Noolagagnaaniyinbibligraphy. com என்ற இணையதளம் மூலம் தமிழ் நூல் விவரப் பட்டியல் – தமிழ் நூற்றொகைக்கான – (Tamil Bibligraphy)

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நூலகத்திற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்து நூலக ஞானி என்று போற்றப்படும் முனைவர் பா.பெருமாள் (வயது 88)
Noolagagnaaniyinbibligraphy. com என்ற இணையதளம் மூலம் தமிழ் நூல் விவரப் பட்டியல் – தமிழ் நூற்றொகைக்கான – (Tamil Bibligraphy)
ஒரு மென்பொருளை உருவாக்கி மக்களின் பயன்பாட்டிற்கு வெளியிட்டு
மக்களின் பயன்பாட்டிற்கு அர்பணித்தார்.
அரசாங்கம் செய்ய வேண்டிய இப்பணியினை தனி மனிதனாக நின்று இச்சேவையை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த இணையதள வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நீதிபதி மு.புகழேந்தி
பெருமாள் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
மதராஸ் நூலக சங்க தலைவர் முனைவர் நித்யானத்தம் நூலக ஞானி பா.பெருமாள் அவர்களின் நூலக பயணத்தில் அவர் கடந்து வந்த
பாதையை நினைவு கூர்ந்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில்
தமிழ்நாடு நூலகர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் . கோதண்டராமன், சங்க செயலாளர் முனைவர் . மாலதி மற்றும்
முனைவர் . மோ.பாட்டழகன் . சென்னை கன்னிமாரா நூலகர் முனைவர் . எஸ்.ராஜேந்திரன் , இணைய தள வடிவமைப்பாளர் , சூரிய கைலாஷ் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.