Breaking
November 18, 2024

November 2023

Marvel Studios Debuts Thrilling Final Trailer For “The Marvels”

The MCU’s Newest Team of Super Heroes Arrives In Theatres This Diwali on November 10

instagram

Marvel Studios debuted the final, thrilling trailer for “The Marvels”. The brand-new trailer, with a look back at The Avengers and the war against Thanos, sets up the stakes for Captain Marvel and her team as they go up against a formidable enemy.

In Marvel Studios’ “The Marvels,” Carol Danvers aka Captain Marvel has reclaimed her identity from the tyrannical Kree and taken revenge on the Supreme Intelligence. But unintended consequences see Carol shouldering the burden of a destabilized universe. When her duties send her to an anomalous wormhole linked to a Kree revolutionary, her powers become entangled with that of Jersey City super-fan Kamala Khan, aka Ms. Marvel, and Carol’s estranged niece, now S.A.B.E.R. astronaut Captain Monica Rambeau. Together, this unlikely trio must team up and learn to work in concert to save the universe as “The Marvels.”

The film stars Brie Larson, Teyonah Parris, Iman Vellani, Zawe Ashton, Gary Lewis, Seo-Jun Park, Zenobia Shroff, Mohan Kapur, Saagar Shaikh, and Samuel L. Jackson. Nia DaCosta directs, and Kevin Feige is the producer. Louis D’Esposito, Victoria Alonso, Mary Livanos and Matthew Jenkins serve as executive producers. The screenplay is by Nia DaCosta and Megan McDonnell and Elissa Karasik.

‘ரூல் நம்பர் 4′ விமர்சனம்

பரபர சம்பவங்களும் விறுவிறு திருப்பங்களும் நிறைந்த படமாக உருவாகி வெளியாகியுள்ளது ‘ரூல் நம்பர் 4.’

நாயகன் ஏகே பிரதீப் கிருஷ்ணா ஏடிஎம் வேன் டிரைவராக பணிபுரிகிறான். அவனுக்கு ஒரு பெண் மீது காதல் உருவாக அதை அவளிடம் சொல்ல அவள் ஏற்க மறுக்கிறாள். ஆனாலும் விடாமல் அவளை துரத்தி தன் காதலை ஏற்க வைக்கிறான். பிறகுதான் தெரிகிறது தான் காதலித்த பெண் தன்னுடன் ஏடிஎம் வேனில் துப்பாக்கி சுமந்து கூடவே வரும் செக்யூரிட்டியின் மகள் என்பது. இப்படி சுவாரஸ்யமாக பயணிக்கும் கதையில்… அந்த பெண்ணின் அப்பாவிடம் விவரத்தை சொல்லி காதலுக்குச் சம்மதம் பெற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்க நினைக்கிறார்கள். அதற்காக அதன்படி கோடிக்கணக்கான ரூபாயோடு ஏடிஎம் வேன் பயணிக்கும்போது இடையில் அவளை வேனில் ஏற்றிக் கொள்ள திட்டம் வகுக்கிறார்கள். அதன்படி அவளை ஏற்றிக் கொள்கிறார்கள். இப்போது வேனில் வேனை ஓட்டுகிற நாயகன், அவன் காதலிக்கும் பெண், அந்த பெண்ணின் தந்தை, பேங்க் மேனேஜர், கூடவே ஒரு கர்ப்பிணிப் பெண் என ஐந்து பேர் இருக்கிறார்கள். வேன் ஓடிக்கொண்டேயிருக்க, காதல் விவகாரத்தை அந்த அப்பாவிடம் சொல்லி அவருக்கு ஷாக் கொடுக்கிறார்கள்.

வேன் அப்படியே, காட்டிலாக்கா கட்டுப்பாட்டிலுள்ள ஏடிஎம் ஒன்றில் பணத்தை நிரப்புவதற்காக காட்டுப் பாதையில் நுழைகிறது. அந்த சமயத்தில் வேனிலிருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சிலரால் வேன் வழிமறிக்கப்பட்டு, அதிலிருப்பவர்கள் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள். வேனை பெட்ரோல் ஊற்றி கொளுத்தும் முயற்சியிலும் இறங்குகிறார்கள்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காட்டிலாக்கா உயரதிகாரி பணத்தை தன் வசமாக்கிக்கொள்ள நினைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்.

வேனிலிருப்பவர்கள் அந்த இக்கட்டான சூழலிருந்து தப்பிக்கப் போராடுகிறார்கள். அந்த முயற்சிக்கு பலன் கிடைத்ததா? கொள்ளையர்களின் நோக்கம் நிறைவேறியதா? என்பது கதையோட்டம். இயக்கம் பாஸர்

நாயகன் ஏகே பிரதீப் கிருஷ்ணா இளமையாக லட்சணமாக இருக்கிறார். நாயகியைக் கண்டதும் காதலில் விழுவது, அவளிடம் காதலுக்கு சம்மதம் பெற விதவிதமாக அணுகுவது என எளிமையாக நடித்தால் போதும் என்பது மாதிரியான கதாபாத்திரம். அதை சரியாக செய்திருக்கிறார்.

நாயகி ஸ்ரீகோபிகாவின் தேகத்திலிருக்கும் கேரளத்து வனப்பும் பளீர் புன்னகையும் வசீகரிக்கிறது. ஹீரோவை காதலிக்கும் காதலி என்ற எந்தவிதமான தனித்துவமும் இல்லாத வழக்கமான வேடமாக இருந்தாலும், கிளைமாக்ஸ் நெருங்கும்போது வேறொரு அவதாரமெடுத்து ஆச்சரியப்பட வைக்கிறார்.

நாயகியின் அப்பாவாக மோகன் வைத்யா. மகளின் காதல் விவகாரம் தெரிந்து கொதிப்பது, உயிருக்கு ஆபத்தான சூழலில் மனம் கலங்கித் தவிப்பது என நேர்த்தியான நடிப்பைத் தந்திருக்கிறார்.

காதலுக்கு பாலமாக இருக்க நினைத்து, நினைத்ததை செய்து முடித்து, கொள்ளையர்களால் பரிதாப முடிவை சந்திக்கிற ஜீவா ரவி, வேனில் பயணிக்கிற அந்த கர்ப்பிணிப் பெண், கொள்ளையர்களாக வருகிற முரட்டு ஆசாமிகள் என மற்ற நடிகர்கள் கதைக்கு தேவையான நடிப்பை குறையின்றி வழங்கியிருக்கிறார்கள்.

காட்டிலாக்கா காவல்துறை உயரதிகாரியாக வருகிற பிர்லா போஸின் வில்லத்தனம் கெத்து.

பரந்து விரிந்த கேரள காட்டுப் பகுதியின் செழுமையை அதன் அழகு மாறாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டேவிட் ஜான்.

‘என்ன கொன்னுபுட்டியே வெச்சு செஞ்சுபுட்டியே’, ‘சஸ்பென்ஸு ஓப்பன் ஆனதே’ பாடல்களில் தென்றலின் குளுமையைத் தந்திருக்கிற தீரஜ் சுகுமாறன், பின்னணி இசையில் காட்சிகளின் எதிர்பார்ப்பை முடிந்தவரை பூர்த்தி செய்திருக்கிறார்.

வேன் கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டு, உடன் வந்த ஒருவர் கொலை செய்யப்பட்ட பின்னரும், நாயகன் எதையும் செய்யாமல் வேனில் அமர்ந்தபடியே திருதிருவென விழித்துக் கொண்டிருப்பதை,

கையில் துப்பாக்கி இருந்தும் அதை பயன்படுத்தாமல் பயந்து சாகிற செக்யூரிட்டியின் நிலைப்பாட்டை துளியும் ஜீரணிக்க முடியவில்லை.

கொள்ளையர்கள் ஏடிஎம் வேனை மணிக்கணக்காக தாக்கிக் கொண்டேயிருப்பது சலிப்பு தருகிறது.

உருவாக்கத்தில் ஆங்காங்கே குறைகள் இருந்தாலும் வேன் கடத்தப்படுவதிலிருக்கும் பரபரப்பு, அழகிய கவிதையாய் கடந்தோடும் காதல் காட்சிகள் படத்தின் கவனம் ஈர்க்கும் சங்கதிகளாக அமைந்திருக்கின்றன.

“டங்கி” திரைப்படத்தின் கதாப்பத்திரங்களை அறிமுகப்படுத்தும், போஸ்டர்கள் வெளியாகியுள்ளன!!

“டங்கி” திரைப்படத்தின் அற்புதமான கதாப்பத்திரங்களை அறிமுகப்படுத்தும், இரண்டு அழகான போஸ்டர்கள் வெளியாகியுள்ளன!! – நண்பர்களும் குடும்பத்தினரும் கொண்டாடும் ராஜ்குமார் ஹிரானி மற்றும் ஷாருக்கான் ஆகியோரின் மனதைக் கவரும் உலகிற்குள் உலாவத் தயாராகுங்கள் !

கிங்கான் ஷாருக்கின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட, “டங்கி டிராப் 1” உண்மையில் பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு முழுமையான விருந்தாக அமைந்தது. உண்மையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படைப்பு, நட்பு மற்றும் அன்பை ஒருங்கிணைக்கும் அதி அற்புதமான
கதையை மனதை மயக்கும் வகையில் சொல்கிறது.

“டங்கி” படத்தின் ஐந்து முக்கிய கதாப்பாத்திரங்களான ஷாருக்கான், டாப்ஸி பன்னு, விக்ரம் கோச்சார், அனில் குரோவர் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் இடம்பெற்றுள்ள இரண்டு அழகான போஸ்டர்களை தயாரிப்பாளர்கள் நேற்று வெளியிட்டுள்ளனர். போஸ்டர்கள் டங்கி படத்தின் கதாப்பாத்திரங்கள் தங்கள் கனவுகளை நனவாக்க அவர்கள் சந்திக்கும் சவால்களையும் அவர்களின் நட்பின் அழகையும் எடுத்துக்காட்டுகிறது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, “டங்கி” திரைப்படம், இந்த டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட உள்ளது.

காதல்- த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள சென்சேஷனல் தமிழ் திரைப்படம் ‘சில நொடிகளில்’!

மிஸ்ட்ரி, த்ரில்லர், காதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் ‘சில நொடிகளில்’ திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகி பார்வையாளர்களை பரவசப்படுத்தத் தயாராக உள்ளது.

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த் மாயா பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்.

‘திரெளபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களுக்குப் பிறகு ரசிகர்கள் இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிதான ஒரு கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிக்கிறார். லண்டனில் இருக்கக் கூடிய ஸ்டைலிஷான ஒரு காஸ்மெட்டிக் சர்ஜனாக இதில் வருகிறார். மலேசியாவில் வசிக்கும் திறமையான நடிகையும் ஆர்.ஜே.வுமான புன்னகை பூ கீதா ‘காவல்’, ‘மைதான்’ படங்களுக்குப் பிறகு இந்தப் படம் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார்.

இயக்குநர் வினய் பரத்வாஜ் தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைவதற்கு முன்பு கன்னட சினிமாவில் அவர் இயக்கிய ‘முண்டினா நில்டானா’ என்ற படம் பெரும் வெற்றிப் பெற்று ரசிகர்களின் இதயம் கவர்ந்தது. இதுமட்டுமல்லாது, ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகி ஹிட்டான சர்வதேச அளவில் புகழ்பெற்ற டாக் ஷோவான ‘ஸ்டார் டாக் வித் வினய்- சவுத் மீட் நார்த்’ ஷோவின் தொகுப்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சில நொடிகளில்’ திரைப்படத்தின் கதை ராஜ் வரதனின் வாழ்க்கையை சுற்றி நடக்கிறது. அவனது மாடல் கேர்ள் ஃபிரண்டான மாயா பிள்ளை அதிக அளவு போதை மருந்து உட்கொண்டு பரிதாபமாக உயிரிழக்கும் போது இவனது வாழ்வு சிக்கலுக்குள்ளாகிறது. இதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன, எதிர்பாராத திருப்பங்கள், தனது மனைவி மேதா வரதனிடம் இருந்து அவன் என்ன ரகசியங்களைப் பெற்றான், அவனது வாழ்வு மீண்டும் இயல்புக்குத் திரும்பியதா போன்ற கேள்விகளுக்கு இந்தப் படம் பதில் சொல்லும்.

இஷான் ராஜாதிக்ஷா, எல்லே நவ், ஸ்ரீனிவாஸ் காஷ்யப் மற்றும் இயக்குநர் வினய் பரத்வாஜ் ஆகியோர் இந்தப் படத்திற்குத் திரைக்கதை எழுதியுள்ளனர். மேலும், அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவு செய்திருக்க, கலரிஸ்ட் சித்தார்த்தா காந்தி & எடிட்டர் ஷைஜல் பி வி ஆகியோர் சிறப்பான பணி செய்துள்ளனர்.

மசாலா காபி, பிஜோர்ன் சுர்ராவ், தர்ஷனா கேடி, ஸ்டாக்காடோ மற்றும் ரோஹித் மாட் போன்ற புகழ்பெற்ற கலைஞர்களின் இசை படத்தின் வலுவான உணர்ச்சிகளுக்கு ஏற்ற ஆன்மாவைக் கொடுத்திருக்கிறது.

புன்னகை பூ கீதா மற்றும் எஸ்குயர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சில நொடிகளில்’ உலகளவில் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. ‘மின்னலே’, ‘ஜீன்ஸ்’ & ‘அறிந்தும் அறியாமலும்’ ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட், இத்திரைப்படத்தின் தயாரிப்பில் இருக்கிறது.

மாதவன், ஆர்யா & கௌதம் மேனன் போன்ற நட்சத்திரங்களின் திறமையை அடையாளம் கண்டு ஊக்குவித்த மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் அவர்களின் வரவிருக்கும் வெளியீடான ‘சில நொடிகளில்’ அற்புதமான கதைகளை கொடுப்பதற்கும் திறமைசாலிகளை மேலும் ஊக்குவிப்பதற்குமான தளத்தையும் உருவாக்கியுள்ளது. ‘வசீகரா’, தீப்பிடிக்க’ போன்ற பாடல்களின் வெற்றிக்குப் பிறகு, ‘சில நொடிகளில்’ படத்தின் ‘ஃபன் மாரோ’ ஒரு பெப்பி டான்ஸ் பாடல் மற்றும் பாரதியார் பாடலின் ரீமேக்கான ‘ஆசை முகம்’ ஆகியவை சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
’சில நொடிகளில்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் திரையரங்க அனுபவத்தினை மேன்மைப்படுத்தி பார்வையாளர்களுக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கத் தயாராக உள்ளது.

ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் நடிக்கும் ‘மாயவலை’

அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் ‘மாயவலை’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் ஞாயிறு (நவம்பர் 5) அன்று நடைபெற்றது.

சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் ‘தயா’ செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜேந்திரன் (வாபோ), ஏ.ஆர். ஜாஃபர் சாதிக் (ஜே எஸ் எம் பிக்சர்ஸ்) மற்றும் சர்தார் ஆவர். யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில், எஸ்.பி. அஹ‌மதின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘மாயவலை’ திரைப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுத, வீரமணி கணேசன் கலை இயக்கத்தை கையாண்டுள்ளார். சண்டை பயிற்சிக்கு பிரதீப் தினேஷும், வடிவமைப்புக்கு கோபி பிரசன்னாவும் பொறுப்பேற்றுள்ளனர்.

இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

இணை தயாரிப்பாளர் ராஜேந்திரன் பேசியதாவது…

என் முதல் மேடை இது, இந்த வாய்ப்பை தந்த அமீர் அண்ணனுக்கு நன்றி. அமீர் அண்ணாவும் நானும் தீவிரமான கமல் ரசிகர்கள். எப்போதும் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம், அமீர் அண்ணனிடமும் கமல் சாரிடமும் என்னைக் கொண்டு சேர்த்த சினேகனுக்கு நன்றி. இந்தப்படம் பற்றி எனக்குத் தெரியாது. அமீர் அண்ணனுடன் பயணிக்க வேண்டும், அவ்வளவுதான். அமீர் அண்ணனும் வெற்றிமாறன் அண்ணனும் இணைந்து ‘நார்கோஸ்’ மாதிரி ஒரு சீரிஸ் எடுக்க வேண்டும், அதில் நாங்களும் இருக்க வேண்டும். அது நடக்கும் என நம்புகிறேன், அனைவருக்கும் நன்றி.

நடிகர் தீனா பேசியதாவது…

நான் நிறையப்படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு சீன், இரண்டு சீன் தான் நடிப்பேன், வெற்றிமாறன் அண்ணன் தான் அதை மாற்றினார். அவருடன் ‘வட சென்னை’யில் நிறைய கற்றுக்கொண்டேன். நான் ஸ்டண்ட் மேன் கிடையாது, துணை நடிகர் தான், எனக்கு நடிப்பு கற்றுக்கொள்ள ஆசை. கூத்துப்பட்டறை போன்ற இடங்களில் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் வெற்றிமாறன் சார் படத்தில் நடித்ததே பெரிய அனுபவமாக இருந்தது. அதே போல் தான் அமீர் அண்ணன். இருவரும் எனக்கு நிறைய சொல்லித் தந்தார்கள். உண்மையாகவே அமீர் எனக்கு அண்ணன் தான். என்னைக் குடும்ப உறுப்பினர் போல‌ பார்த்துக்கொள்வார். இந்தப்படத்தில் பணியாற்றிய எல்லோரும் நண்பர்கள் தான். மிக நன்றாக படம் வந்துள்ளது, அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள், நன்றி.

நடிகர் வின்செண்ட் அசோகன் பேசியதாவது…

அமீர் அண்ணனை சந்தித்ததே பெரிய விஷ‌யம். அவருக்கு சினிமா மேல் இருக்கும் காதல் தான் எங்கள் இருவருக்கும் பொதுவானது. அவர் என்னை எப்போதும் மதிப்பவர். வெற்றிமாறன் சாரின் ‘வட சென்னை’ படத்தில் அமீர் அண்ணனுடன் நடித்தது அனைவருக்கும் இன்றும் பிடித்த காட்சியாக உள்ளது. அமீர் அன்ணணுடன் இப்போது வரை நடித்தது எல்லாமே அடிதடி காட்சி தான். இந்தப்படம் வித்தியாசமானதாக அமைந்தது. வெற்றிமாறன் இப்படத்தில் வந்தது மகிழ்ச்சி, நன்றி.

தயாரிப்பாளர் ஜாஃபர் பேசியதாவது…

அமீர் அண்ணனுடன் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது இந்தப்படம் ஆரம்பித்தது. அமீர் அண்ணன் வாழ்க்கையிலேயே ஆரம்பித்த 40 நாட்களில் ஷூட்டிங் முடித்த படம் இது மட்டும் தான். அடுத்து அவர் இயக்கும் படமும் எங்களுடையது தான். எங்கள் உரையாடல் எப்போதும் கலகலப்பாக‌ இருக்கும். சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்போம். அவருடன் இணைந்து பயணிப்பது பெருமை. நன்றி.

நடிகர் சரண் பேசியதாவது…

எல்லோர் மத்தியில் இந்த மேடையை பகிர்வது பெருமை. என் முதல் நன்றி வெற்றிமாறன் சாருக்கு தான். ‘வட சென்னை’ படம் தான் என் வாழ்க்கையை மாற்றியது. என்னை காஸ்ட் செய்யும் அனைவரும் ‘வட சென்னை’ பற்றி சொல்வார்கள். அந்த‌ வாய்ப்பு தந்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி. ‘வட சென்னை’யில் பார்த்த பல நண்பர்களின் ரீயூனியன் மாதிரி இந்தப்படம் இருந்தது. இந்தப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு ரமேஷ் அண்ணாவிற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.

நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசியதாவது…

எல்லோருக்கும் வணக்கம், பத்திரிக்கையாளர் நண்பர்களின் ஆதரவு ‘மாயவலை’க்கு தேவை. சமுத்திரக்கனி சார் தான் ‘விநோதய சித்தம்’ பார்த்து அமீர் சார் கூப்பிடுகிறார், போய்ப்பார் என்றார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படம் கோவிட் காலத்தில் உருவானது. என்னை மிக நன்றாக பார்த்துக்கொண்டார்கள். மிக போல்டாக நடித்திருக்கிறேன், பார்த்துவிட்டு சொல்லுங்கள். ஆர்யாவின் தம்பி சத்யா என்னுடன் இணைந்து நடித்திருக்கிறார், மிக அழகாக நடித்துள்ளார். அமீர் சாருடன் இணைந்து நடிக்கும் போது நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. அவரும் மிக அற்புதமாக நடித்துள்ளார். ராம்ஜி எங்கள் எல்லோரையும் நன்றாக காட்டியுள்ளார். வெற்றிமாறன் சாருக்கு நன்றி, அவர் இந்தப்படத்தில் இணைந்தது பெருமை. மொத்தக் குழுவிற்கும் என் நன்றிகள்.

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது…

நானும் அமீர் சாரும் இணைந்து பணிபுரிந்து பல நாட்கள் ஆகி விட்டது, நாங்கள் இணைந்த அனைத்து பாடல்களும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன‌, இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன், எங்கள் படம் என்பதற்காக சொல்லவில்லை, இப்படம் பெரிய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். அமீர் சார் இந்தப் படத்தில் அழகாய் நடித்தது மட்டுமில்லாமல் மிக அழகாகவும் இருக்கிறார். பல ஆண்டுகள் அவருடன் பணியாற்றி வருகிறேன், இந்த பந்தம் மென்மேலும் தொடரும் என்று நம்புகிறேன். இயக்குநர் வெற்றிமாறன் இங்கு இணைந்துள்ளது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய பலம், அவரது ஆசீர்வாதம் எங்களுக்கு மிக முக்கியம், அவருக்கு எங்களது நன்றி. இந்தப் படம் மக்களிடையே ஒரு ஆழமான விதையை விதைக்கும் என்று நம்புகிறேன், உங்கள் ஆதரவை இந்தப் படத்திற்கு கொடுங்கள், நன்றி.

நடிகர் சத்யா பேசியதாவது…

இடையில் எனக்கு பெரிய பிரேக். நடுவில் ‘சந்தனதேவன்’ படத்தின் நடித்தேன், அதுவும் இடையில் நின்றுவிட்டது. என்ன செய்வது என்று தெரியாத போது தினமும் அமீர் சார் ஆபிஸ் போய்விடுவேன். பின் அவர் ரமேஷ் சாரிடம் எனக்கு இந்த வாய்ப்பை வாங்கித்தந்தார். இது என் ஆரம்பமாக இருக்குமென்று நம்புகிறேன். ஆதரவு தாருங்கள், அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி பேசியதாவது…

தாழ்வு மனப்பான்மை யாரிடமும் இருக்க கூடாது. உங்கள் திறமை பேசட்டும், பேசும். அமீர் நடிப்பிற்கு எப்போதும் எதிரி நான் தான். ஒரு நல்ல இயக்குநர் நடிக்கக்கூடாது என்றேன், ஆனால் வெற்றிமாறன் ‘வட சென்னை’ மூலம் மாற்றிவிட்டார். இந்தப்படத்திலும் அமீர் அருமையாக நடித்துள்ளார். வெற்றிமாறனுக்கு ஒரு வேண்டுகோள், நீங்கள் நடிக்க போய்விடாதீர்கள். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் பேசியதாவது…

மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு படம் செய்துள்ளேன், வாய்ப்பு தந்த அமீருக்கு நன்றி. வெற்றிமாறன் அமீரை ராஜனாக காட்டினார். இதில் இன்னொரு விதமான ராஜனை காட்டியுள்ளேன். நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள், அவரது நடிப்பு அருமையாக இருக்கும். வெற்றிமாறன் போன்ற தீவிரமான படைப்பாளி இந்தப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. எல்லோருக்கும் நன்றி

இயக்குநர் நடிகர் அமீர் பேசியதாவது…

‘மாயவலை’ தொடங்கியதன் நோக்கம் ஒன்று தான். இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் தான் இதன் மூல காரணம். மூத்த பத்திரிகையாளர்களுக்கு அவரைத் தெரியும். ‘அதர்மம்’ எனும் அற்புதமான படத்தை தந்தவர். பல முன்னணி நடிகர்களை இயக்கிய‌வர். எனக்கு அவருக்குமான நட்பு நீண்டது. அவர் படத்தின் ஷூட்டிங்கில் அவரை வேடிக்கைப் பார்த்திருக்கிறேன். நான் அவரிடம் உதவியாளனாக வேலைப் பார்க்க ஆசைப்பட்டேன், ஆனால் அவரது சினிமா பயணம் மாறிவிட்டது. அவர் டிவி பக்கம் ஒதுங்கி விட்டார். பல வேலைகள் பார்த்தாலும் அவருக்கு சினிமா செய்ய வேண்டும் என்பது தான் ஆசை. சரி வாருங்கள் பண்ணலாம் என்றேன், ஒரு கதை சொன்னார் அதைப் பண்ணலாம் என பல ஹீரோக்களிடம் கதை சொன்னோம், ஆனால் நடக்கவில்லை. கடைசியில் நீயே நடி என்றார், சரிண்ணே என்று சொல்லி ஆரம்பித்தது தான் இந்தப்படம்.

நாங்கள் ஆரம்பித்த போது ஒரு பட்ஜெட் இருந்தது, ஆனால் அது கை மீறிப்போய்விட்டது. எனக்கு பலர் உதவிக்கு வந்தார்கள். முதல் முறையாக ஒரு படத்தை ஷீட்டிங் எல்லாம் முடித்துவிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி முடித்துவிட்டு உங்களைச் சந்திக்கிறேன். எனக்கே இதுப் புதிது தான். இந்தப்படம் ஆரம்பித்த போது வெற்றிமாறனிடம் சொன்னேன், செய்யுங்கள் நன்றாக வருமென்றார். படம் முடிந்து அவருக்கு காட்டினேன், நானே ரிலீஸ் செய்கிறேன் என்றார். இன்றைய சினிமா வியாபாரம் தெரிந்த வெற்றிமாறன் போன்ற படைப்பாளி எங்கள் படத்தை ரிலீஸ் செய்வது, எங்களுக்குப் பெருமை.

என் அனைத்துப் படங்களுக்கும் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்திறகும் இசை. முதலில் பாடலில்லாமல் இருந்தது, இறுதியில் மூன்று பாடல்கள் வந்துவிட்டன‌. அதை அட்டகாசமாக யுவன் செய்து தந்தார். சஞ்சிதா ஷெட்டி என்னைப்பற்றி எப்போதும் நல்லவிதமாக சொல்லமாட்டீர்களா என்பார். மிகத் திறமைசாலி அவர். இந்தப்படத்தில் இரவில் தான் ஷீட்டிங், ஆனால் முகம் சுளிக்காமல், அற்புதமாக உழைத்துத் தந்தார். நாயகனுக்கு இந்தப்படம் பெயர் சொல்லும் படமாக இருக்கும். வின்செண்ட் என் முதல் படத்தில் நடிக்க வேண்டியவர், ஆனால் அவரை தொடர்பு கொள்ளும் சிக்கல்களில் அவரை நடிக்க வைக்க முடியவில்லை, பின் ‘யோகி’ படத்தில் நடித்தார் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஒரு சிலருக்கு முகம் பார்க்க பயமாக இருக்கும் ஆனால் உண்மையில் அவர்கள் குழந்தையாக இருப்பார்கள், தீனா அப்படியானவர். எப்போதும் அண்ணா அண்ணா என்று அன்பைப் பொழிபவர், போலீஸாக அருமையாக‌ நடித்திருக்கிறார். ‘வட சென்னை’ படத்தில் தான் அவரை சந்தித்தேன், எனக்கு அவர் நடிப்பு பிடித்திருந்தது. இந்தப்படத்தில் எல்லா நடிகர்களையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார். உண்மையில் அட்டகாசமாக செய்துள்ளார். பிரதீப் அருமையாக சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார். ‘விக்ரம்’ எடுத்த இடத்தில் தான் இப்படத்தை எடுத்தோம், அந்த இடம் என்று தெரியாத வண்ணம் கலை இயக்குநர் வீரமணி அருமையாக செய்து தந்தார். என் ஐந்து படங்களுக்கும் ராம்ஜி தான் கேமராமேன், ஒரு இரவில் நடக்கும் கதையை அருமையாக படம்பிடித்துக்காட்டியுள்ளார். எடிட்டர் அஹமது, மறைந்த நண்பர் ஜனநாதன் அறிமுகப்படுத்திய அருமையான கலைஞர், என்னுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். படம் அருமையாக வந்துள்ளது, பார்த்துவிட்டு சொல்லுங்கள். வெற்றியை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் அதுவும் அவரை ஹீரோவாக வைத்து எடுக்க வேண்டும் என்பது என் ஆசை.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது…

நடிப்பது, இயக்குவது இரண்டும் வேறு வேறு சவாரி, இரண்டையும் ஒரு சிலரால் தான் சமாளிக்க முடியும் அது என்னிடம் இல்லை அதனால் இப்போது நடிக்கும் ஆர்வம் இல்லை. ‘வட சென்னை’ ராஜன் ரோல் பலர் நடிப்பதாக இருந்து தள்ளிப்போனது. கடைசியாக அமீரைப் போய்ச் சந்தித்தேன், கேரக்டர் சொல்லாமலே எனக்காக நடிக்கிறேன் என்றார். ஆனால் கேரக்டர் சொன்ன பிறகு இந்தக் கேரக்டருக்கு சரியாக இருக்கமாட்டேன் என்று நினைத்தார், ஆனால் எனக்காக நடிக்க வந்தார். அப்போதிலிருந்து இப்போது வரை எங்கள் நட்பு தொடர்கிறது. எல்லாவற்றைப் பற்றியும் நிறையப் பேசுவோம்.

மனித உணர்வுகள் குறித்து ஒரு அருமையான விஷ‌யத்தை இந்தப்படம் பேசுகிறது, தீனா சிறந்த நடிகர், கேமராவிற்கு முன்னாலும் பின்னாலும் அவராகவே இருக்கிறார், அது அவரது பலம். இந்தப்படத்தில் எல்லோருமே நன்றாக செய்துள்ளார்கள். ரமேஷ், அமீர் எப்போதும் ஒன்றாகவே வருவார்கள், என் படங்கள் பற்றி ரமேஷின் கருத்து மிக உதவியாக இருக்கும். இந்தப்படத்தை நன்றாக செய்துள்ளார். எனக்கு திருப்தியான படமாக இப்படம் வந்துள்ளது. இந்தப்படம் எனக்குப் பிடித்திருக்கிறது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், நன்றி.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லேபில்’ சீரிஸின் இரண்டாவது டிரெய்லர்.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், மிகவும் எதிர்பார்க்கப்படும் லேபில் சீரிஸின் இரண்டாவது டிரெய்லரை வெளியிட்டுள்ளது.

புதுமையான காட்சிகளுடன் வெளியான இரண்டாவது டிரெய்லர் தொடரின் மீதான எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது.

லேபில் சீரிஸிலிருந்து வெளியான ட்ரெய்லர் 1 மற்றும் ட்ரெய்லர் 2 ஆகிய இரண்டுமே, இந்த சீரிஸ் வலுவான கதைக்களத்தில் ஒரு அழுத்தமான படைப்பை, சுவாரஸ்யமாகத் தருமென்பதை உறுதி செய்துள்ளது. பரபரப்பான டிரெய்லர் பார்வையாளர்களிடம் இந்த சீரிஸை பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

லேபில், சீரிஸ் நவம்பர் 10 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. இந்த சீரிஸை இயக்கியதோடு, இதன் திரைக்கதையையும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.

லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் CS இந்த சீரிஸிக்கு இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட நான்கு பாடலாசிரியர்கள் இந்த சீரிஸுக்கு பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.

https://youtu.be/QhHC5T-jF10?si=kc7D_Ed0Xh6s5hCI

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் பூஜையுடன் இனிதே துவங்கியது !!

 

Dwarka Productions தயாரிப்பில், பிளேஸ் கண்ணன் – ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்கும், அறிமுக இயக்குநர்  ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் கலக்கலான காமெடி படமாக உருவாகும் புதிய திரைப்படம், பூஜையுடன் இனிதே துவங்கியது.

இப்படத்தின் பூஜை,  திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

டார்லிங்க், இரும்புத்திரை, அண்ணாத்தே, ஹீரோ, மற்றும் மார்க் ஆண்டனி படங்களில், திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய  ரா.சவரி முத்து இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ரசித்துச் சிரிக்கும் ஒரு அருமையான படைப்பாக இருக்கும்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள் இவர்களுடன் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

தொழில்நுட்ப குழு

தயாரிப்பு – பிளேஸ் கண்ணன் (Dwarka Productions)
எழுத்து இயக்கம் – ரா.சவரி முத்து
ஒளிப்பதிவு – தமிழ் A அழகன்
இசை – D இமான்
படத்தொகுப்பு – சரத் குமார்
கலை – சுரேஷ் கல்லேரி
சண்டை – சுகன்
நடனம் – ஷெரிப்
ஒப்பனை – சுரேஷ்
ஆடை வடிவமைப்பு – ஷேர் அலி
உடைகள் – ரமேஷ்
புகைப்படம் – அன்பு
நிர்வாக தயாரிப்பு – நிதின் கண்ணன்
தயாரிப்பு மேற்பார்வை – அழகர் குமரவேல்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
விளம்பர வடிவமைப்பு – சபா டிசைன்ஸ்

மில்லியன் இதயங்களை வென்ற ‘டங்கி டிராப் 1’ டங்கி திரைப்படத்தின் முதல் பார்வை

ராஜ்குமார் ஹிரானியின் மனதைக் கவரும் தருணங்களுடன், SRK இன் வசீகரமும் இணைந்து நம் மனதில் மேஜிக்கை நிகழ்த்தியிருகிறது! ‘டங்கி டிராப் 1’ வெளியான 24 மணிநேரத்திற்குள் அனைத்து தளங்களிலும் 72 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது_

டங்கி திரைப்படத்தின் முதல் பார்வையான, “டங்கி டிராப் 1” வெளியான வேகத்தில், மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களை கவர்ந்திழுத்திருக்கிறது. இந்த வீடியோ,
ராஜ்குமார் ஹிரானி வடிமைத்திருக்கும் அற்புதமான உலகத்தைப் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பார்வையை நமக்குத் தருகிறது, இது இதயம் வருடம் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. நிஜ வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவாக்கப்பட்ட இக்கதை, ஒரு கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்சரான பயணத்தை, ரசிகர்கள் பிரமிக்கும் வகையில், காதல், அன்பு, நட்பு கலந்து சொல்லும் திரைப்படம் தான் டங்கி. இப்படம் உங்கள் இதயத்தை மயிலிறகால் வருடும் ஒரு அழகான படைப்பாக இருக்கும்.

சோனு நிகாமின் மாயாஜாலக் குரல், ராஜ்குமார் ஹிரானி மற்றும் படக்குழுவினருடன் இணைந்த SRK வின் மயக்க்கும் வசீகரம், என இப்படத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். நட்பு, நகைச்சுவை, சிரிப்பு ஒரு துளி கண்ணீர் என அனைத்து உணர்வுகளாலும் நம்மை மூழ்கடித்து, நம் இதயங்களில் உண்மையிலேயே ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது “டன்கி டிராப் 1”!

மனதைக் கவரும் உணர்ச்சிகளைத் தூண்டி, ராஜ்குமார் ஹிரானியின் சினிமாவின் அழகை எடுத்துக்காட்டி, ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ள பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட மிகவும் திறமையான நடிகர்களின், வண்ணமயமான கதாபாத்திரங்களுடன், உங்களை ஒரு ரோலர்-கோஸ்டரில் பரபரப்பான பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, “டங்கி” திரைப்படம், இந்த டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட உள்ளது

பன்முக கதாபாத்திரங்களில் அசத்தும் மாளவிகா மோகனன்

தங்கலான் படத்தில் பழங்குடிப்பெண்ணாக கலக்கும் மாளவிகா மோகனன்

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன் ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்களை ஏற்று, சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். கவர்ச்சியான அவதாரங்களில் நடித்தாலும், உடனே அழுத்தமான பாத்திரத்திற்கு மாறும் அவரது திறன் ஒரு நடிகையாக அவரது பன்முகத்தன்மையை நிரூபிக்கிறது. பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் தன் திறமையை நிரூபிக்க, அவர் எப்போதும் தயாராக இருக்கிறார்.

சீயான் விக்ரமுடன் அவர் நடித்துள்ள “தங்கலான்” திரைப்படத்தில், ஒரு பழங்குடிப் பெண்ணாகவே மாறியிருப்பது அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அவர் இப்படி மாறுவது இது முதல் முறையல்ல; உலகப் புகழ்பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய அவரது முதல் படமான “பியாண்ட் தி க்ளவுட்ஸ்”, படத்திலேயே மிக கனமான கதாபாத்திரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இது அவரது நடிப்புத் திறமைக்குச் சான்றாகும்.

தமிழின் மிக முக்கியமான புகழ்மிகு இயக்குநரான பா ரஞ்சித்துடன் இணைந்து பணிபுரிவது, சந்தேகத்திற்கு இடமின்றி அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். பா ரஞ்சித் உடனான கூட்டணியில், அவரை வித்தியாசமான பாத்திரத்தில் பார்ப்பது ரசிகர்களுக்குச் சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். “தங்கலான்” படத்தில் தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது அவரது பன்முக திறமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.

திரைப்படத் துறையில் பல்வேறு பாத்திரங்களில் அசத்தி வரும், மாளவிகா மோகனனின் திறமை அவரது ரசிகர்கள் பாராட்டக்கூடிய ஒன்றாகவுள்ளது, மேலும் இது அவரது வரவிருக்கும் திரைப்படங்களுக்குப் பார்வையாளர்களை ஆவலுடன் காத்திருக்க வைக்கிறது

அகாடமி ஆஃப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் எனும் ஆஸ்கார் குழுவில் இடம் பிடித்த ‘ராம்சரண்.’

அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்குவதற்கான மற்றும் அதனை மேற்பார்வையிடும் பொறுப்பு மிக்க அமைப்பான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் குழுவில், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் இணைந்திருக்கிறார்.

அகாடமி ஆஃப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் அண்மையில் புகழ்பெற்ற பான் இந்திய சூப்பர் ஸ்டாரான ராம்சரண், மதிப்புமிக்க நடிகர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சினிமா துறையில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காக கொண்டாடப்படும் வகையில் ராம் சரண் ஆஸ்கார் விருதுகளை வழங்கும் பொறுப்பு மிக்க அகாடமி விருதுகளை மேற்பார்வையிடும் நடிகர்களுக்கான அணியில் இணைகிறார்.

94 ஆவது அகாடமி விருதுகளில் ‘ஆர் ஆர் ஆர் ‘ எனும் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தின் சமீபத்திய வெற்றியைத் தொடர்ந்து, இத்திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு..’ என்ற மறக்க முடியாத பாடலுக்காக… சிறந்த அசல் பாடலுக்கான ஆஸ்கார் விருதை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த முக்கிய அறிவிப்பு வெளியானது. திரைப்பட துறையில் அவரது விதிவிலக்கான திறமைகள் மற்றும் ஈர்க்கக்கூடிய பணியை அங்கீகரிப்பதற்காக ராம் சரண்- தற்போது நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

அகாடமி தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் இதற்கான உற்சாகமான செய்தியை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு ராம்சரணின் அறிமுகத்தை கொண்டாடுவதுடன் மட்டுமல்லாமல் மோஷன் பிக்சர் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவரது ஈடுபாட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது. இது தொடர்பாக அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ” அவர்களின் நுணுக்கமான சித்தரிப்பு மற்றும் நம்பகத் தன்மைக்கான அர்ப்பணிப்பு மூலம் இந்த நடிகர்கள் நம் இதயங்களிலும், மனதிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களை நமக்கு பரிசளிக்கிறார்கள். அவர்களின் கலை வடிவத்தின் தேர்ச்சி சாதாரண தருணங்களை கூட.. ஆசாதாரணமான சினிமா அனுபவங்களாக மாற்றுகிறது. மனித உணர்ச்சிகளின் ஆழம் மற்றும் சிக்கலான தன்மைக்கான நமது பாராட்டுகளை வளப்படுத்துகிறது. மேலும் அகாடமியில் நடிகர்கள் பட்டியலுக்கு இந்த திறமையான கலைஞர்களை வரவேற்பதில் தாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் இந்த நடிகர்களின் குழுவில்…

லஷானா லிஞ்ச்
ராம் சரண்
விக்கி க்ரிப்ஸ்
லூயிஸ் கூ டின்-லோக்
கேகே பால்மர்
சாங். சென்
சகுரா ஆண்டோ
ராபர்ட் டேவி
மற்றும் பலர்.

இது தொடர்பானப் பட்டியலை முழுமையாக அறிந்து கொள்ள கீழ்கண்ட இணைப்பை கிளிக் செய்யவும். https://www.instagram.com/p/CzHvIyzv7KQ

பதினாறு ஆண்டுகளுக்கும் மேலான திரைத்துறை வாழ்க்கையில் ராம் சரண் தனது குறிப்பிடத்தக்க நடிப்பு, திறமை மற்றும் தளராத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் தொடர்ந்து பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார்.‌ அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் நடிகர்களின் பிரிவில் அவர் இணைக்கப்பட்டிருப்பது… உலகளாவிய திரையுலகில் அவருடைய செல்வாக்கிற்கு சான்றாக திகழ்கிறது.

அடுத்தடுத்து சிறந்த நடிப்பால் தாக்கத்தை ஏற்படுத்தும் ராம் சரண் தற்போது ‘கேம் சேஞ்சர்’ எனும் புதிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இப்படத்தை பிரபல திரைப்பட தயாரிப்பாளரான எஸ். ஷங்கர் இயக்கியிருக்கிறார். மேலும் ராம்சரணுடன் கியாரா அத்வானி நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ராம்சரணின் திரையுலக பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என உறுதியாக தெரிய வருகிறது.‌