அமிதாப் பச்சனின் பிறந்தநாள் அன்று தனது தமிழ் படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகர் ஜாவித் கான்

பொன்குமரன் இயக்கும் “மஹால்” திகில் படத்தில் நடிக்கிறார் ஜாவித் கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பிறந்தநாளை நடிகர் ஜாவித் கான் விமரிசையாக கொண்டாடினார். அமிதாப் பச்சனுடனான தன்னுடைய நட்பை பற்றி பகிர்ந்துகொண்ட ஜாவித் கான் கூறுகையில்:

அமிதாப் பச்சன் அவர்களை பற்றிய எனது ஆரம்பகால நினைவு 80களில் இருந்து துவங்கும். ‘ஒன்லி விமல்’ பிரச்சாரம் மூலம் நான் நாட்டின் தலைசிறந்த மாடலாக இருந்தபோதிலும், புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து எனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினேன்.

ஒரு நாள் அதிகாலையில் அப்ராதி கோன் இரவுப் படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பை ஃபிலிம்சிட்டியில் உள்ள மேக்கப் அறைக்கு வந்திருந்தேன். அப்போது அங்கே அமர்ந்திருந்தவரை பார்த்து நான் உறைந்து போனேன், ஏனென்றால் மேக்கப் ஏரியாவின் புல்வெளியில் அமர்ந்திருந்தது அமிதாப் பச்சன்.

அவரை கண்டதும் நான் பல்வேறு சிந்தனைகளில் தொலைந்து போனேன். ஆனால் அவரோ நாற்காலியில் இருந்து நின்று ஒரு அன்பான வணக்கம் சொல்லிவிட்டு கை குலுக்குவதற்காக அவரது கரம் நீட்டினார்.

அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு ஞாபகம் இல்லை, ஆனால் அன்று முழுவதும் நான் மயக்கத்தில் இருந்தது மட்டும் தெரியும்.

அப்பேற்பட்ட மாமனிதருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க நீங்கள் பல்லாயிரம் ஆண்டு.

திரைத்துறையில் முன்னேறி, பேய் படங்களில் பிரபலம் ஆன பிறகு, புகழ்பெற்ற ‘இந்தியா டுடே’ இதழ் வழங்கிய ‘திகில் படங்களின் அமிதாப் பச்சன்’ என்கிற பட்டத்தை நான் மிக பெரிய கௌரவமாக கருதுகிறேன்.

நடிப்பிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்த நான், ‘மஹால்’ என்னும் தமிழ் மொழி திகில் படத்தில் இப்போது நடித்து வருகிறேன்.

‘மஹால்’ படத்தை விருது பெற்ற இயக்குநர் பொன்குமரன் இயக்கியுள்ளார் மற்றும் நரேஷ் ஜெயின் தயாரித்துள்ளார்.

வேதிகா, திகங்கா மற்றும் சிஎஸ் கிஷனுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் உள்ளது.

தற்போது ‘பான் இந்தியா’ என்று ஆகிவிட்ட நிலையில், தென்னிந்திய தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp