Breaking
January 7, 2025

October 2024

BTG Universal, ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படங்கள்  !!

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பு துறையில் கோலோச்சி வரும் BTG Universal நிறுவனத்துடன் இணைந்து இரண்டு புதிய படங்களில் பணியாற்றவுள்ளார். பிரம்மாண்டமான கமர்ஷியல் படங்களாக உருவாகவுள்ள, புதிய படைப்புகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.  

தமிழ் திரையுலகில் கால் பதித்து பல வித்தியாசமான படங்களை பிரம்மாண்டமாக தயாரித்து வரும் BTG Universal நிறுவனம், 20 வருடங்களை கடந்து தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல் உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய  அளவில் ஜாம்பவானாக கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன்,  BTG Universal நிறுவனம்  மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார். பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய திரு டாக்டர் M.மனோஜ் பெனோ தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று நிறுவனம் மற்றும் திரைப்படங்களின் படைப்பாற்றல் மற்றும் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார். இந்நிறுவனம் சின்ன படம், பெரிய படம் என்று பாராமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்க முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்களுக்கு பிடித்தவாறு உருவாகும் படங்களை கொடுக்க இருக்கிறார்கள்.

முன்னதாக இந்நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்,  அருள்நிதி நடிப்பில் வெளியான ஹாரர் திரைப்படமான “டிமான்ட்டி காலனி 2” ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.  அடுத்ததாக இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வர் இயக்கத்தில் நடிகர்கள்  வைபவ் மற்றும் அதுல்யா நடிப்பில் காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள “சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே படப்புகழ் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ”ரெட்டதல” படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் அடுத்ததாக ஜெயம்ரவியை வைத்து பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களை உருவாக்கவுள்ளது.

தமிழ் திரையுலகில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஜெயம் ரவி 20  ஆண்டுகளை கடந்து முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். வித்தியாசமான கதைகளங்களில், மாறுபட்ட பாத்திரங்களில் பல வெற்றிப்படங்களை தந்து ரசிகர்களின் விருப்பமிகு நாயகனாக, குடும்பங்கள் கொண்டாடும் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். 

ரசிகர்கள்  ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்து ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் BTG Universal நிறுவனத்தின் தயாரிப்பில்
அவர் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதிய படங்களின் இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படங்களின்  தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

‘லெவன்’ திரைப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட்டார்

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’ திரைப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட்டார்

டி. இமான் இசையில் ஷ்ருதி ஹாசன் பாடிய உற்சாகமிக்க பாடலை சரிகம வெளியிட்டுள்ளது

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’ திரைப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார். டி. இமான் இசையில் ஷ்ருதி ஹாசன் பாடியுள்ள ‘தி டெவில் இஸ் வெயிட்டிங்’ எனும் இப்பாடலின் வரிகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் எழுதியுள்ளார். முன்னணி இசை நிறுவனமான சரிகம இப்பாடலை வெளியிட்டுள்ளது.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான ‘லெவன்’ திரைப்படத்தை தங்களது மூன்றாவது படைப்பாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர்.

இயக்குநர் சுந்தர் சி இடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

முதல் பாடலான ‘தி டெவில் இஸ் வெயிட்டிங்’ குறித்து பேசிய இயக்குநர், “உற்சாகம் மிகுந்த இந்த பாடல் உயர்தரத்தில் முழுக்க ஆங்கிலத்தில் உருவாகியுள்ளது. டி. இமானின் இசையும் ஷ்ருதி ஹாசனின் குரல் வளமும் பாடலுக்கு மிகப்பெரிய பலமாகும். நாயகன் மற்றும் வில்லனைக் குறித்த பாடலாக இது அமைந்துள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை உருவாக்கும் என்று நம்புகிறோம்,” என்றார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இணையத் தொடர், ‘சரபம்’, ‘சிவப்பு’ மற்றும் சசிகுமாரின் ‘பிரம்மன்’ உள்ளிட்டவற்றில் நடித்துள்ள இவர், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் எதிர் நாயகனாக தற்போது நடித்து வருகிறார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ‘விருமாண்டி’ புகழ் அபிராமி, ஆடுகளம் நரேன், ‘வத்திக்குச்சி’ புகழ் திலீபன், ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா, அர்ஜை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கான இசையை டி. இமான் அமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்புக்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. பொறுப்பேற்றுள்ளார்.

‘லெவன்’ திரைப்படம் குறித்த மேலும் தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக ‘லெவன்’ அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் பேனரில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் திரைப்படமான ‘லெவன்’ படத்தை நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ, “மஹாகாளி”!

பிரசாந்த் வர்மா PVCU3 இன் முதல் பெண் இந்திய சூப்பர் ஹீரோ மஹாகாளி என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார், RK துக்கல் வழங்க, பூஜா அபர்ணா இயக்கத்தில், RKD Studios சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கிறார்!!

பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் திரைப்படமாக பிரசாந்த் வர்மா எழுதி இயக்கிய ஹனுமான் பான் இந்தியா பிளாக்பஸ்டராக வெற்றி பெற்றது. PVCU3 சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ 3வது திரைப்படத்தை அறிவித்துள்ளார். RKD Studios சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் இப்படத்தை தயாரிக்க, RK துக்கல் வழங்குகிறார். RKD Studios இந்தியாவின் முன்னணி மோஷன் பிக்சர் தயாரிப்பு, விநியோகம் மற்றும் கையகப்படுத்தும் நிறுவனமாகும், இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பில் களமிறங்குகிறது. கதை மற்றும் திரைக்கதையை பிரசாந்த் வர்மா எழுத, பெண் இயக்குநர் பூஜா அபர்ணா கொல்லுரு இப்படத்தை இயக்குகிறார். ஆன்மீகம் மற்றும் புராணங்களை சமகால சிக்கல்களுடன் கலந்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இருந்து வரும் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் மற்றும் இந்த சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகவும் அசத்தலான சூப்பர் ஹீரோவாகும்.

இப்படத்திற்கு வங்காளத்தின் வளமான கலாச்சார பின்னணியில் அமைக்கப்பட்ட “மஹாகாளி” என்ற தலைப்பை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த சக்திவாய்ந்த மற்றும் சமூகம் சம்பந்தப்பட்ட திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரே மாதிரியான கருத்துக்களை உடைத்து, அழகு தரத்தை மறுவரையறை செய்து, முக்கிய பாத்திரத்தில் கருமை நிற நடிகையால் காளி தேவியின் தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சித்தரிப்பைக் கொண்டிருக்கும்.

காளி தேவியை அதிகமாக வழிபடும் பிராந்தியமான வங்காளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், அந்நிலத்தின் சாரத்தையும் அதன் ஆழமான வேரூன்றிய மரபுகளையும், அதிர்ச்சியூட்டும் காட்சியமைப்புகள் மற்றும் உணர்வுப்பூர்வமாக ஈர்க்கும் கதையுடன் படம்பிடிக்கும்.

அறிவிப்பு போஸ்டரில் ஒரு பெண், புலியின் தலையை மெதுவாகத் தொடும் காட்சி இடம்பெற்றுள்ளது. பின்புலத்தில் குடிசைகளும் கடைகளும் தெரிகின்றன, மக்கள் பீதியில் ஓடுகிறார்கள். ஒரு பெர்ரிஸ் சக்கரம் தீப்பிழம்புகளில் காணப்படுகிறது. பெங்காலி எழுத்துருவில் வடிவமைக்கப்பட்ட டைட்டில் போஸ்டர் நடுவில் வைரம் போன்ற வடிவத்தைக் காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, அந்த பிரம்மாண்டத்தில், போஸ்டர் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது.

காளி தேவியின் கடுமையான மற்றும் இரக்க குணத்தால் ஈர்க்கப்பட்ட, அதிகாரம், நம்பிக்கை ஆகியவற்றின் காவியப் பயணமாக “மஹாகாளி” இருக்கும். இத்திரைப்படம் அவரது தெய்வீக சக்தியை மட்டுமல்ல, பாகுபாடு, உள் வலிமை மற்றும் ஒருவரின் அடையாளத்தை மீட்டெடுப்பது போன்ற கருப்பொருள்களையும் தொடும், இது பெரும்பாலும் கருமையான சருமத்தின் மதிப்பை மறுவரை செய்யும்.

இந்தியப் பெண்களின் பன்முகத்தன்மை மற்றும் அவர்களின் அடங்காத மனப்பான்மை ஆகியவற்றைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திரைப்படம், ஒருவரின் அடையாளத்தை முழுமையாகத் தழுவுவதில் உள்ள வலிமையை எடுத்துக்காட்டுகிறது. சமூக நெறிமுறைகளுக்கு சவால் விடும் வகையிலும், ஒதுக்கப்பட்ட அல்லது குறைவான பிரதிநிதித்துவம் பெற்றவர்களுக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாகச் செயல்படும் வகையிலும் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு இணைந்து பணியாற்றுகிறார்கள். ஸ்மரன் சாய் இசையமைக்க, ஸ்ரீ நாகேந்திரா தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். படத்தின் நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

“மஹாகாளி” திரைப்படத்தை, இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஐமேக்ஸ் 3டியில் கண்டுகளிக்கலாம். இந்த யுனிவர்ஸில் “ஹனுமான்” சமீபத்தில் ஜப்பானில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

“மகாகாளி” வெறும் திரைப்படம் அல்ல. இது உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவத்தை நோக்கிய இயக்கம்!

தொழில்நுட்பக் குழு:
எழுத்து : பிரசாந்த் வர்மா
இயக்கம் : பூஜா அபர்ணா கொல்லுரு
தயாரிப்பாளர்: ரிஸ்வான் ரமேஷ் துக்கல் வழங்குபவர்: RK துக்கல்
பேனர்: RKD Studios
இசை: ஸ்மரன் சாய்
கிரியேட்டிவ் டைரக்டர்: சினேகா சமீரா
ஸ்கிரிப்டிங் பார்ட்னர்: ஸ்கிரிப்ட்ஸ்வில்லே
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஸ்ரீ நாகேந்திர தங்காலா
எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர்: வெங்கட் குமார் ஜெட்டி
விளம்பர வடிவமைப்புகள்: அனந்த் கஞ்சர்லா
மக்கள் தொடர்பு : யுவராஜ்

ZEE5 ல் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும், மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸ்

மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது

ஐந்தாம் வேதம் உண்மையா? அது என்னவென்று தெரிந்துகொள்ள, புதிய உலகிற்குள் மூழ்குங்கள்,  இதோ  ‘ஐந்தாம் வேதம்’  சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது!!

மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா, மீண்டும் ஐந்தாம் வேதம்  எனும் ஒரு அதிரடி புராண சாகச திரில்லருடன் வருகிறார்!

ரசிகர்களின் நீண்டகால காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! பரபரப்பான மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த, ஐந்தாம் வேதம் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது.  90களின் புகழ்பெற்ற  புராண சாகச  திரில்லரான ‘மர்மதேசம்’ புகழ் இயக்குநர் நாகா இயக்கியிருக்கும்,  ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின்  அசத்தலான  டீசரை ZEE5  வெளியிட்டுள்ளது. அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இந்தப் புராணத் தொடரில், சாய் தன்சிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.  தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த சீரிஸ் ஸ்ட்ரீமாகவுள்ளது.

விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இந்த சீரிஸின் டீசர், சீரிஸின் மீதான ஆவலை பன்மடங்கு அதிகப்படுத்தி இருக்கிறது.

அனு தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, வாரணாசிக்கு செல்லும் ஒரு பயணத்தில் இந்தக்கதை தொடங்குகிறது.  வழியில், ஒரு மர்மமான நபரை அவள் சந்திக்கிறாள், அவர் ஒரு பழங்கால நினைவுச்சின்னத்தை அவளிடம் ஒப்படைக்கிறார், அதைத் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சாமியாரிடம் ஒப்படைக்கும்படி கூறுகிறார் – ஐந்தாம் வேதத்தின் ரகசியம் அடங்கிய அந்தப் பொருள் பல பல ரகசியங்களை உடைக்கிறது.  தயங்கியபடி அந்தப் பணியை ஏற்றுக்கொள்ளும் அனு, பல சிக்கல்களுக்கு உள்ளாகிறாள். மேலும் பலரும் அந்தப் பொருளை அடைய போராடுவது அவளுக்கு தெரிய வருகிறது. பல ஆபத்துகளும் அவளை சூழ்கிறது. இந்தத் தடைகளைத் தாண்டி அவள் தன் பயணத்தில் வெற்றி அடைந்தாளா? என்பது தான் ஐந்தாம் வேதத்தின் கதைக்களம். ZEE5 இல் அக்டோபர் 25 ஆம் தேதி ஸ்ட்ரீமாகும் ஐந்தாம் வேதம் சீரிஸின் மூலம்  மர்மங்கள் அடங்கிய புதிய சாகசத்தில் இணையுங்கள்!

ZEE5 வேதா, சம்விதன் கா ரக்ஷக் திரைப்படத்தை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது ! தசரா பண்டிகை நாளில், கொண்டாட்டத்திற்குத் தயாராகுங்கள் !

~ நிகில் அத்வானி இயக்கத்தில், ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில், ஜான் ஆபிரகாம், ஷர்வரி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் நடித்துள்ளனர்.~

இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, அக்டோபர் 10 அன்று ‘வேதா, சம்விதன் கா ரக்ஷக்’ திரைப்படத்தினை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது. ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தினை, முன்னணி இயக்குநர் நிகில் அத்வானி இயக்கியுள்ளார். இந்த அதிரடி திரைப்படத்தில், நடிகர் ஜான் ஆபிரகாம், ஷர்வரி, அபிஷேக் பானர்ஜி, தமன்னா பாட்டியா மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘வேதா’ ஒரு உறுதியான தலித் பெண்ணின் பயணத்தை விவரிக்கிறது மற்றும் சாதி அடிப்படையிலான அநீதிகள் மற்றும் குற்றங்களின் அழுத்தமான பிரச்சினைகளைத் தைரியமாகப் பேசுகிறது. இந்த தசரா பண்டிகையில், அக்டோபர் 10 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமாகத் தொடங்கும், ‘வேதா, சம்விதன் கா ரக்ஷக்’ இன் இந்த உற்சாகமூட்டும் மற்றும் உணர்ச்சிகரமான பயணத்தைத் தவறவிடாதீர்கள்.

வேதா, சம்விதன் கா ரக்ஷக் கதைக்களம் மேஜர் அபிமன்யு கன்வர் [ஜான் ஆபிரகாம்], கோர்ட் மார்ஷியல் ராணுவ அதிகாரியின் பார்வையில் விரிகிறது, நீதிக்கான இடைவிடாத தேடலில் உள்ள உறுதியான தலித் பெண்ணான வேதா [ஷர்வரி] உடன் இணைந்து பயணிக்கிறார் அபிமன்யு.
கிராமத்தின் தலைவர் அபிஷேக் பானர்ஜி தலைமையில் இயங்கும் கிராமத்தின் ஆழமான வேரூன்றிய சமூக சவால்களை இருவரும் எதிர்கொள்கின்றனர், அவர்கள் வலிமிகுந்த உண்மைகளை வெளிக்கொண்டுவரப் பல சக்திகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள். இந்த திரைப்படம் இந்த வலி மிகுந்த பயணத்தின் பக்கங்களைக் காட்டுகிறது.

நிகில் அத்வானியின் இயக்கத்தில், வேதா, சம்விதன் கா ரக்ஷக், திரைப்படத்தில் தீவிரமான ஆக்‌ஷனுடன் ஒரு தீவிரமான சமூகச் செய்தியும் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த தசராவில், பார்வையாளர்கள் அக்டோபர் 10 முதல் ZEE5 இல் வேதா, சம்விதன் கா ரக்ஷக் படத்தினை இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் கண்டுகளிக்கலாம்.

ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில்,
‘வேதா’ சக்தி வாய்ந்த கதை மற்றும் ஆக்கப்பூர்வமான கதைசொல்லல் மூலம் அழுத்தமான சமூகப் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதை ZEE5 உடன் இணைந்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். சமூக நியாயம் மற்றும் சாதிய ரீதியலான பிரச்சனைகளைப் பற்றிய அர்த்தமுள்ள உரையாடல்களை ‘வேதா’ திரைப்படம் பேசும். தரமான, மிகச்சிறப்பான படைப்புகளை வழங்கி வரும் ZEE5 இன் அர்ப்பணிப்புமிக்க பயணத்தில், அவர்களுடன் இணைந்து, இந்த உணர்வுப்பூர்வமான படைப்பை வழங்குவது மகிழ்ச்சி. இப்படைப்பு சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தையும் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

ஜீ ஸ்டுடியோவின் CBO, உமேஷ் Kr பன்சால் கூறுகையில்..,
“வேதா’ இப்போது ZEE5 இல் வெளியிடப்படுவதால், இந்த வலிமைமிக்க கதை இன்னும் பரந்த பார்வையாளர்களைச் சென்றடையும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உணர்வுப்பூர்வமான கதை மற்றும் வலுவான கருத்துக்கள் இப்படம் மூலம், பார்வையாளர்களிடம் ஆழமாக எதிரொலிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தயாரிப்பாளர், மது போஜ்வானி, எம்மே என்டர்டெயின்மென்ட் கூறுகையில்..,
“வேதாவை அதன் ZEE5 டிஜிட்டல் பிரீமியர் மூலம் இன்னும் பெரிய பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கான பயணத்தை நாங்கள் தொடங்கியபோது, ​​அதிகாரத்திற்கு எதிரான எளிய மக்களின் பயணத்தைச் சொல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்தோம், மேலும் இந்த டிஜிட்டல் வெளியீட்டின் மூலம் இந்த உரையாடலில் மேலும் பலர் இணைவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இயக்குநர் நிகில் அத்வானி கூறுகையில்..,
“வேதா திரைப்படம் பொழுதுபோக்கு மட்டுமல்ல, பல முக்கியமான விஷயங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் என்று நம்புகிறேன். ஆரம்பம் முதலே, இந்த படத்தின் நோக்கம் அர்த்தமுள்ள உரையாடல்களைத் தூண்டும் என்பதாகவே இருந்தது, Zee5 இல் படத்தின் வெளியீட்டின் மூலம் பார்வையாளர்கள் இதன் ஆழமான செய்தியை உணர்வார்கள் என நம்புகிறேன்.

நடிகர் ஜான் ஆபிரகாம் கூறுகையில்..,
“பொழுதுபோக்குடன் மட்டுமின்றி, அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் ஒரு படத்தின் பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். வேதா, பெண்கள் தங்கள் வலிமையைத் தழுவிக்கொள்ளத் தூண்டுகிறது, மேலும் நம் அனைவரையும் ஒருவரையொருவர் ஆதரிக்கவும் உயர்த்தவும் ஊக்குவிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் இந்த திரைப்படம் மிகவும் முக்கியமானது மற்றும் அவசியமானது, இது பெண்கள் முன்னேறும்போது, ​​​​நாம் அனைவரும் முன்னேறுகிறோம் என்பதின் ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக உள்ளது. ZEE5 இன் பார்வையாளர்கள் வேதாவில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் செய்தியை, கண்டுகளிப்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்.

முன்னணி நடிகர் ஷர்வரி கூறுகையில்..,
“ZEE5 இல் ‘வேதா’ டிஜிட்டல் ரிலீஸுக்கு ஆவலாக உள்ளேன்! வேதா படத்தில் நடித்தது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. அவள் சமத்துவத்தையும் நீதியையும் நாடியவள். எழுந்து நின்று போராடும் அவளின் நெஞ்சுரத்தை இந்த பாத்திரத்தில் உணர்ந்தேன். வேதாவுக்காக இவ்வளவு அன்பையும் பாராட்டுக்களையும் பெறுவது மகிழ்ச்சி. உங்களைச் சிந்திக்க வைக்கும் ஒரு படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமையாக உள்ளது. குத்துச்சண்டை மற்றும் தற்காப்புக் கலைப் பயிற்சியின் மூலம், வேதா தனது வலிமையையும் குரலையும் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவளது எழுச்சியூட்டும் பயணத்தைப் பார்வையாளர்கள் கண்டுகளிப்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்.

அக்டோபர் 10 முதல் ZEE5 இல் பார்வையாளர்கள் ‘வேதா, சம்விதன் கா ரக்ஷக்’ திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்!

மேலும் சமூகவலைதளங்களில் ZEE5 ஐ தொடர :


https://www.facebook.com/ZEE5

https://www.instagram.com/zee5

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் “1000 பேபிஸ்” டிரெய்லர் வெளியாகியுள்ளது !!

மலையாள ஒரிஜினல் படைப்புகளைச் சிறப்பிக்கும் வகையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் ஐந்தாவது ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸ் “1000 பேபிஸ்” சீரிஸை வழங்குகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த சீரிஸின் புதிய டிரெய்லர், தனித்துவமான கதை சொல்லல் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் என, ஆவலைத்தூண்டும் பரபரப்பான உலகை நமக்குக் காட்டுகிறது. இந்த சீரிஸ் அக்டோபர் 18 முதல் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

இந்த பரபரப்பான சீரிஸில், புகழ்பெற்ற நடிகர்களான நீனா குப்தா மற்றும் ரகுமான் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். சஞ்சு சிவராம், அஷ்வின் குமார், அடில் இப்ராஹிம், ஷாஜு ஸ்ரீதர், இர்ஷாத் அலி, ஜாய் மேத்யூ, வி.கே.பி, மனு எம் லால், ஷாலு ரஹீம், சிராஜுதீன், நாசர், டெயின் டேவிஸ், ராதிகா ராதாகிருஷ்ணன், விவியா சாந்த், நஸ்லின், திலீப் மேனன், தனேஷ் ஆனந்த், ஸ்ரீகாந்த் முரளி, ஸ்ரீகாந்த் பாலச்சந்திரன், மற்றும் ராதா கோமதி ஆகியோர் முக்கிய வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த சீரிஸை இயக்குநர் நஜீம் கோயா இயக்கியுள்ளார், நஜீம் கோயா , அரூஸ் இர்பான் இணைந்து வசனம் எழுதியுள்ளார்கள். ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் சார்பில், ஷாஜி நடேசன் மற்றும் ஆர்யா ஆகியோர் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளனர். ஃபைஸ் சித்திக்கின் அற்புதமான ஒளிப்பதிவு மற்றும் சங்கர் ஷர்மாவின் வசீகரிக்கும் இசையுடன்,தனுஷ் நாயனாரின் சிறந்த ஒலி வடிவமைப்பு மற்றும் ஃபசல் A பேக்கரின் ஒலி கலவையில், “1000 பேபிஸ்” சஸ்பென்ஸ், மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன், புதுமையான அனுபவம் தரும் சீரிஸாக உருவாகியுள்ளது.

கலை இயக்கம் ஆஷிக் எஸ், ஒப்பனை அமல் சந்திரன், உடைகள் அருண் மனோகர், ஸ்டில் போட்டோகிராஃபி சந்தோஷ் பட்டாம்பி, இணை இயக்கம் ஜோமன் ஜோஷி திட்டயில் மற்றும் நியாஸ் நிசார், தலைமை இணை இயக்கம் சுனில் காரியட்டுகர ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பங்கேற்றுள்ளனர்.

“1000 பேபிஸ்” சீரிஸ் அக்டோபர் 18 முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் ஸ்ட்ரீமாகிறது, இதன் மூலம் இந்தியா முழுவதும் பரந்த பார்வையாளர்கள் தங்கள் மொழியில் இந்த சீரிஸை பார்த்து ரசிக்கலாம்.

நீங்கள் இதுவரை டிரெய்லரைப் பார்க்கவில்லை எனில், இங்கே பார்க்கவும்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வரும் அக்டோபர் 11 முதல், இயக்குநர் மாரி செல்வராஜின் சூப்பர்ஹிட் படமான “வாழை” திரைப்படத்தினை ஸ்ட்ரீம் செய்கிறது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், வரும் அக்டோபர் 11 ஆம் தேதி முதல், இயக்குநர் மாரி செல்வராஜின் ப்ளாக்பஸ்டர் வெற்றித்திரைப்படமான “வாழை” திரைப்படத்தை ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம், இயக்குநர் மாரி செல்வராஜின் மிகச்சிறந்த படைப்பாக அனைவராலும் கொண்டாடப்பட்டது.

இயக்குநர் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, இதயத்தைத் தொடும் ஒரு அற்புதமான படைப்பாக உருவாக்கப்பட்ட இப்படம், உலகம் முழுவதும் உள்ள விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது.

தன் விதவை தாய் (ஜானகி) மற்றும் அவரது மூத்த சகோதரி வேம்பு (திவ்யா துரைசாமி) ஆகியோருடன் வசிக்கும் இளம் சிறுவன் சிவனைந்தனின் (பொன்வேல்) வாழ்க்கையைச் சுற்றி, இப்படத்தின் கதை சுழல்கிறது.

சிவனைந்தனின் தாய் மற்றும் சகோதரி இருவரும் வாழை வயல்களில் கூலிகளாக கடுமையாக உழைக்கிறார்கள், மேலும் சிறுவன் சிவனைந்தனும் பள்ளி விடுமுறை தினங்களில், அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.

ஒரு நாள், சிவனைந்தனின் தாயார் நோய்வாய்ப்பட்டு, அவருக்குப் பதிலாக தனது இளம் மகனை வேலைக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் வாழை.

இப்படத்தில் குழந்தை நட்சத்திரமான பொன்வேல் கதாநாயகனாக நடித்துள்ளார் மற்றும் நடிகர்கள் நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் கலையரசன் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர் மற்றும் இசை சந்தோஷ் நாராயணன். கலை இயக்கம் குமார் கங்கப்பன் மற்றும் படத்தொகுப்பு சூர்யா பிரதாமன் ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.

முழுக்க முழுக்க திருநெல்வேலியில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், மாரி செல்வராஜின் முந்தைய படங்களைப் போலவே, அப்பகுதி மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை, ஆழமாக பிரதிபலிக்கிறது.

Indo Cine Appreciation Foundation’s (ICAF’s) Chennai International Film Festival (CIFF) Signs MoU with Ethiraj College for Women Chennai

Date – 8th October, 2024

Chennai, October 8, 2024: The Indo Cine Appreciation Foundation’s (ICAF’s) Chennai International Film Festival, Chennai, and Ethiraj College for Women have signed a landmark Memorandum of Understanding (MoU) at 9:30 AM today in the Ethiraj College premises. This partnership aims to promote and enhance film education and appreciation among students through various initiatives.

The MoU was signed by Mr. AVM K. Shanmugam, General Secretary and Festival Director of ICAF/CIFF and Thiru. V.M. Muralidharan, Chairman of Ethiraj College, and, in the presence of Dr. S. Uma Gowrie, Principal, and Secretary, Ms. M. Vijaya, Vice-Principal (Aided), Mr. S. Prakash, Treasurer of ICAF and Ms. Abhinaya. G, Executive Committee Member, ICAF, marked the beginning of a collaboration that will provide students with exposure to the art and culture of cinema through film screenings, workshops, guest lectures, and film festivals hosted in collaboration with Chennai International Film Festival.

Ethiraj College for Women is committed to broadening the educational experience of its students, and this MoU underscores its dedication to fostering a holistic learning environment. ICAF, a renowned organization promoting film culture in India, is excited to bring its wealth of knowledge and expertise to the next generation of cinephiles. ICAF has been hosting the Chennai International Film Festival (CIFF) for the past 21 years, creating a platform for diverse voices in world cinema.

As part of its vision for the Chennai International Film Festival 2024, ICAF aims to engage more student audiences, recognizing the importance of nurturing young minds through cinematic education. This year’s festival will focus on connecting with a wider student crowd by hosting special screenings, masterclasses, and interactive sessions that bridge academic learning and film appreciation. Chennai International Film Festival, showcasing over 100 films from 50+ countries, continues to be a vibrant celebration of global cinema, inviting students to explore the power of film as an educational and cultural medium.

நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு

முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் தயாராகி வரும் ‘சூர்யா 44’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 44’ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகியிருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் ,ஊட்டி, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது. விரைவில் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், டைட்டிலுக்கான மோசன் போஸ்டர்… என படத்தைப் பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் தொடர்ந்து வெளியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே படத்தின் நாயகனான நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்திற்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டது என்பதும், அதில் நடிகர் சூர்யாவின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால்.. அந்த காணொளி நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.‌

NESCAFÉ Sunrise unveils new campaign honouring coffee farmers

NESCAFÉ Sunrise has launched a campaign to celebrate coffee farmers and honour their dedication and relentless efforts in growing coffee. The campaign pays a tribute to the love and commitment with which these farmers work in their fields, to grow high quality coffee. It also highlights their association with Nestlé agronomists, who work closely with these farmers, as a part of the NESCAFÉ Plan.

The NESCAFÉ Plan, introduced in India in 2012 goes beyond coffee. It aims at developing good agricultural practices, sustainable management of landscapes, and enhancing biodiversity in coffee farms. It blends the valuable traditional knowledge of coffee cultivation with modern scientific practices to aid sustainable growth of coffee in the region. Nestlé India works closely with around 5,000 coffee farmers in Karnataka, Tamil Nadu, and Kerala through the NESCAFÉ Plan.

Talking about the campaign, Mr. Sunayan Mitra, Director, Coffee and Beverages business, Nestlé India, said “Behind every delightful cup of Nescafé, there are coffee farmers whose hard work and dedication contribute to the exceptional taste of our coffee. On this International Coffee Day, we pay tribute to these remarkable farmers by sharing their stories on our jars and through this beautiful campaign crafted with love by our teams at Nestlé and Dentsu Creative Webchutney. The coffee farmers are the backbone for our NESCAFÉ Plan. They have helped us gain immense consumer love and trust for our brands by upholding the safety and quality of our products. This campaign is a homage to their perseverance and dedication, and I hope that it will be appreciated by our consumers.”

Mr. Vidya Sankar, Senior Vice President, Dentsu Creative said “This campaign is centred on the hard work of coffee farmers and the collaborative work between Nestlé India and the coffee farmers. It also shines the spotlight on the contributions made by coffee farmers to our society and how they impact the consumer’s experience while they enjoy a delicious cup of Nescafé Sunrise. Set amidst verdant green coffee plantations in Coorg, the film is an ode to every coffee farmer, the backbone of the coffee industry.”

The film has been directed by Mr. George K Antoney and produced by Kadhai Films.

As a part of the campaign, NESCAFÉ Sunrise has released 5 new packs with the pictures of 5 coffee farmers from the coffee-growing region in Karnataka, who are a part of NESCAFÉ Plan. These packs also have a QR Code. Once scanned, these QR codes further narrate the stories of these farmers and their journey with Nestlé India.