஷன இந்த டூரிஸ்ட்ஃபேமிலி தாண்டியுள்ளது. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனிவரும் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை வர வேண்டும் என்பதால் தான் இதைச் சொல்கிறேன். இந்தப்படம் ஆரம்பிக்கும் போதே யுவராஜ் ரொம்ப கான்ஃபிடென்ட்டா இருந்தார். என்னைவிட இப்படத்தின் மீது நம்பிக்கை வச்சது இந்த ப்ரொடியூசர்ஸ் ரெண்டு பேரும்தான் அவங்கதான் இது மேல ரொம்ப நம்பிக்கை வச்சாங்க.. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டர் வந்து ரசிக்கிறார்கள். நல்ல படம் தந்தால் மக்கள் தியேட்டர் வர தயாராக உள்ளார்கள். இப்படத்தினை வெற்றிப்படமாக தந்த இயக்குநர் அபிக்கு வாழ்த்துக்கள். சிம்ரன் மேடமுக்கு நன்றி. இந்தப்படத்தை மக்களிடம் கொண்டு சென்ற தயாரிப்பாளருக்கு நன்றிகள். அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசியதாவது… இப்படத்தை வெற்றிப்படமாக்கிய பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. இந்தப்படத்தை ஒப்புக்கொண்ட சசி சாருக்கு நன்றி. நீங்கள் செய்த நல்லது தான் இந்த வெற்றிக்கு காரணம். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம் இரண்டு வாரங்களைக் கடந்து, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சூரி, தனது அக்கா சுவாஷிகா மீது அளவு கடந்த அன்பாக இருக்கிறார்.சுவாசிகாவுக்கு திருமணம் நடந்து பந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் காத்திருந்த சுவாசிகாவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. சூரி அக்கா சுவாசிகாவுக்கு பிறந்த ஆண் குழந்தையை தாயைப் போல அனைத்து பணிவிடைகளும் செய்து சீராட்டி வளர்க்கிறார்.ஐஸ்வர்யா லட்சுமி சூரியின் அக்கா பிரசவம் பார்த்து டாக்டராக பணிபுரிந்து வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமி, சூரிக்கு காதல் மலருகிறது அந்தக் காதல் திருமணத்தில் சென்று முடிகிறது.
ஐஸ்வர்யா லட்சுமி ,. சூரியின் இல்லற வாழ்க்கையில் அக்கா மகன் முதல் இரவில் இருந்து ஆரம்பித்த பிரச்சனை இல்லற வாழ்க்கையில் அக்கா மகன் பாசம் இடையூறாக அமைகிறது. இல்லற வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டு இருவரும் பரிகிறார்கள்.
இரு குடும்பங்களுக்கு இடையேசிக்கல்களும் பிரச்சனைகள் தீர்ந்ததா?கதாநாயகன் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
எந்த திரைப்படத்திலும் எப்படியப்பட்ட கதாப்பாத்திரமாக இருந்தாலும் எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், அதற்கு ஏற்ற நடிகனாக தன்னால் உருவெடுக்க முடியும், என்பதை இந்த திரைப்படம் மூலம் தனது நடிப்பினால் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
தன் குடும்பம் மற்றும் அக்கா மீது காட்டும் அன்பும், அக்கறையும் போல் தனது மனைவியிடம் காட்டவில்லை என்பதை உணர்ந்து கலங்கும் காட்சியில் தாய்மார்களை கண் கலங்க வைக்கும் கதாநாயகன் சூரிக்கு, இனி தமிழக பெண் ரசிகைகள் அதிகரிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர் கதாபாத்திரம் , மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, அன்பு பாசம் நெருக்கம் அனைத்து எதிர்பார்ப்பையும், ஏமாற்றத்தையும் தனது நடிப்பின் மூலம் மிகவும் நேர்த்தியாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.
ராஜ்கிரணின் கதாபாத்திரமும், அவருடைய மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜி சந்திரசேகர் இருவரும் நடிப்பு திரை இருப்பும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.
‘லப்பர் பந்து’ திரைப்படத்திற்குப் பின் மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் சுவாஷிகா சூரியின் அக்கா கதாபாத்திரத்தில் அவருடைய கண்கள் மூலமாகவே நடிப்பின் மூலம் பல உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நடன இயக்குனர் பாபா பாஸ்கர், மாஸ்டர் பிரகீத் சிவன், பால சரவணன், ஜெயப்பிரகாஷ், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவுமிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வாகப் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை அதிகம் சத்தம் இல்லாமல் திரைக்கதை ஓட்டத்திற்கு அளவாக சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
திருமண, காது குத்து, சீமந்தம் நிகழ்ச்சி என்று திரைப்படம் முழுவதும் குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் சிறு சிறு பிரச்சனைகளை மிகவும் சுவாரஸ்யமாக, குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்,
திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்களை கிஸ்ஸா 47 என்ற பெயரில் யூடியுப் மூலம் விமர்சனம் செய்யும் சந்தானத்திற்கு ஒரு தமிழ் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு உங்களது குடும்பத்துடன் வரவேண்டும் என அழைப்பு வருகிறது.அந்த சிறப்புக் காட்சி அழைப்பின் பேரில் சந்தானத்தின் குடும்பம் அப்பா நிழல் ரவி, தங்கை யாஷிகா ஆனந்த், அம்மா கஸ்தூரி செல்கிறார்கள். சிறப்பு காட்சி நடக்கும் திரையரங்கில் ஆபத்து இருப்பதை உணர்ந்த சந்தானம் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக செல்கிறார். திரையிடப்படும் சிறப்பு காட்சியில் குடும்பமும், திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களாக மாறி இந்த திரைப்படத்தின் கதைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.
அந்த பிரச்சனையில் சந்தானம் தன் குடும்பத்தை காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா?, என்பதுதான் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சந்தானம் தனது வழக்கமான பாணியில் தன்னுடைய அணியினருடன் சேர்ந்து, வழக்கமான காமெடிகளை கொடுத்து திரைப்படத்தை தாங்கி பிடித்திருக்கிறார். சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் கீதிகா திவாரி கதாநாயகி மட்டுமின்றி பேயாகவும், பெயருக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
புதியதாக கூட்டணியில் இணைந்திருக்கும் இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், தந்தையாக நடித்திருக்கும் நிழல்கள் ரவி, தாயாக நடித்திருக்கும் கஸ்தூரி,யாஷிகா ஆனந்த் கூட்டணி மற்றும் மொட்டை ராஜேந்திரன், மாறன், ரெடின் கிங்ஸ்லி என பழைய காமெடி கூட்டணியும் சேர்ந்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைப்பதற்கு முயற்சி செய்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி கலர்ஃபுல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஆப்ரோ இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை எந்த விதத்திலும் ஈர்க்கவில்லை.
சென்னை, சிட்டிக்குள் தொடர்ந்து அடுத்தடுத்து சில நபர்கள் உடல்கள் முழுவதுமாக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மர்மமான முறையில் கொலை செய்வது அடிக்கடி நடந்து வருகிறது.மர்மமான முறையில் நடக்கும் கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியான ஷாஷாங் விபத்தில் சிக்கிக் கோமாவிற்கு செல்கிறார்.
அதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கை நவீன் சந்திரா விசாரித்து வருகின்றார்.நவீன் சந்திராவிற்க்கு துணையாக துணை ஆய்வாளர் திலீபனும் வருகிறார்.
இந்தத் தொடர் கொலையை செய்து வரும் அந்த கொலைகாரன் யார்? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.
நவீன சந்திரா காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை தன்னுடைய பார்வையாலும் தனது உடல் மொழியாலும் மிக எளிதாக அரவிந்தன் கதாபாத்திரத்தோடு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை பயணிக்க வைத்து விட்டார். தனக்கே உரித்தான பாணியில் மிகச் சரியாக தனது கதாபாத்திரத்தை செய்து முடித்திருக்கிறார்.
தொடர்ந்து, காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாஷாங் மற்றும் திலீபன் இருவருக்கும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்கள்.
நடிகை அபிராமி சிறப்புத் தோற்றத்தில் வந்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் டி இமானின் இசையில் பலம் சேர்த்திருக்கிறார்.
தமிழ் திரைப்பட உலகில் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் பார்த்திராத ஒரு கதையை மிக கவனமாக கையாண்டு அதை தெளிவாக காட்சிப்படுத்தி அழகான படைப்பாக படைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் அஜ்ல்ஸ்.
VJ Combines நிறுவனம் Dass Pictures உடன் இணைந்து வழங்க, தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் படம் “படை தலைவன்”.
வரும் மே 23 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், L.K. சுதீஷ், ஹீரோ சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன், இயக்குநர் -நடிகர்கள் கஸ்தூரி ராஜா, சசிக்குமார், இயக்குநர்கள் A.R. முருகதாஸ், பொன்ராம் படத்தின் தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம், இயக்குநர் .U.K. அன்பு, ஒளிப்பதிவாளர் சுரேஷ், தயாரிப்பாளர்கள் T.… படைத்தலைவன் படத்தின் கதாநாயகன் சண்முக பாண்டியன் பேசியதாவது..
”இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம், காரணம் அப்பா இருக்கும்போது இந்த படத்தின் கதையைக் கேட்டிருந்தார். இந்த படத்தில் இருக்கும் இரண்டு சண்டைக் காட்சிகளையும் அப்பா பார்த்திருக்கிறார். எனவே இந்த படம் எனக்கு மிக மிக நெருக்கமான படம். படைத்தலைவன் படத்தைக் கும்கி அல்லது வேறு எந்த படத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இந்த படம் முற்றிலும் வேறு மாதிரியான கதைக்களத்தைக் கொண்டுள்ளது”
”என்னுடைய முதல் ஷாட்டே ஐந்து யானைகளுடன் தான்..” எல்லாரும் நான் அப்பா மாதிரி இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் எனக்கு அப்படியே தெரியவில்லை, அவரை ஈடு செய்ய முடியாது. இந்த படத்திற்காக என்னால் முடிந்தவரை உழைத்துள்ளேன். நிச்சயம் இந்தப் படம் உங்கள் அனைவரையும் கவரும். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசியதாவது…,
”ஏராளமான படங்களில் நடிகருக்கு நிகராக வில்லன்கள் அழகாக இருக்கும் டிரெண்டை செட் செய்தவர் விஜயகாந்த் தான். அதற்கென ஒரு பெரிய நம்பிக்கை வேண்டும், அதை விஜயகாந்த் சார் அவர்கள் செய்தார்கள். எல்லோரும் விஜயகாந்த் குறித்துப் பேசி இருப்பார்கள். ஆனால் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் மட்டும்தான் விஜயகாந்த் உடன் பணியாற்றியுள்ளேன் என்று நினைத்தேன். ஆனால் கஸ்தூரி ராஜாவும் பணியாற்றியதாகக் கூறியபோது சற்று பொறாமையாக இருந்தது,
விஜயகாந்தின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் சண்முக பாண்டியனுக்கு வேண்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக உங்களைக் கைவிட மாட்டார்கள். இவ்வளவு கம்பீரமான நடிகர் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறார். விஜயகாந்தின் இரு கண்கள் அப்படியே சண்முக பாண்டியனுக்கு உள்ளது. சினிமாவில் வளர்ந்து வாருங்கள்… கண்டிப்பாக ரமணா 2படம் எடுக்கலாம். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் U அன்பு பேசியதாவது,
என் தயாரிப்பாளர்களுக்கும், சண்முக பாண்டியனுக்கும் மிக்க நன்றி. என்னை நம்பி இந்த படைப்பை என்னிடம் கொடுத்துள்ளனர். அவர்களிடம் நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன் என்று நம்புகிறேன், எனக்கு உதவியாக இருந்த படக்குழு, அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், படத்தின் வெற்றி நிகழ்வில் மீண்டும் நம் சந்திப்போம் நன்றி.
மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, A.வெங்கடேஷ், S.S.ஸ்டான்லி, லோகு N P K S, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார், அவரது இசையில் மூன்று அற்புதமான பாடல்கள் இப்படத்திற்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படம் வரும் மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தொழில்நுட்ப குழு விபரம் கதை இயக்கம் – U அன்பு தயாரிப்பாளர் – ஜகநாதன் பரமசிவம்( VJ Combines In Association with Dass Pictures ) திரைக்கதை வசனம் – பார்த்திபன் தேசிங்கு ஒளிப்பதிவு – S R சதீஷ்குமார் படத்தொகுப்பு – இளையராஜா ஸ்டண்ட் – மேத்யூ மகேஷ் கலை இயக்கம் – P ராஜு ஸ்டில்ஸ் – சக்திபிரியன் மக்கள் தொடர்பு – சதீஸ், சிவா AIM பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக்
காதல் உணர்வை இழை பிரித்து காதலர்களின் சின்ன சின்ன அசைவுகளைத் தோரணமாக்கி நெய்து இயற்கை சூழ்ந்த பின்னணியுடன் ‘ஆழி’ என்கிற சுயாதீன பாடல் ஆல்பம் உருவாகி உள்ளது. இந்த ஆல்பத்தை ஜெயின்ட் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் வசந்த் ராமசாமி தயாரித்துள்ளார். ஈஷான் இயக்கி உள்ளார். லட்சிய நடிகர் எஸ்.எஸ் . ராஜேந்திரனின் பேரன் ஆரியன் இசையமைத்துள்ளார். இப்பாடல் ஜெயின்ட் மியூசிக் தளத்தில் தயாரிப்பாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
‘ஆழி ‘ பாடல் ஆல்பம் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் எஸ் எஸ் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன், இயக்குநர் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சியில் கே .ராஜன் பேசும்போது ,
“தமிழ் சினிமா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற எத்தனை யோ நட்சத்திரங்களைப் பார்த்துள்ளது. அவர்கள் எல்லாம் கூட இயக்குநர்களின் விருப்பமறிந்து நடந்து கொண்டார்கள். மீண்டும் நடிக்கச் சொன்னால் நடிப்பார்கள் .இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
ஆனால் இந்த’ஆழி ‘ பாடல் ஆல்பத்தில் நடித்துள்ள நடிகரும் நடிகையும் இந்த விளம்பர நிகழ்ச்சிக்கு வரவில்லை .வருத்தமாக இருக்கிறது. இன்று தயாரிப்பாளர்கள் மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட அலைகள் அடித்துக் கொண்டிருக்கின்றன. பல துன்ப அலைகள் ,நடுவே இன்பமான அலைகள் சில மட்டுமே அடிக்கும். ரஜினி, ஷங்கர் போன்றவர்களை வைத்து படம் எடுத்தவர்கள் எல்லாம் இன்று ஆளையே காணோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லாம் இன்று படம் எடுப்பதில்லை, போய்விட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று தமிழ் சினிமா இருக்கிறது .
ஒரு நடிகர் முதல் படத்தில் 25 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார் .அந்தப் படம் ஓடியதும் அடுத்த படத்தில் இரண்டு கோடி என்றார்.ஒரு படம் வெற்றி பெற்றால் இயக்குநர் தயாரிப்பாளரை விட நடிகருக்குத்தான் பலன் கிடைக்கும்.
இந்தப் பாடல் விளம்பர நிகழ்ச்சிக்கு நடிகர் நடிகை வரவில்லை.வந்திருந்தால் விளம்பரம் அவர்களுக்குத்தான். ஒவ்வொரு திரைப்பட விழாவிலும் வரும் நடிகர்,நடிகைகளைத் தான் ஊடகத்தைச் சேர்ந்த புகைப்படக்காரர்கள் படம் எடுத்து விளம்பரப்படுத்துகிறார்கள். மற்றபடி அந்த இயக்குநர், தயாரிப்பாளர்களை அவர்கள் அந்த அளவுக்கு விளம்பரப்படுத்துவதில்லை. அதனால் வரக்கூடிய எல்லா பலன்களையும் நடிகர்கள் தான் அனுபவிக்கிறார்கள். தயாரிப்பாளர்களோ இயக்குநர்களோ அல்ல. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கே இந்த பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வராத நடிகர் கதிரவன் என்ற நடிகரையும் நமிதா கிருஷ்ணமூர்த்தி என்ற நடிகையையும் நான் கண்டிக்கிறேன். பிக்பாஸில் 100 நாள் தாக்குப் பிடிக்க முடியாமல் சில நாட்கள் மட்டுமே இருந்து விட்டு வெளியேற்றப்பட்ட அந்த நடிகருக்கு அதற்குள் இவ்வளவு ஆணவமா?தான் நடித்த ஆல்பத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை .அதேபோல் அந்த நடிகையும் வரவில்லை இப்படிப்பட்டவர்களைத் தமிழ் சினிமா புறக்கணிக்க வேண்டும்.
இந்தப் பாடல் ஆல்பத்துக்கு லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் பேரன் ஆரியன் இசையமைத்துள்ளார். பாடலின் இசையும் வரிகளும் நன்றாக உள்ளன. அதே போல் நடித்திருப்பவர்களை நன்றாக நடிக்க வைத்து படமாக்கப்பட்டுள்ளது .இவர்களையே கதாநாயகன் கதாநாயகி ஆக்கி இவர்கள் அடுத்த படம் எடுக்கும் திட்டத்தில் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களின் நடவடிக்கையால் அந்த வாய்ப்பை இழக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு தர யோசிக்க வேண்டி இருக்கிறது. இந்த ‘ஆழி ‘ பாடல் ஆல்பம் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன் “என்று கே.ராஜன் பேசினார். நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷ் மற்றும் ஆல்பம் தயாரிப்புக் குழுவினர் கலந்து கொண்டனர்.
டாம் குரூஸ் இந்தியாவை நேசிக்கிறார், மீண்டும் வர விரும்புகிறார்; அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு இதயப்பூர்வமான செய்தியை விட்டுச் செல்கிறார்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங்!
மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங் மே 17 அன்று இந்தியாவில் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது, டாம் குரூஸ் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வழிநடத்தி வரும் ஒரு உரிமையாளரின் காவிய முடிவை அமெரிக்கா குறிக்கும் 6 நாட்களுக்கு முன்பு, உலகளாவிய பொழுதுபோக்கை உண்மையிலேயே மறுவரையறை செய்த ஐகான், இந்தியாவுடனான தனது காலத்தால் அழியாத பிணைப்பை பிரதிபலிக்கிறது. குரூஸ் படங்களைப் பற்றி மட்டுமல்ல, வழியில் தனது பயணத்தை வடிவமைத்த மக்கள் மற்றும் இடங்களைப் பற்றியும் பேசினார். இதுவரை தனது மிகவும் தனிப்பட்ட மற்றும் உயர்ந்த பங்குகளை கொண்ட அத்தியாயமாக அமைக்கப்பட்டுள்ளதை விளம்பரப்படுத்தும் அதே வேளையில், குரூஸ் இந்தியாவுடனான தனது நீடித்த தொடர்பைப் பற்றித் தெரிவித்தார் – ஒரு நாடு தனக்கு வெறும் போற்றுதலை மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் நினைவுகளை அளித்ததாகவும், மீண்டும் வர விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்!
இந்தியா மீதான தனது அபிமானத்தைப் பற்றிப் பேசிய டாம் குரூஸ், “இந்தியா ஒரு அற்புதமான நாடு, ஒரு அற்புதமான கலாச்சாரம். அந்த முழு அனுபவமும் என் நினைவில் என்றென்றும் பதிந்துவிட்டது. நான் தரையிறங்கிய ஒவ்வொரு தருணமும், தாஜ்மஹாலுக்குச் சென்றதும், மும்பையில் நேரத்தைச் செலவிட்டதும், பிரீமியரில் வரிசையில் நின்ற அனைவரும், ஒவ்வொரு தருணத்தையும் நான் மிகவும் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறேன். நான் பயணம் செய்வதையும், வெவ்வேறு கலாச்சாரங்களில் பணிபுரிவதையும் விரும்புகிறேன், நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன், அங்கு ஒரு படம் எடுக்க விரும்புகிறேன். பாலிவுட் படங்கள் மற்றும் அதற்குத் தேவையான திறமை, நீங்கள் அனைவரும் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் இசை நாடகங்களில் வளர்ந்தவன், நாடகங்களை விரும்புகிறேன். இந்தக் கலாச்சாரத்தில் நான் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் ஒன்று, நான் தயாரிக்க விரும்பும் படங்களின் பட்டியலில் இதுவும் ஒன்று!”
தனது உற்சாகத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், “நான் இந்தியாவை நேசிக்கிறேன்! அது மிகவும் வேடிக்கையாக இருந்தது, இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்களை நான் திரும்பிச் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். அது அசாதாரணமாகவும் அழகாகவும் இருந்தது. நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அங்கு படப்பிடிப்பை விரும்புகிறேன், பாலிவுட் பாணி படத்தை உருவாக்க விரும்புகிறேன், அது மிகவும் வேடிக்கையாக இருக்கும், நடனமாடுவதும் நாடகத்தைப் பாடுவதும் நாடகம். எனக்கு அது மிகவும் அற்புதமாகக் தோன்றுகிறது” என்று அவர் கூறினார்.
இந்திய உணவை ருசிப்பதில் இருந்து உலகின் மிகவும் உற்சாகமான ரசிகர் தளங்களில் ஒன்றான ஈதன் ஹன்ட்டின் பாத்திரத்திற்கு விடைபெற அவர் தயாராகும்போது, வழியில் அவருக்கு ஆதரவளித்த மக்களையும் கலாச்சாரங்களையும் கொண்டாடும் அதே வேளையில் அவர் அவ்வாறு செய்கிறார். குரூஸைப் பொறுத்தவரை, இந்தியா ஒரு உலகளாவிய சுற்றுப்பயணத்தில் ஒரு நிறுத்தம் மட்டுமல்ல – அது வீடு போல உணரும் ஒரு இடம்.
பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் ஸ்கைடான்ஸ் ஆகியவை டாம் குரூஸ் தயாரிப்பை வழங்கும் “மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங்” கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கியது. இந்த அதிரடி அதிரடி திரைப்படத்தில் ஹேலி அட்வெல், விங் ரேம்ஸ், சைமன் பெக், எசாய் மோரல்ஸ், போம் கிளெமென்டிஃப், ஹென்றி செர்னி, ஏஞ்சலா பாசெட், ஹோல்ட் மெக்காலனி, ஜேனட் மெக்டீர், நிக் ஆஃபர்மேன், ஹன்னா வாடிங்ஹாம், டிராமெல் டில்மேன், ஷியா விகாம், கிரெக் டார்சன் டேவிஸ், சார்லஸ் பார்னெல், மார்க் கேடிஸ், ரோல்ஃப் சாக்சன் மற்றும் லூசி துலுகார்ஜுக் உள்ளிட்ட ஒரு சக்திவாய்ந்த குழு உள்ளது.
மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங் இப்போது இந்திய சினிமாக்களில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையிடப்படுகிறது.
.Customers pre-ordering the Galaxy S25 Edge will receive a free storage upgrade worth INR 12,000 .Customers can also avail no-cost EMI up to 9 months on the device Chennai, India – May 13, 2025 – Samsung, India’s largest consumer electronics brand, today opened pre-orders for its category-defining Galaxy S25 Edge, the slimmest Galaxy S series smartphone. Crafted with style and strength in mind, Galaxy S25 Edge strikes a new balance of premium, pro-level performance in a resilient titanium body. Galaxy S25 Edge delivers on the S series legacy, integrating an iconic Galaxy AI-enabled camera and unleashing a new realm of creativity in an effortlessly portable device. Exceptionally Sleek and Strong Design With a thin 5.8mm chassis, Galaxy S25 Edge is a remarkable feat of engineering that reimagines nearly every element of smartphone design. Its refined frame bridges form and function at just 163 grams, taking slim smartphones to the next level while staying true to the Galaxy S series’ unified design. Alongside its streamlined silhouette comes exceptional resilience. The optimally curved edges and sturdy titanium frame offer enduring protection for everyday use. The latest Corning® Gorilla® Glass Ceramic 2, a new glass ceramic offering that delivers engineered resilience, is used for the front display on Galaxy S25 Edge. Dynamic Creativity with a Pocketable 200MP Camera The slim and light design of Galaxy S25 Edge makes it easier than ever for users to capture memorable moments and express their creativity anytime, anywhere. The 200MP wide lens upholds the Galaxy S series’ iconic camera experience while taking Nightography to a new level. Thanks to its ultra-high resolution, users get sharper photos while maintaining clearer shots with large pixel size —capturing images with over 40% improved brightness in low-light environments. The 12MP ultra-wide sensor features autofocus, which powers crisp, detailed macro photography for even more creative flexibility. Galaxy S25 Edge benefits from the same ProVisual Engine that was optimized for Galaxy S25 with pro- grade enhancements, like ensuring sharp details for clothes or plants and natural, true-to-life skin tone in portraits. Galaxy AI-powered editing features, including fan-favorites like Audio Eraser and Drawing Assist are all brought over from the Galaxy S25 series. Peak Performance Expertly Configured in Ultra-Slim Housing Galaxy S25 Edge is built to deliver premium performance, starting with the Snapdragon 8 ® Elite Mobile Platform for Galaxy. Customized by Qualcomm Technologies, Inc., the chipset powers Galaxy S25 Edge’s on-device AI processing capabilities and offers reliably fast performance all day. Galaxy S25 Edge also keeps its cool under sustained use thanks to a reconfigured vapor chamber that is now thinner, yet broader for steady heat dissipation.
Matching the Galaxy S series’ renowned performance standards, Galaxy S25 Edge features advanced, and efficient AI image processing with ProScaler, which delivers a 40% improvement in display image scaling quality, while incorporating Samsung’s customized mobile Digital Natural Image engine (mDNIe). A Trusted Companion with Galaxy AI Integrating Galaxy AI at nearly every touchpoint, Galaxy S25 Edge offers our most natural and context- aware mobile AI experiences. Users get personalized, multimodal AI capabilities with peace of mind that their personal data is always safe. Mirroring the broader Galaxy S25 series, Galaxy S25 Edge integrates AI agents that work seamlessly across multiple apps, helping as a true AI companion to get things done more easily. Galaxy AI also gets better at integrating with daily routines. Now Brief and Now Bar include third-party app integrations for greater convenience and helpful reminders during everyday commuting, dining and more. Thanks to Galaxy’s deep integration with Google, Galaxy S25 Edge brings Gemini’s latest advancements to more users. For example, with Gemini Live’s new camera and screen sharing abilities, users can show Gemini Live what they see on their screen or in the world around them while simultaneously interacting with it in a live conversation. Experiences powered by Galaxy AI on Galaxy S25 Edge aren’t just convenient—they’re designed with privacy at the core. On-device AI processing ensures data is kept secure by Samsung Knox Vault, continuing Samsung’s unwavering commitment to ensure hyper-personalized mobile experiences never sacrifice privacy. Price, Availability and Pre-Order Offers Galaxy S25 Edge is up for pre-orders, starting today across all leading online and offline retail stores. Customers pre-ordering the Galaxy S25 Edge will receive a free storage upgrade worth INR 12,000. Customers can also avail no-cost EMI up to 9 months on the device. Galaxy S25 Edge will be available in two captivating colours – Titanium Silver and Titanium Jetblack. For more information about Galaxy S25 Edge and the Galaxy S25 series, please visit Samsung.com.
கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ள ‘தி வெர்டிக்ட்’. திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்திற்கு ஆதித்ய ராவ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும், எடிட்டராக சதீஷ் சூர்யாவும் பணியாற்றி உள்ளனர். பாடல்கள் மதன் கார்க்கி, கிருத்திகா நெல்சன், ராகவன்,நைனார் எழுதியுள்ளனர்.கலை மற்றும் உடைகள் நந்தினி முத்தியம். அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் -என் கோபிகிருஷ்ணன் தயாரித்துள்ளனர். ஜகதா எண்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் இப்படத்தை வெளியிடுகிறது.
இந்தத் திரைப்படம் மே மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் இன்று நடைபெற்றது.
விழாவில் படத்தின் தயாரிப்பாளர் என். கோபிகிருஷ்ணன் பேசும் போது,
“இன்று இங்கே போக்குவரத்து நெரிசல், வெயில், மெட்ரோவால் சாலை நெருக்கடி போன்றவற்றைக் கடந்து வந்திருக்கிறீர்கள். நன்றி. இந்தப் படமும் பல நெருக்கடிகளைக் கடந்து தான் உருவாகியுள்ளது. நான் கேட்டவுடன் இப்படத்தில் வரலட்சுமி , ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் என ஒவ்வொருவராக வந்து இணைந்தவுடன் படத்தின் அளவு பெரிதாகிவிட்டது. இது சின்ன படம் என்றாலும் நல்ல கதையுள்ள படம்.” என்றார்.
“இது எங்கள் முதல் இந்திய சினிமா முயற்சி. இதற்கு முன்பு அங்கே ஹாலிவுட்டில் செய்திருக்கிறோம் .இவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் நடிக்க வைப்பது எங்களுக்கு வியப்பாகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்த வாய்ப்பைச் சாத்தியப்படுத்தியதற்கு கோபி சார் அவர்களுக்கு மிகவும் நன்றி. படப்பிடிப்பில் நாங்கள் அவர்களின் நடிப்பைப் பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொண்டே இருந்தோம். ஒருவரும் இரண்டாவது டேக் வாங்காமல் நடித்துக் கொடுத்து அசத்தினார்கள். ஒரு திரைப்படத்திற்கு கதை தான் அரசன் என்பார்கள் அது இந்த படத்தைப் பார்த்தால் புரியும் அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் இயக்குநர் யூகி சேது பேசும்போது,
” இந்த படத்தைப் பார்க்க தயாரிப்பாளர் அழைத்த போது எப்படி இருக்குமோ என்று பயந்து கொண்டு சென்றேன். ஏதாவது சொல்லி நட்பு முறிந்து விடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு நேர்த்தியாக இஸ்திரி போட்டது மாதிரி அழகாக எடுத்திருக்கிறார்கள். பொதுவாக நீதிமன்றக் காட்சிகள் பார்ப்பதற்குப் பிடிக்காது .இதில் பார்க்கும் படி எடுத்திருந்தார்கள். இந்தப் படத்தில் முகங்களைச் சரியான படி பயன்படுத்தியிருந்தார்கள். ஒரு படம் எடுக்கும் போது எது தேவையில்லை என்பதை முதலில் தெரிந்து கொண்டு அவற்றை விலக்க வேண்டும். அப்படி தேவையானதை மட்டும் எடுப்பது சிரமம். அப்படி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள் .’வின்டர் லைட் ‘என்ற படத்தில் முகங்களைச் சரியாக பயன்படுத்தியிருப்பார்கள். அப்படி முகங்களை இதில் சரியான படி பயன்படுத்திருக்கிறார்கள்.
எஸ்கிமோ மக்களுக்குத் தான் வெள்ளை நிறத்தின் 17 ஷேட்ஸ்களைத் தெரியும் என்பார்கள். அப்படி இருட்டின் பல ஷேட்ஸ் தெரிந்தவர்கள் பி சி ஸ்ரீராம் சார். அவரிடம் இருந்து வந்தவர் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் .இருட்டை எப்படிப் பார்க்க முடியும் என்பதை இந்தப் படத்தில் காட்டி உள்ளார்கள்.
சத்தியஜித் ரே என் ஒரு குறும்படத்துக்கு இசையமைத்துள்ளார். அவர் பேசிய ஆங்கிலத்தைப் பார்க்கும்போது அது எந்த நாட்டு ஆங்கிலம் என்று புரியாதபடி இருக்கும். அப்படி இதில் ஜாக்கிரதையாக வரலட்சுமி ஆங்கிலம் பேசி உள்ளார்.
பார்த்திபன்’ கவிதை பாட நேரமில்லை ‘என்கிற என் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் நான்கு பேரில் ஒருவராக நடிக்க முடியாது என்று விலகிவிட்டார் .தன் பாதையில் தனியே பயணம் செய்ய ஆரம்பித்து விட்டார்.இங்கே வந்திருக்கும் சுஹாசினியின் நடிப்பின் நுணுக்கங்கள் சாதாரணமானதல்ல.படம் நன்றாக வந்திருக்கிறது. “என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்.
தயாரிப்பாளர் , பத்திரிகையாளர் சித்ரா லெட்சுமணன் பேசும்போது,
“இந்தப் படத்தின் தயாரிப்பாளரான கோபிகிருஷ்ணன் நட்புக்கு இலக்கணமாக இருப்பவர். அவரிடம் எனக்குப் பிடித்த வை இரண்டு விஷயங்கள். ஒன்று நட்பு. அவரது நட்பின் வலை மிகப் பெரியது .அதில் ஒரு சிறிய பகுதியைத்தான் இந்த படக்குழுவினர் மூலம் நாம் இங்கே பார்க்கிறோம். அடுத்தது நிர்வாகத் திறமை. அவரிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்து விட்டால் மிகச் சரியாகச் செய்து விடுவார். இதில் நடித்திருக்கும் வரலட்சுமி தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் இப்போது பிரபலமாக இருக்கிறார். அவர் தன் பணியைச் சிறப்பாகச் செய்கிறார். அந்த நிம்மதியில் தினமும் கர்வத்துடன் தூங்கலாம். அப்படிப்பட்ட நடிப்புத் திறமை கொண்டவர் அவர்.படத்தின் இயக்குநர் ஒரு நாடக நடிகர் என்று அறிந்து வியந்தேன். இளையவர்கள் என்றாலும் இப்படத்தை நன்றாகத் திட்டமிட்டு எடுத்துள்ளார்கள் .அதனால் தான் 23 நாட்களில் இந்த படத்தை எடுக்க முடிந்தது. அனைவரிடம் நன்றாக நடிப்புத் திறனை வெளிக்கொணந்து உள்ளார்கள்.
இங்கே யூகி சேது பேசியதைப் பார்க்கும்போது படத்தின் வெளியீட்டுக்கு முன்பு அவரது விமர்சனத்தை வாங்கி அதைப் பயன்படுத்தலாம். இந்த படத்திற்கு நல்ல தீர்ப்பு வழங்குங்கள்” என்று கூறினார்.
படத்தின் இயக்குநர் கிருஷ்ணா சங்கர் பேசும்போது ,
“என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்த நண்பர்களுக்கு நன்றியைக் கூறிக் கொள்கிறேன். இந்தப் படம் எனக்கு மறக்க முடியாத அனுபவம்.
இந்தப் படத்தில் நடிப்பவர்களைத் தேர்வு செய்ய உதவிய தயாரிப்பாளர் கோபி அவர்களுக்கு நன்றி. அவர் அரை மணி நேரத்தில் இப்படிப்பட்ட நடிப்புக் கலைஞர்களை எனக்குத் தேர்வு செய்து கொடுத்தார். இந்தப் படத்தில் நடித்த தமிழ் நடிகர்களின் நடிப்பை பார்த்து அமெரிக்காவில் உள்ள நடிகர்கள் வியந்தார்கள். இங்கு உள்ள நம் நடிகர்கள் ஒவ்வொருவரும் 10 ஹாலிவுட் நடிகர்களுக்குச் சமமானவர்கள் .இதை நான் சொல்லவில்லை அங்குள்ளவர்களே சொன்னார்கள்.இதை நான் நேரில் பார்த்துப் புரிந்து கொண்டேன். ஒரு நீதிமன்றக் காட்சியில் வரலட்சுமி நடித்ததைப் பார்த்து அங்கு ஜூரிகளாக இருந்த மூன்று பேர் கண் கலங்கினார்கள். நீங்கள் கண் கலங்கக் கூடாது நீங்கள் ஜூரிகள் என்ற போது இந்த பெண்ணின் நடிப்பைப் பார்த்து அசந்து விட்டோம் என்றார்கள்.
இங்கிருந்து வந்த அனுபவமுள்ள நட்சத்திரங்கள் கொடுத்த ஒத்துழைப்பால் தான் 23 நாட்களில் இந்தப் படத்தை முடிக்க முடிந்தது.
எனது உதவி இயக்குநர்கள் திரைப்படத்தைப் பற்றிய திருத்தமான தெளிவான அறிவோடு இருந்தார்கள். அதனால் தான் இந்தப் படத்தை இவ்வளவு குறைவான நாட்களில் எடுக்க முடிந்தது. அவர்களிடமும் நான் கற்றுக் கொண்டேன்.
என் உதவி இயக்குநர்கள் இந்த படத்திற்காக கொடுத்த உழைப்பு சாதாரணமல்ல. 18 மணி நேரம் படப்பிடிப்பு என்றால் மூன்று மணி நேரம் அதற்கு பின்பும் வேலை பார்த்தோம் .அந்த அளவிற்கு எனக்கு அவர்கள் பக்கபலமாக இருந்தார்கள். இந்தப் படம் நிச்சயம் உங்களைக் கவரும் “என்றார்.
நடிகை சுஹாசினி பேசும்போது,
” இங்கே என்னைப் பலரும் புகழ்ந்து பாராட்டினார்கள். அதில் இரண்டு விஷயம் உணர்ந்தேன். ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் இன்னொரு பக்கம் நாம் சரியாகச் செய்ய வேண்டுமே, நாம் ஏதாவது சாதித்திருக்கிறோமா சாதிக்க வேண்டுமே என்ற ஒரு குற்ற உணர்ச்சியும் வரும். இங்கே பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் என்னை ஒப்பிட்டார்கள். ஆனால் நான் நினைப்பது அடக்கமாக இருக்க வேண்டும், மேலும் அடக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான்.
இப்போது ரீல்ஸ்களைப் பார்த்து ஒரு படத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பது பலருக்கும் மறந்து விட்டது. கறுப்பு இருந்தால் தான் வெள்ளைக்கு அழகு. இங்குள்ள தயாரிப்பாளர் கோபியை நான் எப்போது அழைத்தாலும் என் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு வருவார். எனது ‘நாம்’ தொண்டு நிறுவனத்திற்கும் சென்னை திரைப்பட விழா நிகழ்ச்சிகளுக்கும் அவரை அழைத்திருக்கிறேன். ஆனால் அவர் என்னைப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்.
நான் அடிக்கடி நிறைய படங்களில் வந்தால் சலித்து விடும் .எனவே தேர்ந்தெடுத்து செய்கிறேன் . இந்த படத்தை நான் ஒப்புக்கொண்டது எப்படி தெரியுமா?
என் இருபதுகளில் லட்சுமி அவர்கள் நடித்த படத்தின் ரீமக்காக இருந்தால் நான் தைரியமாக ஒப்புக்கொண்டு நடிப்பேன்.அப்படி தமிழில் வந்த ‘சிறை’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ போன்ற படங்கள் மட்டுமல்ல கன்னடத்தில் அவர் நடித்த படங்களின் தெலுங்கு ரீமேக்கிலும் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதையை அவரிடம் சொல்லி ஆறு நாட்கள் என்றவுடன் முடியாது என்று மறுத்தார் என்று கேள்விப்பட்டேன். அப்போது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது . அவர் ஓகே செய்த கதை என்கிற அடிப்படையில் இதை ஒப்புக்கொண்டு நடித்தேன்.
இப்போதெல்லாம் ஒரு நடிகர் 12 பேர் இல்லாமல் படப்பிடிப்பு கிளம்புவதில்லையே. நான் தனி ஒருவராகத்தான் சென்று நடித்தேன். அதனால் பலருக்கும் தொந்தரவு குறைவு. படப்பிடிப்பில் மற்றவர் நடித்த காட்சிகளை நான் வேடிக்கை பார்த்தேன். என்னுடன் நடித்த சுருதி ஹரிஹரன் ஒத்திகை பார்க்கலாம் என்று என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தார் .இதில் நாங்கள் ஜாலியாக இருந்தோம் .
வீடுகளில் திருமண விழாக்களைப் பார்த்தால் பலருக்கும் பதற்றமாக இருக்கும் .ஆனால் ஒரு நாள் படப்பிடிப்பு என்பதே ஒரு திருமண விழாவிற்குச் சமமாகும் . படப்பிடிப்பு என்பதே தினம்தினம் திருமண விழாதான். அவ்வளவு கலாட்டாவாக இருக்கும். இந்த படப்பிடிப்பிலும் பல்வேறு கலாட்டாக்கள் நடந்தன . இந்தப் படப்பிடிப்பு அனுபவத்தில் எனது வயதின் பலம் புரிந்தது .எங்களுடன் பல ஹாலிவுட் நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் சொந்த விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது நமது கேமரா மேன் சைலன்ஸ் என்று ஒரு சத்தம் போட்டார் .அனைவரும் அமைதியானார்கள். வேலை கூட பார்க்காமல் அமைதியானார்கள். அப்புறம் அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. இப்படி இந்தப் படத்தில் பல்வேறு ருசிகரமான அனுபவங்கள் இருந்தன” என்றவரிடம்,” உங்கள் இளமையின் ரகசியம் என்ன ?”என்று கேட்டபோது, “நீங்கள் கண்ணாடி போடாமல் என்னைப் பார்ப்பது தான் காரணம்” என்றார்.
நடிகை வரலட்சுமி பேசும்போது,
“முதலில் என்னை ஹாலிவுட் திரை உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநருக்கு நன்றி. நான் இது போன்ற ஆங்கிலம் பேசியதில்லை .நான் ஆங்கிலம் பேசினால் வேகமாக இருக்கும், யாருக்கும் புரியாது. என்னை இதில் மிதமான வேகத்தில் பேச வைத்தார்கள். இந்தப் படப்பிடிப்பில் நடித்த போது எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது. அங்குள்ள ஆனா என்ற அமெரிக்க நடிகையுடன் நான் நடித்தேன். நீதிமன்றத்தில் வழக்காடும் காட்சியில் அவருடன் நடிப்பது சவாலாக இருந்தது போட்டி போட்டு நடித்தேன்.
எப்போதும் எதுவாக இருந்தாலும் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பும் சுஹாசினி ஆன்ட்டி அவர்களின் அன்பு பெரியது. அவருடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். இங்கு வந்திருக்கும் பார்த்திபன் சார் எழுத்துக்கு நான் ரசிகை . படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தர வேண்டும் “என்றார்.
இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பேசும்போது,
“இங்கே பேசிய யூகி சேது எப்படிப்பட்டவர் என்று யூகிக்க முடியாத புத்திசாலி. இந்த படத்தின் காட்சிகளைப் பார்த்த போது ஒன்று தோன்றியது. ‘ஹேராம்’ என்கிற தமிழ்ப்படம் வெளிவந்த போது கமல் சாரிடம் “இந்தப் படத்தின் தமிழ் உரிமையை எனக்குக் கொடுக்க முடியுமா ?”என்று ராதிகா கேட்டாராம். இந்தப் படக் காட்சிகளைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றியது. ஏனென்றால் அந்த அளவுக்கு வெறும் ஆங்கிலமாக இருந்தது. சில ஐந்தாறு வார்த்தைகள் தான் தமிழில் இருந்தது .
‘வெர்டிக்ட்’ என்ற தலைப்பில் படத்தைத் தேடிய போது ஒரு ஆங்கிலப் படம் 1982ல் வந்ததைப் பார்த்தேன் . இரண்டும் ஒரே மாதிரி தான் இருந்தது. கதையைச் சொல்லவில்லை. திரைப்பட உருவாக்கத்தில் அவ்வளவு தரமாக இரண்டும் ஒன்று போல் இருந்தது என்று சொல்கிறேன்.
எனது ‘இரவின் நிழல்’ படத்தில் வரலட்சுமி நடித்த போது எனக்கு பதற்றமாக இருந்தது. ஒரே ஷாட்டில் 2 மணி நேரத்தில் எடுக்க வேண்டும். சிறு தவறு நடந்தாலும் முதலில் இருந்து எடுக்க வேண்டும். ஆனால் அதில் வரலட்சுமி சரியாகச் செய்து பிரமாதமாக நடித்திருந்தார். இதில் தயாரிப்பாளர் நடிப்பதாக அறிந்தேன். தயாரிப்பாளர்கள் நடிக்க மட்டுமே சிலர் படம் எடுப்பார்கள். ஆனால் இதில் அப்படி இல்லை.
இங்கே சுஹாசினி அவர்களைப் பார்க்கும்போது, அவரது அழகின் திமிர் தெரிந்தது. அந்தத் திமிர் அவருக்கு அதிகம். எனக்கு 50 வயது என்று அவர் சொன்ன போது அந்தத் திமிர் தெரிந்தது. 28 வயதுக்கு மேல் பெண்கள் வயதை மறந்து விட்டால் திமிர் போல் ஒரு அழகு இருக்கும். அது பேரழகு. எனக்கு மணிரத்னம் மீது காதல் ,மணிரத்தினத்திற்கு சுஹாசினி மீது காதல். ஆறு பெண்கள் நடித்த ஒரு ரஷ்யப் படத்தைப் பார்த்தேன். அதேபோல் இது ஐந்து பெண்கள் திறமை காட்டியுள்ளார்கள்” என்ற போது , சுஹாசினி குறிப்பிட்டு தனக்கு 63 வயது என்றார்.
” ஒரு பெண்ணின் அழகு 30 வயதுக்கு மேல் அறிவாக மாறும் போது அழகு. அதை 30 வயதுக்கு மேல் அறிவாக மாற்றலாம், அந்த அறிவையே அமைதியாக மாற்றலாம். அறிவாக மாறியதற்கு சுஹாசினி உதாரணம். அமைதியாக மாற்றியதற்கு அன்னை தெரசா உதாரணம். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
நிகழ்ச்சியில் படத்தின் முன்னோட்டத்தை சிறப்பு விருந்தினர்கள் வெளியிடப் படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் நடிகர் பிரகாஷ் மோகன் தாஸ் எழுதிய ‘லங்கா’ என்கிற நூலை வெளியிட வந்த விருந்தினர் அனைவரும் பெற்றுக் கொண்டார்கள்.