கோவை மாநகரில் நகரியங்கள் – ஒரு பாதுகாப்பான முதலீடு

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரம் என அறியப்படும் கோயம்புத்தூர், தென்னிந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் பெரு நகரங்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. ஏறக்குறைய அனைத்து துறைகளிலும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை இம்மாநகரம் எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இம்மாநகரில் காணப்படும் வளர்ச்சியானது, அனைத்து பிரிவுகளிலும், குறிப்பாக உட்கட்டமைப்பை பொறுத்தவரை தொடர்ந்து வளர்ச்சியடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தோடு இணைந்ததாக நிலம் மற்றும் சொத்துக்களுக்கான தேவையும் அதிகரிப்பது இயல்பானதே. கோயம்புத்தூரில் அவுட்டர் ரிங் ரோடு என அழைக்கப்படும் வெளிவட்டச் சாலை சமீப காலத்தில் மிகச்சரியான காரணங்களுக்காக குடியிருப்பு மற்றும் வர்த்தக மனைகளுக்கான முதலீட்டிற்கு அதிக வரவேற்பை பெறும் அமைவிடமாக உருவெடுத்திருக்கிறது. சிறப்பான நகர வடிவமைப்பு திட்டமிடல், நேர்த்தியான போக்குவரத்து அணுகுவசதி மற்றும் குறைவான வாழ்க்கைச் செலவுகள் என பல்வேறு அம்சங்களுக்காக அறியப்படும் கோயம்புத்தூர் அதன் குடியிருப்புவாசிகளுக்கு உயர்தர வாழ்க்கை வசதிகளை வழங்குகிறது. நகரியங்கள் என அழைக்கப்படும் பெரிய அளவிலான குடியிருப்பு வளாகங்கள் மக்களின் அதிக அபிமானத்தைப் பெற்று வருகின்ற நிலையில் இம்மாநகரில் ரியல் எஸ்டேட் முதலீடுகள் அதிவேகமாக வளர்ந்து வருவதற்கான காரணங்களுள் ஒன்றாக இந்த சிறப்பான லைஃப் ஸ்டைல் வசதிகள் இருக்கின்றன என்றே கூறலாம். கேட்டட் கம்யூனிட்டி என்றும் அழைக்கப்படுகின்ற ஒரு நகரியம், எண்ணற்ற ஆதாயங்களை அதே விலையில் வழங்குகிறது. இம்மாநகரில் சமீபத்தில் முழுமையடைந்திருக்கும் இத்தகைய குடியிருப்பு வளாக செயல்திட்டங்கள், அதிக அமைதியான, சௌகரியமான வாழ்க்கையையும், மேம்பட்ட நவீன அம்சங்களையும் ஒருங்கிணைத்து, கட்டுபடியாகக்கூடிய மிதமான விலைகளில் வழங்கியிருப்பது மக்களின் கவனத்தையும், ஆர்வத்தையும் அதிக அளவில் ஈர்த்திருக்கிறது. இன்றைக்கு, சிறப்பான வாழ்விட வசதிகள் வேண்டுமென விரும்பி, விவேகமாகத் தேடுகின்ற நபர்களுக்கு பாதுகாப்பான முதலீடாகவும் மற்றும் வசிப்பிட விருப்பத்தேர்வாகவும் கேட்டட் கம்யூனிட்டி குடியிருப்பு வளாகத் திட்டங்கள் இருப்பதால், பல பிரபல மற்றும் அனுபவம் மிக்க ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனங்கள் பலவும் இத்தகைய நகரியங்களை உருவாக்கி மக்களுக்கு வழங்கி வருகின்றன. தனிப்பட்ட குடியிருப்பு வீடுகளும், சிறிய குடியிருப்பு வளாகமும் கொண்டிராத எண்ணற்ற வசதிகளோடு நிகரற்ற பாதுகாப்பையும் இத்தகைய நகரியம் வழங்குகிறது. டென்னிஸ் கோர்ட், கிரிக்கெட் பயிற்சிக்கான இடம், பல்வேறு விளையாட்டுகளுக்கான சிறு மைதானம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, நடைப்பயிற்சிக்குரிய பூங்காக்கள், பார்ட்டிகளையும், விழாக்களையும் நடத்துவதற்கான கூடங்கள், மினி தியேட்டர், கிளப்ஹவுசஸ், நீச்சல் குளம் மற்றும் இன்னும் பல சிறப்பு வசதிகள் இந்த பெரிய அளவிலான குடியிருப்பு வளாகத்தில் கிடைக்கப்பெறுகின்றன. மருத்துவ உதவி மையம், ஏடிஎம் வசதி மற்றும் நூலகம் போன்ற அத்தியாவசிய வசதிகளும் இங்கு வசிப்பவர்களின் சௌகரியத்திற்காகவும் மற்றும் அவசரநிலை நேரத்தில் குடியிருப்பு வளாகத்திற்குள்ளேயே இடம்பெறுகின்றன. பிற இடங்களில் கிடைக்காத இந்த வசதிகள் அனைத்தும், இங்கு வசிக்கும் அனைத்து நபர்களுக்கும் பராமரிப்பு கட்டணமின்றி அல்லது மிக மிகக் குறைவான கட்டணத்தில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மிகப்பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சில, முதல் சில ஆண்டுகளுக்கு கட்டணம் ஏதுமின்றி, இலவசமாகவே இத்தகைய பராமரிப்பு சேவைகளை வழங்குகின்றன. இந்த நகரிய குடியிருப்பு வளாகங்களின் சுற்றுப்புறங்களும் மற்றும் உட்புற அமைவிடங்களும் மிக நன்றாக பராமரிக்கப்படுகின்றன. ஒரு பெருநகரத்தின் பரபரப்பு, கூச்சல் மற்றும் ஒலிமாசு ஆகிய தொந்தரவுகளிலிருந்து விலகி, அமைதியான, பசுமையான வாழ்க்கை முறையை வழங்குவது நகரிய திட்டத்தின் சிறப்பை இன்னும் அதிகமாக்குகின்றன. குடியிருப்பு வளாகத்தைச் சுற்றி பசுமையான தாவரங்களும், மரங்களும் குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய மாசு பிரச்சனை குறைவாக இருப்பதை உறுதி செய்கின்றன. ஆண்டு முழுவதும் சிறப்பான பாதுகாப்பை வழங்கும் வகையில் 24*7 கேமரா கண்காணிப்பு அமைப்பின் கீழ், ஒட்டுமொத்த குடியிருப்பு வளாகமும் கொண்டு வரப்படுகிறது. பெரும்பாலான நகரிய செயல்திட்டங்கள், தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனங்களது அலுவலக அமைவிடங்களுக்கு அருகே இடம்பெற்றிருப்பதால் போக்குவரத்திற்கு செலவிடப்படும் நேரம் குறைக்கப்படுகிறது; ஆரோக்கியமான பணி – தனிப்பட்ட வாழ்க்கை சமநிலையை பணியாளர்கள் கொண்டிருப்பதற்கு இது வகை செய்கிறது. நவீனமான, தரம் உயர்த்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்பட்ட வாழ்க்கை முறையின் இந்த நகரிய வளாகத்தில் கிடைப்பதால், முதலீட்டின் மீது அதிக லாபம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது; அத்துடன் ரியல் எஸ்டேட் சந்தையில் எளிதாக மறுவிற்பனை செய்யும் வாய்ப்பும் உத்தரவாதத்துடன் இங்கு அமைந்துள்ள வீடுகளுக்கு கிடைக்கிறது. இந்திய ரியல் எஸ்டேட் சந்தையின் எதிர்காலமாக இத்தகைய நகரிய கேட்டட் கம்யூனிட்டி குடியிருப்பு வளாகங்களே இருக்கப்போகின்றன. கோயம்புத்தூர் மாநகரில் வெளிவட்டச் சாலை பகுதியில் சிறப்பான முதலீட்டிற்கு நிகரற்ற வசதிகளுடன் உருவாக்கப்படுகின்ற கேட்டட் கம்யூனிட்டி குடியிருப்புகளுக்கான மனைகள் பல கிடைக்கின்றன. வெளிவட்டச் சாலையில் முதலீடு செய்வதில் இருக்கும் வளர்ச்சிக்கான அதிக சாத்தியத்திறன் கோயம்புத்தூரில் குடியிருப்புகள் மற்றும் வர்த்தகப் பயன்பாடுகளுக்கான மனைகளுக்கு மக்களால் அதிகம் விரும்பித் தேடப்படும் அமைவிடமாக வெளிவட்டச் சாலை (அவுட்டர் ரிங் ரோடு) இருக்கிறது. அத்துடன் மிதமான விலைகளில் இந்த மனைகள் கிடைப்பது இப்பகுதியின் மதிப்பை இன்னும் உயர்த்துகின்றன. சிறப்பான வசதிகள், அமைவிடம் மற்றும் நகரின் மிக முக்கிய இடங்களுக்கு அருகிலிருப்பது ஆகியவை அவுட்டர் ரிங் ரோடில் மனைகள் வாங்குவதில் கிடைக்கக்கூடிய ஆதாயங்களுள் சிலவாகும். பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய பெருநகரங்களில் அமைக்கப்பட்ட வெளிவட்டச் சாலைகள் எப்படி மாபெரும் வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன என்பதை கருத்தில் கொள்ளும்போது, கோயம்புத்தூரிலும் வெளிவட்டச் சாலையில் செய்யப்படும் முதலீடுகள் அதேபோன்ற வெற்றி வரலாற்றைக் கொண்டிருக்கும் என்பது நிச்சயம். உட்கட்டமைப்பு மேம்பாடுகள் வரும்போது அதிகரித்த வேலைவாய்ப்புகளும், வாழ்க்கை முறை வசதிகளும் அதனோடு சேர்ந்தே தான் உருவாகின்றன. குறைந்த காலஅளவிற்குள்ளேயே, வேகமாக வளர்ந்து வரும் மாநகரின் உயிர்நாடிகளுள் ஒன்றாக இத்தகைய வெளிவட்டச் சாலைகள் மாறிவிடுவதை நீங்கள் உணர்வீர்கள். சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களிலும் வெளிவட்டச் சாலையையொட்டிய வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருப்பது அனைவரும் அறிந்ததே. பிற பெருநகரங்களில் வெளிவட்டச் சாலைகளில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பெருநிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் அருகருகே அமைந்து மாபெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கும் நிலையில் கோயம்புத்தூரின் L&T பைபாஸ் மற்றும் வெளிவட்டச் சாலைகளும் வரும் ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் எதிர்கொள்ளப்போவது இப்போதே வெளிப்படையாகத் தென்படுகிறது. கனவு இல்லத்தை அமைதியான சூழலில் உருவாக்குவது அல்லது ஒரு பிசினஸ் நிறுவனத்தை தொடங்குவது அல்லது முதலீட்டின் மீது நல்ல லாபம் பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காக இன்று முதலீடு செய்வது போன்ற பல்வேறு காரணங்களுக்காக முதலீட்டாளர்கள் இப்பகுதியில் இப்போது முதலீடு செய்வது நிச்சயம் விவேகமான செயல்பாடாக இருக்கும். இப்போது கோயம்புத்தூர் L&T பைபாஸ் மற்றும் வெளிவட்டச் சாலை அமைவிடங்கள் முதலீட்டாளர்களுக்கு அதிக கவர்ச்சிகரமான முதலீட்டு விருப்பத்தேர்வுகளுள் ஒன்றாக கோயம்புத்தூரில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
Facebook
YouTube
YouTube
LinkedIn
Share
WhatsApp