March 2024

பிரைம் வீடியோ இன்றைய தேதி வரையிலான அதன் அனைத்து மொழிகள் மற்றும் பிரிவுகள் முழுவதுமாக கிட்டத்தட்ட 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பரந்த அளவிலான மிகப்பெரிய பட்டியலை வெளியிட்டது.

ப்ரைம் வீடியோ, 2023- ஆண்டை மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு இந்தியனாலும் மிகவும் விரும்பப்படும் முன்னணி பொழுதுபோக்கு தளமாக விளங்குவதற்கான தனது உத்திரவாதத்தை மீண்டும் வலியுறுத்தும் விதமாக அனைத்து மொழிகளின் உள்ளடக்கங்களில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் .
பல்வேறு வகையான புதிய தொடர்கள், மனதைக் கவர்ந்த மீண்டும் திரையிடப்படவிருக்கும் நிகழ்ச்சிகள், இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள், ஒரிஜினல் திரைப்படங்கள், இணைத் தயாரிப்புகள், திரையரங்கு வெளியீட்டிற்குப் பின்னர் வெளியிடப்படும் திரைப்படங்களின் வரிசையை வெளிவரவிருக்கும் அதன் நிகழ்ச்சிகளின் பட்டியலில் இடம்பெறச்செய்திருக்கிறது

வெளியிடப்படவிருக்கும் நிகழ்ச்சிகளின் தலைப்புக்கள் குறித்த விவரங்கள் பின் இணைப்பில் தனியே .கொடுக்கப்பட்டுள்ளது. டைட்டில்ஸ், கிரடிட்ஸ், கீ ஆர்ட்ஸ் மற்றும் நிகழ்வுகளின் புகைப்படங்களின் பட்டியலை அணுக இங்கே கிளிக் செய்யுங்கள்.

YT – https://youtu.be/6UH2bOLorWQ
X – https://x.com/primevideoin/status/1770096959799587197?s=46&t=j1_icXuHEka-TZ4MNka2ug
IG – https://www.instagram.com/reel/C4sw2TWN_0T/?igsh=ZDZnNzF6anh2bDhi
FB – https://www.facebook.com/share/r/EJHMThAt7Lx3b9MX/?mibextid=QwDbR1

மும்பை, இந்தியா—மார்ச் 19, 2024— இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு மையமாக திகழும் பிரைம் வீடியோ, பிரைம் வீடியோ பிரெஸெண்ட்ஸ் இந்தியா இரண்டாவது காட்சித் தொகுப்பில் இன்றைய தேதி வரையிலான தனது மிகவும் பேரார்வமிக்க பல்வேறு வகை உள்ளடக்கங்கள் கொண்ட கிட்டத்தட்ட 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது அவற்றில் பெரும்பாலானவை அடுத்த 2 ஆண்டுகளில் இந்த சேவையில் வெளியிடப்படும். 40 ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 29 திரைப்படங்களுடன் கூடிய இந்தப், புதிய பட்டியல் இந்தியாவின் தலைசிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கு உத்திரவாதமளிக்கிறது. .

எதிர் வரவிருக்கும் பிரைம் வீடியோவின் ஒரிஜினல்கள், குடும்பத்திலுள்ள அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு பரந்த அளவிலான பிரிவு வகைகளின் உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு விரிவான எண்ணிக்கையிலான தொடர்கள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. விரிவான நீண்ட பட்டியலை வழங்குகிறது. விறுவிறுப்பான த்ரில்லர்கள் மற்றும் மனதை ஆழ்ந்து போகச்செய்யும் டிராமா, விலா எலும்பை நோகச்செய்யும் நகைச்சுவை தொடர்கள், மற்றும் முதுகெலும்பை சில்லிடச்செய்யும் திகில் படங்கள், முதல் ஆவலைத் தூண்டும் புதிரான கற்பனை கலவாத நிகழ்ச்சிகள், வயது வந்த இளைஞர்களுக்கான கவர்ச்சிகரமான கதைகள், அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த, மற்றும் மனதைக் கவரும் இசையுடன் கூடிய டிராமாக்கள் போன்ற பலதரப்பட்ட வகையிலான இந்தப் பட்டியல் மிகச்சிறந்த உள்ளூர் கதைகளை திரைக்கு கொண்டுவருகிறது. இந்தியாவின் மிகவும் மதிப்பு வாய்ந்த சில திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களால் திரையரங்குகளில் வெளியிடபட்ட பிறகு இந்தச் சேவை மூலமாக அனைத்து மொழிகளிலும் வழங்கப்படும் திரைப்படங்களுக்கும் கூடுதலாக வழங்கப்படுபவை இவை.

“பிரைம் வீடியோவில், எங்கள் கவனம் முழுவதும், ஒரு முழுமையான மிகச்சிறந்த பல்வேறு வடிவத்திலான பொழுதுப்போக்கு அம்சங்களை வழங்கி இந்திய வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த சேவையை அளிப்பதில் நிலைகொண்டுள்ளது. சீரற்றவைகளை முறியடித்து ஒதுக்கித் தள்ளும் ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள், நேரடி சேவை வெளியீடுகள் தொடங்கி அனைத்து மொழிகளிலும் மிகச்சிறந்த மாபெரும் வெற்றி பெற்ற சில திரைப்படங்களின் திரையரங்கு வெளியீட்டுக்கு பிறகான வெளியீடுகள் வரை, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொழுதுபோக்கிற்கான முதல் தேர்வாக நாங்கள் திகழவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்,” என்று, பிரைம் வீடியோ,இந்தியாவிற்கான நிர்வாக இயக்குநர் சுஷாந்த் ஸ்ரீராம் கூறினார். “2023 ஆம் ஆண்டில் நாங்கள் வழங்கிய உள்ளடக்கங்கள் சர்வதேச அமைவிடங்களில் புதிய வாடிக்கையாளர் களை ஏற்றுக்கொள்வதிலும் பிரைம் உறுப்பினர் ஈடுபாடுகளிலும் இந்தியாவை முன்னணியில் திகழச்செய்யும் வகையில் புதிய பாதைகளை வகுத்தமைத்தது. எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது காட்டிய அன்பு எங்களை மேலும் பணிவுறச் செய்தது, மேலும் எங்கள் சேவையில் வழங்கப்படும் ஒவ்வொரு கதையும் யாராவது ஒருவரின் மனதுக்கு விருப்பமான நிகழ்ச்சியாக அல்லது திரைப்படமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதனுடன் ஒத்திசைந்து செயல்படும் வகையில், இன்று வரையிலான எங்களின் மிகப்பெரிய, மிகவும் பல்வேறு வகைப்பட்ட பட்டியலை வெளியிடுவதில் நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம், மற்றும் நாங்கள் வெளியிடவிருக்கும் தொடர்களும் திரைப்படங்களும் இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை தொடர்ந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.”

“பிரைம் வீடியோவில், மொழியியல் மற்றும் புவியியல் எல்லைகளுக்கும் அப்பால் பயணிக்கும், ஒரு மாறுபட்ட, உண்மையான மற்றும் இந்தியாவில் வேரூன்றிய கதைகளை காட்சிப்படுத்துவதற்கான உலகளாவிய மையமாக இருப்பதே எங்களின் தொடர்ந்த இயக்கச் செயல்பாடாக இருக்கிறது” என்று பிரைம் வீடியோ, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் ஹெட் ஆப் ஒரிஜினல்ஸ், அபர்ணா புரோஹித் கூறினார். “2023 ஆம் ஆண்டில் மட்டும் மொத்த 52 வாரங்களில் 43 வாரங்களில், எந்தவொரு வார காலத்திலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் எங்கள் நிகழ்ச்சிகளின் உள்ளடக்கம் கண்டு களிக்கப்பட்டு உலகளவில் பிரைம் வீடியோவில் முதல் 10 இடங்களைப் பெற்று பிரபலமடைந்தது., தேசிய மற்றும் உலகளவில் எங்கள் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை காண்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் இந்திய உள்ளடக்கத்தை உலக அரங்கில் வெற்றி வாகைசூடச் செய்ய எங்களுக்கு மென்மேலும் உத்வேகம் அளிக்கிறது. கதாசிரியர்கள் மற்றும் திறமையாளர்களுக்கான ஒரு இல்லமாக, இந்திய பொழுதுபோக்குத் துறையைச் சார்ந்த சில சிறந்த திறமையாளர்களின் கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளோம் மற்றும் புத்தம் புதிய, வலிமையான, மன எழுச்சியை அளிக்கவல்ல மற்றும் பொழுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதைகளை படைப்பதற்கான ஒரு ஆற்றல்மிக்க, புதிய கருத்துக்களுக்கு அதிகாரமளிக்கிறோம் எதிர் வரவிருக்கும் எங்களின் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் இந்தியாவில் இருந்து அழுத்தமான கதைகள் மென் மேலும் அதிகமான எண்ணிக்கையில் வெளிவர வழி வகுக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”

அனைத்து டைட்டில்ஸ், கிரடிட்ஸ், புகைபடங்களின் பட்டியலுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள். – https://drive.google.com/drive/folders/1UAYiybPbQRpE81427ENuJyK2ji2NCsPd

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோர், ஃபஹத் பாசிலுடன் 2 சுவாரஸ்யமான திரைப்படங்களில் இணைந்துள்ளனர்

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோர், ஃபஹத் பாசிலுடன் இணைந்து இரண்டு புதிய திரைப்படங்களை தயாரிக்கவுள்ளனர்

முன்னணி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா, மலையாளப் படமான பிரேமலு படத்தினை தெலுங்கு ரசிகர்களுக்கு தெலுங்கு மொழியில் வெளியிட்டதன் மூலம் திரைப்பட விநியோகத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். தெலுங்கில் ஷோயிங் பிசினஸ் (Showing Business) பேனரின் கீழ் இப்படத்தை விநியோகித்தார். எஸ்.எஸ்.கார்த்திகேயாவின் முதல் வெளியீடே தெலுங்கு பதிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் திரையரங்குகளில் மக்கள் பேராதாரவுடன் ஒவ்வொரு நாளும் பெரும் வசூலை குவித்து வருகிறது.

பிரேமலுவின் பிளாக்பஸ்டர் வெற்றியால் பெற்ற நம்பிக்கையால் உற்சாகமடைந்துள்ள எஸ்.எஸ்.கார்த்திகேயா அடுத்ததாக படத் தயாரிப்பில் இறங்குகிறார், மேலும் இந்தியாவின் பெருமைமிக்க, புகழ்பெற்ற தயாரிப்பாளர்களான பாகுபலி பட நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸுடன் இணைந்து, தான் அடுத்ததாக தயாரிக்கவுள்ள அடுத்த இரண்டு திரைப்படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அற்புதமான திரைப்படங்களைத் தயாரிக்க, பிரமாதமான தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா எஸ்.எஸ்.கார்த்திகேயாவுடன் கைகோர்க்கிறார், உலகப்புகழ் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இந்தப் படங்களை வழங்குகிறார்.

பிரேமலுவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான பன்முக நடிகர் ஃபஹத் பாசில் இரண்டு படங்களிலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவற்றில் ஒன்றை, “ஆக்சிஜன்” என்ற தலைப்பில், ஒரு ஊக்கமளிக்கும் நட்பைப் பற்றிய கதையில், அறிமுக இயக்குநர் சித்தார்த் நாதெல்லா இயக்குகிறார். மற்றொன்று, “டோண்ட் டிரபிள் த டிரபிள்” என்ற தலைப்பில் ஒரு பரபரப்பான ஃபேண்டஸி கதையை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்குகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் தனித்துவமான மற்றும் உள்ளடக்கத்தில் சிறந்த படங்களாக இருக்கும்.

‘பாகுபலி’ உலக அரங்கில் புகழ் பெறுவதற்கு முன்னதாகவே , பேனரை பிரபலப்படுத்துவதற்கு முன்னதாகவே, ‘வேதம்’, ‘மர்யதா ரமணா’, ‘அனகனா ஒக தீருடு’ மற்றும் பஞ்சா உள்ளிட்ட பல்வேறு ஜானர்களில் தனித்துவமான படங்களை ஆர்கா மீடியா நிறுவனம் வழங்கியுள்ளது.

பிரேமலுவை பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்கியதற்காக தெலுங்கு பார்வையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்த போது, எஸ்.எஸ்.கார்த்திகேயா தனது தயாரிப்பில் உருவாகவுள்ள படங்கள் குறித்த அறிவிப்பை, வெளியிட்டார். இது குறித்து அவர் கூறுகையில்.. “பிரேமலு! மூலம், என் முதல் அவதாரமான விநியோகஸ்தர் பயணத்திற்கு, நீங்கள் அனைவரும் அளித்திருக்கும் அளவில்லாத அன்பிற்கு நன்றி!! இந்த வெற்றி நல்ல சினிமாவுக்கு மொழித் தடைகள் எதுவும் தெரியாது என்கிற எனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியது! இந்தப் படத்தை விநியோகிக்கும் போது அதன் ஒவ்வொரு அம்சத்தையும் ரசித்தேன். , ஒவ்வொரு டிக்கெட்டின் விற்பனையையும், ஹவுஸ் ஃபுல் தியேட்டர் போன்ற உணர்வாக கொண்டாடுகிறேன். கடந்த ஆண்டு இதே நேரத்தில் ஆஸ்கார் விருதுகளின் போது நான் அனுபவித்த மகிழ்ச்சிக்கு நிகரானது இது.”

மேலும் அவர் கூறுகையில்.., “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அறிமுக நடிகர் சித்தார்த் நாதெல்லாவுடன் ஒரு ஊக்கமளிக்கும் நட்பு பற்றிய கதையின் விவாதத்தின் போது, அறிமுகமான ஷஷாங்க் யெலேட்டியிடம் இருந்து மற்றொரு சிலிர்ப்பான ஃபேண்டஸி கதை எங்கள் முன்னால் வந்தது, இது எங்களை பெருமளவில் உற்சாகப்படுத்தியது. இருப்பினும், இரு கதைகளும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இரண்டு திரைக்கதைகளுக்கும் ஒரே நடிகர் என்பதையும், முதல் கதையின்போதே அவர் அதை ஒப்புக்கொள்வார் என்பதையும் நம்பவில்லை.இவ்வளவு காலம் நான் நேசித்த மனிதர், பன்முகத் திறமையின் உருவகம், ஈடு இணையற்ற மனிதர் ஃபஹத் ஃபாசில். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் சார். இது உங்களுக்கு எங்கள் #பிரேமலு. இந்த பயணத்தில் என்னுடன் கைகோர்த்ததற்கும், ஊக்குவித்ததற்கும் நன்றி ஷோபு அவர்களே.” என தெரிவித்துள்ளார்.

அஜித், சூர்யா, தனுஷ், விஷால், அல்லு அர்ஜுன் என ஐந்து முன்னணி நடிகர்களின் படங்களோடு அகில இந்திய திரையுலகையே தன் இசையால் கலக்கும் தேவி ஶ்ரீ பிரசாத்

டிஎஸ்பி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், தனது அதிரடி மற்றும் ஆத்மார்த்த இசையால் தென்னிந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே ஈர்த்து வருகிறார்.

தேவி ஶ்ரீ பிரசாத்தின் அதிரடி இசையில் உருவான ‘புஷ்பா’ திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் முதல் முறையாக ஒரே சமயத்தில் 5 மொழிகளில் ஹிட் அடித்தது இவரது முக்கிய மைல்கற்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களாலும் இவரது இசை ரசிக்கப்படுகிறது. வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் இவர் புகழ் பெற்றிருப்பதே இதற்கு சான்று.

இந்நிலையில், 5 முன்னணி நட்சத்திரங்களில் திரைப்படங்களுக்கு இவர் தற்போது இசையமைத்து வருகிறார். அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’, சூர்யா நடிக்கும் ‘கங்குவா’, தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘குபேரா’, விஷால் நடிக்கும் ‘ரத்னம்’, மற்றும் ‘புஷ்பா’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடிக்கும் ‘புஷ்பா 2’ என்று தேவி ஶ்ரீ பிரசாத்தின் இசை ஆதிக்கம் நீண்டு கொண்டே செல்கிறது.

மேற்கண்ட ஐந்து திரைப்படங்களும் பிரபல இயக்குநர்களால் (குட் பேட் அக்லி – ஆதிக் ரவிச்சந்திரன், கங்குவா – சிவா, குபேரா – சேகர் கம்முலா, ரத்னம் – ஹரி, புஷ்பா 2 – சுகுமார்) இயக்கப்பட்டு, முன்னணி தயாரிப்பு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன. வித்தியாசமான கதைக் களங்களோடு பன்மொழிகளில் பிரம்மாண்ட படைப்புகளாக இவை தயாராகி வருகின்றன. இவற்றின் தேவைகளுக்கு ஏற்ப பிரத்யேக இசையை தேவி ஶ்ரீ பிரசாத் வழங்கி வருகிறார்.

இந்து ஐந்து படங்களை தவிர பவன் கல்யாண் நடிப்பில் ‘ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ‘உஸ்தாத் பகத்சிங்’, நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ‘தாண்டேல்’, புதுமுகங்கள் நடிக்கும் ‘ஜூனியர்’ உள்ளிட்ட மேலும் பல திரைப்படங்களுக்கும் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். திரைப்படங்களுக்கு இசையமைப்பதோடு நின்று விடாமல் மக்கள் பெருமளவில் திரளும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பாடி தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை இவர் உற்சாகப்படுத்தி வருவதும் அனைவரும் அறிந்ததே.

இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜாவின் அதி தீவிர பக்தரான தேவி ஶ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவிற்கே இளையராஜா சமீபத்தில் நேரில் சென்று வாழ்த்தியது தேவி ஶ்ரீ பிரசாத்தை அளவில்லாத மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

“என்னுடைய இசைப் பயணத்தில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு மனமார்ந்த நன்றி. ஐந்து முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைக்கும் இந்த பெருமையான தருணத்தில் ரசிகர்கள் விரும்பும் இசையை தொடர்ந்து வழங்கி அவர்களை மகிழ்விப்பதை எனது கடமையாகக் கருதுகிறேன்,” என்று தேவி ஶ்ரீ பிரசாத் கூறினார்.

‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படத்தில் முதன்மை வேடத்தில் ஷாஹித் கபூர்

நவீன உலகில் பண்டைய போர்வீரன் – பூஜா என்டர்டெயின்மென்ட்டின் பிரம்மாண்ட பன்மொழி பான்-இந்தியா படைப்பான ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படத்தில் முதன்மை வேடத்தில் ஷாஹித் கபூர்

புராண பாத்திர‌மும் நவீன உலகும் ஒரே நேர் கோட்டில் சந்தித்தால் என்ன ஆகும் என்பதை விவரிக்கும் பரபரப்பான பயணத்திற்கு ரசிகர்களை அழைத்துச் செல்ல ஷாஹித் கபூர் மற்றும் இயக்குநர் சச்சின் ரவி உடன் பூஜா என்டர்டெயின்மென்ட் கைகோர்த்துள்ளது. இவர்கள் இணையும் ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ பிரம்மாண்ட திரைப்படத்தில் அஸ்வத்தாமனாக தோன்றுகிறார் ஷாஹித் கபூர்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ள பான்-இந்தியா படைப்பான இது, இன்றும் நம்மிடையே நடமாடுவதாக நம்பப்படும் மகாபாரதத்தில் வரும் அழியாப் போர்வீரர் அஸ்வத்தாமனின் கதையை ஆராய்கிறது.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் மனிதகுலத்தின் அசாத்திய வளர்ச்சி நிறைந்த‌ தற்போதைய காலகட்டத்தில் அஸ்வத்தாமன் நவீன சவால்களையும் வலிமைமிக்க எதிரிகளையும் எதிர்கொள்கிறார். இதை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை அதிரடி காட்சிகள் மற்றும் திருப்பங்கள் நிறைந்த‌ கதையில் திரையில் காணலாம்.

படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கடந்த காலமும் நிகழ் காலமும் மோதும் பிரம்மாண்ட களத்தை கண் முன்னே கொண்டு வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இப்படம் அமையுமென்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் ஜக்கி பக்னானி, “எங்கள் திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமின்றி, மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கி அவர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. ‘படே மியான் சோட்டே மியான்’ படத்திற்குப் பிறகு, யாரும் எதிர்பாராத திரைப்ப‌படம் ஒன்றை தயாரிக்க விரும்பினேன், அதன் விளைவாக உருவாகி வருவது தான் ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’. அனைத்து தரப்பு ரசிகர்களையும் இது மகிழ்விக்கும் என நான் நம்புகிறேன்,” என்றார்.

இயக்குநர் சச்சின் ரவி கூறுகையில், “மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமான், இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படும் ஒரு மாவீரர். அமரத்துவம் கொண்ட அவரது வரலாற்றை இப்படம் ஆராய்கிறது, இன்றைய உலகில் அவர் எதிர்கொள்ளும் விஷயங்களை விறுவிறுப்பாக விவரிக்கிறது. ஒரு ஆக்‌ஷன் படத்தின் பிரமாண்டத்திற்குள் அவருடைய கதையை முன்வைக்க முயன்றுள்ளோம்,” என்றார்.

பூஜா என்டர்டெயின்மென்ட் பேனரில் வாசு பாக்னானி, ஜக்கி பாக்னானி மற்றும் தீப்ஷிகா தேஷ்முக் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு, ஷாஹித் கபூர் நடிப்பில் சச்சின் ரவி இயக்கும் ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’, உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சிலிர்க்கவைக்கும் திகில் க்ரைம் டிராமா இன்ஸ்பெக்டர் ரிஷி-இன் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது

மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் நந்தினி ஜே.எஸ் உருவாக்கி, சுக்தேவ் லஹிரி தயாரித்த தமிழ் சித்திரத்தில் நவீன் சந்திரா நாயகனாகவும், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் ரிஷி, மார்ச் 29 முதல் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யக் கிடைக்கும்.

டிரையிலர் இணைப்பு: https://youtu.be/4CKU89MI0_0?si=Z1XVP-v1vDefBNXO

மும்பை, இந்தியா- மார்ச் 19, 2024 – மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் திகில் நாடகத் தொடரான இன்ஸ்பெக்டர் ரிஷியின் உணர்வுப் பூர்வமான டிரெய்லரை.. பிரைம் வீடியோ பிரசண்ட்ஸ், இந்தியா என்ற பிரமாண்ட நிகழ்வில், இந்தியாவில் அனைவரின் ஆதரவு பெற்ற பொழுதுபோக்குத் தளமான பிரைம் வீடியோ, வெளியிட்டது. நந்தினி ஜே.எஸ் உருவாக்கிய இந்தத் தொடரில் நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார், மேலும் சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல திறமை வாய்ந்த நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பத்து எபிசோட்கள் கொண்ட இத்தொடர் மார்ச் 29 அன்று பிரத்யேகமாக பிரைம் வீடியோவில் இந்தியாவிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரீமியர் செய்யப்பட உள்ளது. இன்ஸ்பெக்டர் ரிஷி பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்திய சேர்க்கை ஆகும். இந்தியாவில் ஆண்டுக்கு ₹1499 செலுத்தி உள்ள பிரைம் மெம்பராக உள்ளவர்கள் குறைந்த செலவில் வசதியாக பொழுதுபோக்கை அனுபவிக்கமுடியும்.

இத் தொடர், பசுமை மற்றும் வனவிலங்குகள் நிறைந்த தமிழ்நாட்டின் ஒரு அழகிய கிராமத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. ஆனால் சூழல். இன்ஸ்பெக்டர் ரிஷி மற்றும் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், (அய்யனார் மற்றும் சித்ரா,) காட்டின் ரகசியங்களை வெளிக்கொணரும் மற்றும் இந்த விவரிக்க முடியாத நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையைக் கண்டறியும் சவாலை ஏற்கின்றனர். மூவரும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் உள்ள சவால்களை கடந்து செல்வது மட்டுமின்றி, அவர்களின் உறுதியையும் திறன்களையும் சோதிக்கும் அமானுஷ்ய சக்திகளுடன் போரிடுகிறார்கள்.

“இன்ஸ்பெக்டர் ரிஷி வேடத்தில் நடிப்பது சவாலான மற்றும் மாறு[பட்ட அனுபவமாக இருந்தது. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் பன்முகத் தன்மையை அறிந்து கதாபாத்திரத்தை உள்வாங்க இத்தொடர் எனக்கு வாய்ப்பை வழங்கியது,‘’ என்று நவீன் சந்திரா கூறினார். “இந்தத் தொடர் பிரைம் வீடியோவுடனான எனது இரண்டாவது தொடராகும். இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரின் புதிரான உலகத்தை பார்வையாளர்கள் மிகவும் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.

“இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரில் வன அதிகாரி காத்தியின் பாத்திரத்தை ஏற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கதாசிரியர்கள் எனது கதாபாத்திரத்தை மிக நுணுக்கமாக செதுக்கியிருக்கிறார்கள், மேலும் காத்தியின் குணாதிசயங்கள் என்னுடன் ஆழமாக எதிரொலித்தன. செட்டில் இருந்த ஆதரவான சூழல், திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் இணைந்து, காத்தியின் மென்மையான மற்றும் கடுமையான ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்த அனுமதித்தது, ”என்று சுனைனா பகிர்ந்து கொண்டார். “நந்தினி ஜே.எஸ்-இல் பிரைம் வீடியோவுடன் இணைந்து பணிபுரிந்த அனுபவம் அளப்பரியது. இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரின் மூலம் இயற்கை, அமைதி மற்றும் மர்மம் நிறைந்த ஒரு உலகத்திற்கு பார்வையாளர்களை வெற்றிகரமாக இட்டுச் செல்வோம் என்று நான் நம்புகிறேன்.” என்று மேலும் கூறினார்.

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோர், ஃபஹத் பாசிலுடன் 2 சுவாரஸ்யமான திரைப்படங்களில் இணைந்துள்ளனர்

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோர், ஃபஹத் பாசிலுடன் இணைந்து இரண்டு புதிய திரைப்படங்களை தயாரிக்கவுள்ளனர்

முன்னணி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா, மலையாளப் படமான பிரேமலு படத்தினை தெலுங்கு ரசிகர்களுக்கு தெலுங்கு மொழியில் வெளியிட்டதன் மூலம் திரைப்பட விநியோகத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். தெலுங்கில் ஷோயிங் பிசினஸ் (Showing Business) பேனரின் கீழ் இப்படத்தை விநியோகித்தார். எஸ்.எஸ்.கார்த்திகேயாவின் முதல் வெளியீடே தெலுங்கு பதிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் திரையரங்குகளில் மக்கள் பேராதாரவுடன் ஒவ்வொரு நாளும் பெரும் வசூலை குவித்து வருகிறது.

பிரேமலுவின் பிளாக்பஸ்டர் வெற்றியால் பெற்ற நம்பிக்கையால் உற்சாகமடைந்துள்ள எஸ்.எஸ்.கார்த்திகேயா அடுத்ததாக படத் தயாரிப்பில் இறங்குகிறார், மேலும் இந்தியாவின் பெருமைமிக்க, புகழ்பெற்ற தயாரிப்பாளர்களான பாகுபலி பட நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸுடன் இணைந்து, தான் அடுத்ததாக தயாரிக்கவுள்ள அடுத்த இரண்டு திரைப்படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அற்புதமான திரைப்படங்களைத் தயாரிக்க, பிரமாதமான தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா எஸ்.எஸ்.கார்த்திகேயாவுடன் கைகோர்க்கிறார், உலகப்புகழ் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இந்தப் படங்களை வழங்குகிறார்.

பிரேமலுவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான பன்முக நடிகர் ஃபஹத் பாசில் இரண்டு படங்களிலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவற்றில் ஒன்றை, “ஆக்சிஜன்” என்ற தலைப்பில், ஒரு ஊக்கமளிக்கும் நட்பைப் பற்றிய கதையில், அறிமுக இயக்குநர் சித்தார்த் நாதெல்லா இயக்குகிறார். மற்றொன்று, “டோண்ட் டிரபிள் த டிரபிள்” என்ற தலைப்பில் ஒரு பரபரப்பான ஃபேண்டஸி கதையை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்குகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் தனித்துவமான மற்றும் உள்ளடக்கத்தில் சிறந்த படங்களாக இருக்கும்.

‘பாகுபலி’ உலக அரங்கில் புகழ் பெறுவதற்கு முன்னதாகவே , பேனரை பிரபலப்படுத்துவதற்கு முன்னதாகவே, ‘வேதம்’, ‘மர்யதா ரமணா’, ‘அனகனா ஒக தீருடு’ மற்றும் பஞ்சா உள்ளிட்ட பல்வேறு ஜானர்களில் தனித்துவமான படங்களை ஆர்கா மீடியா நிறுவனம் வழங்கியுள்ளது.

பிரேமலுவை பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்கியதற்காக தெலுங்கு பார்வையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்த போது, எஸ்.எஸ்.கார்த்திகேயா தனது தயாரிப்பில் உருவாகவுள்ள படங்கள் குறித்த அறிவிப்பை, வெளியிட்டார். இது குறித்து அவர் கூறுகையில்.. “பிரேமலு! மூலம், என் முதல் அவதாரமான விநியோகஸ்தர் பயணத்திற்கு, நீங்கள் அனைவரும் அளித்திருக்கும் அளவில்லாத அன்பிற்கு நன்றி!! இந்த வெற்றி நல்ல சினிமாவுக்கு மொழித் தடைகள் எதுவும் தெரியாது என்கிற எனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியது! இந்தப் படத்தை விநியோகிக்கும் போது அதன் ஒவ்வொரு அம்சத்தையும் ரசித்தேன். , ஒவ்வொரு டிக்கெட்டின் விற்பனையையும், ஹவுஸ் ஃபுல் தியேட்டர் போன்ற உணர்வாக கொண்டாடுகிறேன். கடந்த ஆண்டு இதே நேரத்தில் ஆஸ்கார் விருதுகளின் போது நான் அனுபவித்த மகிழ்ச்சிக்கு நிகரானது இது.”

மேலும் அவர் கூறுகையில்.., “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அறிமுக நடிகர் சித்தார்த் நாதெல்லாவுடன் ஒரு ஊக்கமளிக்கும் நட்பு பற்றிய கதையின் விவாதத்தின் போது, அறிமுகமான ஷஷாங்க் யெலேட்டியிடம் இருந்து மற்றொரு சிலிர்ப்பான ஃபேண்டஸி கதை எங்கள் முன்னால் வந்தது, இது எங்களை பெருமளவில் உற்சாகப்படுத்தியது. இருப்பினும், இரு கதைகளும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இரண்டு திரைக்கதைகளுக்கும் ஒரே நடிகர் என்பதையும், முதல் கதையின்போதே அவர் அதை ஒப்புக்கொள்வார் என்பதையும் நம்பவில்லை.இவ்வளவு காலம் நான் நேசித்த மனிதர், பன்முகத் திறமையின் உருவகம், ஈடு இணையற்ற மனிதர் ஃபஹத் ஃபாசில். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் சார். இது உங்களுக்கு எங்கள் #பிரேமலு. இந்த பயணத்தில் என்னுடன் கைகோர்த்ததற்கும், ஊக்குவித்ததற்கும் நன்றி ஷோபு அவர்களே.” என தெரிவித்துள்ளார்.

பிரைம் வீடியோவின் அடுத்து வரவிருக்கும் அதன் திகில் க்ரைம் டிராமா தொடரான ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’

பிரைம் வீடியோவின் அடுத்து வரவிருக்கும் அதன் திகில் க்ரைம் டிராமா தொடரான ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசையை அனுபவியுங்கள்; இசைத் தொகுப்பு இப்போது வெளிவந்துவிட்டது!

நந்தினி ஜே.எஸ் உருவாக்கத்தில், மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட இந்த தமிழ் திகில் க்ரைம் டிராமா தொடரில், நவீன் சந்திரா, சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோர்  நடித்துள்ளனர்.

இந்த இசைத் தொகுப்பில் இடம்பெறும் ஏழு பாடல்கள்களையும் இப்போது அனைத்து இசை ஸ்ட்டீமிங் தளங்களிலும் கேட்டு ரசிக்கலாம்.

‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 29 அன்று வெளியிடப்படவிருக்கிறது

மும்பை, இந்தியா- மார்ச் 15, 2024 – இந்தியாவில் மிக அதிகளவில் விரும்பப்படும் பொழுது போக்கு மையமாக திகழும் பிரைம் வீடியோ, இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 29 அன்று வெளியிடப் படவிருக்கும் அதன் தமிழ் ஒரிஜினல் இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரில் இடம்பெறும் முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசைத்தொகுப்பை இன்று வெளியிட்டது. அஷ்வத் நாகநாதன் ( Ashwath Naganathan), இசையமைப்பில் உருவான இந்த தொகுப்பில் அதன் டைட்டில் டிராக் உட்பட இந்த திகில் க்ரைம் டிராமா தொடரின் இயற்கைக்கு அப்பாற்பட்ட சிலிர்ப்பூட்டும் கூறுகளை உள்ளடக்கி. அச்சமூட்டும் தொனியுடனான மனதைக் கொள்ளை கொள்ளும் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஒட்டுமொத்த இசைத் தொகுப்பும் இன்று முதல் அனைத்து முன்னணி இசை ஸ்ட்ரீமிங் சேவைத் தளங்களிலும் கிடைக்கும்.

அமானுஷ்யமான நிகழ்வுகளோடு பின்னிப்பிணைந்த ஒரு விசித்திரமான தொடர் கொலைகளை விசாரணை செய்து துப்புத் துலக்க தனது வாழ்க்கையையே புரட்டிப்போடும் ஒரு பெருமுயற்சியில் இறங்கும் இன்ஸ்பெக்டர் ரிஷியின் இருண்ட உலகத்திற்குள் இந்த இசைத் தொகுப்பு பார்வையாளர்களை தங்குதடையின்றி அழைத்துச் செல்கிறது பகவதி பி.கே.,(Bagavathy PK,) மஷூக் ரஹ்மான் (Mashook Rahman,) மற்றும் புகழேந்தி கோபால் ஆகியோர் இயற்றிய இந்தத் தொகுப்பில் இடம்பெறும் பாடல்களுக்கு கபில் கபிலன், (Kapil Kapilan,) பாப் ஷாலினி (Pop Shalini), இஷான் நிகாம், (Ishan Nigam i கிறிஸ்டோபர் ஸ்டான்லி (Christopher Stanley), ஆர். அரவிந்த்ராஜ், (R. Aravindraj) பாலாஜி ஸ்ரீ (Balaji Sri,) சௌந்தர்யா.ஆர். தேவூ தெரசா மாத்யூ, ‘உதிரி’ விஜயகுமார், ஸ்ரீராம் க்ருஷ், அஷ்வத் (Ashwath,) ஷைலி பித்வைக்கர், (Shailey Bidwaikar), ஸ்வஸ்திகா ஸ்வாமினாதன், சுனிதா சாரதி (Sunitha Sarathy) மற்றும் அஞ்சனா பாலகிருஷ்ணன் ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள மர்மங்களால் சூழப்பட்ட ஒரு அழகான கிராமத்தின் பின்புலத்தில் அமைந்த இந்த தொடரின் சாரத்துடன் இந்த இசைத் தொகுப்பு கச்சிதமாக இணைந்து பொருந்துகிறது.

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஏழு பாடல்கள் இந்தத் இன்ஸ்பெக்டர் ரிஷி இசைத் தொகுப்பில் உள்ளடக்கியுள்ளது :

  1. இதயத்தின் மாயம் (தலைப்பு பாடல்) – பாடலாசிரியர்: மஷூக் ரஹ்மான்; பாடகர்: கிறிஸ்டோபர் ஸ்டான்லி
  2. கண்ணாடி காதல் – பாடலாசிரியர்: பகவதி பிகே; பாடகர்: கபில் கபிலன், பாப் ஷாலினி
  3. உறை பனி நான் – பாடலாசிரியர்: மஷூக் ரஹ்மான்; பாடியவர்: இஷான் நிகாம்
  4. காடு – பாடலாசிரியர்: புகழேந்தி கோபால்; பாடகர்: ஆர் அரவிந்த் ராஜ், பாலாஜி ஸ்ரீ, சௌந்தர்யா ஆர், தேவு டிரஸ்ஸா மேத்யூ, ‘உதிரி’ விஜய்குமார், ஸ்ரீராம் கிரிஷ், மற்றும் அஸ்வத்
  5. ஹே சகி ஹே – பாடலாசிரியர்: பகவதி பிகே; பாடகர்: ஷைலி பித்வைகர் மற்றும் ஸ்வஸ்திகா சுவாமிநாதன்
  6. தொண்டகப்பாறை – பாடலாசிரியர்: பகவதி பிகே; பாடியவர்: சுனிதா சாரதி
    7.பரிசுத்த தேவனே – பாடலாசிரியர்: பகவதி பிகே; பாடியவர்: அஞ்சனா பாலகிருஷ்ணன்

நந்தினி ஜே.எஸ் (Nandhini JS,) உருவாக்கத்தில் மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட இந்த இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரில் நடிகர் நவீன் சந்திரா (Naveen Chandra) கதாநாயகன் வேடத்தில் தோன்ற அவருடன் இணைந்து சுனைனா(Sunainaa), கண்ணா (Kanna) ரவி (Ravi), மாலினி (Malini) ஜீவரத்தினம், (Jeevarathnam) ஸ்ரீகிருஷ்ண தயாள்(Srikrishna Dayal,) மற்றும் குமரவேல் (Kumaravel) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

:https://open.spotify.com/album/5V54iqpQ0JjHbuT2P9AvTq?si=wDzJdztbSnWarlyoL70Jqw

ஜெயம் ரவி, ‘அயலான்’ இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் ‘டபுள் டக்கர்’ திரைப்படத்தின் இசை வெளியீடு



கோடை விடுமுறை ரிலீசுக்கு படம் தயாராகி வரும் நிலையில், 8000 மாணவர்கள் முன்னிலையில் ஆரவாரம் பொங்க சென்னையில் பிரம்மாண்ட முறையில் இசை வெளியீடு நடைபெற்றது

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர், முனிஷ்காந்த், காளி வெங்கட் சுனில் ரெட்டி, ஷா ரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் விஜய், டெடி கோகுல் உள்ளிட்டோர்  நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் ‘டபுள் டக்கர்’.  கோடை விடுமுறையில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீடு வெள்ளிக்கிழமை (மார்ச் 15) மாலை சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் 8000 மாணவர்கள் முன்னிலையில் ஆரவாரம் பொங்க பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு…

நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது…

“எனக்கு இருக்கும் மிகச்சில  நெருங்கிய நண்பர்களில் ஒருவர் தீரஜ். அவருக்காக இங்கு வருவதற்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருப்பது சந்தோஷம். விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன்.

‘டபுள் டக்கர்’ எனும் தலைப்பு இவருக்காகவே உருவானது போல் இருக்கிறது, ஏனென்றால் மருத்துவர், நடிகர் என்று இரண்டு பரிமாணங்களிலும் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தீரஜ். வித்யாசாகர் அவர்களின் இசைக்கு சிறு வயது முதல் இருந்து ரசிகன் நான். அவர் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இளைஞர்களுடன் இணைந்து அவர் பணியாற்றியுள்ளார். அவரது இசை இந்த படத்திற்கு கட்டாயம் பெரிய பக்கபலமாக இருக்கும்.”

‘அயலான்’ இயக்குநர் ரவிக்குமார் பேசியதாவது…

“‘அயலான்’ திரைப்படத்தை இயக்கி உள்ளதால் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். அதை செய்துள்ள ‘டபுள் டக்கர்’ குழுவினருக்கு வாழ்த்துகள்.

தீரஜ் அவர்களை ஒரு இருதய சிகிச்சை மருத்துவராக நான் அறிவேன். ஓய்வில்லாமல் உழைக்க வேண்டிய மருத்துவர் பணியையும் நடிப்பையும் அவர் மேற்கொள்வது மிகவும் சவாலானது. ஆனால் அதை அவர் திறம்பட செய்து வருகிறார். இருதய சிகிச்சை நிபணரான அவர் திரைப்படங்களின் மூலம் மக்களின் இதயங்களையும் வெல்வார் என்று நம்புகிறேன். மிகவும் வித்தியாசமான, கடின உழைப்பு தேவைப்படுகிற இந்த முயற்சியை சாத்தியமாக்கி உள்ள இயக்குநர் மீரா மஹதி மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்.”

இசையமைப்பாளர் வித்யாசாகர் பேசியதாவது…

“‘டபுள் டக்கர்’ படத்தின் நாயகன் தீரஜ்ஜை ஒரு சிறுவனாக தெரியும், பின்னர் மருத்துவராக தெரியும். ஒரு நாள் அவர் என்னிடம் வந்து தான் திரைப்படங்களில் நடிப்பதாகவும் ‘டபுள் டக்கர்’ திரைப்படத்திற்கு நான் இசையமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பின்னர் இயக்குநர் மீரா மஹதி இப்படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். எனக்கு மிகவும் பிடித்ததால் இசையமைக்க ஒப்புக்கொண்டேன்.

‘டபுள் டக்கர்’ படத்தில் பணியாற்றி உள்ள அனைவரும் சிறப்பான பங்காற்றி உள்ளார்கள். குறிப்பாக தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு அபாரமானது. கடந்த 34 ஆண்டுகளாக எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இசைக்கு வயதே கிடையாது, நல்லிசைக்கும் மெல்லிசைக்கும் தமிழ் மக்கள் என்றுமே ஆதரவு அளிப்பார்கள். உங்களின் அன்பும் ஆதரவும் தான் என்னை இங்கே நிற்க வைத்துள்ளது. ‘டபுள் டக்கர்’ படத்தில் இடம்பெற்றுள்ள நான்கு பாடல்களும் நான்கு வகையானவை. இசையையும் படத்தையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன், நன்றி.”

படத்தின் நாயகன் தீரஜ் பேசியதாவது…

“ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பிறகு என்னுடைய படத்திற்கு இந்த மேடையை வழங்கிய சாய்ராம் கல்லூரிக்கு நன்றி. ‘டபுள் டக்கர்’ படத்திற்கு அருமையான இசையை தந்த வித்யாசாகர் அவர்களுக்கு மிக்க நன்றி.

நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு தெரிவித்த இயக்குநர் ரவிக்குமார், ஜெயம் ரவி அவர்களின் அன்புக்கு நன்றி. இப்படத்தைப் பற்றி கூற வேண்டும் என்றால் டபுள் டக்கரை திரையரங்கில் பாருங்கள், மகிழுங்கள், மகிழ்ச்சியுடன் திரையரங்கை விட்டு செல்லுங்கள். ஒரு கலகலப்பான படத்தை தர வேண்டும் என்ற எங்களது ஆசை நிறைவேறி உள்ளது. என்னுடன் பணியாற்றிய மூத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன், நன்றி.”

நாயகி ஸ்முரிதி வெங்கட் பேசியதாவது…

“எல்லோருக்கும் வணக்கம். மாணவர்கள் முன்னிலையில் இப்படத்தின் இசை வெளியிடப்படுவது மிக்க மகிழ்ச்சி. சிறு வயது முதலே வித்யாசாகர் அவர்களின் மிகப்பெரிய ரசிகை நான். அவரது இசையில் நடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி.

நிகழ்ச்சிக்கு வந்துள்ள ஜெயம் ரவி அவர்கள் மற்றும் இயக்குநர் ரவிக்குமார் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ‘டபுள் டக்கர்’ படத்தை பற்றி கூற வேண்டும் என்றால் இந்த படம் உங்களை மகிழ்விக்கும், உற்சாகப்படுத்தும், கட்டாயமாக ஏமாற்றாது. இப்படத்திற்காக மிகச் சிறந்த குழுவுடன் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது, அனைவரும் திரையரங்குகளில் இப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

இயக்குநர் மீரா மஹதி பேசியதாவது…

“என்னுடைய முதல் படத்திற்கு இசையமைத்து எனக்கு மிகப்பெரிய பெருமையை வழங்கி இருக்கிற வித்யாசாகர் சாருக்கு நன்றி. இங்கு வந்து சிறப்பித்துள்ள இரண்டு ரவிகள் ஆகிய ஜெயம் ரவி சார் மற்றும் இயக்குநர் ரவிக்குமார் அவர்களுக்கு மிக்க நன்றி.

இளம் தலைமுறையாகிய உங்களை நம்பித்தான் இந்தியாவிலேயே புதிய முயற்சியாக ‘டபுள் டக்கர்’ திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். கிராபிக்ஸ் கதாபாத்திரங்களை நடிகர்களுடன் நடிக்க வைத்துள்ளோம். உங்கள் குடும்பத்துடன் வந்து இப்படத்தை ரசிக்கலாம்.”

நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது…

“இந்த படம் ஒரு அருமையான குழுவின் கூட்டு முயற்சி. இதில் எனக்கு சின்ன பாத்திரம் தான், ஆனால் மிகவும் சிறந்த வேடம். கிராபிக்ஸ் பாத்திரங்களை வைத்து ஒரு புதுமையான முயற்சியை ‘டபுள் டக்கர்’ குழுவினர் எடுத்துள்ளனர். ஏப்ரல் மாதம் வெளியாகியுள்ள இப்படத்தை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் இன்னும் நிறைய படங்களை உருவாக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி. நாயகன் தீரஜ் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். வித்யாசாகர் அவர்களின் இசையில் எத்தனையோ படங்களில் நான் நடித்துள்ளேன். அவரது அற்புதமான இசை இப்படத்தை மெருகேற்றி உள்ளது.”

நடிகர் காளி வெங்கட் பேசியதாவது…

“இப்படத்தில் நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவம். பெயருக்கு ஏற்ற மாதிரி டபுள் டக்கர் மிகவும் சிறப்பான திரைப்படமாக இருக்கும். வித்யாசாகர் அவர்களின் இசையில் நடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. எங்கள் வீட்டில் அனைவருமே அவரது ரசிகர்கள். தீரஜ் அவர்களின் சுறுசுறுப்பு ஆச்சரியமானது. இயக்குநர் மீரா மஹதி வித்தைக்காரர். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை இந்த படத்தை அனைவரும் ரசிக்கலாம்.”

நடிகர் கருணாகரன் பேசியதாவது…

“எங்களின் கல்லூரி நாட்களை தன் இசையால் இனிமையாக்கிய வித்யாசாகர் அவர்களுக்கு நன்றி. உங்கள் பாடல்களுக்கு நாங்கள் அனைவரும் தீவிர ரசிகர்கள். புதுமையான அனிமேஷன் படமான டபுள் டக்கரில் நடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. பல இதயங்களை சரி செய்த தீராஜ் அவர்கள் இப்படத்தின் மூலம் இன்னும் பல இதயங்களை வெல்வார்.”

திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் மற்றும் இணை எழுத்தாளர் சந்துரு பேசியதாவது…

“இப்படத்தை நான் பார்த்து விட்டேன், மிகவும் சிறப்பாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்துள்ள ஜெயம் ரவி அவர்களுக்கும் இயக்குநர் ரவிக்குமார் அவர்களுக்கும் மிக்க நன்றி. ‘டபுள் டக்கர்’ டீசரை நீங்கள் அனைவரும் பார்த்து ரசித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். படத்தை வெகு விரைவில் உங்களுக்கு வழங்க காத்திருக்கிறோம்.

இந்த விழாவின் நாயகன் வித்யாசாகர் சார் தான். அவரை 90ஸ் கிட்ஸின் உள்ளம் கவர்ந்த இசையமைப்பாளர் என்று சொல்வார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவரது பாடல்கள் ஒளிபரப்பப்பட்ட போது 2கே கிட்ஸும் மிகவும் வைப் செய்தார்கள். இதன் மூலம் தலைமுறைகளை தாண்டி அவரை ரசிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இந்த வருட கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்க ஏற்ற இடமாக ‘டபுள் டக்கர்’ படத்தை திரையிடும் திரையரங்குகள் இருக்கும்.”

நிர்வாக தயாரிப்பாளர் எஸ் சேதுராமலிங்கம் பேசியதாவது…

“மிகவும் சவாலான கதைக்களம் என்பதால் அனைத்தையும் முன்னரே முறையாக திட்டமிட்டோம். இயக்குநரும் குழுவினரும் மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.”

ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன் பேசியதாவது…

“இது என்னுடைய இரண்டாவது படம், மிகவும் அருமையாக வந்துள்ளது. அனைவரும் குடும்பத்தோடு திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். இதில் பணியாற்றியது சற்றே சவாலானது, ஏனென்றால் கிராபிக்ஸ் பாத்திரங்கள் படப்பிடிப்பின் போது இருக்காது என்பதால் அனைத்தையும் கற்பனையில் செய்ய வேண்டும். வித்யாசாகர் அவர்களின் பாடல்களை மிகவும் ரசித்து ஒளிப்பதிவு செய்தேன் ‘டபுள் டக்கர்’ திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.”

படத்தொகுப்பாளர் வெற்றிவேல் ஏ எஸ் பேசியதாவது…

“அனைவருக்கும் நன்றி. வாய்ப்பளித்த தீரஜ், சந்துரு, மற்றும் மீரா மஹதி ஆகியோருக்கு நன்றி. ‘டபுள் டக்கர்’ மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது, வித்யாசாகர் சாரின் இசை மிகவும் அருமை. அனைவரும் இந்த படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன், நன்றி.”

கலை இயக்குநர் சுப்பிரமணிய சுரேஷ் பேசியதாவது…

“எல்லோருக்கும் வணக்கம். வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. ‘டபுள் டக்கர்’ மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது.”

‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்திற்காக தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசிய கவுண்டமணி


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

சினி கிராஃப்ட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள அரசியல்-நகைச்சுவை திரைப்படமான ‘ஒத்த ஓட்டு முத்தையா’ போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், இப்படம் விறுவிறுப்பாக வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

சென்னையில் உள்ள பரணி’ டப்பிங் ஸ்டூடியோவில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் டப்பிங் பணிகளில் பங்கேற்ற கவுண்டமணி, தொடர்ந்து எட்டு மணி நேரம் உற்சாகத்துடன் டப்பிங் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தற்கால அரசியலை தனக்கே உரிய பாணியில் நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும் அவருடன் நெருக்கமாக பயணிக்கும் பாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர். கவுண்டமணிக்கும் யோகி பாபுவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி மிக நன்றாக அமைந்திருப்பதாகவும் அவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைக்கும் என்றும் இயக்குநர் சாய் ராஜகோபால் தெரிவித்தார். இவரும் இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை ஜோடிக்கு பிறகு கவுண்டமணி-யோகி பாபு கூட்டணி மிகவும் பேசப்படும் என்று தெரிவித்த இயக்குநர், இரு நடிகர்களும் தங்கள் காட்சிகளை மிகவும் ரசித்ததாக கூறினார்.

