பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் – ரிச்சர்ட் மேடன் ஆகியோரின் நடிப்பில் தயாரான ‘சிட்டடெல்’

பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் – ரிச்சர்ட் மேடன் ஆகியோரின் நடிப்பில் தயாரான ‘சிட்டடெல்’ எனும் இணையத் தொடரின் பிரத்யேக காட்சி துணுக்குகள், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற SXSW வில் நடைபெற்ற சிறப்பு விழாவில் ப்ரைம் வீடியோ அறிமுகம் செய்தது.

நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், அமேசான் மற்றும் MGM ஸ்டுடியோவின் தலைவரான ஜெனிபர் சல்கே ஆகியோர் SXSWல் நடைபெற்ற சிறப்பு விழாவில் கலந்துகொண்டனர். இதன் போது உலகளாவிய உள்ளடக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சிட்டடெல் எனும் புதுமையான புலனாய்வுத் தொடர்களைப் பற்றிய ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது.

கலிபோர்னியா—மார்ச் 11, 2023—இன்று, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி-ஸ்பை த்ரில்லர் ‘சிட்டடெலுக்கான பிரத்யேக காட்சித்துணுக்குகளையும், இந்த இணையத் தொடர் குறித்த புதிய கலை வடிவத்தையும் அமேசான் ப்ரைம் வீடியோ அறிமுகப்படுத்தியது. இரட்டையர்களான ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் நடித்த தொடரின் வீடியோ காட்சி, அமேசான் மற்றும் எம்ஜிஎம் ஸ்டுடியோவின் தலைவரான ஜெனிபர் சால்கேவுடன் சோப்ரா ஜோனாஸ் கலந்து கொண்டதுடன். கலகலப்பான SXSW முக்கிய உரையாடலிலும் பங்கேற்றனர்.

சோப்ரா ஜோனாஸ் மற்றும் சால்கே ஆகியோர் ஹாலிவுட்டில் அடுத்த தலைமுறை பெண்கள், உலகளாவிய உள்ளடக்க கண்டுபிடிப்புகள் குறித்து விவாதித்தனர். இதனுடன் சிட்டடெலில் சோப்ரா ஜோனாஸின் முழுமையான ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தனர். சிட்டடெலின் முதல் சீசன் ஆறு எபிசோட்களைக் கொண்டுள்ளது, இரண்டு அத்தியாயங்கள் பிரைம் வீடியோவில் ஏப்ரல் 28 முதல் ஒளிபரப்பாகிறது, மேலும் வாரந்தோறும் ஒரு எபிசோட் என மே 26 தேதி வரை வெளியாகவிருக்கிறது. ருஸ்ஸோ பிரதர்ஸின் ஏஜிபிஓ மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெய்ல் ஆகியோரால் தயாரிக்கப்பட்டஇந்த அதிரடி இணையத் தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் நடித்துள்ளனர். உலகளவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் சிட்டடெல் கிடைக்கும்.

சிட்டடெல் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் திரையிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp