Breaking
January 22, 2025

May 2024

THE GARFIELD MOVIE-THE GARFIELD MOVIE

CURTAIN RAISER

Basically, Garfield is an American comic strip created by Jim Davis which chronicles the life of the title character Garfield the cat, his human owner Jon Arbuckle, and Odie the dog. So far, 5 movies have hit the screens in the Garfield franchise-Garfield: The Movie (2004), Garfield: A Tail of 2 Kitties (2006), Garfield Goes Real (2007), Garfield’s Fun Fest (2008) & Garfield’s Pet Force (2009). The Garfield Movie is the 6th in the series.

SYNOPSIS

Garfield (voiced by Chris Pratt), the world-famous indoor cat, is about to have a wild outdoor adventure! After an unexpected reunion with his long-lost father – a street cat Vic (voiced by Samuel L. Jackson) – Garfield and his dog friend Odie (voiced by Harvey Guillen) are forced from their perfectly pampered life into joining Vic in a hilarious, high-stakes heist!

CREDITS

Directed by-Mark Dindal

Based on the televise                         Based on the comic strip, Garfield by Jim Davis

Voice

Edited by- Mark Keefer

Music by-John Debney

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்”

விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்..

இயக்குநர் தயாரிப்பாளர் முருகன் பேசியதாவது..
இந்த திரைப்படம் பல இன்னல்களுக்கிடையில் உருவான திரைப்படம். பல வருடக் கனவு இது. இப்படத்தின் அனைத்து கலைஞர்களும் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்து உழைத்தார்கள், அவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைத்து திரைக் கலைஞர்களுக்கும் நன்றி. விநியோகஸ்தர் காசிநாதன் மற்றும் கண்ணன் சார் படம் பார்க்காமலே விநியோகிக்க ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு நன்றி. இப்படம் முடிவதற்கு பணம் தந்தவர்கள் சடையாண்டி கஜேந்திரன், விஸ்வை கருப்பசாமி இருவர் தான். அவர்களால் தான் இப்படம் சாத்தியமானது. அவர்களுக்கு என் மிகப்பெரிய நன்றிகள். இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும். அனைவருக்கும் என் நன்றிகள்.

இசையமைப்பாளர் விவேக் சரோ பேசியதாவது..
இது என் முதல் படம், நான் பல டீவி விளம்பர்ங்கள் நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்திருந்தாலும், திரைப்படம் என்பது மிகப்பெரிய விசயமாகத்தான் இருக்கிறது. இந்தப்படம் என்னால் முடியும் என நம்பி, என்னிடம் ஒப்படைத்த இயக்குநர் தயாரிப்பாளர் முருகனுக்கு நன்றி. இந்தப்படத்திற்காக 4,5 முறை மாற்றி, மாற்றி இசையமைத்துள்ளேன். இதுவரை பார்த்தவர்கள் எல்லோரும் பாராட்டியுள்ளார்கள் உங்களுக்கும் பிடிக்குமென நம்புகிறேன். நடிகர் வெற்றிக்கு இந்தப்படம் மிக வித்தியாசமானதாக இருக்கும். இதுவரை பார்த்திராத வெற்றியைப்
பார்க்கலாம். படம் கண்டிப்பாக மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும். மே 24 ஆம் தேதி படம் வருகிறது ஆதரவு தாருங்கள்.

நடிகை விஷ்ணு பிரியா பேசியதாவது..,
எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. நல்ல கதாப்பாத்திரம் மிக நல்ல அனுபவமாக இருந்தது. படத்தில் அனைவருமே எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஜனரஞ்சகமான படமாக இருக்கும், பார்த்து ஆதரவு தாருங்கள் அனைவருக்கும் நன்றி..

