சென்னையில் 17வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்குபெறும் கிரிக்கெட் சாம்பியன் ஷிப்

வரும் ஆகஸ்டு 2 முதல் 5 வரை சென்னையில் அகில இந்திய ராஜீவ்காந்தி 17 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் சாம்பியன்ஷீப் போட்டியில் பஹ்ரைனில் இருந்து சர்வதேச அணி உட்பட 12 அணிகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன.
மெரினா கிரிக்கெட் மைதானம், விவேகானந்தா கல்லூரி கிரிக்கெட் மைதானம், மற்றும் அமீர் மஹால் கிரிக்கெட் மைதானம் ஆகிய மூன்று மைதானங்களில் கிரிக்கெட் பெடரேஷன் போட்டிகள் நடைபெறும்.
ஆகஸ்ட் 1 2022 அன்று சென்னை அண்ணாநகர் பயனிர் காலனியில் 100 அடி சாலை எண்.1961&சி&ல் உள்ள கே.எம். ராயல் மஹாலில், மாலை 6.30 மணிக்கு நவாப்சதா முகமது ஆசிப் அலி, மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் ஃபெடரேஷன் தலைவர் ஜே.எம்.ஆரூண் (முன்னாள் எம்.பி) தலைமையில் பிரஸ்டீஜியல் டிராபி வெளியிடப்படும்.
போட்டிகள் லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெறும். தமிழ்நாடு, பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரபிரதேசம், சென்னை, புதுச்சேரி, புனே, பெங்களூர், உத்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய 11 இணை அணிகள் பங்கேற்க உள்ளது.
அனைத்து பங்கேற்பாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இலவச தங்குமிடம் மற்றும் போக்குவரத்து போன்ற வசதிகளை தமிழ்நாடு கிரிக்கெட் ஃபெடரேஷன் வழங்கும்.
வெற்றி பெற்றவர்களுக்கும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கும் பரிசுகள் மற்றும் கோப்பைகள், தனிப்பட்ட பரிசுகளை தமிழ்நாடு கிரிக்கெட் ஃபெடரேஷன் வழங்கும்.
தமிழ்நாடு கிரிக்கெட் ஃபெடரேஷன் ஒவ்வொரு ஆட்ட நாயகன், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த ஆல் ரவுண்டர், சிறந்த விக்கெட் கீப்பர், சிறந்த பீல்டர் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப்பின் சிறந்த ஆட்ட நாயகன் மற்றும் அப் கமிங் கிரிக்கெட்டர்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கும்.
ஐந்து பேர் கொண்ட தொழில்நுட்பக்குழுவானது சையத் சாதிக் பாஷா, (தமிழ்நாடு) அமர்ஜித் குமார் (ஹரியானா) நூர் (பஹரைன்) ஸ்ரீகாந்த கவுட் (ஹைதராபாத்) மற்றும் விலாஸ் கரே (மகாராஷ்டிரா) ஆகியோர் தலைமயில் அமைக்கப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணியில் உள்ள மெரினா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள கிராண்ட் ஃபைனல் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் ஃபெடரேஷன் தலைவர் வி.ஹனுமந்தராவ், முன்னாள் எம்.பி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிப்பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு வெற்றிக்கான பரிசுகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp