Breaking
January 22, 2025

May 2024

Samsung Launches ‘Back to Campus’

Campaign for Students with Exciting Offers
• ‘Back to Campus’ campaign goes live on May 17 on Samsung.com, select retail stores and other online platforms
• Offers include bank cashback of up to INR 12000 on select Galaxy Book, Galaxy Tab and Galaxy smartphones and up to 10% additional discount through Samsung Student+ program
Chennai May 20, 2024 – Samsung, India’s largest consumer electronics brand, today announced exciting offers on select Galaxy Book, Galaxy Tab and Galaxy smartphone devices as part of its ‘Back to Campus’ campaign.
Launched with the tagline ‘Show Them How It’s Done’, the ‘Back to Campus’ campaign offers an exclusive student discount of up to 10% through the Samsung Student+ program along with no-cost EMI for up to 24 months. The offer also includes a bank cashback of up to INR 12000 and up to INR 8000 as upgrade bonus on Samsung laptops, tablets and smartphones.
“Today’s youngsters are confident go-getters who need technology that enables them not just to learn more but to do more and be more. With our new ‘Back to Campus’ campaign, we are committed to democratising the connected power of Samsung Galaxy ecosystem for students across India. It’s time for the new generation of Galaxy users to make their dreams come true and show the world how it’s done,” said Aditya Babbar, Vice President, MX Business, Samsung India.
The offers will be available across key platforms such as Samsung.com, select retail stores and other online platforms starting May 17. The offers will be valid on devices including Galaxy Book4, Galaxy Book3, Galaxy Book2 series, Galaxy Tab S9 series, Galaxy Tab A9 series as well as Samsung A series and S series smartphones.
With the ‘Back to Campus’ campaign offer, students can purchase Samsung’s flagship Galaxy Book4 Pro 360 laptop at a net effective price of INR 153990 to INR 169990, depending on the variant selected. Moreover, Galaxy Tab S9 WiFi 128GB will be available starting at just INR 60999, a significant reduction of INR 12000 from its regular price.
Students will also be able to purchase Galaxy S24 at a net effective starting price of INR 61999 for S24 8/128GB variant with up to INR 13000 off via an attractive INR 5000 bank cashback and INR 8000 upgrade bonus.
Samsung tablets and laptops work seamlessly with Samsung smartphones providing industry-leading connected ecosystem features. The Quick Share feature enables sharing of large files between devices in a flash and the Multi-control feature allows students to manage projects with the flexibility to drag and drop or copy and paste text, images and files between devices. The Phone Link feature allows students to seamlessly connect their phone and laptop and open mobile apps, access files or even turn on their hotspot. Students can also use their tablet and laptop together with Second Screen, a feature that enables an instant dual-monitor experience with the Galaxy Book and Galaxy Tab side by side.
Galaxy Book4 Series delivers unbeatable performance boosted by AI, courtesy the supercharged Intel Core Ultra processor with Intel’s all new NPU. It comes with the new Intel Arc GPU and offers cutting-edge immersive visuals, making it ideal for turning big ideas into reality. The Dynamic AMOLED 2X display, anti-reflective screen, and Vision Booster feature ensure brilliant views at any angle, even in bright lighting conditions.
Galaxy Tab S9 series boasts a crystal-clear Dynamic AMOLED 2X display across all models, offering vivid colours and true blacks. With HDR10+ enhanced visuals and smooth scrolling speed up to 120Hz, the on-screen content appears crisp and lifelike. Additionally, the Tab S9 series features an IP68 rating, making it the first water and dust-resistant Galaxy Tab range. The S Pen offers improved sensitivity providing a seamless user experience.
Galaxy S24 series comes powered by Galaxy AI. Galaxy AI delivers innovative and practical AI features to help transform the way we communicate, create and discover the world. Providing barrier-free communication through features like Live Translate and Chat Assist, to a new standard for search provided by Circle to Search with Google, AI improves nearly every experience that Galaxy S24 users can enjoy.
With the latest OneUI 6.1 update, these AI features are now available on Tab S9 Ultra, Tab S9+ and Tab S9 as well.
To know more about the offers, click here.
About Samsung Electronics Co., Ltd.
Samsung inspires the world and shapes the future with transformative ideas and technologies. The company is redefining the worlds of TVs, smartphones, wearable devices, tablets, home appliances, network systems, and memory, system LSI, foundry and LED solutions, and delivering a seamless connected experience through its SmartThings ecosystem and open collaboration with partners. For latest news on Samsung India, please visit Samsung India Newsroom at http://news.samsung.com/in. For Hindi, log on to Samsung Newsroom Bharat at https://news.samsung.com/bharat. You can also follow us on Twitter @SamsungNewsIN

Media Contact:Santhosh Malliah

Samsung Care+ Proposition Strengthened with Unrivaled Benefits at No Extra Cost

Users can now avail two claims annually, enhancing consumer experience and satisfaction

Chennai – May 17, 2024: Samsung, India’s largest consumer electronics brand, today announced an upgrade in its Samsung Care+ programme, providing consumers added benefits at no additional cost. Under the revamped Samsung Care+ programme, customers can now avail two claims in a year. The two claims in a year are applicable for both screen protection as well as accidental and liquid damage protection plans.
Samsung Care+, the only authorized programme for Galaxy devices, provides 100% coverage without any depreciation, with the added convenience of both walk-in as well as pick-up and drop facility for claim registration.
Samsung Care+ offers customers access to expert technicians who exclusively use Samsung genuine parts, certifying optimal device performance and longevity. Samsung Care+ currently offers four different protection plans tailored to meet the diverse needs of Galaxy device users.
Backed by a country-wide network of service centers, Samsung Care+ plans starts at INR 399 and cater to a range of Galaxy devices including Galaxy smartphones, Galaxy tablets, Galaxy Watch and Galaxy Books. Additionally, Samsung Care+ provides a hassle-free claim process, requiring zero documentation and ensures absolute data privacy and protection. Customers can also conveniently track the status of their claim or repairs, on-the-go, with a simple tracking process.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ‘உப்பு புளி காரம்’  சீரிஸை, மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் ‘உப்பு புளி காரம்’  சீரிஸை வரும் மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொண்டாடும் கலகலப்பான மற்றும் துடிப்பான ‘குடும்பப் பாட்டு’ எனும் அழகான தீம் பாடலுடன் இந்த சீரிஸ் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வண்ணமயமான காட்சிகள் மற்றும் நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், ஒரு மகிழ்ச்சியான மற்றும் இளமை நிறைந்த குடும்ப பொழுதுபோக்கை இந்த சீரிஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அற்புதமான பாடல் இப்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

கனா காணும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் சீரிஸ்கள் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது போல, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸான ‘உப்பு புளி காரம்’ சீரிஸானது, காதல், காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் பல அதிரடி திருப்பங்களுடன் அட்டகாசமான பொழுதுபோக்கை வழங்கும்.

‘உப்பு புளி காரம்’ ஒரு வயதான அழகான தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை சுற்றி பின்னப்பட்ட அழகான கதையாகும்.

இந்த சீரிஸில் நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளது.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, M ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது.  மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

‘இந்தியன் 2’ புரமோசன் பணிகளை பிரமாண்டமாகத் துவக்கியது லைகா நிறுவனம்!

இந்தியா முழுக்க எதிர்பார்ப்பைக் குவித்து, கோடிக்கணக்கானோர் பார்த்துக்கொண்டிருந்த நேற்றைய சிஎஸ்கே Vs ஆர்சிபி போட்டியின் ஆரம்ப கட்ட புரமோசன் நிகழ்ச்சியில், உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டு ‘இந்தியன் 2’ குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர்.

உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் ‘இந்தியன் 2.’ ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரன் & ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ இணைந்து தயாரிக்க, பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் Intro வீடியோ வெளியிடப்பட்டு வரவேற்பைக் குவித்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது எனவும் மேலும் இப்படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது என்பதையும் உறுதி செய்தனர்.

இந்தியன் 2 படம் குறித்த இந்த அடுத்தடுத்த அப்டேட்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“போகுமிடம் வெகு தூரமில்லை” பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Shark 9 pictures சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”. விரைவில் திரைக்கு வரவிருக்கும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் சிவா கில்லாரி பேசியதாவது..
நான் தெலுங்குக்காரன் ஆனால் உங்கள் முன் தமிழில் தான் பேசப்போகிறேன், எங்கள் அழைப்பை ஏற்று வந்த திரைப்பிரபலங்களுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தின் பாடல், டிரெய்லர் எல்லாம் பார்த்தீர்கள், இந்தப்படத்திற்கு முன் வேறொரு படம் செய்வதாக இருந்தேன், அப்போது தான் இந்தக்கதை வந்தது. இன்னும் பல கதைகள் கேட்டு முடிவு பண்ணலாம் என்ற முடிவிலிருந்தேன். அப்போது நான் நியூசிலாந்திலிருந்தேன் காலை 5 மணிக்குக் கதை சொல்ல வரச்சொன்னேன் ஆனால் மைக்கேல் 4 மணிக்கே வந்தார். அவர் கதையை விட அவர் அர்ப்பணிப்பு எனக்குப் பிடித்து விட்டது. அவருக்காகத் தான் இந்தப்படம் செய்தேன். அப்போது கொரோனா வந்து எங்கள் கனவுகளைத் தகர்த்துப் போட்டது. கொரோனா முடிந்த பிறகு மீண்டும் ஆரம்பித்தோம். எனக்கு சினிமா தெரியாது முற்றிலும் புதிது. வியாபாரம் தெரியாது ஆனால் அதில் கருணாஸ் அண்ணா, டிஃபெண்டர் பிரதர்ஸ், ரகுநந்தன் மூவரும் சப்போர்ட் செய்ததால் தான் இந்தப்படம் செய்ய முடிந்தது. இது மிக எமோசனலான படம். 12த் பெயில் படம் பார்த்த போது அழுதேன் அதே போல் இந்தப்படம் பார்த்த போதும் அழுகை வந்துவிட்டது. கருணாஸ் அண்ணா குழந்தையாக மாறி நடித்திருக்கிறார். விமல் சார் எனக்காக நிறைய வசதிகளைக் குறைத்துக் கொண்டு நடித்தார். ஒரு நாள் கூட அவர் லேட்டாக வந்ததில்லை. அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் உழைத்த அனைவரும் தங்கள் படம் போல வேலை பார்த்தார்கள். இது குடும்பங்களோடு பார்த்து மகிழும் படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி. குடும்பத்தோடு பார்க்கும் நல்ல படங்களை இந்த கம்பெனி எடுக்கிறார்கள் என அனைவரும் சொல்ல வேண்டும் அது தான் என் நோக்கம். இந்த இயக்குநர் இந்தக்கதைக்காக 10 வருடங்கள் உழைத்துள்ளார் அவருக்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசியதாவது..
எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. மைக்கேல் கதை சொன்ன போதே எனக்குக் கண்களில் கண்ணீர் வந்தது. அயோத்தி சிறந்த படமாக இருக்கும் என இதே மேடையில் சொன்னேன் அதே போல் இந்தப்படமும் மிக எமோஷலான படமாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். இந்தப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு நல்ல இயக்குநர் கிடைத்துள்ளார். விமலுடன் நாலாவது படம் மிக அருமையாக நடித்துள்ளார். கருணாஸ் எல்லோரையும் அழ வைத்துவிடுவார். இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பேரிய வெற்றிப்படமாக இருக்கும். விஷுவலும் பாடலும் செம்மையாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.

கதை நாயகி மேரி ரிக்கெட்ஸ் பேசியதாவது…
எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது. கருணாஸ் சார் நிறைய ஒத்துழைப்பு தந்தார். விமல் சார் நிறையச் சொல்லித் தந்தார். ஒரு அற்புதமான படம். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

ஜே பேபி இயக்குநர் சுரேஷ் மாரி பேசியதாவது..
சினிமாவை நேசிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். போகுமிடம் வெகு தூரமில்லை கதையை நான் படித்திருக்கிறேன். ஜே பேபி படத்தில் மைக்கேல் நிறைய வேலை பார்த்திருக்கிறார் அந்தப்படத்தை எல்லோரும் ரசிக்க அவரும் ஒரு காரணம். மைக்கேல் மிகக் கோபக்காரர். ஆனால் குழந்தை மனம் கொண்டவர். தான் நினைத்ததைத் திரையில் கொண்டு வர வேண்டுமென அடம்பிடிப்பார். நல்ல படைப்பாளி. இந்தப்படம் எல்லோருக்கும் திருப்புமுனையாக இருக்கும். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி

இயக்குநர் SR பிரபாகரன் பேசியதாவது..
போகுமிடம் வெகு தூரமில்லை தயாரிப்பாளருக்கு முதல் நன்றி. நல்ல கதைகளைத் தொடர்ந்து செய்வேன் எனச் சொன்ன அவர் மனதிற்கு நன்றி. படத்தின் நாயகன் விமல் எனக்கு நெருங்கிய நண்பர், விலங்கு மூலம் மீண்டும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார். அவர் அடுத்தடுத்த படங்கள் நல்ல எதிர்பார்ப்பில் உள்ளது. இந்தப்படம் மிக எதார்த்தமாக இருக்கிறது எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும். மைக்கேல் பற்றி அனைவரும் பேசும்போதே அவரது திறமை தெரிகிறது வாழ்த்துக்கள். கருணாஸ் அண்ணன் உடன் ஏதாவது ஒரு படத்தில் வேலை பார்க்க ஆசை அது தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. அவரது கெட்டப்பே வித்தியாசமாக இருக்கிறது. அவருக்கும் இப்படம் பெயர் சொல்லும் படமாக இருக்கும். ரகுநந்தன் இளையராஜா போல தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் சிறப்பாக உள்ளது. படத்திற்குப் பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது..
ஜே பேபி இயக்குநருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அந்தப்படம் மிக அழகாக இருந்தது. அதே போல் போகுமிடம் வெகுதூரமில்லை படமும் இருக்கும். இந்தப்படத்திற்கு என்னை அழைத்தது கோகுல் தான். என்னை ஏன் நடிக்கக் கூப்பிடவில்லை எனக் கேட்டேன், இரண்டே கேரக்டர் தான் என்று சொல்லி விட்டார். பிணமாக நடிக்கக் கூப்பிட்டிருந்தாலும் பாடி லாங்க்வேஜ் காட்டி நடித்திருப்பேன், அடுத்த படத்தில் மறந்து விடாதீர்கள். தயாரிப்பாளர் தமிழ் தெரியவில்லை என்றார் தமிழில் நீங்கள் போகுமிடம் நிறைய இருக்கிறது வாழ்த்துக்கள். என் அன்பு மாப்பிள்ளை விமலுக்கு வாழ்த்துக்கள். இயக்குநர் அவர் இந்தப்படத்திற்கே சம்பந்தமே இல்லாதவர் போல் அமைதியாக இருக்கிறார் வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் அருள் தாஸ் பேசியதாவது..
இந்தப்படத்தில் எனக்கு மிகவும் சின்ன ரோல், மைக்கேல் எனக்குப் பெரிதாக அறிமுகமில்லை ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் பார்த்தேன் அருமையான இயக்குநர். ஆர்டிஸ்டிடம் எப்படி வேலை வாங்க வேண்டுமென்று தெரிந்தவர். தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநராக வருவார். தமிழில் டிராவலிங் படங்கள் வருவது அரிது, ஏனென்றால் பல இடங்களுக்குச் சென்று எடுப்பதே கஷ்டம் ஆனால் அந்த ஜானரில் அருமையாக இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். படம் மிகச்சிறந்த ஃபீல் குட் படமாக இருக்கும். விமலுக்கும், கருணாஸுக்கும் இப்படம் திருப்புமுனையாக இருக்கும். எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ். இந்தப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் தினகரன் பேசியதாவது…
மைக்கேல் எனக்கு நெருங்கிய நண்பர். 2015ல் எனக்கு அறிமுகமானவர். அப்போது இப்படத்திற்காக பைலட் பண்ணியிருந்தார் அதைப்பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. எந்த அனுபவமும் இல்லாமல் எப்படி இப்படி எடுக்க முடியும் எனப் பிரமிப்பாக இருந்தது. ஆடியன்ஸை எப்படி எங்கேஜ் பண்ணுவது என்பதை அவரது திரைக்கதையில் அத்தனை நுணுக்கமாக வைத்திருந்தார். நான் வாய்ப்பு தேடிப் போகும் இடங்களில் எல்லாம் இவரைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன். இந்தப்படம் பலமுறை நின்று நின்று ஆரம்பித்தது. ஆனால் நம்பிக்கை குறையாமல் இருப்பார். ஜே பேபி படத்தில் நானும் மைக்கேலும் வேலை பார்த்தோம். அப்போதும் அவரை பார்த்துப் பிரமிப்பாக இருக்கும். இந்தப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படைப்பாக இருக்கும். மிக முக்கியமான விசயத்தை இந்தப்படம் பேசுகிறது. இந்தப்படம் வெற்றிபெறவும் மைக்கேலுக்கும் என் வாழ்த்துக்கள். கருணாஸ் அண்ணன், விமல் இருவருக்கும் என் வாழ்த்துக்கள். நன்றி.

கவிஞர் சினேகன் பேசியதாவது..
கோகுல கிருஷ்ணன் மற்றும் தாமோதரன் இருவருக்காகவும் தான் நான் வந்தேன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். போகுமிடம் வெகுதூரமில்லை, படத்தின் தலைப்பே மிகப்பெரிய வாழ்வியல் தத்துவத்தை அழகாகச் சொல்கிறது அது எனக்கு மிகவும் பிடித்தது. தமிழ் தெரியாது எனச் சொல்லிவிட்டு தமிழில் பேசிய, தமிழில் படம் தயாரித்துள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. நியூசிலாந்தில் அவர் பார்லிமெண்டில் போட்டியிட்டவர், நல்ல படங்கள் தொடர்ந்து செய்வேன் எனச் சொல்லும் அவர் மனது மிகச்சிறப்பானது. ஒரு இயக்குநருக்கான தயாரிப்பாளராக இருக்கிறார் அதற்காகவே அவருக்கு வாழ்த்துக்கள். கருணாஸ் அண்ணா பல தளங்களில் தன்னை நிரூபித்துவிட்டவர், விமல் அவர்களும் இந்தப்படம் மூலம் பெரிய வெற்றியைப் பெறுவார். மிகச்சிறந்த மெலடிகள் தரும் ரகுநந்தன் இன்னும் பெரிய இடம் செல்வார். விமலுக்கும் ரகுநந்தனுக்கும் பெரிய உயரத்தை இந்தப்படம் தரும். ஒரு நேர்த்தியான படைப்பு, ஒரு ஷாட்டில் தெரிந்துவிடும் டிரெய்லரிலேயே அத்தனை பிரமிப்பாகத் தெரிந்து விடுகிறார் அவருக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

இயக்குநர் செந்தில்நாதன் பேசியதாவது..
தயாரிப்பாளர் இயக்குநரின் 15 வருடப் போராட்டம் என்றார். இது எல்லோருடைய வாழ்க்கையிலும் நடப்பது தான். எனக்கும் 15 வருடப் போராட்டத்திற்கு பிறகுதான் பூந்தோட்ட காவல்காரன் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் அர்ப்பணிப்பிற்கு இந்தப்படம் பெரிய வெற்றியைத் தரும். கேமரா, மியூசிக், எடிட்டிங், ஆர்ட் என எல்லாமே அற்புதமாக இருக்கிறது. கருணாஸ், விமல் இருவரும் அசத்தியிருக்கிறார்கள். எல்லோருக்கும் மிகப்பெரிய வெற்றியை இந்தப்படம் தரும் வாழ்த்துக்கள். தாமோதரன் நிறைய ஆதரவு தந்ததாகத் தயாரிப்பாளர் சொன்னார், என் விட்டிலருகே தான் அவர் இருக்கிறார் வாழ்த்துக்கள். மைக்கேலுக்கு இந்தப்படம் இன்னும் நிறைய வாய்ப்புகள் வரட்டும் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் PL தேனப்பன் பேசியதாவது…
இயக்குநர் மைக்கேல் முதலில் என்னிடம் தான் கதையைச் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்த கதை. நானே பலருக்குச் சொல்லியிருக்கிறேன். நான் தயாரிக்க வேண்டிய படம். ஒரு சில காரணங்களால் முடியவில்லை. கருணாஸிடம் சொன்னேன் அவர் மூலம் இந்தப்படம் ஆரம்பமாகியுள்ளது. இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் யாருமே எதிர்பார்க்காத படி இருக்கும். அத்தனை அற்புதமான படமாக இருக்கும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நன்றி.

இயக்குநர் மைக்கேல் K ராஜா பேசியதாவது..
இது எனது முதல் மேடை, இந்தக்கதையை வைத்துக்கொண்டு 10 வருடம் சுற்றியிருக்கிறேன். அதற்கு முன்னால் இன்னும் பல கதைகளோடு சுற்றியுள்ளேன். போகுமிடம் வெகு தூரமில்லை ஆனால் இந்த இடத்திற்கு வர வெகு தூரம் பயணித்துள்ளேன். தயாரிப்பாளர் பற்றிச் சொல்ல வேண்டும், அவர் குழந்தை மாதிரி. கதை கேட்டவுடன் செய்யலாம் என்றார் நான் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் கொரோனா வந்து 3 வருடத்தைத் தின்றுவிட்டது. அப்புறம் மீண்டும் எனக்கு இப்போதைய சூழ்நிலையில் படம் செய்யும் ஐடியா இல்லை ஆனால் உனக்காகத் தயாரிக்கிறேன் என்றார். அந்த வார்த்தையில் தான் இங்கு வந்துள்ளோம். நான் துவளும்போதெல்லாம் இந்தக்கதையைக் கேட்டு செம்மையாய் இருக்கு என சிலர் சொல்லும் வார்த்தை தான் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஊக்கம் . அது போல் இந்தக்கதையைக் கேட்ட அனைவரும் ஊக்கம் தந்துள்ளார்கள். தேனப்பன் சார் மூலம் கருணாஸ் சாரை சந்தித்து கதை சொன்னேன், நாமே பண்ணலாம் என ஊக்கம் தந்தார். திறமை மட்டும் தான் சினிமாவில் உங்களைக் கொண்டு சேர்க்கும். அதில் நம்பிக்கையாக இருங்கள் ஜெயிப்பீர்கள். கேமராமேன் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார். எடிட்டருடன் பயங்கர சண்டை போட்டுள்ளேன் ஆனால் அவர் எடிட்டிங் தான் படமே அதற்காக நன்றி. விமல் சார் பற்றிச் சொல்ல வேண்டும், அவரைப்பற்றி நிறையச் சொன்னார்கள் கொஞ்சம் பயமாக இருந்தது ஆனால் ஷீட்டிங்கில் 7 மணிக்குச் சொன்னால் மேக்கப்போடு வந்து நிற்பார். அத்தனை அர்ப்பணிப்போடு இருந்தார். இந்தப்படத்தில் டயலாக் இல்லாமல் வெறும் முக பாவனைகளில் நடிக்க வேண்டும், அசத்தியிருக்கிறார். இந்தக்கதைக்களமே புதிது ஆனால் இதை நம்பி எடுத்தது மிகப்பெரிய விசயம், தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். படம் நன்றாக வர வேண்டுமென என்னுடன் உழைத்த என் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள். படம் பாருங்கள் அற்புதமான அனுபவமாக இருக்கும் நன்றி.

நடிகர் கருணாஸ் பேசியதாவது..
இயக்குநர் ஆணித்தரமாக அழுத்தமாகப் பேசக் காரணம் அவரது திறமை தான். அத்தனை சிறப்பாகப் படம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் சிவா மிக நல்ல மனம் கொண்டவர். நியூசிலாந்து போய் சாதித்துக் காட்டிய இந்தியன். 24 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் யாரிடமும் நான் போய் வாய்ப்பு கேட்டதில்லை. சினிமா உலகம் யாரையும் மதிக்காது, நமக்கான வாய்ப்புக்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரைத்துறை என்பது மிகப்பெரிய பயணம். மைக்கேல் இந்தக்கதை இப்படி தான் வரவேண்டுமெனப் பிடிவாதமாக எடுத்துக் காட்டியுள்ளார். என்னையும் விமலையும் வித்தியாசமாகக் காட்டியுள்ளார். அவருடன் எனக்கு இது தான் முதல் படம், நான் ஒரு ஹீரோவுடன் நடித்த எல்லாப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தக்கதையைக் கேட்டு இந்தப்படம் நடித்தால் நாம் இறந்த பிறகு பேர் சொல்லிக்கொள்ளும் படமாக இருக்குமென என் குடும்பத்தினரிடம் சொன்னேன். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த வாய்ப்பு என் கையை விட்டுப் போனது, ஆனால் நாம் நடிக்கனும் எழுதியிருந்தால் அது நடக்கும் அப்படிதான் இப்போது நடந்துள்ளது. மகிழ்ச்சி. இந்தப்படத்திற்காக உண்மையாக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் நன்றி.

நடிகர் விமல் பேசியதாவது..
எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. தாமோதரன் மற்றும் கோகுல் தான் இந்தப்படத்தில் நான் நடிக்கக் காரணம் நன்றி. இயக்குநர் கதை சொல்லிப் பிடித்த பிறகு தான், தயாரிப்பாளரிடம் பேசினேன். வெள்ளை மனத்துக்காரர் கொடுத்த வாய்ப்பை காப்பாற்ற வேண்டுமென நினைப்பார். இந்த மேடையில் நாங்கள் எல்லோரும் இருக்க அவர் தான் காரணம். நான் நிறையப் புதுமுக இயக்குநர்களோடு வேலை பார்த்திருக்கிறேன் அவர்கள் எல்லோரும் பெரிய இயக்குநர்களாக இருக்கிறார்கள் அதே போல் மைக்கேலும் பெரிய இயக்குநராக வர வாழ்த்துக்கள். எப்போதும் முதல் படத்தில் அவர்களின் வாழ்வின் ஜீவன் இருக்கும் இந்தப்படத்திலும் இருக்கிறது. இசையமைப்பாளர் ரகுநந்தனோடு நாலாவது படம் இதுவும் வித்தியாசமாக இருக்கும். கருணாஸ் அண்ணனும் நானும் 15 வருடப் பழக்கம் ஆனால் இந்தப்படத்தில் தான் ஒன்று சேர்ந்துள்ளோம். இது மாதிரியான படம் செய்ததில்லை மிக அழுத்தமான பாத்திரம், மெனக்கெட்டு உழைத்துள்ளோம். எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.

தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன், அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர்மைக்கேல் K ராஜா.

இதுவரையிலான திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்

இயக்குநர்: மைக்கேல் K ராஜா
தயாரிப்பாளர்: சிவா கில்லாரி (Shark 9 pictures)
இசையமைப்பாளர்: N.R.ரகுநந்தன்
ஒளிப்பதிவாளர்: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்
தொகுப்பாளர்: M.தியாகராஜன்
கலை இயக்குநர்: சுரேந்தர்
ஸ்டண்ட் டைரக்டர்: மெட்ரோ மகேஷ்
நடன மாஸ்டர்: ரிச்சி ரிச்சர்ட்சன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ராகேஷ் ராகவன்
நிர்வாக தயாரிப்பாளர்: வெங்கி மகி
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)

கல்கி 2898 கிபி படத்தின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது.

கல்கி 2898 கிபி படத்தின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. 5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின் நம்பகமான நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார் !!

கல்கி 2898 கி.பி., படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உட்சகட்டத்தை எட்டியுள்ளது. கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரான புஜ்ஜியின் அறிமுகம் மே 22, 2024 அன்று வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது

‘From Skratch EP4: Building A Superstar’ என்ற தலைப்பிலான கண்கவர் திரைக்குப் பின்னால் நம்மை ஒரு அசாத்தியமான காட்சி அனுபவத்திற்குள் கூட்டிச் செல்கிறார் இயக்குனர் நாக் அஷ்வின். 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த பயணம் நம்மை வியக்க வைக்கிறது. “சூப்பர் ஹீரோ”, “பைரவாவின் சிறந்த நண்பன், ” புஜ்ஜி” என பில்ட் அப்கள், நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தைத் தூண்டுகிறது.

இது குறித்தான வீடியோ லிங்க்

2 நிமிட 22 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, கேரேஜ் அமைப்பிலான செட்டிங்கில், பிரபாஸுடனான சந்திப்பு காட்சிகளைக் காட்டுகிறது, இது மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ள புஜ்ஜியின் பிரமாண்ட அறிமுகத்திற்கான ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கிறது.

சமீபத்தில் 2898 கி.பி கல்கியின் சாம்ராஜ்யத்தில் அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமாவின் தோற்றம், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளை ஒருங்கிணைத்து உண்மையான பான்-இந்திய டீஸராகக் அசத்தலால வெளியாகியுள்ளது இந்த டீசர்.

அற்புதமான படைப்பாளி நாக் அஸ்வின் இயக்கத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி போன்ற இந்தியளவிலான முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில், வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கல்கி 2898 AD இந்த ஆண்டின் மிக முக்கிய படைப்பாக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இப்படம் ஜூன் 27, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

“இங்க நான் தான் கிங்கு” திரைவிமர்சனம்

தாய் தந்தை இழந்து அனாதையான கதாநாயகன் சந்தானம் சென்னையில் உள்ள தனியார் மேட்ரிமோனி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.தனக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றால் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதற்காக தனது நண்பரிடம் கடன் வாங்கி கதாநாயகன் சந்தானம், ஒரு மிகப்பெரிய குடியிருப்பில் ப்ளாட் ஒன்றை வாங்குகிறார்.யார் இந்த 25 லட்சம் ரூபாய் கடனை யார் தருகிறார்களோ அவர்களது மகளை திருமணம் செய்து கொள்வதென்று முடிவெடுத்து பெண் தேடும் படலத்தை ஆரம்பிக்கிறார்.பெண் தேடும் படலத்தில் இருக்கும் போது புரோக்கர் மனோபாலா மூலமாக கதாநாயகன் சந்தானத்திற்கு இரத்தினபுரம் ஜமீனின் பெண் சம்மந்தம் கிடைக்க ஜமீன் குடும்பத்தால் கதாநாயகன் சந்தானத்தின் 25 லட்சம் ரூபாய் கடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்று எண்ணுகிறார்.

இரத்தினபுரம் ஊரில் உள்ள அனைவரும் கதாநாயகன் சந்தானத்தை மிகப்பெரிய அளவில் ராஜ மரியாதையோடு அவரை வரவேற்று கதாநாயகன் சந்தானத்திற்கு மிகப்பெரிய அளவில் மரியாதை செய்கின்றனர்.இரத்தினபுரம் ஜமீனுக்கு தம்பி ராமையாவுக்கு ஒரு மகன் பால சரவணன் ஒரு மகள் கதாநாயகி ப்ரியாலயா குடும்பமாக இருந்து வருகிறார்கள்.அந்த ஜமீன் தம்பி ராமையாவின் மகள் கதாநாயகி ப்ரியாலயாவின் தாலி கட்டிய மறுகணம் தான் கதாநாயகன் சந்தானத்திற்கு தெரிகிறது ஜமீன் பங்களா மீதே பல கோடிகளுக்கு கடன் இருக்கிறது என்று. அதற்காக திருமணம் முடிந்ததும் ஜமீன் பங்களாவை வாங்கிய கடனுக்காக பேங்க் அதிகாரிகள் சீல் வைத்து விடுகிறார்கள்.இதனை அறிந்து மனம் உடைந்த கதாநாயகன் சந்தானம். வேறு வழி இல்லாமல், தனது மனைவி கதாநாயகி ப்ரியாலயா, மாமனார் தம்பி ராமையாவையும் பால சரவணனை அழைத்துக் கொண்டு சென்னை திரும்புகிறார்.

தன் மனைவி கதாநாயகி ப்ரியாலயாவிடம் வேண்டா வெறுப்புடன் வாழ்ந்து வரும் கதாநாயகன் சந்தானம், இவர்களை வைத்துக் கொண்டு இவர்களை எப்படி சமாளிக்கிறார்.நண்பர்களிடம் வாங்கிய 25 லட்ச ரூபாய் கடனை பிரச்சனையை சமாளித்தாரா? சமாளிக்க வில்லையா? என்பதுதான் மீதிக்கதை.

கதாநாயகன் சந்தானம், தான் தமிழ் திரைப்பட உலகில் ஒரு காமெடி கிங் மேக்கர் என மீண்டும் இந்த இங்கு நான் தான் கிடங்கு திரைப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.தன் மாமனார் தம்பி ராமையாவை கலாய்க்கும் இடங்கள் அனைத்தும் திரைப்படத்தின் காமெடி ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

அறிமுக கதாநாயகியாக நடித்திருக்கும் ப்ரியாலயா அழகான நடிப்பை அளவாகவே கொடுத்து ஒவ்வொரு காட்சிக்கு கொடுத்திருக்கிறார்.

ஜமீனாக நடித்திருக்கும் தம்பி ராமையா, அவருடைய அனுபவ மிக அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இரண்டு கதாபாத்திரத்தில் வரும் விவேக் பிரசன்னாவின் மிகவும் அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.அதுவும் தீவிரவாதியாக வரும் விவேக் பிரசன்னா இறந்து நடித்த காட்சிகளில் அருமையான நடிப்பை கொடுத்து அசர வைத்திருக்கிறார்.

மனோபாலாவின் நடிப்பு திரைப்படத்தின், காமெடி காட்சிகளுக்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

முனிஷ்காந்த், பாலசரவணன், லொள்ளு சபா மாறன், லொள்ளு சபா சுவாமிநாதன், கூல் சுரேஷ் லொள்ளு சபா சேஷு, என திரைப்படத்தின் மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் மிக சிறப்பான நடிப்பைக் கொடுத்திருந்தனர்.

ஒளிப்பதிவாளர் ஓம் நாராயண ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு கை கொடுத்திருக்கிறது.

இசையமைப்பாளர் இமானின் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

தீவிரவாதிகளின் காட்சிகள் அனைத்தும் இந்த திரைப்படத்திற்கு எந்த ஒரு இடத்திலும் சப்போர்ட் இல்லாமல் தனியாக இருப்பதால் திரைப்படத்தில் அது ஒரு மிகப்பெரிய குறையாக அமைந்திருக்கிறது.

இந்த இங்கு நான் தான் கிடங்கு திரைப்படத்தில் என்னதான் சில குறைகள் இருந்தாலும் காமெடி கலாட்டாகளில் திரையரங்கம் முழுவதும் மக்களின் சிரிப்பு அலை அதிர வைத்திருப்பதால் பல குறைகள் அனைத்தும் நிறைவாக இருக்கிறது.

இங்கு நான் தான் கிங்,கிங்கின் கர்ஜனை இன்னும் பலமாக இருந்திருக்கலாம்

எலக்சன் திரைவிமர்சனம்

வேலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் கதாநாயகன் விஜய் குமார், தந்தை ஜார்ஜ் மரியன் மற்றும் தாயுடன் வாழ்ந்து வருகிறார்.

அக்கிராமத்தில் சுமார் 40 வருட காலமாக மாநில கட்சியில் விஜய் குமாரின் தந்தை ஜார்ஜ் மரியன், அந்த கட்சியில் தீவிர விசுவாசியாக இருந்து வருகிறார்.தனது கட்சிக்கு விசுவாசமாக இருந்து, அங்கு நடக்கும் தேர்தலில் கட்சியின் மேலிடத்திற்கு கட்டுப்பட்டு அக்கட்சிக்காக ஜார்ஜ் மரியன் பணிபுரிகிறார்.தனியார் நிறுவனத்தில் பணிபுரிய, காதல் தோல்வி ஒன்று நடக்க, தொடர்ந்து வீட்டில் பார்த்த பெண் கதாநாயகி பிரீத்தி அஸ்ரனி திருமணம் செய்து கொள்கிறார்.

இந்நிலையில், அந்த ஊரில் உள்ளாட்சி தேர்தல் வரும் நிலையில், கதாநாயகன் விஜய் குமார் தந்தையான ஜார்ஜ் மரியனை அவமானப்படுத்தப்பட அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கதாநாயகன் விஜய் குமார் தேர்தலில் நிற்கிறார். வீட்டை அடமானம் வைத்து அந்த பணத்தை தேர்தலுக்காக செலவு செய்கிறார். தேர்தலில் தோல்வியடைந்து பணம் மட்டுமல்லாமல், ஒரு உயிர், போகிறது அதனால் அனைத்தையும் இழந்து நிம்மதியை இழந்து மனதளவில். பாதிப்படைகிறார்.

மீண்டும் உள்ளாட்சி தேர்தலில் நின்று விஜய்குமார் வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா.? தனது இழப்பை எப்படி பழி தீர்த்தார்.?? என்பதுதான் இந்த எலக்சன் திரைப்படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் விஜயகுமார் சில சில காட்சிகளில் நீண்ட வசனத்தை பேசி தனது திறமையை நிரூபிக்க முயற்சி செய்திருக்கிறார்.ஆனால், ஒரு சில காட்சிகளில் நடிப்பு எதார்த்தமாக இல்லை எனவும் கதையை தாங்கும் அளவிற்கான கதாபாத்திரத்திற்கு கதாநாயகன் விஜய்குமார் பொருத்தமாக இல்லையே என்ற சந்தேகம் எழுகிறது.

கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரா நடித்துள்ளார். தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரா க்யூட்டான சில காட்சிகளில் எக்ஸ்ப்ரஷன்களைக் கொடுத்து கதைக்கேற்ற கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

ஜார்ஜ் மரியான் தனது அனுபவ நடிப்பால் அசத்தியிருக்கிறார்.இவர்களைத் தொடர்ந்து பவல் நவகீதன் மற்றும் திலீபன் இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்து தங்களது கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து மிக அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவு சண்டைக் காட்சியில் மிக அருமையாக கேமராவை கையாண்டு இருக்கிறார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டும் திரைப்படத்திற்கு மிக அருமையாக கைகொடுத்திருக்கிறது.

கிராமங்களில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலை மையப்படுத்தி கதை இருப்பதால் ஆங்காங்கே சில காட்சிகளில் இன்னும் கொஞ்சம் தெளிவான விளக்கத்தைக் கொடுத்து கதையை நகர்த்தியிருக்கலாம் என தோன்றியது.

மேலும், உள்ளாட்சி தேர்தல் கதையை கையில் எடுத்த இயக்குனர் உள்ளாட்சி தலைவருக்கு அதிகாரம் என்னவென்று தெரிந்து கொண்டு இந்த கதையை அழுத்தமான திரைக்கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து விளக்கமாகவே கொடுத்திருந்திருக்கலாம்.

எலக்சன் நடக்கும் போது இருக்கும் பரபரப்பு திரைக்கதையில் இல்லாமல் போனது!!!!!!!!

வசந்தபாலன் இயக்கத்தில் இந்த தலைமை செயலகம் வலைத்தொடர் 8 ZEE5 இணையத்தில்

இம்மாதம் 2024 மே 17 ஆம் தேதி அன்று இந்த தலைமைச் செயலகம் வலைத்தொடர் தமிழக அரசியல் களத்தின் நடந்த பின்னணியில் லட்சியம், துரோகம் மற்றும் போராட்டம் வழக்கு மிகுந்த ஒரு பெண்ணின் அதிகார வேட்கையின் கதையைச் சொல்கிறது.

வட இந்தியாவில் மிகப்பெரிய ஒரு கொடூரமான கூட்டம், ஒன்று பெண்ணின் முகம் காட்டப்படாத அந்த பெண்ணை அடித்து ரத்த  வெள்ளத்தில் மிதக்க விட்டு சித்திரவதை செய்யப்பட்டு கைகளை கட்டி  தரதரவென்று இழுத்து வந்து ஊர் மத்தியில், இந்தப் பெண்ணை மிகவும் கொடூரமாக தாக்கி ஒரு குடிசையில் அடைகிறார்கள்.ஒரு நிலையில் அந்தப் பெண் தன்னை தாக்கிய மொத்த கும்பலையும் வெட்டி  வீழ்த்திவிட்டு தமிழகத்துக்கு  தப்பி சென்று விடுகிறார்.

தமிழக முதல்வராக இருக்கும் கிஷோர் மீது ஒரு ஊழல் வழக்கு ஒன்று மத்திய பிரமுகர் சுப்பிரமணி சுவாமி போல் இருக்கும் ஒருவரால் ஆந்திரா மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டு, சில வருடங்களாக அந்த வழக்கும் நடத்தப்பட்டு வருகிறது.முதல்வர் கிஷோர்   இரண்டு மகள்கள் மூத்த மகள் ரம்யா நம்பீசன் தன் தந்தையை பின்பற்றி அரசியலில் பயணப்படுகிறார் .இளைய மகளுக்கு திருமணம் ஆகி கணவன் நிரூப் நந்தகுமார் தனது மாமனார் முதல்வர் என்பதால் அரசியல் அதிகாரம்,  காண்ட்ராக்ட், என பல கோடிகளை சம்பாதித்து கொண்டு இருக்கிறான்.

தமிழக முதல்வரோடு ஒன்றாக கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து  பழம் பெரும் மூத்த அரசியல்வாதியான சந்தான பாரதி கட்சியில் பொது செயலாளர் பதவியில் சுயநலம் இல்லாமல் கட்சிக்கு விசுவாசமாக இருந்து கொண்டிருக்கிறார்.

தமிழக முதல்வர் கிஷோரின் நெருங்கிய தோழியமான கட்சியின் ஆலோசகரான ஸ்ரேயா ரெட்டி இருந்து வருகிறார்.

தமிழக முதல்வர் கிஷோருக்கு சாட்சிகள் அனைத்தும் எதிராக திரும்ப, தீர்ப்பும் முதல்வருக்கு எதிராக தான் வர வாய்ப்புள்ளதாக அனைவரும் அறிகின்றனர்.தமிழக முதல்வர் கிஷோர் மீதான ஊழல் வழக்கு நிரூபிக்கப்பட்டு அவர் சிறைசாலைக்கு சென்று விட்டால், தமிழக முதலமைச்சர்  நாற்காலியை பிடிப்பதற்காக சில கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன..

தமிழக முதல்வர் கிஷோரின் மூத்த மகள் அமைச்சருமான ரம்யா நம்பீசன், தமிழக முதல்வர் கிஷோரின் இரண்டாவது மருமகனான நிரூப் நந்தகுமார் இருவரும் முதல்வர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள்.இந்த சூழலில், தமிழக முதல்வர் கிஷோரின் நெருங்கிய தோழியமான கட்சியின்  ஆலோசகருமான ஷ்ரேயா ரெட்டியும் அந்த முதல்வர் நாற்காலிக்கு குறி வைக்கிறார்.

தமிழக முதல்வர் கிஷோரின் நெருங்கிய தோழியமான கட்சியின்  ஆலோசகருமான ஷ்ரேயா ரெட்டியும் மீது இருக்கும் நட்பாலும் நம்பிக்கையாலும் ஷ்ரேயா ரெட்டி சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் கிஷோர்.அதேசமயம், தனது தந்தை தமிழக முதல்வர் கிஷோரை எப்படியாவது இந்த ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் ஓடிக் கொண்டிருக்கிறார் ரம்யா நம்பீசன்.

காவல்துறை அதிகாரியான பரத் தமிழகத்தில் நடக்கும் கொலை ஒன்றை விசாரிக்கிறார்.அந்த கொலை வழக்கானது ஒரே நேர்கோட்டில் நூல் பிடித்தது போல் செல்ல இவை அனைத்தும் ஒரு புள்ளிகளிடம் வந்து சேர்கிறது.

அந்த பெரும்புள்ளி யார் மீது வந்து நிற்கிறது.? தமிழக முதல்வர் கிஷோருக்கு ஊழல் வழக்கிலிருந்து விடுபட்டாரா?  தண்டனை வழங்கப்பட்டதா.? இல்லையா? அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்.? என்பதுதான் இந்த தலைமை செயலகம் வலைத்தொடரின் நீதி கதை.

இந்த தலைமைச் செயலகம் வலைத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் கிஷோர் தன் கதாபாத்திரத்தின்  முக்கியத்துவத்தை உணர்ந்து, நடிப்பின் மூலம் கதாபாத்திரத்தை வாழ வைத்திருக்கிறார்.

இந்த தலைமைச் செயலகம் வலைத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி முக்கிய தூணாக வந்து நிற்க இப்படிப்பட்ட ஒரு  கதாபாத்திரத்தை செய்வதற்கு தமிழ் திரைப்பட உலகில் இவரைத் தவிர வேறு யார் இருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு “கொற்றவை” கதாபாத்திரத்திற்கு ஆகப் பொருத்தமாகவும் கதாநாயகி ஷ்ரேயா ரெட்டி கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அருமையாக நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பரத், இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் மிகப்பொருத்தமாக இருக்கிறார்.சிபிஐ அதிகாரியாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதித்யா மேனனின் விசாரணை செய்யும் தோரணையை நடிப்பின் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார்.ரம்யா நம்பீசன் அமைச்சராக கதாபாத்திரத்தில் மிகவும்  இறுக்கமான முகத்தோடு அவருடைய நடிப்பின் மூலம்  கைதட்டல் வாங்கி இருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து , கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி மகேந்திரன்,  சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் அளவோடு செய்து கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்  வொய்டு ஆங்கிள் ரவிஷங்கரின் ஒளிப்பதிவு வளைத்தொடருக்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு மிக அருமையாக பயணித்திருக்கிறார்.

இதுவரை நாம் பார்த்த இந்திய அரசியல், தமிழக அரசியல் இரண்டையும் கலந்து ஒரு அரசியல் சதுரங்க ஆட்டத்தை மிகவும் நேர்த்தியான படைப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்.

தலைமைச் செயலகம் இது குடும்ப அரசியலில் நடக்கும் தலைமைச் செயலகத்தின் அரசியல் விளையாட்டு

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான சஞ்சீவ், நளினி, பாப்பி மாஸ்டர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘கோதையின் குரல்’ குறும்படத்திற்கு பிரபலங்கள் பாராட்டு

தமிழில் ‘தங்க முட்டை’ மற்றும் தெலுங்கில் ‘பங்காரு குட்டு’ என இருமொழிகளில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தை எழுதி இயக்கி வரும் கோபிநாத் நாராயணமூர்த்தி மை கைண்டா ஃபிலிம்ஸ் என்று புதிய திரைப்பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

கோபிநாத் நாராயணமூர்த்தியின் தாயார் கே கோதைநாயகி அவர்களின் பிறந்தநாளான மே 16 (வியாழக்கிழமை) அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மை கைண்டா ஃபிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தை கோபிநாத் நாராயணமூர்த்தியின் குருநாதர்களான இயக்குநர்கள் மிலிந்த் ராவ், ஆர் கண்ணன், இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் பேரரசு மற்றும் பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதிய திரைப்பட நிறுவனத்தின் பெயர் பலகையை கோபிநாத் நாராயண மூர்த்தி மற்றும் இணை இயக்குநர் கரிகாலன் பிரபலங்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மை கைண்டா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் படைப்பான ‘கோதையின் குரல்’ குறும்படம் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் அதை மிகவும் பாராட்டினர். தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் மோகன் ஜி, இயக்குநர் எஸ் ஆர் பிரபாகர், தயாரிப்பாளர் இளஞ்செழியன் கே எம், தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராவ் (‘தங்க முட்டை’ மற்றும் ‘பங்காரு குட்டு’) உள்ளிட்டோர் படத்தை பெரிதும் பாராட்டினர். இதைத் தொடர்ந்து, 12 வயதே ஆன ஒரு பெண் குழந்தை சமுதாயத்தின் முக்கிய பிரச்சினை ஒன்று குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது தொடர்பான ‘கோதையின் குரல்’ குறும்படம் விரைவில் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்படுவதோடு முன்னணி ஓடிடி தளம் ஒன்றிலும் ஒளிபரப்பாக உள்ளது. அரசியலமைப்பின் முக்கியமான‌ தூண்களில் ஒன்றில் மாற்றத்தை இப்படம் பரிந்துரைக்கிறது. இந்தியாவில் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் மிக முக்கியமான கருத்து ஒன்றை இப்படம் வலியுறுத்துகிறது.

‘தங்க முட்டை’ படத்தில் நாயகனாக நடிக்கும் தெலுங்கு நடிகர் சம்பூர்ணேஷ் பாபுவுக்கு தமிழில் டப்பிங் பேசும் பிரபல நடிகர் சஞ்சீவ் அரசு அதிகாரியாக இந்த குறும்படத்தில் நடித்துள்ளார். நடிகை நளினி, பாப்பி மாஸ்டர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் உருவாகியுள்ள இந்த குறும்படத்திற்காக ‘தங்க முட்டை’ படக்குழுவினருடன் மீண்டும் இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தி கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. பவி கே பவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் படத்தொகுப்பையும், பிவி பாலாஜி கலை இயக்கத்தையும் கையாண்டுள்ளனர்.

ஒரு பெண் குழந்தையின் வழியாக சொல்லப்பட்டுள்ள இந்த கதை, இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்று கூறிய‌ முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ஏபிஜே அப்துல் கலாமின் லட்சியத்தையும் நினைவூட்டுகிறது.

பன்னாட்டு நிறுவனங்களுடன் பணியாற்றிய அனுபவம் பெற்ற தகவல் தொழில்நுட்ப நிபுணரான கோபிநாத் நாராயணமூர்த்தி சினிமா மீதான பற்றால் இயக்குநர் ராஜிவ் மேனனின் மைண்ட்ஸ்கிரீன் திரைக்கதை மற்றும் திரைப்பட இயக்க பயிற்சி மையத்தில் பயின்றவர் ஆவார். இயக்குநர்கள் மிலிந்த் ராவ், ஆர் கண்ணன் மற்றும் பிஜோய் நம்பியார் ஆகியோரிடமும் இவர் பணியாற்றியுள்ளார். பின்னர் இவர் ஒரு திரை எழுத்து நிறுவனத்தை தொடங்கியபோது, இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.