கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையவழி தமிழ் வகுப்புகள்

கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் 10 ஆண்டுகளாக மொழிக்கணிப்பீடு மற்றும் மொழி இலக்கியத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை நிகழ்த்தி வருகிறது. இந்த அறக்கட்டளையானது, புதிய மொழிக் கருவிகள் மற்றும் செயலிகளை வடிவமைப்பதோடு, பயில் வகுப்புகள் மூலம் இணைய வழியில் தமிழ் மொழியைத் தனித்துவமான அணுகுமுறையுடன் கற்பித்து வருகிறது. இவ்வகுப்புகளில், உலகம் முழுவதுமுள்ள தமிழார்வம் கொண்ட மாணவர்கள், வயதுவரம்பில்லாமல் ஒன்றாகச் சேர்ந்து தமிழ் கற்று வருகின்றனர்.

இணைய வழியில் நேரடி அமர்வுகளின் மூலம் கற்பிக்கப்பட்ட இப்பயில் வகுப்புகள், இப்போது பதிவு செய்யப்பட்ட காணொளிகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் உலகில் எங்கிருந்தும், எந்நேரத்திலும், எவ்விடத்திலும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தமிழைக் கற்கவியலும்.

முதற்கட்டமாக இந்த உலகத் தாய்மொழி நாளில், இரண்டு பயிற்சி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

  • தமிழில் எழுத/ படிக்க – எழுது வகுப்பு
  • ஐயன் வள்ளுவரின் குறளமுதத்தைப் பருக – குறள் வகுப்பு.

எளிய நடைமுறை விளக்கங்களுடன் பாடல்கள், கவிதைகள், விளையாட்டுகள் மூலம் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான சேர்க்கை இப்போது payil.karky.in என்ற இணையதளத்தில் உள்ளது.

உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு இம்மொழியைக் கொண்டு சேர்க்கும் வகையில் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம், மேலும் பல வகுப்புகளைத் தொடங்க ஆர்வம் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp