உங்கள் குழந்தையின் சுகாதாரத்தை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது

கோவிட்-19 தொற்றுநோய்,மனிதர்கள் முன்பை விட எவ்வளவு சரியான அடிப்படையான சுகாதாரப் பழக்கங்களோடு இருக்க வேண்டும் என்பதை அதிகமாக வலியுறுத்தியது. இப்போதெல்லாம் மக்கள் தங்கள் சுகாதாரத்தில் முன்னெப்போதையும் விட அதிக விழிப்புணர்வுடன் உள்ளனர்.இதில் குழந்தைகளுக்கென்று வரும்போது சரியான சுகாதார பராமரிப்பு மிகவும் முக்கியமானது. அவர்களை சுத்தமாகஉம் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள கூடுதல் கவனம் மற்றும் கவனிப்பு தேவைப்படுகிறது.ஆனால் இந்தத் தேவைகளைப் பின்பற்றி உங்கள் குழந்தை பாதுகாப்பான சூழலில் வளர்க்கப்படுவதை உறுதி செய்வது சவாலானதாக இருக்கலாம். Mylo(மைலோ )பின்வரும் எளிய நடைமுறைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறது.இது உங்கள் குழந்தைக்கு சிறந்த சுகாதாரமான பராமரிப்பை வழங்க உங்களுக்கு உதவும்.
கை சுத்தம் :
முதல் மற்றும் முக்கியமாக ஒன்று,நீங்கள் எப்போதும் உங்கள் குழந்தையை சுத்தமான கைகளால் கையாள வேண்டும். உங்கள் குழந்தையை நீங்கள் வைத்திருக்கும் போது, உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள்.ஏனெனில் எந்த அசுத்தங்களும் அவர்களை அண்டுவதை நீங்கள் விரும்புவதில்லை. குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தி வளர்ந்து வருகிறது மற்றும் இன்னும் நோய்த்தொற்றுகளை சமாளிக்க போதுமானதாக நோயெதிர்ப்பு சக்தி இல்லை. உங்கள் கைகளை தவறாமல் கழுவுவது மட்டுமல்லாது உங்கள் குழந்தையின் கைகளை சுத்தமாக வைத்திருப்பதும் முக்கியம். குழந்தைகளுக்கு பலவிதமான பொருட்களை எடுத்து அவற்றை வாயில் போட்டு அழுக்கு மற்றும் நோய்க்கிருமிகளுக்கு தங்களை வெளிப்படுத்தும் திறன் உள்ளது. அவர்களின் கைகளை சுத்தம் செய்யும் போது வழக்கமான சோப்புகளால் தேய்த்து கழுவும் அளவிற்கு அவர்களின் தோல் கடினமானது இல்லை. அது மிகவும் மென்மையானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குழந்தை துடைப்பான்களைப் பயன்படுத்துதல் :
குழந்தைகளுக்கான துடைப்பான்கள் மற்றும் சோப்புகள் குழந்தைகளின் தோலுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட,குழந்தையை மென்மையாக சுத்தப்படுத்தும் அனுபவத்தை அளிக்கின்றன. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு துடைப்பான்கள் பயன்படுத்தப்படலாம்.ஆனால் மைலோவின் மென்மையான குழந்தை துடைப்பான்கள் மிகவும் மென்மையான தீவிர உணர்திறன் கொண்ட தோலுக்காக வடிவமைக்கப்பட்டவை மட்டுமே.மைலோவில்,ஆல்கஹால் இல்லாத, நீர் சார்ந்த துடைப்பான்களை வடிவமைத்துள்ளோம் மேலும் இயற்கையான ஈரப்பதமூட்டும் முகவர்களான கிளிசரின், வைட்டமின் ஈ, தேங்காய் எண்ணெய், கற்றாழை மற்றும் வேம்பு சேர்த்து சருமத்திற்கு மிகவும் இனிமையாக ஊட்டமளிக்கும். இவை எரிச்சலூட்டாதவை மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்கள் கைகளை சுத்தம் செய்ய அல்லது உங்கள் ஒப்பனைகளை(மேக்கப்பை)அகற்ற பயன்படுத்தலாம். நீங்கள் உங்கள் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறும்போது ​​காரில், உணவகத்தில் அல்லது சாலையில் ஏதேனும் சிந்தினாலோ அல்லது அசுத்தங்கள் ஏற்பட்டால் அதைக் கவனித்துக்கொள்வதற்கு கையில் துடைப்பான்கள் இருப்பது மிகவும் அவசியம்.
பொம்மைகளை சுத்தமாக வைத்திருத்தல் :

உங்கள் குழந்தை பொருட்களை எடுத்து வாயில் வைப்பதை உங்களால் தடுக்க முடியாது என்பதால் அவர்கள் பயன்படுத்தும் அனைத்தையும் சுத்தப்படுத்துவது மிகவும் அவசியம். குறிப்பாக பொம்மைகளை தரையில் போட்டு விளையாடுவதால் தரையில் இருக்கும் அசுத்தங்கள் பொம்மைகளை அழுக்காகிவிடும். கடினமான பொம்மைகளை சோப்பினால் கழுவலாம் அதே சமயம் மென்மையானவற்றை வாஷிங் மெஷினில் துவைக்கலாம்.
டயபரை மாற்றுதல் :

உங்களுடைய கைகள் ,உங்கள் குழந்தையுடைய கைகள் மற்றும் பொம்மைகளை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாது டயபர் மாற்றும் பொழுதும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தையின் வசதிக்காக மட்டுமல்லாமல்,அவர்களின் சுகாதாரத்திற்காகவும் அதை அடிக்கடி செய்யப்பட வேண்டும். டயபரினால் ஏற்படும் சொறி மற்றும் தொற்றுகளுக்கு காரணம் அவை அழுக்கடைந்த பிறகும் நீண்ட காலத்திற்கு மாற்றாமல் அப்படியே வைத்திருப்பதால் இருக்கலாம். அழுக்கடைந்த டயப்பர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.ஒவ்வொரு 4-5 மணி நேரத்திற்கும் ஒருமுறை துணி டயப்பர்களை மாற்ற வேண்டும். தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லாத மற்றும் சுவாசிக்கக்கூடிய துணியால் ஆனது என்று சான்றளிக்கப்பட்ட துணி டயப்பர்கள் உங்கள் குழந்தையின் தோலைப் பாதுகாக்கின்றன. மைலோவின் மீண்டும் பயன்படுத்தக் கூடிய துணி டயப்பர்((Mylo’s Reusable Cloth Diaper)என்பது உங்கள் குழந்தையை சுத்தமாகவும் வசதியாகவும் வைத்திருக்கக் கூடிய டயப்பரில் ஒன்றாகும்.
குளியல் மற்றும் வாய்வழி சுகாதாரம் :
உங்கள் குழந்தையை குளிப்பாட்டும் போது, ​​குழந்தைகளுக்கு தினமும் சோப்பு போட்டு கழுவ வேண்டிய அவசியமில்லை. உங்கள் குழந்தையை வாரத்திற்கு மூன்று முறை வெதுவெதுப்பான நீர் மற்றும் மென்மையான சோப்புகள் மற்றும் ஷாம்புகளால் குளிக்க வைக்கவும். உங்கள் குழந்தையின் வாய் ஆரோக்கியத்திற்கு ஒவ்வொரு உணவிற்கு பிறகும் ஈறுகளை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். நீங்கள் இப்போது உங்கள் குழந்தைக்கு பல் துலக்க முடியாது என்பதால், உங்கள் குழந்தையின் ஈறுகளைச் சுற்றியுள்ள அதிகப்படியான உணவைத் துடைக்க சுத்தமான மற்றும் ஈரமான பருத்தி துணி அல்லது விரல் தூரிகையைப் பயன்படுத்தவும். உங்கள் குழந்தையின் வாய்வழி ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் பிளேக் ஏற்படலாம்.

இந்த அடிப்படை வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது உங்கள் குழந்தையைப் பாதுகாப்பதற்கும், அவர்களை சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழலில் வளர்ப்பதற்கும் உதவும். உங்கள் பிறந்த குழந்தைக்கு நல்ல சுகாதார பராமரிப்பு வழங்குவது கடினமான செயலாக இருக்கக்கூடாது. இயற்கையான பொருட்களால் செய்யப்பட்ட மென்மையான பொருட்களைக் கொண்டு உங்களையும், உங்கள் இடத்தையும், உங்கள் குழந்தையையும் சுத்தமாக வைத்திருந்தால், நீண்ட காலத்திற்கு நீங்களும் உங்கள் குடும்பமும் பலன்களைப் பெறுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp