ஐந்து நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்து சாதனை செய்த ‘சீதா ராமம்’

தொடர் வசூல் சாதனையில் பயணிக்கும் ‘சீதா ராமம்’

துல்கர் சல்மான்- ஹனு ராகவபுடி – வைஜெயந்தி மூவிஸ் = ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவான ‘சீதா ராமம்’ வெளியான ஐந்தே நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. ‘சீதா ராமம்’ படத்தின் வசூல் பயணம், சாதனையுடன் தொடரும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

காவிய காதல் கதையான ‘சீதா ராமம்’ கதையை பார்வையாளர்களும், விமர்சகர்களும் எல்லையற்ற வகையில் காதலித்து வருகின்றனர். போரின் பின்னணியில் நடைபெறும் உணர்வுபூர்வமான காதல் கதை என்பதால், பார்வையாளர்களுக்கு மனதிற்கு நெருக்கமான சுகானுபவத்தை அளித்து வருகிறது.

திரை காதல் ஜோடிகளான துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் தனித்துவமான நடிப்பு… இயக்குநர் ஹனுராகவபுடியின் கவித்துவமான எழுத்து மற்றும் பிரத்யேகமான இயக்கம். .. விஷால் சந்திரசேகரின் மதிமயக்கும் இசை… பி எஸ் வினோத்தின் வியக்கத்தக்க ஒளிப்பதிவு.. ஸ்வப்னா சினிமா – வைஜெயந்தி மூவிஸ் போன்ற முன்னணி படத் தயாரிப்பு நிறுவனத்தின் தரமான தயாரிப்பு மற்றும் வெளியீடு… ஆகிய காரணங்களுக்காகவும் இப்படத்தினை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

நடிகர் துல்கர் சல்மான், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்த காவிய காதல் கதையான ‘சீதா ராமம்’, உலகம் முழுவதும் பார்வையாளர்களின் இதயங்களை வென்று வருகிறது. படம் வெளியான தருணத்திலிருந்து ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களால் படத்தின் வசூல் ஏறுமுகத்துடன் தொடர்கிறது.

இதுநாள் வரை நீடித்த இப்படத்தின் வசூல் வேகம், செவ்வாய் கிழமையன்று, கடந்த அனைத்து நாட்களையும் விட வேகமெடுத்தது. பொதுவிடுமுறை மற்றும் மக்களின் நேர்மறையான வாய்மொழி விமர்சனங்களால் திரையரங்குகளை நோக்கி ஏராளமானவர்கள் படையெடுத்ததால், திரையரங்குகள் ரசிகர்களால் நிரம்பிவழிந்தன. இதன் காரணத்தால் செவ்வாய் கிழமையுடன் நிறைவடைந்த ஐந்து நாட்களில் ‘சீதா ராமம்’ உலகளவில் 33 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மட்டுமல்லாமல் சிறுநகரங்களில் இருக்கும் ஒற்றை திரையரங்குகளிலும் ‘சீதா ராமம்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்க்கப்பட்டதை அதிகமாக வசூலிக்கும் என திரை உலக வணிகர்கள் கணித்துள்ளனர். மேலும் இப்படத்தின் வசூல் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் பாக்ஸ் ஆபிஸிலும் இந்த படம், செவ்வாய் கிழமையன்று பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. அன்று மட்டும் 90K டாலர்களுக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளது. இதுவரை படத்தின் மொத்த வசூல் 750 K டாலரைக் கடந்துள்ளது. வார இறுதிக்குள் ‘சீதா ராமம்’ படத்திற்கு ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp