பூரிப்புடன் பூங்குழலி “ஐஸ்வர்யா லட்சுமி”

மூன்று மொழி ..முத்தான கதாபாத்திரங்கள்… உற்சாகத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

மீண்டும் தயாரிப்பாளராகும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

மலையாள தேசத்து நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களிடம் நற்பெயரை சம்பாதித்த உற்சாகத்தில் இருக்கிறார்.

விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இவர், ‘கார்கி’ என்ற படத்தை தயாரித்திருந்தார். இவர் தற்போது உற்சாகமாக காணப்படுகிறார்.

மகிழ்ச்சிக்கான காரணத்தை பற்றி அவரே விவரிக்கையில், ” செப்டம்பர் 30-ம் தேதி அன்று மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ வெளியானது. அதில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். இதற்கு எதிர்பாராத இடங்களிலிருந்து கிடைத்து வரும் பாராட்டுகள் என்னை உற்சாகமடைய செய்திருக்கிறது.

தற்போது ‘அம்மு’ என்ற பெயரில் தயாராகி இருக்கும் தெலுங்கு திரைப்படமொன்று அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 19ஆம் தேதி அன்று வெளியாகிறது. இதிலும் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறேன்.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி அன்று ‘குமாரி’ என்ற மலையாள படமும் வெளியாகிறது. ‘கார்கி’ படத்தைத் தொடர்ந்து, ‘குமாரி’ படத்திலும் தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறேன். இந்தப் படத்திலும் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கிறேன். முப்பது நாட்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், முத்தான மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தயாரித்து, நடித்திருக்கும் ‘குமாரி’ திரைப்படம் இதுவரை வெளிவராத ஜானர் என்றும், புராண இதிகாசம் தொடர்புடைய திரில்லர் திரைப்படம் என்றும் தகவல்கள் வெளியாகி இருப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதே எழுந்திருக்கிறது.

‘குமாரி’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதாக உற்சாகத்துடன் தெரிவிக்கும் அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகையுமான ஐஸ்வர்யா லட்சுமி, ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தில் பூங்குழலியாக நடித்ததற்கு கிடைத்த வரும் பாராட்டுக்கள் எதிர்பாராதவை என்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.

‘பூங்குழலி’, ‘அம்மு’, ‘குமாரி’ என ஒரே மாதத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து திறமையை வெளிப்படுத்தியிருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு சக கலைஞர்களும், மூன்று மொழி திரையுலகினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் ‘கட்டா குஸ்தி’ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குநர் ப்ரியா இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் அசோக் செல்வன் மற்றும் வசந்த் ரவி ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார். ‘கிறிஸ்டோபர்’ எனும் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகளாகவும், ‘கிங் ஆஃப் கோதா’ எனும் மலையாளப் படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மானின் ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp