பேப்பர் ராக்கெட் ஓ டி டி இல் ஓட்டாமல் பார்க்க முடியுமா


திரைப்படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த கிருத்திகா உதயநிதி பேப்பர் ராக்கெட் எனும் வெப் தொடரை ஜீ 5 ஒடிடி தளத்திற்காக இயக்க இருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ்ந்து வருபவர் கதாநாயகன் காளிதாஸ் ஜேயராம் தந்தை நாகிநீடு மனைவி இல்லாமல் வாழ்ந்து வருகின்றார்.
தாயை இழந்த கதாநாயகன் காளிதாஸ் ஜெயராமை
மிகவும் பாசத்தோடு வளர்த்து வருகிறார்.
கதாநாயகன் காளிதாஸ் ஜெயராம், சென்னையில் உள்ள மிகப் பெரிய கம்பெனியில் உயர்ந்த பதவியில் பணிபுரிந்து வருகிறார்.தினந்தோறும் பல விதமான வேலை காரணமாக தனது தந்தையை ஊரில் சென்று நேரில் கூட காண முடியாமலும், போனிலும் பேச முடியாமலும் சென்னையிலேயே இருந்து வருகிறார் கதாநாயகன் காளிதாஸ் ஜெயராம்சென்னையில் நஷ்டத்தில் இருக்கும் கம்பெனிகளை லாபத்தில் இயங்கும் கம்பெனிகளோடு இணைப்பது கம்பெனிகள் லாபகரமாக நடக்க அறிவுரை வழங்குவது அதன் மூலம் கோடிக்கணக்கில் சாதாரணமாக சம்பாதித்து வருகிறார் கதாநாயகன் காளிதாஸ் ஜெயராம்.
கை நிறைய சம்பாதிக்கும் இளைஞர்கள் அனைவரும் வழக்கமாக அனுபவிக்கும் வாழ்க்கை குடிப்பழக்கம் மற்றும் பெண்கள் சவகாசம் என்று அதுதான் அவர்களது வாழ்க்கை.அந்த ஒரு நிலையில் அவருடைய தந்தை போனை கூட எடுக்காமல் வேலையில் பிசியாக இருக்கிறார்தந்தை செய்த போனை எடுக்காமல் தூங்கிதால் தானே அப்பாவை இழந்தோம் என்கிற மன உளைச்சல் அவரை தூங்கவிடாமல் செய்கிறது.
மன உளைச்சலில் இருக்கும் கதாநாயகன் காளிதாஸ் ஜெயராம் மருத்துவர் பூர்ணிமா பாக்யராஜிடம் கவுன்சிங்கிற்கு செல்ல, அங்கே அவர் சந்திக்கும் சக நோயாளிகள் அல்லது உளவியல் தீர்வுக்காக வந்திருக்கும் கதாநாயகி தன்யா ரவிச்சந்திரன், ரேணுகா, கெளரி கிஷன், கருணாகரன், நிர்மல் பாலாழி ஆகியோருடன் இருக்கிறார்கள்.
அவரைப் போல சிகிச்சைக்கு வந்திருக்கும் கதாநாயகி தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா,கருணாகரன், நிர்மல் பாலாழி, கெளரி கிஷன் ஆகியோரோடு நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தது..அனைவரும் சேர்ந்து ஒரு ட்ரிப் போகலாமா என கதாநாயகன் காளிதாஸ் ஜெயராமிடம் கேட்க அவரும் ஓகே சொல்ல அனைவரும் ட்ரிப் கிளம்பி விடுகிறார்கள்.
அடுத்து அவர் அடிக்கும் கூத்துதான் இநத பேப்பர் ராக்கெட் வெப் சீரியஸின் மீதிக் கதை
இந்த பேப்பர் ராக்கெட் வெப் சீரியஸில் நாயகனாக காளிதாஸ் ஜெயராம் ,
கதாநாயகன் காளிதாஸ் ஜெயராமுக்கு நல்ல வேடம். அலட்டல் இல்லாத நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
கதாநாயகியாக தனயா ரவிச்சந்திரன் அருமையான நடித்திருக்கிறார்.
கதாநாயகன் தந்தையாக வரும் நாகி நீடு, மகன் மீது பாசம் காட்டும் தந்தையாக மிக அருமையாக நடித்துள்ளார்.
ஆச்சி வள்ளியம்மையாக ரேணுகா நடிப்பு அருமையாக உள்ளது.
கதாநாயகன் சொந்த ஊரில் வரும் சின்னி ஜெயந்த அவருடைய மகன் காளிவெங்கட், கெளரி கிஷனின் தாத்தாவாக ஜி எம் குமார் நிர்மல் பாலாழி முன்னாள் காதலி செல்வி முல்லையரசி, அபிஷேக், பிரியதர்ஷினி அனைவரும் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் பார்வையில் நாம் பார்த்த திருநெல்வேலி, மார்த்தாண்டம், காரைக்குடி மட்டுமின்றி சென்னை கூடப் புதிதாகத் தெரிகின்றது.
ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு பாடல்கள் என சைமன் கே கிங், வேத்சங்கர் மற்றும் தரன் குமார் அற்புதமான இசையை கொடுத்திருக்கிறார்கள்.
லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு தொடரை மிக இலகுவாக நகர்த்திச் சென்று கோண்டேயிருக்கிறது.
லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு மிக அருமையாக எடிட் செய்திருக்கிறார்.
அழகான ஒரு நீண்ட கவிதை மாதிரி இந்த இணைய தொடரை ஜீ 5 காக எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.
வசன்ங்கள் மிகவும் இயல்பாக அதே நேரம் மிகவும் கூர்மையாக எழுதியிருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.நம்மைப் பல இடங்களில் அழவைத்து மனதுக்கு உருக வைத்து விட்டார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.
நடிகர் நடிகைகள் :- காளிதாஸ் ஜெயராம், தன்யா எஸ் ரவிச்சந்திரன், கே.ரேணுகா, கருணாகரன், நிர்மல் பாலாழி, கௌரி ஜி. கிஷன், டாக்டர் தீரஜ், நாகிநீடு .வி, சின்னி ஜெயந்த்,காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ், ஜி.எம். குமார், அபிஷேக் சங்கர், பிரியதர்ஷினி ராஜ்குமார், சுஜாதா, மற்றும் பலர்.
இயக்கம் :- கிருத்திகா உதயநிதி.
ஒளிப்பதிவு :- ரிச்சர்ட். எம். நாதன்.
படத்தொகுப்பு :- லாரன்ஸ் கிஷோர்.
இசை :- சைமன் கே.கிங், வேத்சங்கர், தரன் குமார், சைமன் கே ராஜா.
தயாரிப்பு :- ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்.