நாயகி அக்ஷயா கந்தமுதன்
பேசியதாவது..,
எனக்கு இயக்குநர் முருகன் அண்ணாவை பர்ஸனலாகவே தெரியும். மிகத் திறமையானவர். சினிமா மீது காதல் கொண்டவர். என்னை நம்பி இந்த கதாப்பாத்திரத்தைத் தந்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் உழைத்த அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்தனர். நிறைய இரவுக்காட்சிகள் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கினோம். வெற்றி சார் இந்தபடத்தில் மிக வித்தியாசமாக நடித்துள்ளார். அவர் இந்தப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். இந்தப்படம் எனக்கு கனவுப்படம். இரண்டு வருட உழைப்புக்கு பிறகு வரும் படம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது..,
ஒவ்வொருவரும் பேசும்போது இப்படம் சிரமப்பட்டு எடுத்ததாக சொன்னார்கள். சினிமா என்பது சாதாரணமில்லை, தாயின் பிரசவ வேதனைக்கு நிகரானது. சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து சாதித்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும். நடிகர் வெற்றி மிக தனித்துவமானவராக, தனக்கு பிடித்த நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். எல்லாவற்றையும் தாண்டி இத்தனை புதுமுகங்களுடன் இணைந்து பணியாற்றுவதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். இன்று முழுக்கதையும் சொல்லும் தைரியம் இயக்குநர்களிடம் இல்லை. இம்மாதிரி சூழ்நிலையில் நல்ல கதைகளை தேடி, தேர்ந்தெடுத்து நடிக்கும் வெற்றிக்கு வாழ்த்துக்கள். டிரெய்லரிலேயே படத்தின் தரம் தெரிகிறது. இப்படத்தை உண்மையான அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கும் குழுவிற்கும் என் வாழ்த்துகள். படம் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசியதாவது…
இந்தக்குழுவில் யாரையுமே எனக்கு தெரியாது. நேற்று என் நண்பர், ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மூலம் இந்தபடத்தின் குழுவினரைச் சந்தித்தேன். 15 வருடங்களாக கோடம்பாக்கத்தில் நடிகராக அலைந்தவர் தான் முருகன். இவர் மாதிரி பலரை பார்த்திருக்கிறேன். இன்னும் கனவுகளோடு அலையும் மனிதர்களின் சோகம் சொல்ல முடியாதது. அப்படி இருந்த முருகன் தனக்கான வாய்ப்பைத் தானே உருவாக்க எண்ணி இந்தப்படத்தை எடுத்துள்ளார். அதிலும் வித்தியாசமான படங்கள் மட்டுமே செய்யும் வெற்றியை ஒப்புக்கொள்ள வைத்துள்ளார், அதிலேயே ஜெயித்து விட்டார். வாய்ப்புகள் தந்து புதியவர்களை உருவாக்கியவன் சின்ன வயதுக்காரன் என்றாலும் அவன் குருவாகிவிடுவான் அந்த வகையில் வெற்றி குரு தான். இந்த புதிய முகங்கள் எல்லோரும் இணைந்து தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சியை ஊட்டட்டும் என வாழ்த்துகிறேன். இந்தப்படத்திற்கு என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது…
பகலறியான் என்றால் பகலை பார்க்காதவன் என்பது தான் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள். சினிமாவில் இசையமைப்பாளர்கள் எப்போதும் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள். ஒரு இரவில் நடக்கும் கதையை பரபரப்பாக படமாக்கியுள்ளார்கள். நடிகர் வெற்றி தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் கதைகள் வியப்பைத் தருகிறது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து ஜெயிக்கிறார். ஒரு புதுமையான கதையில் அர்ப்பணிப்போடு உழைத்திருக்கும் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் வெற்றி பேசியதாவது…
எங்களை மதித்து எங்களை வாழ்த்த வந்த ஜாம்பவான்களுக்கு நன்றி. இந்தப்படம் முழுக்க முழுக்க ஒரு நாள் இரவில் நடக்கும் கதை. நண்பர் கிஷோர் மூலம் தான் இந்தப்படம் கிடைத்தது. கதை சொன்ன போதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது, உடனே நான் செய்கிறேன் என ஒப்புக்கொண்டேன். ஒளிப்பதிவாளர் அபிலாஷ் இந்தப்படத்திற்கு பிறகு, பெரிய அளவில் பேசப்படுவார். பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எல்லோரும் படத்தின் பட்ஜெட்டை புரிந்துகொண்டு, படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். நல்ல படத்திற்கு ஆதரவு தரும் பத்திரிக்கை நண்பர்கள் இந்தப்படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள வெற்றி, இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், பிரபல நடிகர் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கான மூலக்கதை கிஷோர்குமார் எழுதியுள்ளார். விவேக் சரோ இசையமைக்க, அபிலாஷ் PMY ஒளிப்பதிவு செய்துள்ளார் மேலும், கோபி கருணாநிதி கலை வடிவமைப்பாளராகவும், ராம் குமார் சண்டை பயிற்சியாளராகவும் இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

பகலறியான் தமிழ் த்ரில்லர் படங்களில் முக்கியமானதாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வரும் மே 24 ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்”

விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்..

இயக்குநர் தயாரிப்பாளர் முருகன் பேசியதாவது..
இந்த திரைப்படம் பல இன்னல்களுக்கிடையில் உருவான திரைப்படம். பல வருடக் கனவு இது. இப்படத்தின் அனைத்து கலைஞர்களும் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்து உழைத்தார்கள், அவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைத்து திரைக் கலைஞர்களுக்கும் நன்றி. விநியோகஸ்தர் காசிநாதன் மற்றும் கண்ணன் சார் படம் பார்க்காமலே விநியோகிக்க ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு நன்றி. இப்படம் முடிவதற்கு பணம் தந்தவர்கள் சடையாண்டி கஜேந்திரன், விஸ்வை கருப்பசாமி இருவர் தான். அவர்களால் தான் இப்படம் சாத்தியமானது. அவர்களுக்கு என் மிகப்பெரிய நன்றிகள். இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும். அனைவருக்கும் என் நன்றிகள்.

இசையமைப்பாளர் விவேக் சரோ பேசியதாவது..
இது என் முதல் படம், நான் பல டீவி விளம்பர்ங்கள் நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்திருந்தாலும், திரைப்படம் என்பது மிகப்பெரிய விசயமாகத்தான் இருக்கிறது. இந்தப்படம் என்னால் முடியும் என நம்பி, என்னிடம் ஒப்படைத்த இயக்குநர் தயாரிப்பாளர் முருகனுக்கு நன்றி. இந்தப்படத்திற்காக 4,5 முறை மாற்றி, மாற்றி இசையமைத்துள்ளேன். இதுவரை பார்த்தவர்கள் எல்லோரும் பாராட்டியுள்ளார்கள் உங்களுக்கும் பிடிக்குமென நம்புகிறேன். நடிகர் வெற்றிக்கு இந்தப்படம் மிக வித்தியாசமானதாக இருக்கும். இதுவரை பார்த்திராத வெற்றியைப்
பார்க்கலாம். படம் கண்டிப்பாக மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும். மே 24 ஆம் தேதி படம் வருகிறது ஆதரவு தாருங்கள்.

நடிகை விஷ்ணு பிரியா பேசியதாவது..,
எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. நல்ல கதாப்பாத்திரம் மிக நல்ல அனுபவமாக இருந்தது. படத்தில் அனைவருமே எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஜனரஞ்சகமான படமாக இருக்கும், பார்த்து ஆதரவு தாருங்கள் அனைவருக்கும் நன்றி..

நாயகி அக்ஷயா கந்தமுதன்
பேசியதாவது..,
எனக்கு இயக்குநர் முருகன் அண்ணாவை பர்ஸனலாகவே தெரியும். மிகத் திறமையானவர். சினிமா மீது காதல் கொண்டவர். என்னை நம்பி இந்த கதாப்பாத்திரத்தைத் தந்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் உழைத்த அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்தனர். நிறைய இரவுக்காட்சிகள் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கினோம். வெற்றி சார் இந்தபடத்தில் மிக வித்தியாசமாக நடித்துள்ளார். அவர் இந்தப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். இந்தப்படம் எனக்கு கனவுப்படம். இரண்டு வருட உழைப்புக்கு பிறகு வரும் படம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது..,
ஒவ்வொருவரும் பேசும்போது இப்படம் சிரமப்பட்டு எடுத்ததாக சொன்னார்கள். சினிமா என்பது சாதாரணமில்லை, தாயின் பிரசவ வேதனைக்கு நிகரானது. சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து சாதித்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும். நடிகர் வெற்றி மிக தனித்துவமானவராக, தனக்கு பிடித்த நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். எல்லாவற்றையும் தாண்டி இத்தனை புதுமுகங்களுடன் இணைந்து பணியாற்றுவதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். இன்று முழுக்கதையும் சொல்லும் தைரியம் இயக்குநர்களிடம் இல்லை. இம்மாதிரி சூழ்நிலையில் நல்ல கதைகளை தேடி, தேர்ந்தெடுத்து நடிக்கும் வெற்றிக்கு வாழ்த்துக்கள். டிரெய்லரிலேயே படத்தின் தரம் தெரிகிறது. இப்படத்தை உண்மையான அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கும் குழுவிற்கும் என் வாழ்த்துகள். படம் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசியதாவது…
இந்தக்குழுவில் யாரையுமே எனக்கு தெரியாது. நேற்று என் நண்பர், ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மூலம் இந்தபடத்தின் குழுவினரைச் சந்தித்தேன். 15 வருடங்களாக கோடம்பாக்கத்தில் நடிகராக அலைந்தவர் தான் முருகன். இவர் மாதிரி பலரை பார்த்திருக்கிறேன். இன்னும் கனவுகளோடு அலையும் மனிதர்களின் சோகம் சொல்ல முடியாதது. அப்படி இருந்த முருகன் தனக்கான வாய்ப்பைத் தானே உருவாக்க எண்ணி இந்தப்படத்தை எடுத்துள்ளார். அதிலும் வித்தியாசமான படங்கள் மட்டுமே செய்யும் வெற்றியை ஒப்புக்கொள்ள வைத்துள்ளார், அதிலேயே ஜெயித்து விட்டார். வாய்ப்புகள் தந்து புதியவர்களை உருவாக்கியவன் சின்ன வயதுக்காரன் என்றாலும் அவன் குருவாகிவிடுவான் அந்த வகையில் வெற்றி குரு தான். இந்த புதிய முகங்கள் எல்லோரும் இணைந்து தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சியை ஊட்டட்டும் என வாழ்த்துகிறேன். இந்தப்படத்திற்கு என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது…
பகலறியான் என்றால் பகலை பார்க்காதவன் என்பது தான் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள். சினிமாவில் இசையமைப்பாளர்கள் எப்போதும் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள். ஒரு இரவில் நடக்கும் கதையை பரபரப்பாக படமாக்கியுள்ளார்கள். நடிகர் வெற்றி தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் கதைகள் வியப்பைத் தருகிறது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து ஜெயிக்கிறார். ஒரு புதுமையான கதையில் அர்ப்பணிப்போடு உழைத்திருக்கும் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் வெற்றி பேசியதாவது…
எங்களை மதித்து எங்களை வாழ்த்த வந்த ஜாம்பவான்களுக்கு நன்றி. இந்தப்படம் முழுக்க முழுக்க ஒரு நாள் இரவில் நடக்கும் கதை. நண்பர் கிஷோர் மூலம் தான் இந்தப்படம் கிடைத்தது. கதை சொன்ன போதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது, உடனே நான் செய்கிறேன் என ஒப்புக்கொண்டேன். ஒளிப்பதிவாளர் அபிலாஷ் இந்தப்படத்திற்கு பிறகு, பெரிய அளவில் பேசப்படுவார். பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எல்லோரும் படத்தின் பட்ஜெட்டை புரிந்துகொண்டு, படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். நல்ல படத்திற்கு ஆதரவு தரும் பத்திரிக்கை நண்பர்கள் இந்தப்படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள வெற்றி, இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், பிரபல நடிகர் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கான மூலக்கதை கிஷோர்குமார் எழுதியுள்ளார். விவேக் சரோ இசையமைக்க, அபிலாஷ் PMY ஒளிப்பதிவு செய்துள்ளார் மேலும், கோபி கருணாநிதி கலை வடிவமைப்பாளராகவும், ராம் குமார் சண்டை பயிற்சியாளராகவும் இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

பகலறியான் தமிழ் த்ரில்லர் படங்களில் முக்கியமானதாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வரும் மே 24 ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

‘ஏஸ்’ ( ACE) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஏஸ்’ ( ACE)’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஏஸ்’ எனும் திரைப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌ கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. கே. முத்து கையாள, படத்தொகுப்பு பணிகளை ஆர். கோவிந்தராஜ் கவனித்திருக்கிறார். கமர்சியல் அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7Cs என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இப்படத்தின். ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் சேதுபதியின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் விஜய் சேதுபதியின் இளமையானத் தோற்றம் + புகை பிடிக்கும் குழாய் + தாயக்கட்டை … என பல சுவாரஸ்யமான விசயங்கள் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. டைட்டிலுக்கான டீசரில் படத்தில் தோன்றும் முன்னணி நட்சத்திர கலைஞர்களின் அறிமுகமும், பின்னணி இசையும், விஜய் சேதுபதியின் திரை தோன்றலும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. டீசரில் சூதாட்டம், துப்பாக்கி, குண்டு வெடிப்பு, கொள்ளை, பைக் சேசிங் …போன்றவை இருந்தாலும், யோகி பாபுவின் ரியாக்ஷன் சிறப்பாக இருப்பதாலும் இந்த திரைப்படம் கிரைம் வித் காமெடி திரில்லராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த டீசரில் அனிமேஷன் பாணியில் கதாபாத்திரங்கள் அறிமுகமாவதும், அதற்கு ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால் ‘ஏஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் வெளியாகும் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டில் வெளியாகும் இரண்டாவது படம் இது என்பதால் ‘ஏஸ்’ படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும், திரையுலக வணிகர்களிடமும் அதிகரித்திருக்கிறது.

‘P T சார்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘P T சார்’ வரும் மே 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு,  படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

‘P T சார்’ ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் 25 வது படமாகும், இதனைக் கொண்டாடும் விதமாக, மொத்தக்குழுவினரும் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
ஹிப்ஹாப் தமிழா ஆதி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வினில்…

ஸ்டண்ட் இயக்குநர் மகேஷ் மேத்யூ  பேசியதாவது…

ஹிப்ஹாப் ஆதிக்கு இது வித்தியாசமான படம், மற்ற படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டுமெனத் திட்டமிட்டு சில விசயங்கள் புதுமையாக  செய்துள்ளோம். ஆதி அண்ணா கடுமையாக உழைத்துள்ளார். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் படம் பிடிக்கும், நன்றி.

நடிகை பிரணிகா பேசியதாவது…
இந்தப்படத்தில் ஆதி அண்ணா சிஸ்டர் கேரக்டர் செய்துள்ளேன், ரொம்ப சந்தோசம்.  அதிலும் என் முதல் படமே வேல்ஸ் பிலிம்ஸில் செய்வது மகிழ்ச்சி. இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் ஜனரஞ்சக படமாக இருக்கும். இந்தப்படம் புது அனுபவமாக இருந்தது,  அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை மதுவந்தி பேசியதாவது…
இந்தப்படத்தில் நடிக்க முக்கிய காரணம் கார்த்திக் தான். நான் நடிப்பேனா? என ஒரு வதந்தியே திரையுலகில் இருக்கிறது அதைத் தாண்டி நான் தான் வேண்டுமென, என்னை நடிக்க வைத்த இயக்குநர் குழுவிற்கு நன்றி. இந்தக்குழுவினர் அர்ப்பணிப்புடன் கச்சிதமாக பணியாற்றினார்கள். எனக்கு நெகடிவ் சேட் உள்ள பாத்திரம், அதைச் செய்வது எனக்குச் சவாலாக இருந்தது. இயக்குநர் கார்த்திக் மிக அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்த குழுவிற்கு முழு சுதந்திரம் தந்த, வேல்ஸ் ஐசரி சாருக்கு என் நன்றிகள். ஆதிக்கு இசையமைப்பாளராக இது 25 வது படம், வாழ்த்துக்கள். இப்படம் அருமையான ஃபேமிலி எண்டர்டெயினர். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை அனிகா சுரேந்திரன் பேசியதாவது…
நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி. இந்த கதாப்பாத்திரம் தந்த இயக்குநர் கார்த்திக் சாருக்கு நன்றி. தயாரிப்பு தரப்பினருக்கும் என் நன்றிகள்.  மிக வித்தியாசமான கதாப்பாத்திரம், உங்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் பாத்திரம், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.  

நடிகை காஷ்மீரா பர்தேஷி பேசியதாவது…
ஒரு வருடம் முன் ஆரம்பித்த படம். ஐசரி சாருக்கு நன்றி. மிக அற்புதமான குழுவினர். எப்போதும் ஷூட்டிங் சந்தோசமாக இருக்கும். கார்த்திக் இப்படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். ஆதியுடன் இரண்டாவது படம், மிக சந்தோசமாக இருந்தது. மிக மிக ஜாலியானவர், திறமையாளர் அவரது 25 வது படத்திற்கு எனது வாழ்த்துக்கள். இந்தப்படம் குடும்பத்தோடு அனைவரும் ரசித்துப் பார்க்கும் படமாக இருக்கும். திரையரங்குகளில் வந்து பாருங்கள் அனைவருக்கும் நன்றி.  

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசியதாவது…
ஆதிக்கு என் முதல் நன்றி. கதை சொன்ன உடனே பண்ணலாம் என்று சொன்னார், அவரால் தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அடுத்ததாக வேல்ஸ் பிலிமிஸ் கிடைத்தது வரம். ஐசரி கணேஷ் சாருக்கு என் நன்றிகள். இந்தப்படம் மிக மிக ஜாலியான படம். மிகப்பெரிய நட்சத்திரக்கூட்டம் படத்தில் நடித்திருக்கிறார்கள். காஷ்மீரா ஒரு அழகான ரோல் செய்துள்ளார், அனிகாவிற்கு அனைவரும் பேசும் ஒரு ரோலாக இது இருக்கும். மெச்சூர்டான விசயத்தைக் கையாளும் ரோல், அழகாகச் செய்துள்ளார். சமீபத்தில் திரையரங்கிற்குக் கூட்டம் வரவில்லை எனும் வருத்தம் இருந்தது, ஆனால்  கில்லியை அனைவரும் குடும்பத்தோடு கொண்டாடினார்கள், இந்தப்படம் குடும்பத்தோடு அனைவரும் கொண்டாடும் ஒரு படமாக, சந்தோசமான படமாக  இருக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ் பேசியதாவது…
வேல்ஸ் பிலிம்ஸில் ஒரு நல்ல படம் எடுத்த திருப்தி இந்தப்படம் மூலம் கிடைத்துள்ளது. இயக்குநரையும், ஆதியையும் படம் பார்த்தவுடன் கூப்பிட்டுப் பாராட்டினேன். இடைவேளை வரை ஜாலியாக இருக்கும், இறுதியில் மிக முக்கியமான விசயத்தைத் தைரியமாகச் செய்துள்ளார்கள். எல்லாப்பள்ளிகளிலும் பிடி சாருக்கும் டீச்சருக்கும் காதல் என வதந்தி இருக்கும் நான் படித்த பள்ளியிலும் இருந்தது. அந்த ஞாபகங்களை இந்தப்படம் மீண்டும் கொண்டு வந்தது. பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர், அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். வரும் 24 ஆம் தேதி இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரவுள்ளோம். படம் பார்த்து உண்மையை எழுதுங்கள் அந்தளவு படம் நன்றாக உள்ளது. ஆதி தான் இந்தப்படத்தின் கதையைக் கொண்டு வந்தார். கார்த்திக் இப்படி ஒரு படம் செய்வார் என நினைக்கவில்லை, அவரை அடுத்த படத்திற்கும் புக் செய்து விட்டேன், அடுத்த படமும் எங்களுக்குத் தான் செய்கிறார். ஆதி இசையமைப்பாளராக அரண்மனை 4ல் கலக்கியிருக்கிறார்.  அதே போல் பிடி சாரிலும் கலக்கியிருப்பார். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக இப்படம் பிடிக்கும் நன்றி.

நடிகர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியதாவது…
எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள், 4 வருட இடைவேளைக்குப் பிறகு இசையமைப்பாளராக மட்டும் களமிறங்கிய அரண்மனை 4 படத்திற்கு எல்லோரும் பெரும் பாராட்டுக்களைத் தந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் குட்டிப் பிசாசே பாடலும் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது. ஒரு ஆடியன்ஸாக அட்டகாசமான முதல் பாதி, எமோஷலான இரண்டாம் பாதி, நல்லதொரு க்ளைமாக்ஸ் என உங்களை முழுக்க திருப்திப்படுத்தும் படமாக இருக்கும். இப்படி ஒரு கதையை எடுத்த கார்த்திக்கிற்கு என் நன்றிகள். ஐசரி சாருக்கு நன்றி, இந்தக்கதையை முதலில் ஒப்புக்கொள்வார் என நினைக்கவேயில்லை, ஆனால் இந்தக்கருத்தை நாம் தான் சொல்ல வேண்டுமெனச் சொன்னார். அவர் எப்படியான படங்கள் வேண்டுமானாலும் செய்திருக்க முடியும் ஆனால் இப்படம் செய்ததற்கு நன்றி. அவருடன் பயணித்தது மிகப்பெரும் அனுபவமாக இருந்தது. எனக்கு நிறைய விசயங்கள் சொல்லித் தந்தார். ஒரு குடும்பத்தில் இருப்பது போல் உணர்ந்தேன். பிடி சார் மிக நிறைவான படமாக இருந்தது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். என் மேல் நம்பிக்கை வைத்து இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தைத் தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸுக்கு நன்றி. குடும்பத்தோடு வந்து பாருங்கள் கண்டிப்பாகக் கொண்டாடுவீர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க, காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து  நடித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் திரைக்கதை எழுதி இயக்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்தப் படம் எதிர்வரும் மே 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

குவஹாத்தியில் புதிய வணிக வாகன உதிரி பாகங்கள் கிடங்கை டாடா மோட்டார்ஸ் திறந்து வைத்துள்ளது


இதுபோன்ற வகைகளில் முதன்முறையாக 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஒருங்கிணைந்த கிடங்கு, வடகிழக்கில் டாடா அசல் உதிரி பாகங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும்
இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், குவஹாத்தியில் புதிய வணிக வாகன உதிரி பாகங்கள் கிடங்கின் துவக்கத்தை இன்று அறிவித்தது. இந்த அதிநவீன வசதி முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு 1 லட்சம் சதுர அடியில் பரவி, முழு வணிக வாகன போர்ட்ஃபோலியோவுக்கான உதிரி பாகங்களை சேமிக்கிறது. இப்புதிய அமைவிடத்தின் சேர்ப்பானது, நிறுவனம் விரைவாகச் செயலாறற்வும் மற்றும் வடகிழக்கில் உள்ள டாடா அங்கீகரிக்கப்பட்ட சேவை நிலையங்களில் உதிரிபாகங்கள் எளிதாகக் கிடைக்கவும் உதவும்.
டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கிடங்கு செயல்முறைகள் மூலம் அதிக வாடிக்கையாளர் மதிப்பு முன்மொழிவைத் கிடைக்கும். டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் மிகப்பெரிய முழுமையான ஒருங்கிணைக்கப்பட்ட தளவாட சேவை வழங்குனரான Delhivery உடன் கூட்டு சேர்ந்துள்ளது, அதன் தொழில்நுட்பம்-இயக்கப்பட்ட கிடங்கு மற்றும் போக்குவரத்து தீர்வுகளை மேம்படுத்துகிறது. இந்த வசதி பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதிநவீன சேமிப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளது, இதில் ஈர்ப்பு சுழல் மற்றும் செங்குத்து மறுபரிசீலனை கன்வேயர்கள் அடங்கும். கூடுதலாக, தடையற்ற செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக நடுத்தர மற்றும் கனரக வாகன பாகங்களைக் கையாள ஒரு நியமிக்கப்பட்ட பகுதி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
உதிரிபாகங்கள் மற்றும் வாகனம் அல்லாத வணிகத் தலைவர் திரு. விக்ரம் அகர்வால் அவர்கள் , “குவஹாத்தியில் புதிய கிடங்கு திறப்பு விழா டாடா மோட்டார்ஸின் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு ஒரு சான்றாகும். உதிரிபாகங்கள் எளிதாக கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் வாகன உரிமை அனுபவம் மேம்படும். இப்புதிய கிடங்கு, பிராந்தியத்தில் உள்ள டாடா அங்கீகரிக்கப்பட்ட சேவை நிலையங்களில் சிறந்த சரக்கு மேலாண்மையை செயல்படுத்துகிறது, இதன் மூலம் சேவை தரம் மற்றும் வாகன இயக்க நேரத்தை மேம்படுத்துகிறது. இந்த புதிய வசதி, வடகிழக்கில் வேகமாக முன்னேறி வரும் பிராந்தியத்தில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் எங்களை நெருக்கமாக்குகிறது, மேலும் லாஜிஸ்டிக்ஸ் பணிகளைத் திறந்வாய்ந்த முறையில் மாற்றுகிறது” என்று கூறினார்.
டாடா மோட்டார்ஸ், சப்-1-டன் முதல் 55-டன் வரையிலான சரக்கு வாகனங்கள் மற்றும் 10-சீட்டர் முதல் 51-சீட்டர் மாஸ் மொபிலிட்டி தீர்வுகள், சிறிய வணிக வாகனங்கள் மற்றும் பிக்கப்கள், டிரக்குகள் மற்றும் பேருந்துகள் பிரிவுகளில் மற்றும் வெகுஜன இயக்கப் பிரிவுகளில் லாஜிஸ்டிக்ஸின் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்து வருகிறது.

Siemens introduces Sustainable solution to recycle used tyres by RE-TYRE

16th May 2024: Siemens has recently introduced Re-Tyreä , a UK based technology company aimed at bringing a greener revolution in the tire industry worldwide. RE-TYREäpresents FDPTã, a patented technology, which is a sustainable solution to reduce the carbon footprint in the Tyre Indistry. Re-Tyreä has developed a Machine that converts scrap / rejects tires into zero waste, 100% recycled, clean and separate product called ACTIVE-Rä.

Another highlight of this machine is that it doesn’t require any big infrastructure or logistics, it only needs water, electricity and internet accessibility to run. This event as attended by the R&D heads of Apollo Tyres, Continental Tyres, TVS Tyres, Goodyear, Deloitte, Yokohama and many other the major industry leaders who experience the texture of ACTIVE-Rä, which is the ready ingredient to make fresh tires. 

This machine has been developed by RE-TYREä in United Kingdom after stringent research of 15+ years at the Imperial College London. Being of Indian Origin, The Founders of RE-TYREä Mr. Shravan Bansal & Mr. Sanchit Bansal, have set an ambitions target to commence the mass production of the machine in India with a vision to make India the first country to get a Red-Zone Industry into Green Zone by zeroing down the PCR tires scrapes into 100% sustainable ingredient. 

Mr. Shravan Bansal said “We would like to first introduce this technology to all Tyre manufacturers for their factory rejectsas they can optimise the final produce according to theirdesired composition. The technology then can further be handed-down to their dealer network as well.”

The Event was attended by Mr. Peter Haan – Head Global Business Development, VM Tire Siemens, Mr. Leo Arul – Head VM Tire, Siemens India and Ms. Ankita Kambale – Vertical Business Development Manager, Siemens Digital Industries and many more.

மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் இணைந்து நடத்தும் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை கச்சேரி !!

இந்திய திரைத்துறையின் தனித்துவமான ஜாம்பவான், தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட இசைஞானி இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது.

இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஒருங்கிணைக்கின்றனர். இந்த இசை விழா இதுவரை தமிழகம் கண்டிராத அளவில், சகல பாதுகாப்புகளுடன், அனைத்து வசதிகளுடனும் பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது

இந்த இசை விழாவிற்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா, மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்களின் சார்பில் அமைப்பாளர்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்விழாவினில் திரு அருண் அவர்கள் பகிர்ந்து கொண்டதாவது…
தமிழகத்தின் உயிர்நாடியாக உள்ள இசைஞானி இளையராஜா அவர்களுடன் இணைந்து இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, நடத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். இதற்கான அறிவிப்பை பத்திரிக்கையாளர்களாகிய உங்கள் முன்னால் தொடங்க வேண்டுமென்பது ஐயா இசைஞானி இளையராஜாவின் ஆசை, உங்கள் முன் இந்த போஸ்டரையும் டிக்கெட்டையும் வெளியிடுவது மகிழ்ச்சி. ஐம்பதாயிரம் பேர் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட விழாவாக இந்த இசை விழா நடக்கவுள்ளது. இந்த இசை கச்சேரியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் வகையில், முழுப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதற்கு முன்பாக நடைபெற்ற கச்சேரிகளில் ஏற்பட்ட சிக்கல்கள், அதுவும் இவ்விழாவில் ஏற்படாதவாறு, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சாப்பாட்டு பொருட்கள் அனைத்தும் வெளியில் கிடைக்கும் விலையில் உள்ளேயே கிடைக்கும் படி, வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கழிப்பறை வசிதி முதல் குடி தண்ணீர் வசதி வரை அரங்கத்திற்குள் எளிதாக அனைவரும் அணுகும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த இசை விழாவிற்கான டிக்கெட்டுகளை பேடிஎம் மூலம் மட்டுமே பெற முடியும். டிக்கெட் பார்ட்னராக இணைந்துள்ள பேடிஎம் நிறுவனத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இதன் மூலம் டிக்கெட்கள் கைமாறுவது போலி டிக்கெட்கள் பிரச்சனைகள் தடுக்கப்படும். மேலும் இசை விழாவிற்கு வருகை புரிபவர்கள் வந்து செல்ல எளிமையாக இருக்கும் வகையில், அவர்கள் இலவசமாக பயணிக்க சென்னை மெட்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு வருபவர்கள், சென்னையின் பலபகுதிகளிலிருந்து வந்து போகும் வகையில் பயன்படுத்த தனியார் வாடகை பைக், வாடகை கார் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இசை விழா இதுவரை தமிழகம் கண்டிராத மிகப்பிரம்மாண்ட விழாவாக இருக்கும்.

இசைஞானி இளையராஜா அவர்களின் இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்டுகளை நீங்கள் உங்கள் பேடிஎம் (Paytm) செயலி மூலம் எளிதாக பெறலாம்.

Kauvery Hospital, Radial Road, Launches Kauvery Integrated Stroke Centre – an Advanced and Comprehensive Centre for Stroke and Cerebrovascular Disorders

Stroke, or brain attack, is one of the common causes of disability and death in the world. It is not as uncommon as was previously thought. The World Stroke Organization says that 1 in 4 people will, at some point of time, suffer a stroke. It is, therefore, extremely important that we take cognizance of this highly prevalent problem and do what is necessary to help the society.

A stroke may either occur when the blood vessel to the brain is blocked (Acute Ischaemic Stroke) or when there is bleeding in the brain (Haemorrhagic Stroke). In both these instances, the symptoms are almost the same. It is imperative that the patient reaches a Stroke Centre as soon as possible because with current management protocols, it is possible to reduce or even reverse a stroke. Lives can be saved and disability reduced – but the patient must reach on time. This is because for every second lost, 30,000 brain cells die and for every minute lost, 2 million brain cells die.

The Institute of Brain and Spine at Kauvery Hospital, Radial Road, is happy to announce that within one year since we began treating patients at our hospital, it has been awarded the prestigious Gold Status by the WSO Angels Awards. The hospital, therefore, is ready to go to the next level and has now launched KISC – Kauvery Integrated Stroke Centre. This is an advanced and comprehensive centre for treating stroke and all cerebrovascular disorders under one roof.

“The key words are ‘Advanced’ and ‘Integrated’ – while there may be many Stroke Centres, few have all the different specialties involved working together, in a seamless fashion, in order to ensure that time is saved and the best is done for the patient. Starting from the ER to Radiology to Neurology and Neuro ICU, Neuro Intervention, Neuro OT and finally Neuro Rehabilitation, the Stroke Corridor of KISC ensures a smooth protocol-based management, which has now been acknowledged by the World Stroke Organization. At KISC, we have the technology, the experience and the expertise and, most importantly, the teamwork to achieve the best of results in stroke management,” said Dr Krish Sridhar, Group Mentor, Neurosciences, & Director, Institute of Brain & Spine.

“Every second makes a difference to stroke patients. When they are brought here within the golden hour – 60 minutes – from the onset of stroke symptoms or even within 24 hours, the team at Kauvery Integrated Stroke Centre work relentlessly to reverse stroke and provide optimal outcome for them. As an advanced Stroke Centre, we provide them the best possible chance through international standards of care and a seamless, cohesive and protocol-driven rapid response,” said Dr Anil BG, Medical Director at Kauvery Hospital, Radial Road.

Kauvery Hospital, Radial Road, is a leading healthcare institution offering advanced treatments and surgical interventions in neurology, cardiology, women and child wellness, gastroenterology, orthopaedics, joint reconstruction, urology, nephrology and other specialities. With a dedicated team of experts and state-of-the-art medical facilities including 50+ critical care beds, 20+ NICU beds, 7+ operation theatres, advanced Cath labs, cutting-edge neuro diagnostic equipment like 3T MRI and 4K + 3D neuro microscope, transplant facilities and 24/7 dialysis unit, it provides world-class medical care to patients from around the globe.

HCL National Doubles Championship Concludes Successfully in Chennai

Abhay Singh and Velavan Senthilkumar win gold in the Men’s Doubles category

Pooja Arthi and Rathika Seelan win gold in the Women’s Doubles category

Abhay Singh and Joshna Chinappa win gold in the Mixed Doubles category

15 May 2024, Chennai, India: HCL, a leading global conglomerate, along with the Squash Rackets Federation of India (SRFI), today successfully concluded the HCL Nationals Doubles Championship held at the Indian Squash Academy, Chennai between May 13 – May 15, 2024. Under the HCL Squash Podium Program, the revival of the Doubles Squash Championship after a hiatus of 17 years, was a cherished event in India’s squash history.

Abhay Singh and Velavan Senthilkumar won gold in the men’s doubles with a score of 2-0, Pooja Arthi and Rathika Seelan in the women’s Doubles with a score of 2-1 and Abhay Singh and joshna Chinappa in the mixed doubles category. The winners were felicitated by the Chief Guest Dr. Atulya Misra, the Additional Chief Secretary of the Tamil Nadu Government, and Thulasimathi Murugesan, the gold medallist from the Asian Para Games 2022, who was the guest of honor at the finale ceremony.

With India demonstrating prowess in doubles squash on the international stage last year during the Asian Games, HCL endeavored to capitalize on this momentum by reintroducing the Doubles Squash Championship. This exciting initiative pursued to breathe new life into the sport of squash and provided a platform for emerging talent to showcase their skills in doubles play.

Rajat Chandolia, AVP and Head of Brand at HCL was happy to witness the enthusiastic participation of squash players in the HCL National Doubles Championship. He congratulated all the winners and participants on their outstanding performance. He said, “HCL decided to revive this segment to support the Indian players after witnessing their recent success in the Doubles Championships internationally. HCL National Doubles Championship was the first event planned as a part of the Squash Podium Program 2024. Besides this, we have introduced several new activities such as the PSA Challenger Tournaments, High-Performance Camp for Asian & World Junior Championships, Referee Development Program, and Coach Development Program, all aimed at elevating the sport of squash to new heights.”

Cyrus Poncha, Secretary General, the Squash Rackets Federation of India (SRFI) said,“I am truly excited to see the renaissance of doubles squash in India, thanks to the mutual efforts of SRFI and HCL. It was truly thrilling to see the clashes between the double pairs. I believe that Indian Squash has a bright future and the stars of tomorrow will emerge from these events. Our association with HCL has been monumental for the sport and our combined efforts will continue to nurture talented players.”

Winner in both men’s and mixed doubles categories, Abhay Singh, said, “I have always been interested in playing in the doubles category. I thank HCL and SRFI for organizing this championship after a long time in India. I have played with Velavan in Commonwealth but this was my first time playing doubles with Joshna. It is such an honor to team up with her. I was sure that I would win in both categories but now it’s time to win gold at the Asian Doubles Championship in Malaysia.”=

The final matches were fought between the pairs of Abhay Singh & Velavan Senthilkumar vs. Rahul Baitha & Suraj Chand in the men’s category and Pooja Arthi & Rathika Seelan vs. Janet Vidhi & Nirupama Dubey in the women’s category and Abhay Singh & Joshna Chinappa vs. Harinder Pal Singh Sandhu & Rathika Seelan in the mixed doubles category.

பிரைம் வீடியோவின் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன்

பிரைம் வீடியோவின் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம் மற்றும் கீ ஆர்ட்டுடன் மீண்டும் வருகிறது – இரண்டாவது சீசன் பிரைம் வீடியோவில் 2024ஆகஸ்ட் 29, அன்று அறிமுகமாகிறது

J.R.R.டோல்கியன் -இன் பழம்பெரும் புகழ் பெற்ற வில்லன் சௌரன் (sauron) .மிடில் எர்த்தின் செகண்ட் ஏஜ் -ஐ இருளடையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அதற்கான அரங்கை இந்த புதிய சீசன் நிர்மாணிக்கிறது

மும்பை, இந்தியா- மே 16, 2024 – பிரைம் வீடியோ, அதன் எதிர் வரவிருக்கும் மாபெரும் வெற்றித் தொடர் ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் :ரிங்ஸ் ஆஃப் பவர்” இன் இரண்டாவது சீசனின் முதல் காட்சியை அமேசானின் முதல் முதலான அறிமுக நிகழ்ச்சியில் நியூயார்க் நகரத்தில் நேற்று காலை வெளியிட்ட போது, அதில் கலந்துக்கொண்ட பார்வையாளர்கள் பின்னோக்கி மிடில் எர்த் காலத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தொடரின் முதல் சீசன் முன்னெப்போதும் இல்லாத அளவில் உலகளவில் மாபெரும் வெற்றியை பெற்றது. அத்துடன் உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கண்டு ரசித்த ஒன்றாகவும் மற்றும் அதன் வெளியீட்டு நாள் முதல் இன்றைய தேதிவரை வேறு எந்த ஒரு வெளியீட்டுக்கும் இல்லாத வகையில் உலகம் முழுவதிலிருந்தும் பிரைம் சைன் அப்களை அதிகளவில் பெற்று பிரைம் வீடியோவின் ஒரு தலைசிறந்த ஒரிஜினல் வீடியோவாகவும் திகழ்ந்தது.

மேலும், இந்த இரண்டாவது சீசன், 2024 ஆகஸ்ட் 29, வியாழக்கிழமை அன்று உலகளவில் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பல்வேறு மொழிகளில் அறிமுகப்படுத்தப்படப்போ வதையும் பிரைம் வீடியோ அறிவித்தது.

சார்லி விக்கர்ஸ் உலகின் தலைசிறந்த இலக்கிய ரீதியிலான வில்லன்களில் ஒருவரான சௌரன் பாத்திரத்தை ஏற்று, மிடில் எர்த் குடிமக்களை ஏமாற்றி வஞ்சிப்பதற்கு உதவும் ஒரு புதிய தோற்ற வடிவத்தில் மீண்டும் தோன்றவிருப்பதையும் இந்தப் புதிய இரண்டாவது சீசனின் கீ ஆர்ட் இன்று வெளிப்படுத்தியது. .

இந்த அறிமுக டீஸர் ட்ரெய்லர் பார்வையாளர்களை அதிரடி காட்சிகள் நிறைந்த J.R.R டோல்கியனின் செகண்ட் ஏஜ்க்கு பின்னோக்கிய பயணத்தில் அழைத்துச் சென்று அங்கே சௌரன், முழுமையான அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தனது பழிவாங்கும் தொடர் முயற்சிகளின் தீவினைச் செயல்கள்… உச்சத்தை எட்டிக்கொண்டிருப்பதைக் காட்சிப்படுத்துகிறது. பிரமாண்டமான காட்சிகளுக்காகவே புகழ்பெற்ற இந்தத் தொடர், அதற்கிணங்க இந்த இரண்டாவது சீசனிலும் திரைப்படக் கலையின் மகிமையை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி, கலாட்ரியல், எல்ரோன்ட், பிரின்ஸ் டுரின் IV, அரோண்டிர் உட்பட ரசிகர்களுக்கு பிடித்த பல்வேறு கதாபாத்திரங்கள் மீண்டும் தோன்றப்போவதை பறைசாற்றுகிறது. அத்துடன் கூடுதலாக மிகவும் ஆர்வத்தோடு, மிகப் பெரு மளவில் எதிர்பார்த்த ரிங்குகள் அதிகளவு உருவாவதையும் இதன் முதல் பார்வை வெளிப்படுத்து கிறது.

‘தி ரிங்க்ஸ் ஆஃப் பவர்’ சீசன் இரண்டில், சௌரன் மீண்டும் தோன்றுகிறார். கெலட்ரியலால் வெளியேற்றப்பட்டு எந்த ஒரு இராணுவம் அல்லது கூட்டாளியும் இல்லாமல் தனித்து விடப்பட்ட இந்த வளர்ந்து வரும் இருண்ட உலகத்தின் தலைவன், இப்போது தான் இழந்த தனது வலிமையை மீண்டும் மீட்டெடுக்கவும் ‘மிடில் எர்த்’தின் அனைத்து மக்களையும் தனது வஞ்சக எண்ணங்களுக்கு கீழ்ப்படிய வைத்து கட்டுப்படுத்தவும் உதவும் ரிங்ஸ் ஆப் பவர் உருவாக்கப்படுவதைக் காண தனது சொந்த தந்திரத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். முதலாவது சீசனின் காவியக் கதைக்களத்தின் வாய்ப்பளவு மற்றும் லட்சியத்தின் அடிப்படையில், கட்டமைக்கப் பட்ட இந்த புதிய சீசன் அதன் மிகவும் அன்புக்குரிய மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய கதாபாத்திரங்களையும், மேலோங்கி எழுந்துவரும் இருண்ட சக்திகளின் ஆற்றலில் மூழ்கடித்து, அவர்கள் ஒவ்வொருவரையும் பேரழிவின் விளிம்பை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் உலகில் தங்கள் இடத்தை அடையாளம் காணுவதற்கான சவால்களை எதிர்கொள்ளச்செய்கிறது. எல்வ்ஸ் மற்றும் ட்வார்ஃப்ஸ், ஓர்க்ஸ் மற்றும் மனிதர்கள், விசார்ட்கள் மற்றும் ஹர்ஃபுட்ஸ்…களால் நட்புணர்வு சிதைந்து பேரரசுகள் பிளவடையத் தொடங்கிய நிலையில் நல்லெண்ணம் கொண்டோர் தங்களுக்கு மிகமிக முக்கியமான ஒன்றாகத் திகழும் தங்களுக்கிடையேயான —- ஒருவருக்கொருவர் ஆதரவு நிலையை. வீரத்தோடு பற்றிக் கொள்கிறார்கள்.

லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்: இரண்டாவது சீசன், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக கிடைக்கும்.
லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர். சீசன் இரண்டின் டீஸர் டிரெய்லர் மற்றும் கீ ஆர்ட் அஸ்ஸெட்களையும் அத்துடன் சீரியல் குறித்த கூடுதல் தகவல்களையும் காண தயவு செய்து Amazon MGM Studios press site. க்கு வருகை தரவும்