Breaking
November 18, 2024

November 2023

சபாநாயகன் – ஒரு நாஸ்டால்ஜியா டிரிப்

அறிமுக இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், Certified Rascals ஸ்ரீராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். கிளியர் வாட்டர் பிக்சர்ஸ் சார்பாக அரவிந்த் ஜெயபாலன், ஐ சினிமா சார்பாக அய்யப்பன் ஞானவேல் மற்றும் கேப்டன் மெகா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கேப்டன் மேகவாணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் படத்தின் இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் பேசும்போது,
” சபாநாயகன் திரைப்படம் நம் பள்ளிகால மற்றும் கல்லூரி கால மலரும் நினைவுகளை மீள் உருவாக்கம் செய்யும் ஒருவித நாஸ்டால்ஜியா வகை திரைப்படம் ஆகும். நம் எல்லோருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் ஏதோவொரு பெண்ணின் மீது ஒருவித க்ரஸ் இருந்திருக்கும். இப்படி பள்ளி கால வாழ்க்கை, கல்லூரி கால வாழ்க்கை, திருமண வாழ்க்கை என்று வாழ்க்கையின் மூன்றுவித காலகட்டங்களைப் பற்றி இப்படத்தில் பேசி இருக்கிறோம். இப்படம் அனைத்து ரசிகர்களும் குடும்பத்தோடு வந்து பார்த்து ரசிக்கும்படியான திரைப்படம். என் மீது நம்பிக்கை வைத்து முதல்படம் இயக்குவதற்கு வாய்ப்பளித்த ஐ சினிமாஸ் அய்யப்பன் ஞானவேல் மற்றும் பிற தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பளித்த நடிகர் அசோக் செல்வனுக்கும் நன்றி” என்றார்.

படத்தின் இசையமைப்பாளரான லியோன் ஜேம்ஸ் பேசும் போது,
”ஓ மை கடவுளே திரைப்படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நானும் நண்பர் அசோக்செல்வனும் இந்த சபாநாயகன் திரைப்படத்தில் இணைந்து இருக்கிறோம். இத்திரைப்படம் நாம் நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து திரையரங்கிற்கு ஒன்றாக சென்று குதூகலிப்பதற்கான திரைப்படம்., படம் மற்றும் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்கள் அனைவருக்கும் ரொம்பவே பிடிக்கும் என்று நம்புகிறோம். பாடல்களுக்கான காட்சி தொகுப்புகள் மிகவும் சிறப்பாக அழகான முறையில் எடுக்கப்பட்டு இருந்தது. இது போன்ற ஜாலியான திரைப்படத்திற்கு இசையமைத்தது ஒரு நல்ல அனுபவம். படம் பார்க்கும் அனைவருக்குமே ஒரு நாஸ்டால்ஜியா டிரிப் சென்று வந்த அனுபவம் கண்டிப்பாக கிடைக்கும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பாலசுப்ரமணியம் பேசும் போது,
”எல்லோருக்கும் வணக்கம். இப்படத்தின் தயாரிப்பாளர் என் நண்பர். அவர் தான் இயக்குநர் கார்த்திகேயனை எனக்கு அறிமுகப்படுத்தினார். கார்த்திகேயன் கதை சொல்லும் போது எனக்கு கதை மிகவும் பிடித்தது. இது போன்ற கதைகள் இப்பொழுதெல்லாம் வருவதில்லை என்று எனக்குத் தோன்றியது. .மூன்றுவித காலகட்டங்கள் படத்தில் இருக்கிறது. இதில் கல்லூரி கால வாழ்க்கையை முதலாவது ஷெட்யூலில் படப்பிடிப்பு செய்தோம். அதில் நான் ஒளிப்பதிவு செய்தேன். பிறகு என் சீடர் தினேஷ் இரண்டாம் ஷெட்யூல் அதாவது பள்ளிகால வாழ்க்கையை ஒளிப்பதிவு செய்தான்… பிரபு ராகவ் கல்லூரி காலத்திற்குப் பின்னர் வரும் வாழ்க்கைப் பகுதியை ஒளிப்பதிவு செய்தார். படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள் ”என்று பேசினார்.

படத்தின் மற்றொரு ஒளிப்பதிவாளரான தினேஷ் புருஷோத்தமன் பேசும் போது,
”ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் என் குரு. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த என் குருநாதருக்கும், அதை ஏற்றுக் கொண்டு எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன், நாயகன் அசோக் செல்வன் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி ”என்று பேசினார்.

மூன்றாவது ஒளிப்பதிவாளரான பிரபு ராகவ் பேசும் போது,
”எல்லோருக்கும் வணக்கம். வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி. நாயகன் அசோக் செல்வன் சாருக்கு நன்றி. இப்படத்திற்கு பத்திரிக்கை நண்பர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். ”என்று பேசினார்.

நக்சலைட் யூடியூப் புகழ் நடிகர் அருண் பேசும் போது,
”இந்த சபாநாயகன் திரைப்படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. என் திரைப்பயணத்தில் இப்படி ஒரு முக்கியமான வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் அவர்களுக்கு என் முதல் நன்றி. என்னை விட என் மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்த இயக்குநரின் நம்பிக்கையை நான் காப்பாற்றி இருக்கிறேன் என்று நம்புகிறேன். இப்படத்தில் என்னோடு சேர்ந்து நடித்த சக யூடியூபர்ஸ் ஆன ஜெய்சீலன் ஸ்ரீராம் போன்றோருக்கு என் வாழ்த்துக்கள். அவர்களோடு இணைந்து நடித்தது மறக்க முடியாத மிகச்சிறந்த அனுபவம். அது போல் மைக்கேல் அண்ணன் உடன் நடித்ததும் மறக்கமுடியாத அனுபவம். அவருடனான காட்சிகள் இல்லை என்றாலும் கூட, எங்களுக்கு பின்னாலிருந்து பெரும் ஊக்கம் கொடுத்தார். பாலசுப்ரமணியம் சாரின் ஒளிப்பதிவில் நடித்ததை கெளரவமாக கருதுகிறேன். அவருக்கும் மற்ற கேமராமேன்களுக்கும் என் நன்றி, பாடல்கள் மிகவும் சென்சேஷனாக உள்ளது. சிறப்பான பாடல்களை இப்படத்திற்கு கொடுத்த இசையமைப்பாளருக்கு நன்றி. அசோக் சாருக்கு நன்றி. முதல் நாள் காட்சி சூட் செய்யும் போது எனக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்தது. நான் அந்த குழப்பத்திலும் அசோக்செல்வன் சாருடன் இணைந்து நடிக்கிறோம் என்கின்ற பதட்டத்திலும் ஏதோ நடித்தேன். அதை புரிந்து கொண்டு அசோக்செல்வன் சார் என்னிடம் வந்து பேசினார். நீ என்ன யோசிக்கிறாய்.. உனக்கு என்ன பயம் என்று எனக்குத் தெரியும்… இது நம்ம படம்.. இப்படத்தின் வெற்றிக்கு நாம் உழைக்கிறோம். கேசுவலாக இரு.. கோயம்புத்தூரில் உன் நண்பர்களுடன் நடிக்கும் போது எப்படி இருப்பாயோ அப்படியே இரு.. நான் ஒரு ஹீரோ என்பதை எல்லாம் மறந்துவிடு என்று என் தயக்கங்களை போக்கினார். அவருக்கு மிக்க நன்றி அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவரிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் எனக்கு பின்நாளிலும் கண்டிப்பாக உதவும் என்று தோன்றுகிறது.. சபாநாயகன் திரைப்படத்தை அனைவரும் குடும்பத்தோடு பாருங்கள். பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்” என்று பேசினார்.

நடிகை விவியா பேசும் போது,
“எல்லோருக்கும் வணக்கம். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு மிக்க நன்றி. என்னுடைய தாய்மொழி மலையாளம் என்பதால் என்னுடைய தமிழ் சிறப்பாக இருக்காது. மன்னிக்கவும். இது என் முதல் தமிழ்ப்படம் எல்லோரும் படத்திற்கு ஆதரவு தந்து இதை ஒரு ப்ளாக் பஸ்டர் ஆக்க கேட்டுக் கொள்கிறேன். இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.” என்று பேசினார்.

எருமை சாணி யூடியூப் புகழ் நடிகர் ஜெய்சீலன் பேசும் போது,
“இது என் திரைபயணத்தில் ஒரு முக்கியமான இலக்கு என்று சொல்லுவேன். யூடியூப் சேனல் மூலமாக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயனை சென்று அடைந்து, இன்று அவர் இயக்கிய திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இந்த மேடை மீது நின்று கொண்டிருக்கிறேன். இயக்குநரின் பெயர் சி.எஸ்.கார்த்திகேயன். அதாவது சுருக்கமாக சி.எஸ்.கே. சி.எஸ்.கேவின் ரிசல்ட் நாம் அனைவருமே அறிவோம். இயக்குநரின் ரிசல்ட்டும் அது போன்ற வெற்றியாகத் தான் இருக்கப் போகிறது. சபாநாயகன் திரைப்படத்தின் டீம் பெரிய டீம். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் வசன உச்சரிப்புகளில் மிகவும் கவனமாக இருப்பார். நாங்களும் சிறப்பாக மனப்பாடம் செய்துவிட்டு ஸ்பாட்டில் ஏதோ உளறிக் கொண்டு இருப்போம். டங்க் ட்விஸ்டர் போல இருக்கும். ஜாலியாக வேலை வாங்கக் கூடிய நல்ல இயக்குநர். இரண்டாவது ஷெட்யூல் சூட்டிங் செய்யும் போது காலில் அடிபட்டுவிட்டது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போல் படப்பிடிப்புத் தளத்தில் படுத்துக் கொண்டே டைரக்ட் செய்தார். அருண் அண்ணா சொல்லியது போல் அசோக் செல்வன் சார் மிகச் சிறந்த ஐஸ் ப்ரேக்கர். நம்மிடம் இருக்கும் தயக்கங்களை அவரே புரிந்து கொண்டு அவைகளை உடைத்து எறிவார். அவர் அழும் காட்சியின் போது அவரைக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்லி நடிக்க வேண்டும். அவரின் தலைமுடி கலைந்துவிடுமோ என்கின்ற தயக்கத்தில் பட்டும் படாமல் கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்லி நடித்தேன். அதை புரிந்து கொண்டவர், இந்த டேக் நன்றாக வர வேண்டும் என்றால், நீ உன் நண்பனை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்வது போல் இயல்பாக செய், முடி கலைந்தால் சரி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் என்று கூறி தைரியம் கொடுத்தார். சபா என்கின்ற வார்த்தையை திருப்பிப் போட்டால் பாசம் என்று வரும், அவர் ஒரு பாச நாயகன். அவருக்கு இப்படத்தில் எல்லாமே மூணு தான், அஸிஸ்டெண்ட் மூணு பேர், ஹீரோயின் மூன்று பேர், நண்பர்கள் மூன்று பேர், நித்தம் ஒரு வானம், போர் தொழில், அதைத் தொடர்ந்து மூன்றாவது வெற்றியாக இந்த சபா நாயகன் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் அசோக் செல்வன் சாரை மச்சான் மச்சான் என்று கூப்பிடுவோம். பிறகு சார் என்று சொல்லுவோம். ஆனால் படத்தில் அவரின் அக்காவாக நடித்தவரைப் பார்த்தவுடன் அவரை எப்பொழுதுமே மச்சான் என்று கூப்பிடத் துவங்கிவிட்டேன். லியோன் ஜேம்ஸ் அவர்கள் இசையில் நடித்ததும், பாலசுப்ரமனியம் சார் ஒளிப்பதிவில் நடித்ததும் மிகப்பெரிய கெளரவமாக கருதுகிறேன். செடி வளர மண் முக்கியம் தயாரிப்பாளர் அய்யப்பன் மற்றும் பிற தயாரிப்பாளர்கள் இணைந்து இந்த சபாநாயகன் என்னும் செடி வளர அரும்பாடுபட்டு இருக்கிறார்கள் என்றார்.

படத்தின் நாயகிகளில் ஒருவரான கார்த்திகா முரளிதரன் பேசும் போது,
”தமிழில் பேசுவது கடினம், அதனால் ஆங்கிலத்தில் பேசுகிறேன். தவறாக நினைக்க வேண்டாம். இது தமிழில் என் முதல் படம். தமிழ் இந்த இண்டெஸ்ட்ரியில் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது, மதன் சார், அய்யப்பன் சார் என என் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. அசோக்செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நிறையவே சப்போர்ட்டிவ்வாக இருந்தார். எனக்கு ஆடிஷன் பாலசுப்ரமணியன் சார் கேமராவில் தான் நடந்தது. அதை நான் பெருமையாக கருதுகிறேன். பிரபு சார் என்னை மிகவும் அழகாக காட்டி இருக்கிறார். அவருக்கு நன்றி. இது ஒருவகை நாஸ்டால்ஜியா ப்லிம், எல்லாவித வயதினருக்குமான காட்சிகள் படத்தில் இருக்கும். பள்ளி கால, கல்லூரி கால, மணவாழ்க்கை கால கட்டங்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. குடும்பத்தோடு பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே நீங்கள் இப்படத்தை ரசிக்கலாம். ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் என எல்லோருமே இந்தக் கதையில் மிகுந்த நம்பிக்கை கொண்டு இருக்கிறோம். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்றார்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அய்யப்பன் ஞானவேல் அவர்கள் பேசும் போது,
”இப்படத்திற்கு என்னையும் சேர்த்து மூன்று தயாரிப்பாளர்கள். அரவிந்தன், மேகவாணன் என இன்னும் இருவரிருக்கிறார்கள். அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் சார்பாகவும் நான் உங்களிடம் பேசுகிறேன். இது ஒரு ஜாலியான படம். மூன்று புதுமுக யூடியூபர்ஸ், அருண் ஸ்ரீராம், ஜெயசீலன், இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். மூவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மூன்று கேமராமேன்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்புக் கொண்டு எங்களுக்கு கிடைத்த பாக்கியம் என்றே சொல்லுவேன். தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது. அவருக்கும் எங்கள் நன்றி., பிரபு ராகவ் ஆரம்பத்தில் இப்படத்தில் பணியாற்ற மிகவும் பயந்தார். அவரின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது. இயக்குநர் எங்களின் நண்பர். ஒரு விசயம் வேண்டும் என்றால் கண்டிப்பாக அது அவருக்கு வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார். நல்ல நேர்மறையான சிந்தனைகள் எண்ணங்கள் கொண்ட இயக்குநர், அவருக்கு வாழ்த்துக்கள். இரண்டாவது செட்யூலில் கால் உடைந்த போதும் படப்பிடிப்பை எந்தவித தாமதமும் இன்றி முடித்துக் கொடுத்தார். பாலிவுட்டில் புகழ்பெற்ற பி.கே. 3 இடியட்ஸ் போன்ற படங்களின் கேமராமேன் ஆன முரளிதரனின் மகள் தான் கார்த்திகா, அவருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். எடிட்டர் கணேஷ் என் நண்பர் தான். அயலி, விலங்கு போன்றவற்றில் சிறப்பாக எடிட்டிங் செய்து இருந்தார். இப்படத்திலும் அவரின் எடிட்டிங் பணி சிறப்பாக இருந்தது. என் நண்பரின் நண்பர். லியோன் ஜேம்ஸ் மியூசிக்கில் பட்டையை கிளப்பி இருக்கிறார். எங்களின் வெல் விஷ்சர்ஸ். முதலில் ஜேம்ஸ் அவர் தான் இந்த பிராஜெக்ட் துவங்க காரணம், அடுத்து குமார் அண்ணன் அவரும் தயாரிப்பாளர் தான், என்கரேஜ் செய்து பல ஆலோசனைகள் கொடுத்தார், அடுத்து மதன் சார் அவருக்கு நன்றி. அவர் எங்களுக்கு மெண்டார் போல செயல்பட்டு வருகிறார். அசோக் செல்வனுக்கு நன்றி, ஜாலியாக பழகக்கூடியவர். எதையும் வெளிப்படையாக பேசுவார், பந்தா இல்லாதவர், சமீபத்தில் தான் கல்யாணம் ஆகி இருக்கிறது. அதற்கும் சேர்த்து அவருக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.

நாயகன் அசோக் செல்வன் பேசும் போது,
”எல்லோருக்கும் வணக்கம். எப்பொழுதுமே பத்திரிக்கையாளர்களை சந்திப்பது என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியான தருணம். என்னுடைய எல்லாப் படங்களையுமே மக்களிடம் கொண்டு சேர்த்து நான் இந்த இடத்தில் இன்று இருப்பதற்கு நீங்கள் தான் முழுமுதற்காரணம்.

சபாநாயகன் ஜாலியான க்ளீனான எண்டர்டெயினர் திரைப்படம். நடனம் மற்றும் நகைச்சுவைக்காக இப்படத்தில் நான் நிறையவே மெனக்கெட்டிருக்கிறேன். இந்த இரண்டுமே எனக்கு இப்படத்தில் புதியதாக இருந்தது. இயக்குநர்கள் இது போன்ற புதிய வாய்ப்பை கொண்டு வரும் போது தான் என்னைப் போன்ற நடிகர்கள் அதை பயன்படுத்திக் கொள்கிறோம். நான் இவ்வளவு ஹியூமர் செய்வேனா என்று மதன் சார் என்னிடம் ஆச்சரியப்பட்டார். முன்பே எனக்கு நக்கலைட்ஸ் சேனல் மிகவும் பிடிக்கும். ஸ்ரீராம் ஜெய்சீலன், அருண் போன்றோர் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் அவர்களிடம் பல ரசிக ரசிகைகள் மொய்த்துக் கொண்டு ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். அப்பொழுது தான் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவர்களின் வீடியோக்களை அதிகமாக பார்த்தேன். அவர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. ஜெய்சீலனை ஜூனியர் சிவகார்த்திகேயன் என்றே சொல்லுவேன். தயாரிப்பாளர் அய்யப்பனை எனக்கு மிகவும் பிடிக்கும். லியோன் ஓ மை கடவுளே படத்தில் மிகச்சிறப்பான பாடல்களை கொடுத்திருந்தார். இப்படத்திலும் கேட்டதும் பிடிக்கும்படியான பாடல்கள் உள்ளன. பாலசுப்ரமனியம் சார், தினேஷ், பிரபு ராகவ் அனைவருக்கும் நன்றி. மதன் சார் ஆபிஸில் பலமுறை காத்து இருந்திருக்கிறேன். இன்று அவர் வழிநடத்தி செல்லும் தயாரிப்பாளர் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிப்பது பெருமையாக இருக்கிறது. மூன்று நாயகிகளுடன் நெருக்கமாக நடித்தது பற்றி கேட்கிறீர்கள். நெருக்கத்தில் என்ன கேப் இருக்க முடியும் சார். என் மனைவி கீர்த்தி அந்த மாதிரி எதுவும் தவறாக நினைக்கமாட்டார். முதல் காதல், பள்ளிகால வாழ்க்கை, போன்ற மறக்கமுடியாத நினைவுகள் நம் மனங்களில் அழியாமல் எப்போதும் இருக்கிறது. அவைகளை கிளறிவிடும் திரைப்படமாக சபாநாயகன் இருக்கும். மேலும் உங்களின் மனச்சோர்வுகளுக்கும் மன அழுத்தத்திற்கும் அரும் மருந்தாக சபாநாயகன் திரைப்படம் இருப்பதோடு, ஏற்கனவே சொன்னது போல் ஒரு நாஸ்டால்ஜியா பயணம் சென்றுவந்த உணர்வைக் கொடுக்கும். பத்திரிக்கை நண்பர்கள் என் பிற படங்களுக்குக் கொடுத்த அதே ஆதரவை இப்படத்திற்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

MRT1’s “Chennai Runs” Marathon 2023: A Resounding Success Empowering Children’s Futures

Chennai, November 26, 2023 — MRT1’s “Chennai Runs” marathon was a powerful initiative conducted with an intent to make a difference – to raise funds for the Sri Arunodayam Charitable Trust, contributing to the well-being and future of underprivileged children with disabilities. And, it proved to be a resounding success with over 10,000 enthusiastic runners flooding the streets; making it a testimony to the celebration of compassion, community, and collective action.

The diverse categories, including 3K, 5K, 10K, and a Half Marathon (HM), catered to participants of various fitness levels. The event surpassed all expectations with an overwhelming participation, exceeding the initial target and creating a highly spirited atmosphere.

The race was officially flagged off by esteemed actor and philanthropist Mr. Raghava Lawrence, bringing with him his star power and charisma to the event.

“It’s truly heartening to see thousands of individuals come together for a cause as noble as this. The energy, enthusiasm, and the group spirit at the ‘Chennai Runs’ marathon is awe-inspiring. I’m grateful to be part of an event that not only promotes fitness but also supports the future of children in need,” said Mr. Raghava Lawrence.

Mr. Chirag Gupta, Chairman of MRT1, reflected on the massive achievement saying – “Today marks a significant milestone for ‘Chennai Runs’ and MRT1. Witnessing the community unite for this cause, surpassing our participation goals, and contributing to the Sri Arunodayam Charitable Trust has been a deeply rewarding experience. This success is a testament to the power of the community coming together on the grounds of compassion.”

Age No Bar – Giant Brain Tumour Successfully Removed in Octogenarian at KauveryHospital, Radial Road


Chennai, India (25 November 2023) Mrs KS, aged 81 years, has been living with her daughter
in Boston, United States, for 15 years. In the past three months, she experienced increased
difficulty in walking and cognitive functioning. This also led to her being prone to falls. She
had a history of bilateral knee replacement but was otherwise leading a normal life.
The doctors she consulted in the US noticed that apart from the aforesaid imbalance, Mrs KS
also had reduced hearing in her right ear and poor coordination while using her right hand.
On further investigation, they found that she had a large brain tumour arising from her
hearing nerve and had recommended an immediate surgery. Mrs KS and her family sought
medical advice from different hospitals in the US and India and finally decided to get treated
by Dr Krish Sridhar at Kauvery Hospital, Radial Road, Chennai, following a series of video
consultations with him.
Dr Krish Sridhar, Group Mentor and Director, Institute of Brain and Spine, said, “We had to
remove a giant vestibular schwannoma, a surgery that took nearly 10 hours. The surgical
removal of vestibular schwannoma is always particularly tricky, especially when it is a large
tumour (more than 4.5 cm in diameter) as in the case with Mrs KS. We performed the surgery
using a high-end operating microscope and constant neuro monitoring, ensuring that the
critical nerves responsible for swallowing, speech and those associated with the face are not
affected when we remove the tumor.”
Following the successful surgery, she was able to walk in two days and got discharged on the
7th day from the hospital. Mrs KS had continued her physiotherapy sessions as advised and
returned to the US, hale and fit.
“Many people are scared of surgery when they or their family member is above the age of 70.
However, with advancements in anaesthesia, superior operating room technology and
continuous monitoring, risks have remarkably reduced. Surgery – even for critical brain
tumours – can be successfully performed at any age, provided the patient is medically fit,”
says Dr Sridhar.
The team at Kauvery Institute of Brain and Spine is happy to have successfully removed the
brain tumour, allowing Mrs KS to get back to her previous level of health and wishes her good
health and an active life ahead.
Kauvery Hospital, Radial Road, is a leading healthcare institution offering advanced
treatments and surgical interventions in neurology, cardiology, gastroenterology, women and
child wellness, orthopaedics, joint reconstruction, urology, nephrology and other specialities.
With a dedicated team of experts and state-of-the-art medical facilities including 50+ critical
care beds, 20+ NICU beds, 7+ operation theatres, an advanced Cath lab, cutting-edge neuro
diagnostic equipment like 3T MRI and 4K + 3D neuro microscope, transplant facilities and 24/7

dialysis unit, it provides world-class medical care to patients from around the globe.

NAPOLEON

CURTAIN RAISER – Thisis a spectacle-filled action epic that details the chequered rise and fall of the iconic French Emperor Napoleon Bonaparte, played by Oscar winning actor, Joaquin Phoenix. Set against a large canvas, the film captures Napoleon Bonaparte’s relentless journey to power and his relationship with Josephine whom he loved genuinely! The screenplay showcases his visionary military and political tactics in the midst some of the most dynamic practical battle sequences ever showcased on the silver screen! 

SYNOPSIS –The screenplay is set during the times of the French Revolution while a young Army Officer, Napoleon Bonaparte, gains prominence as he tactfully drives the British Troops away, thereby managing the Siege of Toulon in 1793! It is now 1795 and Napoleon continues to win while rising in power! Meanwhile, he gets linked up with an aristocratic widow, Josephine (Vanessa Kirby) and eventually marries her! Battle of the Pyramids, Battle of Austerlitz and Battle of Borodino follow and he keeps consolidating his powers! The Duke of Wellington and Marshal Blucher defeat him at the Battle of Waterloo in 1815. He is exiled to the island of St. Helena! Death embraced him in 1821…

CREDITS – Directed by-Ridley Scott

Music-Martin Phipps                                        Cinematography-Dariusz Wolski

The film premiered in Paris on November 14, 2023

Based on                                                        Sony Pictures Entertainment India Release in English & Hindi

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும்நெப்போலியன்

ஆஸ்கார் விருது பெற்ற நடிகரான ஜோக்குவின் ஃபீனிக்ஸ் நடித்த பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கும் அதிரடி காவியம் இது. பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், அதிகாரத்தை நோக்கிய நெப்போலியனின் தளர்வுறாப் பயணத்தைப் பற்றியும், அவர் மிகவும் நேசித்த ஜோசஃபினுடனான உறவைப் பற்றியும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நெப்போலியனின் தொலைநோக்கான இராணுவ மற்றும் அரசியல் தந்திரத்தைத் திரைக்கதை எடுத்தியம்ப, இதுவரை வெள்ளித்திரையில் முயற்சி செய்திராத எதார்த்தமான போர்க் காட்சிகளால் சிலிர்ப்பூட்டுகிறது படம்!

கதைச்சுருக்கம் – பிரெஞ்சுப் புரட்சியின் போது, இளம் இராணுவ அதிகாரியான நெப்போலியன் போனபார்ட் தனது சாமர்த்தியத்தால் பிரிட்டிஷ் துருப்புக்களை விரட்டியடித்து, அதன் மூலம் 1793 இல் தூலொன் முற்றுகையை சமாளிப்பதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. நெப்போலியனின் தொடர் வெற்றிகளால், 1795 இல், அரசியல் அதிகாரமட்டத்தில் அவரது செல்வாக்கு உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கிடையில், அவர் உயர்குடியைச் சேர்ந்த விதவையான ஜோசஃபின் (வனேசா கிர்பி) உடன் அறிமுகம் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொள்கிறார்.

பிரமிடுகளின் போர், ஆஸ்டர்லிட்ஸ் போர், போரோடினோ போர் முதலிய போர்களின் வாயிலாகத் தனது அதிகாரத்தையும் சக்தியையும் பலப்படுத்துகிறார். 1815 ஆம் ஆண்டு நடந்த வாட்டர்லூ போரில், வெலிங்டன் பிரபுவாலும், மார்ஷல் ப்ளூச்சராலும் அவர் தோற்கடிக்கப்படுகிறார். செயின்ட் ஹெலினா தீவுக்கு நாடு கடத்தப்படும் நெப்போலியனை, 1821 இல் மரணம் தழுவியது.

CREDITS
இயக்கம் – Ridley Scott
இசை – Martin Phipps
ஒளிப்பதிவு – Dariusz Wolski

பாரீஸில், இப்படத்தின் பிரத்தியேக காட்சி, நவம்பர் 14, 2023 அன்று ஒளிபரப்பப்பட்டது.

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா, இப்படத்தை ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியிடுகிறது.

Coca-Cola India launches “Honest Tea” an Iced Green Tea

Made from Organic Green Tea, the green tea is sourced from the Makaibari Tea Estate, owned by the Luxmi Group.

Chennai-25.11.2023-In an endeavour to provide consumers with wider beverage options Coca-Cola
India enters the world of ready-to-drink tea beverages with the launch of Honest Tea, a brand
owned by Honest, Inc. a subsidiary of The Coca-Cola Company. Honest Tea is a refreshing, Organic
Green Tea based drink. The Organic Green Tea for Honest Tea is being exclusively sourced from
Luxmi Tea’s renowned Makaibari Tea Estate.
Situated on the steep slopes located at the foothills of the Himalayas, Makaibari is the oldest Organic
Darjeeling Tea plantation. At Makaibari, the tea is meticulously handpicked in a biodynamic
agricultural environment, famed for its rare moonlight plucked tea.
“There is no greater tea estate in Darjeeling than Makaibari; it is the last word among teas, whether
in Japan, or England, royal houses,” says Rudra Chatterjee, Managing Director of Kolkata-based
Luxmi Group. “It is also the choice of tea Satyajit Ray decided for his fictional detective character
Feluda.”
Commenting on the launch Karthik Subramanian, Director, Marketing – Hydration, coffee and tea
category, Coca-Cola India and Southwest Asia said, “We are thrilled to introduce our new ready-to-
drink iced green tea. With Honest Tea, we are offering consumers a unique experience of a great
tasting green tea based beverage. Whether one is on the go or is simply seeking a moment of
tranquillity, ‘Honest Tea’ is the perfect companion offering refreshment and goodness.”
Honest Tea comes in two refreshing flavours, Lemon-Tulsi and Mango, to suit the varied tastes of the
consumers. Meant for the modern women and men of today who wish to live a balanced lifestyle,
the newly launched beverage provides a ‘Moment of Good’ with every sip of the iced green tea.
Made from Organic Green Tea grown in harmony with nature, Honest Tea not only tastes great but
is made with the best quality tea leaves.
Honest Tea has been launched exclusively on E-Commerce in Bangalore, Mumbai, Hyderabad,
Chennai and Pune and will be available at the price point of Rs 50. For more details visit Honest Tea’s
Instagram page – @honestteaindia

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, மிருணாள் தாக்கூர் நடிக்கும் ‘hi நான்னா’

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, மிருணாள் தாக்கூர் நடிக்கும் ‘hi நான்னா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

‘hi நான்னா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7 அன்று உலகெங்கும் வெளியாகிறது

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் பான்-இந்தியா திரைப்படமான ‘hi நான்னா’ ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிற‌து. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7 அன்று உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் நாயகன் நானி இன்று சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாள‌ர்களை சந்தித்தார்.

இந்நிகழ்வினில் நடிகர் நானி பேசியதாவது…

‘நான்னா’ என்றால் தமிழில் அப்பா, ஆனால் படத்தின் பெயர் எல்லா மொழியிலும் ஒரே மாதிரி இருக்கட்டும் என்று நினைத்தோம், அது லிப் சிங்க் மற்றும் பலவற்றுக்கும் உதவியாய் இருந்தது. படத்தில் நிறைய முறை ‘நான்னா’ என்ற வார்த்தை வருகிறது, அதுவும் ஒரு காரணம். இது ஒரு மிக அழகான படம். படத்தை முழுதாகப் பார்த்த பிறகு சொல்கிறேன், இந்தப்படம் எனக்கு பெருமை தரும் படம். டிசம்பர் 7 திரையரங்குகள் கொண்டாடும் படமாக இது இருக்கும். ஒரு காதல் படம், ஆனால் பரபரவென போகும் கதை என‌ கண்டிப்பாக உங்கள் மனதில் இடம்பிடிக்கும் படமாக இருக்கும். தமிழில் நான் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து எப்போதும் எனக்கு ஆதரவு தந்து வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இது ஒரு முறை பார்க்கும் படமாக இருக்காது, மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் படைப்பாக இருக்கும். டிசம்பர் 7 உங்களை திரையரங்குகளில் சந்திக்கிறேன், நன்றி.

மேலும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு நானி பதிலளிக்கையில்…

அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் என பிரிக்க முடியாது. அன்பு ஒன்று தான். அம்மா படங்கள் எல்லாம் நிறைய வந்துவிட்டன‌, இப்போது அப்பா படங்கள் வர ஆரம்பித்துள்ளன‌. அது நல்லது எனறே நினைக்கிறேன்.

எனக்கு தமிழ்ப் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மணிரத்னம் சார், கமல் சார் படங்களின் தீவிர ரசிகன் நான். ஆனால் தமிழ் முழுமையாக பேச வராது, இப்போது கற்றுக்கொண்டிருக்கிறேன். விரைவில் பேச முடியும் என நம்புகிறேன்.

ஆரம்பத்தில் தமிழ் இயக்குநர்களோடு வேலை பார்த்தேன். ஆனால் அதை இங்குள்ள மக்கள் தெலுங்குப் படமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள், தெலுங்கு மக்கள் தமிழ்ப் படமாக பார்க்க ஆரம்பித்தார்கள். பின்னர் ‘பாகுபலி’, ‘காந்தாரா’ போன்ற‌ படங்கள் வந்த பிறகு தமிழ் நடிக‌ர், தெலுங்கு நடிகர் என்று பிரித்து பார்த்து படம் எடுக்கத் தேவையில்லை, சொல்லும் கதைக்கு உண்மையாக இருந்தால் போதும், அது மக்களிடம் போய்ச் சேரும் எனப் புரிந்தது, எனவே தான் நான் கதைகளுக்கு முக்கியத்துவம் தருகிறேன். தமிழ், தெலுங்கு எனப் பிரித்து வைக்க தேவையில்லை, என் எல்லாப் படங்களும் இங்கு தமிழில் வரும்.

நடிகை மிருணாள் இந்தப் பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று மொத்த டீமும் நினைத்து தான் தேர்வு செய்தோம், அதை அவர் அற்புதமாக செய்துள்ளார்.

ஒரு மிகச்சிறந்த தமிழ் இயக்குநர், எனக்குப் பிடித்தவர், அவர் எனக்காக ஒரு கதை சொன்னார், விரைவில் அப்படம் பற்றிய அறிவிப்பு வரும்.

காதலை உணர்வுப்பூர்வமாக சொன்னால் அதை விட பெரிய ஆக்சன் திரில்லர் எல்லாம் கிடையாது. அது பயங்கரமாக இருக்கும். அதை இந்தப்படம் பார்க்கும் போது உணர்வீர்கள்.

எனக்கு இந்தப்படத்தில் சவாலாக இருந்தது என்னவெனில், நான் ஏற்கனவே ‘ஜெர்ஸி’யில் அப்பாவாக நடித்துவிட்டேன் அது மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர், மீண்டும் அதே போல் ஆனால் அதிலிருந்து மாறுபட்டு நடிப்பது தான் சவாலாக இருந்தது.

முன்னர் எல்லாம் முத்தக் காட்சியில் திரை இருட்டாகிவிடும், 2023ல் கிஸ் பெரிய விசயம் இல்லை. இங்கு கல்யாணம் ஆனவர் இருப்பீர்கள், மனைவியை முத்தம் கொடுக்காமல் யாராவது இருப்பார்களா? முன்னர் மாதிரி மரத்தை சுற்றுவது, பூவைக் காட்டுவது என்று இப்போதைய ஆடியன்ஸை ஏமாற்ற முடியாது, முத்தத்தை திரையில் காட்டலாம் தவறில்லை.

நம் வாழ்க்கையில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள், படத்தில் மட்டும் ஏன் இருக்கக்கூடாது? என் படத்தில் அவர்கள் பெரிய இடம் வகிப்பது எனக்கு மகிழ்ச்சி.

இந்தப்படம் ஆண் பெண் உறவை மிகச்சிறப்பாக பேசும் படமாக இருக்கும், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் சிறப்பான படைப்பாக இருக்கும்.

இத்திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான்-இந்தியா திரைப்படமாக இந்த ஆண்டு டிசம்பர் 7 அன்று ‘hi நான்னா’ வெளியாகிறது.

படக்குழுவினர்:

நடிகர்கள்: நானி, மிருணால் தாக்கூர், பேபி கியாரா கண்ணா

இயக்கம்: ஷௌர்யுவ்
தயாரிப்பு: மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா
தயாரிப்பு நிறுவனம்: வைரா என்டர்டெயின்மென்ட்ஸ்
ஒளிப்பதிவு: சானு ஜான் வர்கீஸ்
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
தயாரிப்பு வடிவமைப்பு: அவினாஷ் கொல்லா
படத்தொகுப்பு: பிரவீன் அந்தோணி
நிர்வாகத் தயாரிப்பாளர் – சதீஷ் ஈ.வி.வி
ஆடை வடிவமைப்பாளர்: ஷீத்தல் ஷர்மா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

‘அனிமல்’ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை.

‘அனிமல்’ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவான ‘அனிமல்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை கண்டிராத காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பிடித்திருந்ததால் பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது. இதில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தானா, பாபி தியோல், அனில் கபூர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்திருப்பதால் இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கிற்கு கிடைத்த அமோகமான வரவேற்பே இந்த உற்சாகத்திற்கு மிகப்பெரும் ஆதாரம். பூஷன் குமார் தயாரிப்பில் உருவான ‘அனிமல்’ எனும் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களுக்குள் 10,000 டிக்கெட்டுகள் விற்பனையாகின. அதன் பின்னர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 10,000 டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகிறது.

மிகச் சில இந்திய திரைப்படங்களின் முன்பதிவுகள் இந்த வகையான வரவேற்பைப் பெற்றிருக்கும். அதனால் இந்த திரைப்படம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட். ‘அனிமல்’ திரைப்படம் என்னவாக இருக்கும் என்பதை மட்டுமே இந்த டிக்கெட் முன்பதிவு நிரூபிக்கிறது. பூஷன் குமார் மற்றும் கிரிஷன்குமாரின் டி சீரீஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து ‘அனிமல்’ திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். கிரைம் டிராமா ஜானரிலான இந்த திரைப்படம் டிசம்பர் ஒன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, பார்வையாளர்களை பரபரப்பான பயணத்தில் அழைத்துச் செல்லும் என உறுதியளிக்கிறது.‌

பிரபாஸின் ஸ்பிரிட் 2024 ல் வெளிவருகிறது

அனிமல் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் நிலையில் படக்குழு எட்டுதிக்கும் பறந்து புரமோசனில் ஈடுபட்டு வருகிறது. நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அன்ஸ்டாப்பபிள் வித் என்பிகே படக்குழு கலந்துகொண்டபோது, அவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா அடுத்து பிராபாஸை வைத்து இயக்கவிருக்கும் ஸ்பிரிட் படத்தின் அப்டேட் குறித்து கேட்டது தற்போது வைரலாகி வருகிறது.

அன்ஸ்டாப்பபிள் வித் என் பி கே நிகழ்ச்சியில், தொகுப்பாளராக இருக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணா, சந்தீப் ரெட்டி வாங்காவிடம், “எனது பேரன் தேவன்ஷ் பிரபாஸின் ஸ்பிரிட் திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார். படப்பிடிப்பு எப்போது தொடங்கவுள்ளது ?” எனக்கேட்க, அதற்கு இயக்குநர், “ ஸ்பிரிட் படம் செப்டம்பர் 2024ல் திரைக்கு வரும்” என்றார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பத்திரிக்கையிடம் பேசிய தயாரிப்பாளர் பூஷன் குமார், “இப்போது, பார்வையாளர்களுக்கு அனிமல் படத்தை நல்ல முறையில் தர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதன் பிறகே, நாங்கள் ஸ்பிரிட் படத்தை தொடங்குவோம், ஐந்து முதல் ஆறு மாதங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு, பிறகு ஸ்பிரிட்டைத் தொடங்குவோம். என்றார். மேலும் இந்த பேட்டியின் போது, ரன்பீர் கபூர் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் பங்குபெற வேண்டும் என்ற தனது விருப்பர்தையும் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் ரன்பீர்கபூர் , “அவரது (சந்தீப் ரெட்டி வங்கா) அடுத்த படம் பிரபாஸுடன், அப்படத்தில் அவர் எனக்காக ஒரு சிறிய பாத்திரம் உருவாகினால், நான் அதன் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவேன். என்றார்.

பிராபஸின் பிரம்மாண்டமான ஸ்பிரிட் படத்தின் புதிய அப்டேட்களால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நடிகர் ராஜ்குமாரின் திருமணம்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ராஜ்குமாருக்கும், கோயம்புத்தூரை சேர்ந்த சஜு என்ற பெண்ணிற்கும் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

திருமணத்தை நடத்தி வைத்த பிறகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசுகையில், ”
”திருமங்கலம் கோபால் அவர்களின் மனைவியார் சரோஜினி அவர்கள்
நன்றி உரை ஆற்றுகையில் சில செய்தியினை சொன்னார். அதாவது திருமங்கலம் கோபாலின் திருமணத்தையும் தலைவர் கலைஞர் தலைமையேற்று நடத்தி வைத்தார். அவரது மூன்று பிள்ளைகளின் திருமணத்தையும் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது என்று குறிப்பிட்டார். அவரது நான்காவது மகனான ராஜ்குமாரின் திருமணம் என் தலைமையில் நடைபெறுகிறது. இனி அவரது வாரிசுகளுக்கு பேரனோ.. பேத்தியோ.. அவர்களுக்கும் என் தலைமையில் திருமணத்தை நடத்தி வைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் இருக்கிறது. அந்த அளவிற்கு நாங்கள் உரிமை பெற்றவர்கள். அந்த அளவிற்கு எங்கள் மீதும் கழகத்தின் மீதும் ஈடுபாடு கொண்டவர்கள் திருமங்கலம் கோபால் குடும்பத்தினர். திருமங்கலம் கோபால் கட்சிக்காக பாடுபட்டு அரும் தொண்டாற்றியவர். அவர் எப்போதும் மிடுக்காகவே இருப்பார்.

தலைவர் கலைஞர் அவர்களும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் திமுகவின் துணை அமைப்பாக இளைஞர் அணி என்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அதற்காக நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ..ஏறத்தாழ 30 சதவீத அளவிற்கு எனக்கு பாதுகாப்பாக என்னுடன் பயணித்தவர் தான் திருமங்கலம் கோபால்.

மதுரை திருமங்கலம் கோபால் மற்றும் திருமதி சரோஜினி தம்பதியினரின் இளைய வாரிசான ராஜ்குமாருக்கும், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சாகுல் அமீது மற்றும் ஷகிலா பானு தம்பதியரின் மகள் சஜு என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சயித்தனர். இவர்களது திருமணம் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு, டி. ஆர். பாலு, சேகர் பாபு, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, திமுகவின் செய்தி தொடர்பாளர் டி. கே. எஸ். இளங்கோவன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், திரைப்பட இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி, பாலாஜி தரணிதரன், டெல்லி பிரசாத் தீனதயாள், நடிகர் பக்ஸ் என்ற பகவதி பெருமாள், நடிகை காயத்ரி, இயக்குநர் கார்த்திக், ஒளிப்பதிவாளர் சரஸ் காந்த், இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜ், படத்தொகுப்பாளர் கோவிந்த், இயக்குநர் அமிர்தராஜ் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.