இந்திய‌ ராக்கெட் உந்துவிசை தொழில்நுட்ப தந்தை விஞ்ஞானி டாக்டர் A.E முத்துநாயகம்‌ அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இந்திய‌ ராக்கெட் உந்துவிசை தொழில்நுட்ப தந்தை விஞ்ஞானி டாக்டர் A.E முத்துநாயகம்‌ அவர்களுக்கு குமரி அறிவியல் பேரவை சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி நாங்கள் பெருமை அடைந்தோம்.‌

இந்திய விண்வெளி‌ திட்ட ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் விக்ரம் சாராபாயால் அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட 6 விஞ்ஞானிகளில் ஒருவர்.

டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் தலைமையில் SLV3 திட்டத்தில் அவருடன் இணைந்து பணியாற்றி, SLV3 – 3rd Stage மற்றும்‌ Propulsion & Control system த்தை உருவாக்கியவர்.

பிரான்ஸ் நாட்டின் வைக்கிங் என்ஜினை FRANCE SEP உடன் உடன்பாடு கண்டு, இந்தியாவின் விகாஸ் -வெர்னான் திட்டத்தை உருவாக்கி விகாஸ் என்ஜினை உருவாக்கியவர்.

அவருடன் அந்த திட்டத்தில் பணியாற்ற 3 பேரை நியமித்தார்.

1} VIKAS ENGINE & ITS STAGE DEVELOPMENT – திரு எஸ்.‌ நம்பி நாரயணன்.

2) VIKAS ENGINE – HARDWARE DEVELOPMENT – திரு காசி விஸ்வநாதன்

3) VIKAS ENGINE – STAGE ASSEMBLY, INTEGRATION & TESTING & VIKAS ENGINE TESTING FACILITY @ Mahendragiri, Nagerkoil – திரு‌ கருணாநிதி‌

இந்த மூன்றையும் ஒருங்கிணைத்து அயிரக்கணக்கான ISRO விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பின் மூலம்‌ இந்தியாவின்‌ விகாஸ் என்ஜினை உருவாக்கியவர் டாக்டர் AE முத்து நாயகம்.‌

இதற்கு அடுத்து இந்நியாவின் சொந்த முயற்சியால் கிரையோஜெனிக் உந்துவிசை திட்டத்தை உருவாக்க அடித்தளமிட்டவர்.

அதற்கு திரு‌ EVS நம்பூதிரி தலைமையில் குழு அமைத்து ISRO வின்‌ எதிர்கால ராக்கெட்டுகளுக்கு மேல் கட்டமாக UPPER STAGE ல்‌ 12 டன் உந்துசக்தி கிரையோஜெனிக் எஞ்சினை உருவாக்க திரு வெ. ஞானகாந்தி, திரு கோஷ் மற்றும் புதிய‌ இளம்‌ பொறியாளர்கள் கொண்ட குழுவை 1987ல் அமைத்தார்.

1990ல் ரஷ்ய விண்வெளி நிறுவனமான கிளாஸ்காஸ்மாஸ் உடன் கிரையோஜெனிக் ஒப்பந்தத்தை உருவ்க்கினார் டாக்டர் முத்துநாயகம்.

அந்த‌ திட்டத்தின்‌ படி திரு ஆர் ஜெயமணியை ரஷ்யா சென்று‌ கிரையோஜெனிக் ஸ்டேஜ் உருவாக்குதற்கு அனுப்பினார்.

திரு நம்பி‌நாரயணனை ரஷ்யாவின் வழிகாட்டுதலில் இந்தியாவில் கிரையோஜெனிக் ஸ்டேஜ் உருவாக்க நியமித்தார்.‌

1993 ஜனவரியில் டாக்டர் முத்துநாயகம் முதல் படியாக கிரையோஜெனிக்‌ தொழில்நுட்பத்தை கையகப்படுத்துதல் மற்றும்‌ பயிற்சிக்காக திரு வி. ஞானகாந்தி குழுவை ரஷ்யாவிற்கு அனுப்பினார்

அமெரிக்காவின்‌ அழுத்திற்கு பணிந்து ரஷ்யா கிரையோஜெனிக் தொழிநுட்ப பரிமாற்றத்தை தரமறுத்து கிரையோஜெனிக் என்ஜினை மட்டும் வழங்கியது.

டாக்டர் முத்துநாயகம் போட்ட இந்த அடித்தளத்தின் மூலம் தான் இந்தியா கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை GSLV MK II & GSLV MK III மூலம்‌ இன்றைக்கு சரித்திர‌ சாதனைகள் புரிந்து கொண்டு இருக்கிறது.‌

வரும்‌ அக்டோபர்‌ 2022ல் UK – ONEWEB மூலம் 36 செயற்கைக்கோள்‌கள் ஏவ தயாராகிக்கொண்டு இருக்கிறது.‌
GSLV MK-II வை விட‌ இரண்டு‌மடங்கு அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை ஏவும் திறனை கொண்டதாக GSLV MK-III Two solid starp on motors, Core stage liquid booster & Cryogenic upper stage உடன் GTO வில் 4 டன் எடை அல்லது LEO வில் 10 டன் எடை கொண்ட செயற்கை கோள்களை ஏவ கூடிய சக்தியை ISRO உருவாக்கியிருக்கிறது.‌

இப்படிப்பட்ட‌ சரித்திர சாதனை புரிந்த டாக்டர் AE முத்து நாயகம் அவர்களுக்கு முன்னாள் ISRO விஞ்ஞானி திரு முல்லன்சேரி வேலயன் அவர்கள் தலைமையில் குமரி அறிவியவ் பேரவை சார்பாக, ISRO முன்னாள் விஞ்ஞானிகள் மத்தியில், மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நாகர்கோவிலில் NVKSD COLLEGE OF EDUCATIONல் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்.

டாக்டர் வெ.‌பொன்ராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp