தயாரிப்பாளர்களை நயவஞ்சகமாக ஏமாற்றிய இசைஞானி! அம்பேத்கார் தயவால் எம்.பி ஆனார்!

ஆம் ஆத்மி வசீகரன் அறிக்கை!

2015ம் ஆண்டு தன் பாடல்களை தன் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று இளையராஜா அறிவித்தார்.

ஆனால் சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு தர வேண்டும் என்ற கோரிக்கை அப்பொழுது எழுந்தது .

2012ம் ஆண்டு திருத்தப்பட்ட காப்பிரைட் சட்டத்தின்படி ஒரு பாடலின் உரிமையில் 50 சதவீதம்p தயாரிப்பாளருக்கும், 25 சதவீதம் இசையமைப்பாளருக்கும், 25 சதவீதம் பாடலாசிரியர்களுக்கும், பாடகர், பாடகிகளுக்கும் சேரும் என்று சட்டம் சொல்கிறது.

இளையராஜா விஷயத்தில் என்ன பிரச்னை என்றால் அவர் பாடலுக்கான மொத்த உரிமையும் தனக்கே சொந்தம் எனக் கோருவதுதான் என்கிறார்கள்.

காப்பிரைட் வசூல் விவகாரத்தில் தயாரிப்பாளர்களை இளையராஜா சேர்த்துக் கொள்ளவில்லை என்று குறையாகச் சொல்கிறார்கள்.

நாம் செலவு செய்து ஒரு வீடு கட்டினால் கொத்தனார் மேய்ஸ்த்ரிக்கு சம்பளம் கொடுக்கிறோம்
அதில் நாம் வீடு கட்டி குடி புகுந்த பின் கொத்தனார் மேய்ஸ்த்ரி வீட்டிற்கு உரிமை கொண்டாடி பங்கு எதுவும் கேட்பதில்லை அது போல் இளையராஜாவின் இசைக்கு தயாரிப்பாளர்கள் முழு சம்பளம் கொடுத்து விடுகிறோம் ஆனால் அவர் புகழின் உச்சியில் இருப்பதால் தந்திரமாக தயாரிப்பாளர்களை ஏமாற்றி காப்பிரைட் உரிமையை வாங்கி விடுகிறார்.

அதே போல் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் திரைப்படம் எடுக்க முழு முதலிடு செய்கிறார் தயாரிப்பாளர் தான் இசையமைப்பாளரை நியமிக்கிறார்
படத்திற்கு இசை மற்றும் பாடல்கள் உருவாக்க சம்பளம் கொடுக்கிறார், பாடல்கள் எழுத கவிஞருக்கு மற்றும் பாடல்கள் பாட பின்னணி பாடகர்களுக்கு படத்தின் தயாரிப்பாளர் தான் சம்பளம் கொடுக்கிறார்.
இதே போல் இசைமைப்பாளர் திரு.இளையராஜா அவர்களும் சம்பளம் வாங்கி கொண்டு தான் அணைத்து படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்.

ஆனால் திரு இளையராஜா அவர்கள் தயாரிப்பாளர்களிடம் சம்பளத்தை வாங்கி கொண்டத்தோடு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், கவிஞர் ஆகியோரின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட திரைப்பட பாடலுக்கு இளையராஜா தான் மட்டுமே ராயல்டி பணத்தை வாழ்நாள் முழுவதும் பெற்று அனுபவித்து வருகிறார் மற்றவர்களுக்கு தர மறுத்து வருகிறார்.

பல திரைப்படங்கள் படங்கள் வெற்றி பெறுவதில்லை ஆனால் அப்படத்தின் பாடல்கள் வெற்றி பெறுவதுண்டு இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் அவதிப்படுவதுண்டு ஆனால் பேராசை பிடித்த
இளையராஜா நஷ்டமடைந்த படத்தின் வெற்றி பாடல்களின் ராயல்டியையும் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்காமல் அதையும் தானே எடுத்து கொள்கிறார் என்பது தான் வருத்தமான செய்தி.
மறைந்த பிரபல பின்னணி பாடகர் திரு எஸ்.பி.பாலசுப்பிரமணியதிற்கும் இளையராஜாவிற்கும் இதனால் பல சர்ச்சைகள் இருந்தது தெரிந்ததே.

இப்படி தயாரிப்பாளர்களால் தன்னை வளர்த்துக் கொண்ட இளையராஜா கொஞ்சம் கூட கருணை மணம் இல்லாமல் இருக்கிறார்.
இவர் தற்போது சட்ட மேதை அண்ணல் அம்பேத்காரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு பேசி ராஜ்ய உறுப்பினராகியிருக்கிறார்.

இசைமேதை திரு.இளையராஜா ராஜ்யசபா உறுப்பினர் ஆனதற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு இசைஞானி இனியாவது திரைப்பட தயாரிப்பாளர்கள் நிலையுணர்ந்து செயல் படவேண்டும் மற்றும் கலை உலகிற்கு தன் பொறுப்புள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவி பயன்படட்டும்.
வசீகரன்
மாநில தலைவர்
ஆம் ஆத்மி கட்சி
தமிழ்நாடு
28/7/2022 எம்.பி ஆனார்!

28/7/2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *