’கல்கி 2898 கி.பி’ திரைவிமர்சனம்



மகாபாரத குருசேத்திர போர் நடந்து முடிந்து 6000 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் கல்கியின் கதையை திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
உலகம் பலவிதமான அழிவுகளுக்கு பிறகு கலிகாலம் தொடங்கி உலகம் முற்றிலும் அழிந்துவிட்டது.கடைசியாக காசி என்ற ஒரு நகரம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது.மிச்சம் இருக்கும் உயிர்களை சுப்ரீம் என அழைக்கப்படும் கமல்ஹாசன் மட்டும் அனைவரையும் கொடுங்கோள் ஆட்சி நடத்தி வாழ்ந்து வருகிறார்.
மறுபக்கம் பணம் மற்றும் வசதி படைத்த மக்கள் மட்டும் செல்வ செழிப்பான எல்லா வசதிகளும் உடைய `காம்பிளக்ஸ்’ என்ற தனி உலகில் வாழ்ந்து வருகின்றனர்.இந்த உலகில் பணம் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
பிரபாஸ், காசியில் வாழ்ந்து வரும் நிலையில் தன் எப்படியாவது அதிகளவில் பணத்தை சேர்த்து எப்படியாவது காம்பிளக்ஸ் உலகில் நுழைந்து விடவேண்டும் என கனவுடன் வாழ்ந்து வருகிறார்.இதற்காக எந்த ஒரு எல்லைக்கும் சென்று பணம் சம்பாதிப்பதற்கு தயாராக இருக்கிறார்.
இதற்கிடையே காம்பிளக்ஸ் உலகில் தன்னிடம் அடிமையாக உள்ள பெண்களின் கருவில் தொடர்புகளை சுமக்க வைத்து அந்தக் கருவில் இருக்கும் சீரத்தை சுப்ரீம் கமல்ஹாசன் 150 நாட்களுக்கு மேல் கருவில் இருக்கும் சீரத்தை தேடி வருகிறார். கமல்ஹாசன் தேடும் சீரம் கதாநாயகி தீபிகா படுகோனேவின் கருவில் இருப்பதை அறியும் அந்த சீரத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள்.அந்த நிலையில் தீபிகா படுகோனே தப்பித்து விடுகிறார்.
தீபிகா படுகோனை எப்படியாவது கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு காம்ப்ளெக்ஸ் சுப்ரீம் கமல்ஹாசன் மிகப்பெரிய தொகைத்தரப்படும் என அறிவிக்க, பிரபாஸ் கதாநாயகி தீபிகா படுகோனை தேடி கண்டுபிடித்து சுப்ரீமிடம் ஒப்படைத்து அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய தொகையை பெற்றுக்கொண்டு காம்ப்ளக்ஸில் நுழைய வேண்டும் என்ற அவருடைய நீண்ட நாள் கனவை அடைய நினைக்கிறார்.
கதாநாயகி தீபிகா படுகோனேவை பிடித்து கொடுத்து காம்ப்ளக்ஸ் என்ற உலகத்திற்கு கதாநாயகன் பிரபாஸ் நுழைந்தாரா? நுழையவில்லையா? கதாநாயகி தீபிகா படுகோனேவின் கருவில் இருக்கும் சீரத்தை சுப்ரீம் உலக நாயகன் கமலஹாசன் அடைய நினைக்க காரணம் என்ன? என்பதுதான் இந்த கல்கி 2898 AD திரைப்படத்தின் மீதிக்கதை.
கல்கி 2898 AD திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் நடித்திருக்கிறார்கள்.
இந்த வயதிலும் அமிதாப் பச்சனின் நடிப்பு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்கள்.
கதாநாயகி தீபிகா படுகோன் அடிமைத்தனமாக வாழும் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியுள்ளார்.
தன் கருவில் இருக்கும் தனது குழந்தைக்கு ஏன் இவ்வளவு ஆபத்து என்று தெரியாமல் பதறும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், ராஜமௌலி ராமகோபால் வர்மா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் கவுரவ தோற்றத்தில் ஓரிரு காட்சிகளில் வருகின்றனர்.
ஒளிப்பதிவாளர் டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு முலம் மிகப்பெரிய அளவில் அசத்தியிருக்கிறார்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறார்.
மகாபாரதம் கதைகளுக்குள் இதிகாசக் கதையை சைன்ஸ் ஃபிக்ஷன் காட்சி அமைப்புகளோடு இணைத்து நம்பவே முடியாத அளவிற்கு ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின்.
மேட்மேக்ஸ், பிளாக் பாந்தர் போன்ற ஹாலிவுட் திரைப்படத்தின் இருந்து சாயல்களை இந்தத் திரைப்படத்திலும் அதிகளவில் காணமுடிகிறது.
இந்த திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள், பிரமிக்க வைக்கும் அளவிற்கு ஒரு நகரத்தை வடிவமைப்பு மக்களை ஆச்சரியப்படும் வகையில் அமைந்திருப்பதற்கு இந்த திரைப்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு மிகப்பெரிய அளவில் அமைந்திருக்கிறது.
ஒரு நல்ல திரைப்படத்திற்கு மிக மிக முக்கியம் ஒரு நல்ல கதை அதன்பிறகு அந்த கதையில் உள்ள கதாபாத்திரங்களை வாழவைப்பதற்கு நடிகர்கள் அந்த நடிகர்களுக்கு கதையில் உருவாக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களின் தோற்றங்கள் மற்றும் உடைகள் இது மிக மிக முக்கியமானது.
இந்த கல்கி 2898 கிபி திரைப்படத்தில் 6000 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையில் கதாநாயகன் மற்றும் நடிகர்கள் அனைவருமே தற்போது உள்ள காலகட்டங்கள் போல் இருக்கிறார்கள் இது இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக அமைந்திருக்கிறது.