திரௌபதி வெற்றிப் பட வரிசையில் ஓங்காரம் திரைப்படம்

ஓங்காரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. ‘அய்யன்’, ‘சேது பூமி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஏஆர்.கேந்திரன் முனியசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஓங்காரம்’. அவரே நாயகனாக நடித்திருக்கும் படத்தில், கதாநாயகியாக நடிகை வர்ஷா விஸ்வநாத் நடித்து இருக்கிறார். இவர்களுடன் ஸ்ரீதர், மதன் துரைசாமி, ஜிந்தா, முருகன், ஏழுமலையான், சிவக்குமார், டெல்டா வீரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் மோகன் ஜி, நடிகர் கஞ்சா கருப்பு , சர்வதேச விளையாட்டு வீரர் மா.ரா.சௌந்தரராஜன்,தமிழ் திரைப்பட விநியோகஸ்தர் ஜெயம் S .கோபி ,தமிழ் திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் R .K .அன்புச் செல்வன் ,அய்யன் தயாரிப்பாளர் சேகர் ராஜன் ,நடிகர் இயக்குனர் சரவண சக்தி உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர் .

அப்போது பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், ‘நடிகை நடிகர்களுக்காக தானே நாங்கள் சிரமப்படுகிறோம். நாங்கள் செய்யும் செலவு அத்தனையும் உங்களுக்காகத் தான் .ஆக படத்திற்கு மரியாதை கொடுங்கள். படத்தின் நடிகையை விட நடிகையின் அம்மாதான் ரொம்ப பிரச்சினை கொடுக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் நடிகை, ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வருவதற்கு ரூ. 1 லட்சம் கேட்டதாகவும், அதுமட் டுமின்றி பல்வேறு நிபந்தனைகளையும் விதித்ததாக கூறப்பட்டது. இதனால், அவரை வேறு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய அனுமதிக்கக் கூடாது என கே.ராஜன் பேசியிருந்தார். மேலும், பொன்னியின் செல்வம் திரைப்படம் குறித்தும் சில காட்டமான கருத்துகளை தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் பணியில் சிறந்து விளங்கி வருகிறார். ஆனால் இன்னும் திரையுலகினருக்கு இன்னும் ஏதும் செய்யவில்லை. கருணாநிதி திரைத்துறைக்காக நிறைய செய்துள்ளார். ஆகவே, அவரின் மகனான நீங்கள் உதவ வேண்டும். சின்ன திரைப்படம் தான் சினிமாவை காப்பாற்றி கொண்டிருக்கிறது.

அதன்பின் பேசிய நடிகர் கஞ்சா கருப்பு, ‘ஒரு நாள் தயாரிப்பாளராக இருந்து பாருங்கள், அப்போது தெரியும் அதன் கஷ்டம். நான் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து தோல்வியடைந்த போது, எனது அம்மாவிடம் தெரிவித்தேன். அவர் நீ காசு கொடுத்து படிக்காத படிப்பை சினிமாவில் படித்துள்ளாய் என்று சொன்னார். இன்று பிரச்சினை செய்கிறார்கள். ராஜா ராஜ சோழன் இந்துவா முஸ்லிமா என்று, எதற்கு இதெல்லாம், படத்தை எடுத்தோமா சம்பாதித்தோமா என்று இருக்கணும். அதெல்லாம் தேவை இல்லாத விஷயம்’ என்றார்.

இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி, “சினிமாவில் வலதுசாரி, நடுநிலை, இடதுசாரி என அனைத்து திரைப்படங்களும் வெளியாக வேண்டும். அதுதான் ஆரோக்கியமான ஒன்று. யாரும், இவற்றின் கதைகளை எடுக்கக்கூடாது என வற்புறுத்தக் கூடாது. தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து பேசியதாவது, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வலதுசாரி சிந்தனைக்கொண்டது. கல்கி எழுதிய நாவல் முழுவதுமே அப்படிதான் .திரைப்படத்தில், த்ரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரமும், விக்ரமின் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரமும் உரையாடும் காட்சி ஒன்றுதான் தற்போது எழுந்துள்ள இந்த சர்ச்சைக்கு அடிப்படை.

ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில், கையாலய மலையின் வடிவத்தை. ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழனும், கங்கைகொண்ட சோழபுரத்தை தூய்மைப்படுத்திய கங்கையில் இருந்து நீர் எடுத்துவந்து ஊர் முழுவதும் தெளித்தார். இந்த சடங்கு தற்போது வரை துக்க வீடுகளில் செய்யப்படுகிறது. எனவே, தற்போதைய காலக்கட்டத்தைதான் பார்க்க வேண்டும். மக்களை குழப்பி, பிரிவினை உண்டாக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் .

தமிழ்திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் R .K .அன்புச் செல்வன் பேசிய போது சினிமா சினிமாவாக இருக்கும் போது சினிமாவாக இருந்தது .சினிமாவுக்குள் எப்ப அரசியல் புகுந்ததோ அப்போது சினிமாவின் முகம் மாறி விடுகிறது .இன்று லோகேஷ் கனகராஜ் ,முருகதாஸ் போன்ற எத்தனையோ இளம் இயக்குனர்கள் வாய்ப்பு கிடைக்காமல் அலைகிறார்கள் .நல்ல கதை இருந்தால் ஒரு சிறிய பட்ஜெட்டில் நல்ல படம் பண்ண முடியும். அதற்கு இந்த தம்பி ஒரு உதாரணம்.

சினிமா பேச வந்தால் சினிமா பற்றியே பேச வேண்டும் .அரசியல் பேசக்கூடாது .ஒரு ஆட்சி வந்தால் மொத்தமாக அங்கு போய் ஜால்ரா அடிப்பது …இன்னொரு ஆட்சி வந்தால் மொத்தமாக அங்கு போய் ஜால்ரா அடிப்பது அதை முதலில் விடுங்கள் .முதல்வர் என்றால் முதல்வருக்குரிய மரியாதையை கொடுங்கள். இந்த ஓங்காரம் படத்தின் இயக்குனர் வந்தார். சென்சார் பண்ணனும் என சொன்னார் .படத்தை பற்றி எல்லா விஷயத்தையும் சொன்னார் .இங்குள்ள பல பிரச்சனையை சொன்னார் .வாங்க தம்பி என அழைத்து போய் என்னென்ன செய்ய வேண்டுமென அதற்கான விஷயத்தை சொன்னேன்.தம்பியும் நாங்கள் சொன்ன விஷயத்தை முறையாக பின்பற்றி படமும் சென்சார் வாங்கிடுச்சு .சின்ன பட்ஜெட்டில் நல்லாவே படம் பண்ணிருக்கு இந்த தம்பி .இன்றைய இயக்குனர்கள் பலர் 100 கோடி வாங்கும் நடிகர்கள் பின்னே அலைந்து தயாரிப்பாளர்களை தெருக்கோடிக்கு கொண்டு சென்று விடுகிறார்கள் .நல்ல கதை இருந்தால் 1.5 கோடிக்குள் ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்து விட முடியும் .இன்று பல சிறு பட தயாரிப்பாளர்கள் விளம்பரம் குடுக்க முடியாமல் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள் .தினத்தந்தியில் ஒரு QUARTER PAGE விளம்பரம் குடுக்க பல தயாரிப்பாளர்கள் பணம் இல்லாமல் இருக்கிறார்கள் .இன்னைக்கு தமிழ் சினிமாவை வாழ வைப்பது தந்தி மட்டுமே .யாரும் தவறாக நினைக்க வேண்டாம் .அது உண்மையும் கூட.சிறு பட தயாரிப்பாளருக்கு கை கொடுக்கும் நாயகனாக தந்தி திகழ்கிறது .ஒரு படத்திற்கு 4 விளம்பரங்கள் இலவசமாக தந்தி கொடுக்கிறது .நேற்று இந்த தம்பியுடைய படம் தந்தியில் இலவசமாக வந்து இருக்கிறது .தந்தி சிறுபட தயாரிப்பாளருக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் சினிமாவை வாழ வைத்து கொண்டு இருக்கிறது .தமிழ் சினிமா சிறு பட தயாரிப்பாளர்களை நம்பியே இருக்கிறது . இங்கு சிலர் பேச பயப்படுகிறார்கள் .ஜால்ரா போட்டு பயனில்லை .சினிமா நல்லா இருக்கணும் என்றால் ஜால்ரா ஒழியனும் .எந்த கவர்மெண்ட் இருந்தாலும் ஜால்ரா போடாமல் அவர்களிடம் கோரிக்கை வையுங்கள் .சினிமாவை வாழ வையுங்கள் .முதல்வருக்குரிய மரியாதையை கொடுங்கள் .சிறு பட தயாரிப்பாளர்களுக்கு பல உதவிகளை எங்கள் சங்கம் செய்கிறது என்றார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
Facebook
YouTube
YouTube
LinkedIn
Share
WhatsApp