“செங்களம்” வலைத்தொடர் விமர்சனம்

அரசியலில் நண்பன் என்ற சொல் எவ்வளவு ஆபத்தானது என்று கூறும் படம்தான் “செங்களம்”
விலங்கு அயலி என்ற இரண்டு தரமான வலைத்தொடர்களை தந்த ஜீ 5 தங்களது அடுத்த படைப்பாக செங்களம் அரசியல் பின்னணி கொண்ட வலைத்தொடரை வெளியிட்டுள்ளது
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு கருவேலம் காட்டுக்குள் தொடங்கும் கதையானது அங்கு மூன்று பேர் அந்த மாவட்டத்தில் பிரபல அரசியல்வாதிகளை கொன்றுவிட்டு பதுங்கி இருக்கும் காட்சியுடன் தொடங்குகிறது செங்களம்
அவர்கள் யார் யாரெல்லாம் கொலை செய்கிறார்கள் ஏன் இவ்வளவு பெரிய விஷயம் செய்கிறார்கள் என்பதை அரசியல் பரபரப்புடன் தந்திருக்கிறார் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் விருதுநகர் மாவட்டத்தில் 40 ஆண்டுகளாக பரம்பரையாக சேர்மனாக இருந்து வரும் மூன்றாவது தலைமுறையை சேர்ந்த பவன் இவருக்கு இரண்டாவது மனைவியாக வரும் வாணி போஜன் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து வியப்படையும் சாதாரண மருமகளாக வீட்டிற்குள் நுழைகிறார்
ஒரு கட்டத்தில் பவன் கொல்லப்பட சேர்மன் தேர்தலுக்கு வரும் இடைத்தேர்தலில் வாணி போஜன் எவ்வாறு சேர்மேனாக வருகிறார் என்பதே கதை
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் மக்களுக்கு நல்லதை செய்து நல்ல பெயர் சம்பாதிக்கும் நடிப்பிலும் நல்ல பெயர் சம்பாதித்திருக்கிறார் வாணி போஜன்
இவருக்கு துணையாக வரும் இவரது தோழி தோழியின் சகோதரனாக கலையரசன் இந்த அரசியல் பயணத்தில் தனக்கு இழைக்கப்படும் துரோகத்தால் கோபம் கொண்டு அந்த துரோகத்திற்கு காரணமானவர்களை திட்டம் போட்டு தனது தம்பிகளுடன் சேர்ந்து பழி தீர்க்கும் கதாபாத்திரத்தில் கண்களில் வெறியுடன் ஆழமான நடிப்பை தந்திருக்கிறார் கலையரசன்
எம்எல்ஏவாக வரும் வேலராமமூர்த்தி எம்எல்ஏவாக இருந்தும் அந்த சேர்மன் குடும்பத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற ஆதங்கம் கோபம் அதற்கு செய்ய முயற்சித்தனம் என்று கண்களில் வெறுப்பை அருமையாக உமிழ்ந்திருக்கிறார்

எதார்த்தமான அம்மாவாக விஜி சந்திரசேகர், வாணி போஜனின் கணவராக பவன், போலீஸ் ஏட்டாக ‘சூப்பர் குட்’ சுப்ரமணி, அரசியல்வாதிகளாக வருகிற கஜராஜ், அன்னபாரதி, எம்.எல்.ஏ.வின் பிஏ வாக பக்ஸ், காவல்துறை உயரதிகாரியாக ஜீவாசங்கர், என ஏகப்பட்ட நடிகர் நடிகைகள்… அவர்கள் மட்டுமல்லாது சின்னச் சின்ன கேரக்டர்களில் வருபவர்கள் கூட தங்களுக்கு அளிக்கப்பட்ட பாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி நடிக்காமல் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்
நிஜ அரசியலில் தேர்தல் களம் போல் பரபரப்பாக பற்றி எரியும் திரைக்கதைக்கு தரண்குமாரின் இசை மேலும் எரிய வைக்கிறது மேலும் நிகழ் காலம் இறந்த காலம் என்று மாறி மாறி வரும் திரைக்கதைக்கு காலத்திற்கு ஏற்றார் போல் வரும் இசை எந்தெந்த சூழ்நிலையை அருமையாக மனதில் பதிய வைக்கிறது மேலும் கால மாற்றத்திற்கு ஏற்றார் போல் செய்திருக்கும் எடிட்டிங் மிகவும் அருமை ஒவ்வொரு காட்சியையும் தொய்வில்லாமல் எடுத்து செல்கிறது
கதை களத்திற்கு ஏற்றால் போல் ஒரு மொழிப்பதிவு விருதுநகர் மாவட்டத்தின் அழகையும் கருவேலங்காட்டின் அழகையும் மிகவும் அருமையாக எடுத்துக்காட்டுகிறார் ஒளி பதிவாளர்

கதை கதைக்களம் திரைக்கதை மேலும் இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் அரசியல் சார்ந்த விறுவிறுப்பிற்கும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு இயக்குனர் வைத்திருக்கும் பெயர்கள் மிகப் பொருத்தமாக கம்பீரமாக இருக்கிறது சில பெயர்கள் சில அரசியல்வாதிகளை நினைவு படுத்தினால் அதுவும் நிதர்சனமாகவே இருக்குமானால் அதற்கு இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரனின் துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும்
இதெல்லாம் அரசியலில் சாத்தியமா இதெல்லாம் இப்படி எல்லாம் நிகழுமா என்ற கேள்விகள் இருந்தாலும் அரசியல் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தால் இந்த படம் விறுவிறுப்பாக இருக்கும்

மொத்தத்தில் செங்களம் அரசியலில் பாயும் துரோகத்தின் ரத்தக்களம்

இயக்குனரின் துணிச்சலான திரைக்கதைக்காக


ரேட்டிங் 4.5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
Facebook
YouTube
YouTube
LinkedIn
Share
WhatsApp