தோளில் இரு புறமும் இரு சக்கர வாகனங்களை தூக்கி நடந்து சாதனை செய்த இரும்பு மனிதர்

சென்னை தனியார் உடற்பயிற்சி நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது.இந்நிலையில் இதன் திறப்பு விழாவிற்கு வந்திருந்த இரும்பு மனிதன் என்ற கண்ணன். தோளில் இரண்டு இரு சக்கர வாகனங்களை ஒன்றாக ஒரே நேரத்தில் தூக்கி சாதனை செய்துள்ளார்.

40 வயது மற்றும் 90 கிலோ எடை கொண்ட கண்ணன் தன்னை விட மூன்று மடங்கு அதாவது எறத்தாள 270 கிலோ எடை உள்ள இரண்டு இரு சக்கர வாகனங்களை தூக்கி நடந்தார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,

மனிதன் உடற்பயிற்சி செய்வதன் அவசியம் மாற்றும் அதன் தேவையை பற்றி கூறினார்.

இந்த சாகச நிகழ்வினை மேற்கொள்ள சிறு வயதில் இருந்தே பயிற்சி எடுத்தேன். எனவே அதனால் இதில் வெற்றி கண்டேன்.ஆனால் இதனை முயற்சி செய்ய நினைப்போர் முறையான பயிற்சி இல்லாமல் இதனை செய்ய வேண்டாம்.

உடபயிற்சி மிகவும் அவசியமானது அதற்காக அதனை தொடர்ந்து செய்வது அவசியமற்றது.மேலும் கடைகளில் தெருக்களில் கிடைக்கும் துரித உணவினை உட்கொள்ளுவது தவிர்ப்பது மிகவும் நன்மை பயக்கும் ஒன்று.
யோகா போன்ற உடற்பயிற்சிகள் மனதளவில் மட்டுமே கட்டுபடுத்த இயலும் ஆனால் தினமும் உடற்பயிற்சி செய்வது மனதையும் உடலையும் சீராக வைத்திருக்க உதவும்.

பெரும்பாலும் வீட்டில் கிடைக்கும் தானியங்கள் நிறைந்த உணவினை உண்பது சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp