SAREGAMA & NOISE and GRAINS இணைந்து வழங்கும் “என்ன வாழ்க்கடா” ஆல்பம் பாடல் வெளியீடு!

[9:32 AM, 9/26/2021] Aa Husband: SAREGAMA & NOISE and GRAINS நிறுவனங்கள் இணைந்து, ரக்‌ஷன் சுனிதா, ஸ்வஷ்திஸ்டா மற்றும் GP முத்து ஆகியோர் நடிப்பில் “என்ன வாழ்க்கடா” ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது. இப்பாடலை டாங்க்லி இயக்கியுள்ளார். நேற்று 23.09.2021 மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் தங்கள் சமுக வலைத்தள பக்கம் மூலம் இப்பாடலை வெளியிட்டனர்.

தென்னிந்தியாவில் SAREGAMA Originals உடைய முதல் ஆல்பம் பாடலாக இப்பாடல் வெளியாகிறது. இப்பாடலின் அறிமுக விழா நேற்று பத்திரைக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைத்துறையை சார்ந்த முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர். அனைவர் முன்னிலையில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா இப்பாடலை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் SAREGAMA நிறுவனம் சார்பாக B R விஜயலக்‌ஷ்மி பேசியதாவது

SAREGAMA இந்தியாவின் பழமையான, மிகவும் பெருமைமிக்க நிறுவனம். இந்நிறுவனம் மூலம் தொடர்ந்து புதிய திறமைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். புதிதாக SAREGAMA Originals எனும் அமைப்பு மூலம், தற்போது புதிய இசை திறமைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். முன்பு ஒரு நிகழச்சிக்காக ஏ ஆர் ரஹ்மான் பள்ளியில் இருந்து இந்த குழுவை மும்பைக்கு அழைத்து போயிருந்தோம், அப்போது இவர்கள் செய்த கலாட்டா மறக்க முடியாதது. இப்போது கணேசன் முதலான அதே குழு, SAREGAMA Originals உடைய முதல் பாடலை செய்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சி. இப்பாடலுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகை ஐஷ்வர்யா பேசியதாவது…

SAREGAMA விஜயலக்‌ஷ்மி இந்தியாவில் முதல் பெண் கேமராமேனாக இருந்தவர். அவரது இயக்கத்தில் நான் நடித்திருக்கிறேன் மிகுந்த திறமை வாய்ந்தவர். சுனிதா, ஸ்வஷ்திஸ்டா நன்றாக டான்ஸ் ஆடுவார்கள் என்று தெரியும், ஆனால் பாட்டை பார்த்த பிறகு தான் ரக்‌ஷனுக்கு இந்த அளவு ஆடத்தெரியும் என்பது தெரிந்தது. எல்லோரும் நன்றாக செய்துள்ளார்கள். பாடல் அற்புதமாக வந்துள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

பாடலாசிரியர் A.PA. ராஜா பேசியதாவது…

குட்டிப்பட்டாசு பாடலுக்கு பிறகு, நான் செய்யும் துள்ளலான இரண்டாவது பாடல் இது. இப்பாடலில் பெண் பித்தனாக நாயகனை சித்தரிக்கவில்லை, ஒரு ஜாலியான பாடலாகத்தான் இதை உருவாக்கியுள்ளோம் ஏதும் தவறாக எண்ண வேண்டாம். பாடலை பாருங்கள் பிடிக்கும். இந்த பாடலுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

பாடகர் பென்னி தயாள் பேசியதாவது…

இண்டிபெண்டண்ட் ஆல்பங்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். எப்போதுமே இண்டிபெண்டட் ஆல்பங்கள் பாடல்கள் பாட அதிக முக்கியத்துவம் அளிப்பேன். கணேசன் முதலான குழுவினர் என்னை இப்பாடலுக்கு அணுகியதற்கு நன்றி. GPமுத்து அண்ணா உங்கள் காமெடி வீடியோ நிறைய பார்ப்பேன். என்னை பார்த்தால், நான் அப்படிபட்ட வீடியோக்கள் பார்ப்பது போல் தெரியாது ஆனால் காமெடி வீடியோக்கள் எல்லாமே பார்ப்பேன். SAREGAMA நிறுவனத்துடன் இந்தியில் நிறைய பாடல்கள் இணைந்து பணியாற்றியுள்ளேன். தமிழில் இணைந்து வேலை செய்தது மிகுந்த மகிழ்ச்சி.

இசையமைப்பாளர் S.கணேசன் பேசியதாவது…

எனக்கு வாய்ப்பு தந்த NOISE and GRAINS குழுவிற்கு நன்றி. டோங்கிலி என்னை தேர்ந்தெடுத்து, வாய்ப்பளித்ததற்கு நன்றி. இந்த ஆல்பம் பாடலை டால்பி டிஜிட்டலிலும் பண்ணியுள்ளோம் கேட்டுப்பாருங்கள், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் டாங்க்லி ஜம்போ பேசியதாவது…

இளைஞர்கள் தினசரி வாழ்வில் சந்திப்பதை தான் பாடலாக செய்தோம், புதிதாக எதுவும் செய்யவில்லை. இந்த பாடலை குழுவாக இணைந்து செய்துள்ளோம். இதில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. S.கணேசன் இசை அட்டகாசமாக இருந்தது. பென்னி தயால், விருஷா இப்பாடலை பாடியுள்ளனர். அபு மற்றும் சால்ஸ் நடன அமைப்பு செய்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார் எல்லோருக்கும் என் நன்றிகள்.

GP முத்து பேசியதாவது…

இந்த பாடலில் டான்ஸ் ஆடியது சந்தோஷமாக இருக்கிறது. காட்டில் கிடந்து லெட்டர் படித்தவனை டான்ஸ் ஆட வைத்த SAREGAMA வுக்கு நன்றி. டிக்டாக் போனபோது நிறைய வருத்தப்பட்டேன். ஆனால் மக்கள் எனக்கு நல்ல வாய்ப்பு அளித்துள்ளார்கள். இந்த பாடலுக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. இப்பாடலை பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்

நடிகை ஸ்வஷ்திஸ்டா பேசியதாவது..

இந்த பாடல் முதலில் கேட்ட போதே மிகவும் பிடித்திருந்தது. பாடலின் தாளம் இசை எல்லாமே பிடித்திருந்தது. ரக்‌ஷனை இந்த செட்டில் தான் முதன் முதலில் பார்த்தேன். செட்டையே கலகலப்பாக வைத்திருந்தார…
[9:32 AM, 9/26/2021] Aa Husband: அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் P பிள்ளை அவர்களின் தயாரிப்பில்

தமிழில் பிரபுதேவா நடிக்கும் மை டியர் பூதம், ஜல்சா,பிளாஷ்பேக், அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ரவுடி பேபி

மலையாளத்தில் மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கும் ராம்,

கன்னடத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் தர்ஷன் நடிக்கும் ஒரு பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தை தொடர்ந்து

80களின் கனவுக்கன்னி சில்க் ஸ்மிதாவின் 25வது நினைவு நாளான இன்று “சில்க்” என பெயரிடப்பட்டு ஒரு திரைப்படம் தொடங்கப்பட்டிருக்கிறது முன்னணி கதாநாயகனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்க படத்தில் கதாநாயகனுக்கு நான்கு ஜோடிகள் நான்கு கதாநாயகிகளின் தேர்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

வழக்கு எண் 18/9 தனி ஒருவன் திரைப்படங்களின் படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார், இது ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp