Thomas Cook

பயண தேவைகளில் தமிழ்நாட்டில் சென்னை முன்னிலை வகிப்பதாக தாமஸ்குக் இந்தியா அறிவிப்பு.
70% வாடிக்கையாளர்கள் 2021 இல் பயணம்செய்யஆர்வமாகஉள்ளனர்.
குறிப்பிடத்தக்க பயணத் தேவையின் மாதாந்திர வளர்ச்சி 70% ஆகவுள்ளது.
தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளில் இருந்து 55% மீண்டுள்ளது*.
எக்ஸ்போ 2020 துபாயின் ஆதரவால் 290% வாடிக்கையாளர்கள் உள்நாட்டுப் பயணத்தையும், 60% வாடிக்கையாளர்கள் வெளிநாட்டு பயணத்தையும் விரும்புகின்றனர்*.
*செப்டம்பர் 2019 மற்றும் செப்டம்பர் 2021 தரவுகளின் படி
சென்னை, அக்டோபர் 21, 2021: தமிழ்நாடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் முக்கிய பயணசந்தையாக சென்னை திகழ்வதாக இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த பயணசேவை நிறுவனமான தாமஸ்குக் (இந்தியா) லிமிடெட் தெரிவிக்கிறது. 18 மாத கட்டுப்பாடுகளுக்குப் பிறகு கடந்த 2021 ஜூன் மாதம் முதல், அண்டை மாநிலங்களின் எல்லை திறப்பு மற்றும் தடுப்பூசி பெறுதல் போன்ற பல சாதகமான அறிவிப்புகளின் காரணமாக மாதாமாதம் பயணிகளின் எண்ணிக்கை 70% ஆக அதிகரித்து வருவதாக இந்நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த செப்டம்பர் 2019 மற்றும் செப்டம்பர் 2021 எடுக்கப்பட்ட இந்நிறுவனத்தின் தரவுகளின் படி, வரவிருக்கும் பண்டிகைகாலம், குளிர்கால சீசன் மற்றும் எக்ஸ்போ 2020 துபாயுடன் ஒட்டுமொத்தமாக தொற்றுநோய்க்கு முந்தைய வாடிக்கையாளர்களின் பயண அளவில் 55% ஆக மீண்டுள்ளது. 290% வாடிக்கையாளர்கள் உள்நாட்டுப் பயணத்தையும், 60% வாடிக்கையாளர்கள் வெளிநாட்டு பயணத்தையும் விரும்புகின்றனர். எக்ஸ்போ 2020 துபாயின் காரணமாக, சென்னை வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான சுற்றுலா தளங்களாகிய மாலத்தீவு, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், துருக்கி, எகிப்து, ரஷ்யா மற்றும் துபாய் ஆகிய இடங்களுக்கான பயணதேவை மிகவும் அதிகரித்துள்ளது.
விடுமுறை கால வர்த்தகத்தில் கூடுதலாக திருமணம் மற்றும் தேனிலவு பயணங்கள் அதிகரித்துள்ளதாக தாமஸ்குக் இந்தியா சுட்டிகாட்டுகிறது. மேலும், சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டு கல்வியில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர் மற்றும் தாமஸ்குக் இந்தியா அந்த காலகட்டங்களில் அவர்களுக்கு மிகச்சிறப்பான தனிமைப்படுத்தல் தொகுப்புகளை வழங்கியுள்ளது. தாமஸ்குக் இந்தியாவின் விரிவான தடம் சென்னை முழுவதும் 11இடங்களில் (4 நேரடி அலுவலகங்கள் மற்றும் 7 கிளை நிறுவனங்கள்) பரவியுள்ளதுடன் சென்னை அருகிலுள்ள பகுதிகளுக்கும் இந்த அலுவலகங்கள் வசதியான மையமாக விளங்குகிறது..
சென்னை பயண போக்குகள்: தாமஸ் குக் இந்தியாவின் கணக்கெடுப்பு சென்னையின் நுகர்வோர் நடத்தை மற்றும் பயண போக்குகளை வெளிப்படுத்தியுள்ளது.
வலுவான பயண தேவைகள்: சென்னையில் இருந்து 70% க்கும் அதிகமானோர் 2021 இல் பயணம் செய்ய ஆர்வமாக உள்ளனர்.
சர்வதேச / உள்நாட்டுபயணிகளின் விருப்பமான இடங்கள்:
· துபாய், அபுதாபி, மாலத்தீவு, மொரிஷியஸ், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா, அமெரிக்கா., ரஷ்யா மற்றும் ஐஸ்லாந்து ஆகிய சர்வதேச இடங்களை 65% பேர் விரும்புகின்றனர்.
· அந்தமான், காஷ்மீர், ஹிமாச்சல், ராஜஸ்தான் மற்றும் கோவா ஆகிய உள்நாட்டு இடங்களை 75% பேர் விரும்புகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த மக்கள் லடாக்–காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் பைக்கிங் போன்ற வெளிப்புறப் பயணங்களையும், அந்தமானில் சீகார்டிங் மற்றும் ஸ்நோர்கெலிங் போன்ற நீர் விளையாட்டுகளையும், மலை பாங்கான இடங்களில் தேயிலை / காபி தோட்டங்கள், வில்லாக்கள் / ரிசார்ட் தோட்ட பங்களா போன்ற தனித்துவமான தங்குமிடங்களையும், மணாலியின் ஆப்பிள் தோட்டங்களில் மதிய உணவு போன்றவற்றை விரும்புகின்றனர், மேலும் குளிர்கால விடுமுறை பயணம் மற்றும் கிறிஸ்துமஸ் கால பயணங்களில் சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் அல்லது ரஷ்யாவின் லாப்லாண்ட் & நார்தர்ன்லைட்ஸ், நைல் கப்பல் பயணம், கப்படோசியா (துருக்கி) மற்றும் எக்ஸ்போ 2020 துபாய் ஆகிய. இடங்கள் விருப்ப தேர்வாக உள்ளன.
பயண தேவையை வலுவாக்கும் முக்கிய பிரிவுகள்: பயண தேவையை வலுவாக்கும் முக்கிய பிரிவுகளாக குடும்ப சுற்றுலா, தேனிலவு, இளம் தொழில் வல்லுநர்கள், வர்த்தக சங்கங்கள், வணிகம் & பி – பொழுதுபோக்கு மற்றும் ஆன்மீக சுற்றுலா ஆகியவை உள்ளன.
பயணத் தோழர்கள்: சென்னையைச் சேர்ந்த 55% வாடிக்கையாளர்கள் குடும்பம் மற்றும் உறவினர்களுடணும், 20% பேர் நண்பர்கள் சக ஊழியர்களுடனும், 5% பேர் தனியாக பயணம் செய்வதையும் விரும்புகின்றனர்.
2021ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சுற்றுலா துறையின் வளர்ச்சியில் எக்ஸ்போ 2020 துபாய் முன்னணியில் உள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் பயண தேவையை துரிதமாக செயல்படுத்த, இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட பயணச்சீட்டு மறு விற்பனையாளர்களான தாமஸ் குக் இந்தியா ரூ. 52,000 (வான் வழி விடுமுறைபயணம்) மற்றும் ரூ. 28,000 (தரைவழி போக்குவரத்து மட்டும்) போன்ற சிறப்புதிட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பண்டிகை காலத்திற்கான சிறப்பு சலுகைகள்: குறிப்பிட்ட சில இந்திய மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு தாமஸ் குக் இந்தியா கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது, அதில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் மற்றும் ஆரம்பகால சலுகையாக, குறிப்பிட்ட சில ஐரோப்பா சுற்றுப்பயணங்களில் ஒரு குடும்பத்திற்குரூ .60,000 ஆகவும், ரூ .10,000 மதிப்புடைய தாஜ் வவுச்சர்களுடன் 10 நாட்களுக்கான விரிவான பயணத்திற்கான பயணவிரிவுரை போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை தாமஸ் குக் இந்தியா அறிவித்துள்ளது,
தாமஸ் குக் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் பொழுதுபோக்கு பயண பிரிவின் துணைத்தலைவர் திரு. சந்தோஷ்கண்ணா கூறுகையில், “சென்னை வாடிக்கையாளர்களில் 70% பேர் 18 மாதங்களுக்குப் பிறகு தங்கள் வீடுகளை விட்டு புதிய பயணங்களை மேற்கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியா மற்றும் மாலத்தீவுகள் முதன்மையான இடங்களாக இருந்தாலும், ஐரோப்பா, துருக்கி மற்றும் எக்ஸ்போ 2020 துபாய் ஆகிய இடங்கள் குடும்பங்கள், தம்பதிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. 2021ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சுற்றுலாதுறையின் வளர்ச்சியை துரிதப்படுத்த, கவர்ச்சிகரமான விலையுயர்ந்த பண்டிகை மற்றும் குளிர்கால சுற்றுப் பயணங்கள், எஸ்கார்ட் குழு சுற்றுப்பயணங்கள் உட்பட – ஒன்று வாங்கினால் – ஒன்று இலவசம், குடும்ப சுற்றுலா பயண தள்ளுபடிகள், ஆரம்பகால சிறப்பு சலுகைகள் போன்ற பல சிறந்த சலுகை திட்டங்களை நாங்கள் தொடங்கியுள்ளோம் என்று கூறினார்.
முக்கியமாக, எங்கள் அனைத்து சலுகைகளும் அப்போலோ கிளினிக்குகளுடன் இணைந்து, டிராவ்ஷீல்டுடன் – விரிவான பாதுகாப்பு அர்ப்பணிப்பு மற்றும் உறுதி செய்யப்பட்ட பாதுகாப்பான பயணத்திட்டமாக கீழ்கண்டவற்றை உறுதி செய்கின்றன..
· தடுப்பூசி போடப்பட்ட பயண ஆலோசகர்கள் மற்றும் நேரடி தொடர்பற்ற முன்பதிவு
· இலவச மறு திட்டமிடல் & ரத்து செய்தல்
· 24 மணி நேரமருத்துவ உதவியுடன் கோவிட் காப்பீடு
· தடுப்பூசி ஏற்ற மற்றும் கோவிட் தொற்று அல்லாத சகபயணிகள்
· கோவிட் தொற்று அல்லாத வாகன ஓட்டிகள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள்
சுத்திகரிக்கப்பட்ட அறைகள் & வாகனங்கள்