ஒட்டு மொத்த குடும்பத்துடன் கண்டு ரசிக்கக் கூடிய வகையில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்கின்றனர்.

கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். மாறுபட்ட ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் சிங்கமுத்துவும், நல்லதொரு வேடத்தில் சித்ரா லட்சுமணனும் நடிக்கின்றனர். மேலும், மொட்டை ராஜேந்திரன்,  O A K. சுந்தர், ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை,  டாக்டர் காயத்ரி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் களம் இறங்கியுள்ளது.

படம் குறித்து பேசிய இயக்குநர் சாய் ராஜகோபால், “சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன். எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘பாய்ஸ்’ மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் ‘கிச்சா வயசு 16’ ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார். ஆறு முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும். இப்படத்தை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து தங்களது பேராதரவை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.

இத்திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்க, ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். கலை இயக்கத்திற்கு மகேஷ் நம்பியும், படத்தொகுப்புக்கு ராஜா சேதுபதியும் பொறுப்பேற்றுள்ளனர். பி ஜி துரை, தீனா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் அசோசியேட்டுகளாக பணியாற்றுகின்றனர். தயாரிப்பு மேலாளர்: ராஜன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன். கோவை லட்சுமி ராஜன் இணை தயாரிப்பில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

“India is the mother of spirituality and democracy” says President Murmu at Global Spirituality Mahotsavin Kanha Shanti Vanam

Spiritual Gurus dwelled on ideas of inner peace, togetherness and global harmony

15 March 2024Smt. Droupadi Murmu – Hon’ble President of India graced the spirituality congregation ‘Global Spirituality Mahotsav’ taking place at Kanha Shanti Vanam – the headquarters of Heartfulness today. The four-day spirituality summit brought by the Ministry of Culture and Heartfulness is unique in that it has brought together the spirituality gurus of all faiths and communities together at one platform to raise the collective human consciousness together. The summit is themed at “Inner Peace to World Peace”. The conference aims to bring interfaith dialogues and help people of every age and every walk of life connect with spirituality in daily life. Anthem song for Global Spirituality Mahotsav titled  ‘Inner Peace to World Peace’ was launched during the summit. 

Accompanied by Ms. Uma Nanduri – Joint Secretary, Ministry of Culture, Hon’ble President took a tour of exhibition stalls at the summit and appreciated the legacy of Heartfulness mission. Smt. Droupadi Murmu – Hon’ble President of India said: Global Spirituality Mahotsav will take humanity towards spirituality. Spiritual icons like Mahavir, Ravidas and Gurunanak have givenIndia a unique identity as the spiritual hub of the worldBharat is the land of ideals of Ahimsa and Compassion, the knowledge of which our ancient sages gave us and to strengthen which our great spiritual gurus are guiding us. Today the great spiritual leaders and lakhs of people have joined together to bring harmony irrespective of different belief systems. I congratulate Daaji for taking Heartfulness movement to 160 countries across the world. This is a very sacred cause. I am very pleased that The Ministry of Culture and Heartfulness have brought this Global Spiritual Mahotsav themed at Inner peace to world peace.

Rev. Daaji – Guide of Heartfulness & President of Shri Ram Chandra Mission said, “We are very honoured to have Hon’ble President of India with us today. We are in times when mankind must unite steadfastly. In a way there is an urgency to it to prevent any more wars, chaos and strife taking place. If each of us understands that we all are one, it is the same Divine Light within each of us, we can overcome the differences. But this kind of understanding comes through meditation and higher consciousness. The summit is therefore to enlighten all that we must together move forward for the common goal of self-realization.”

A panel discussion on ‘Inner Peace to World Peace’ witnessed meaningful thoughts coming from noted panelists viz., Ranjana Chopra, Additional Secretary and Financial Adviser, Ministry of Culture; Gaur Gopal Das (ISCKON); Swami Atmapriyananda(Ram Krishna Mission); Sister Usha Behn (BrahmaKumaris); HH Chinna Jeeyar Swamiji (Shri Vaishnavism); and Sh. Kamlesh D Patel (Daaji) Global Guide of Heartfulness.

A second panel discussion on ‘Spirituality in Daily Lives’ by Jt. Secy. Smt. Amita Prasad Sarabhai, Ministry of Culture (Performing Arts); Swami Gita Govind Giriji Maharaj (Gita Parivar); Sadhvi Shilapi Ji Maharaj (Veerayatan); Pujya BhaishreeRamesh Bhai Oza (Raj Chandra Mission); Yogi Nath J (Sant Dnyaneshwar Maharaj Sansthan) + Experiential demonstration by Warkari groups; Dr. Jayanti Ravi (Auroville Foundation);  Master G Shri Rajesh Kamra and Rt. Hon Patricia Scotland, Commonwealth Secretary General. 

Upasana Kamineni Konidela – Vice Chairman-CSR Apollo Hospitals Group and Managing Director-URLife said: “I represent the aspirational youth and the women entrepreneurs who’ll form a significant path of  new India. My family and I work in an environment where people battle life 24/7. We can treat them through cutting edge technology. But my grandparent, Dr. Pratap C Reddy always believes trust, faith and love are more vital to humanity. Today I’ve brought my 8-month-old daughter to take Daaji’s blessings. I wish the world had more oases like Kanha so it would slowly grow to create oceans of heartfulness.

There were additional interesting talks by Swami Gauranga Das (ISCKON); Swami Mukundananda (Jagatguru Kripaluji Yog); Devi Chitralekha Ji (World Sankirtan Tour Trust); Swami Amritaswaroopa Nanda Puri (The Mata Amritanandamayi Math); and Upasana Kamineni Konidela – Vice Chairman-CSR Apollo Hospitals Group and Managing Director-URLife as well. 

There were also many experience zones brought by various sansthas wherein people could gain wisdom and spiritual benefit. Cultural programs associated with spirituality, an exhibition showcasing India’s spiritual history, narratives of peace, and an immersive experience for spirituality through books and musicwere also organized. 

Notable organizations have come together for the Global Spirituality Mahotsav, some of the prominent ones areRamakrishna Mission, Parmarth Niketan, The Art of Living Foundation, The Mata Amritanandamayi Math, Archbishop of Hyderabad, Rev Cardinal Anthony Poola, Chinna Jiyar Swami, The Brahma Kumaris, Patanjali Yogpeeth, Maharishi Foundation (Transcendental Meditation), Isha Foundation, International Buddhist Confederation (IBC), Shiromani Gurudwara PrabandhakCommittee, Archdiocese of Hyderabad, Rashtra Sant TukdojiMaharaj Akhil Bhartiya Shri Gurudeo Seva Mandal, Sant Dnyaneshwar Devasthan, Alandi, All India Imam Organization, Shrimad Rajchandra Mission Dharampur and the Shri Ram Chandra Mission/ Heartfulness. 

Day 2 of the summit hosted various panel discussions, cultural programs associated with spirituality, an exhibition showcasing India’s spiritual history, narratives of peace, and an immersive experience for spirituality through books and music. Wellness experience and immersive zones were also set up as part of the summit.

‘Sur ki sadhana’ – a musical rendition of melodies filled with themes of spirituality were performed by renowned performers and musical maestros like Leslie Lewis, Sadhana Sargam, SourendroMullick, Soumyojit Das, Shweta Mohan, Mangli, Dr. Yashoda Thakore, Iman Chakraborty, Sanjay Joshi.