நம்மில் பெரும்பாலானோர் ஜோதிடத்தை நம்பி வாழ்க்கையை ஓட்டுவது உண்டுதான்.. ஆனால் இதுவரை கேள்விபடாத புது வகையிலான கதை.. அதாவது தன் பொண்ணுக்கு திருமணம் ஆகப் போகுது என்று ஜோதிடர் ஒருவர் சொன்னதை நம்பி தேதியை முடிவு செய்து பந்தல்காரர் முதல் சமையல்காரர் வரை புக் செய்துவிட்டு மாப்பிள்ளை தேடும் ஒரு தாயின் கதை இது, முற்றிலும் புதுமுகங்கள் பலரை தீபா மட்டுமே கொஞ்சம் அறிமுகமான முகம். முழுக்க ஒரு புதிதான திரைக்கதையில் சிரிக்க சிரிக்க கதை சொல்ல முயன்றிருக்கிறார்கள் அதில் பாதிக்கிணறு தாண்டியுமிருக்கிறார்கள்.

நான்கு இளைஞர்களும் அவர்களின் வாழ்க்கையும் தான் கதை. அந்த நான்கு இளைஞர்களும் நம் வாழும் எளிய வாழ்க்கையுடன் தொடர்பு படுத்தி கொள்ளும்படி இருப்பது அழகு. நம் வாழ்வில் நாம் தினமும் நடக்கும் சம்பவங்களை, இளைஞர்களை திரையில் பார்ப்பது போன்று இருப்பது படத்திற்கு மிகப்பெரும் பலம்.

திரைக்கதை ஒரு வித்தியாசமான உணர்வை தருகிறது. எளிமையான சம்பவங்கள் எதிர்பாராத திருப்பங்கள் என்று நெருடல் இல்லாமல் சம்வங்களைக் கோர்த்து கவர்கிறார்கள்.

நான்கு இளைஞர்களின் நடிப்பும், தீபாவின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.

நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள் ஆனால் அனைவரிடமும் ஒரு அமெச்சூர் நடிப்பு இருக்கிறது. அது திரையில் படத்தை முழுமையாக ரசிக்க விடாமல் செய்கிறது. எல்லா காட்சிகளிலும் வசனங்கள் வழவழவென இழுத்து கொண்டே செல்வது கொஞ்சம் எரிச்சல்.

இயக்குநர் திரைக்கதையில் அட்டாகசமாக உழைத்திருக்கிறார். அதை உருவாக்கிய விதத்தில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இசை சில இடங்களில் கவர்கிறது சில இடங்களில் எரிச்சலை தருகிறது. ஒளிப்பதிவு படத்தின் பல காட்சிகளில் தொலைக்காட்சி தொடர் உணர்வை தருகிறது. மேக்கிங்கில் இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் ஒரு சிறப்பான சினிமாவை தந்திருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *