நீதிக்காகப் போராடும் கார்கி என்ற பெண்ணை பற்றிய அப்படி ஒரு வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படம் தான் இந்த ‘கார்கி’.

சாய் பல்லவியின் போராட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா?

திரைப்பட துறை என்பது வெற்றி பெற்றவர்களுக்கான துறை மட்டுமல்ல வித்தியாசமாக கதைகளை யோசிக்கும் இயக்குனர்களுக்கு உடனடியாக கை கொடுக்கும் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது இந்த திரைப்படம்

நாயகி சாய் பல்லவி மற்றும் தாய் தந்தை பத்து வயது தங்கையுடன் வாழ்ந்து வருகிறார்.

அவருடைய தந்தை ஆர்.எஸ். சிவாஜி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டி வேலை பார்த்து வருகிறார்.

சாய் பல்லவியின் தாய் வீட்டில் இட்லி தேசை மாவு அரைத்து விற்கும் வேலையை பார்த்து வருகிறார்.

சாய் பல்லவி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டு தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.தான் விரும்பும் காதலரை மனம் முடிப்பதற்காக பெற்றோரின் சம்மத்துடன் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

சாய் பல்லவியின் தந்தை வேலை பார்க்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு ஒன்பது வயது சிறுமி வடமாநில இளைஞர்களால் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்.

ஒன்பது வயது சிறுமியை கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்ட குற்றத்திற்காக நான்கு வடமாநில இளைஞர்களை காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார்கள்.

அவர்களுடன் சேர்த்து இந்த வழக்கின் விசாரணையில் ஐந்தாவது குற்றவாளியாக அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து கொண்டிருக்கும் கதையின் நாயகி சாய் பல்லவியின் தந்தையை காவல்துறையினர் கைது செய்யப்படுகிறார்.

இதனால் மன உலைச்சலுக்கு ஆளாகி பல பிரச்சனைகளை அவர் எதிர்கொள்கிறார்.

தனது தந்தை நிரபராதி என நம்பும் கதையின் நாயகி சாய் பல்லவி இந்த வழக்கில் இருந்து தனது தந்தையை விடுவிக்க சட்ட ரீதியாக போராடுகிறார்.

சாய் பல்லவிக்கு துணையாக வழக்கறிஞர் காளி வெங்கட் தந்தையை காப்பாற்றுவதற்கு கை கொடுக்கிறார்.

சாய் பல்லவியின் போராட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? இருவரும் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்ட தந்தை விடுவித்தார்களா? இல்லையா?

அதற்கு அவர்களுக்குத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் இநத கார்கி திரைப்படத்தின் மீதிக் கதை.

இநத கார்கி திரைப்படத்தில் கதையின் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

நடுத்தர குடும்பத்து பெண்ணாக கார்கி என்ற கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.

கார்கி என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் கதையின் நாயகி சாய் பல்லவி மிகவும் அருமை.

நமது வீட்டில் ஒரு பெண் எப்படி இருப்பாரோ அப்படியான ஒரு கதாபாத்திரம்.

எதார்த்தமாகவும் நடிப்பின் மூலம் எளிமையை வெளிப் படுத்தி பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுக்களையும் கைத்தட்டல்களையும் கதையின் நாயகி சாய் பல்லவி பெறுகிறார்.

இந்தக் காலத்தில் எதையும் எதிர்த்து நின்று துணிந்து போராடும் குணம் ஒரு பெண்ணுக்குத் தேவை என்பதை இவரது கதாபாத்திரம் எடுத்துக் காட்டுகிறது.

கதையின் நாயகி சாய் பல்லவியை தமிழ் திரைப்பட உலகம் இன்னும் சரியான கதாபாத்திரங்களை கொடுக்கவில்லை என அவர் நடித்த சில தெலுங்குப் திரைப்படங்களைப் பார்க்கும் போது தோன்றும்.

தமிழ் திரைப்பட உலகம் இன்னும் சரியாக பயன்படுத்திக் கொள்ளாத ஒரு நடிகர் காளி வெங்கட்

அவரது பேச்சும், நடிப்பும் எந்தக் கதாபாத்திரத்திலும் அவ்வளவு யதார்த்தமாக இருக்கும்.

அதை உன்னிப்பாகக் கவனித்து இந்தப் திரைப்படத்தில் வக்கீல் கதாபாத்திரம் கொடுத்து அவருக்கு பெருமை சேர்த்திருக்கிறார் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன்.

முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் சாய் பல்லவியின் தந்தையாக ஆர்.எஸ். சிவாஜி, ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையாக சரவணன், நீதிபதியாக திருநங்கை சுதா, வக்கீலாக ஜெயப்பிரகாஷ் என ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் அவ்வளவு நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

அனைவரும் அவர்களில் வேலையை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர்.

இவர்களின் எதார்த்த நடிப்பு தரைப்படத்திற்கு கூடுதல் பலமாக சேர்த்து உள்ளது..

கோவிந்த் வசந்தா பின்னணி இசை ஒவ்வொரு காட்சியிலுமே உயிர் கொடுத்து இருக்கிறது.

’96’ படத்திற்குப் பிறகு கோவிந்த் வசந்தாவிற்குப் பேர் சொல்லும் இந்த கார்கி திரைப்படம்.

ஸ்ரையந்தி, பிரேம்கிருஷ்ணா அக்காடு இருவரின் ஒளிப்பதிவும் நம்மையும் திரைப்படத்திற்குள் கூடவே பயணிக்க வைக்கும் ஒரு உணர்வைத் தருகிறது

எதார்தமாகவும் நேர்த்தியாகவும் காட்சிகளை கையாண்டு பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

சமூக அவலங்களை தோலுரித்து காட்டும் கதையை தேர்வு செய்து சரியாக கையாண்டிருக்கும் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரனுக்கு பாராட்டுக்கள்.

திரைப்பட உலகில் இப்படி ஒரு கிளைமாக்ஸ் இதுவரை வந்ததில்லை என இந்தப் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் அமைந்திருக்கிறது.

திரைப்படம் பார்க்கும் போது கிளைமாக்ஸ் இப்படித்தான் போகும் என யாராலும் நிச்சயம் யூகிக்க முடியாத ஒரு கிளைமாக்ஸ்.

வசனங்கள் ஒளிப்பதிவு பின்னணி இசையும் கார்கி திரைப்படத்திற்கு கூடுதல் பலம்.

நடிகர் நடிகைகள் :- சாய் பல்லவி, காளி வெங்கட், ஐஸ்வர்யா லட்சுமி, ஆர் எஸ் சிவாஜி, சரவணன், அன்ஷிதா ஆனந்த், வி.ஜெயபிரகாஷ், கேப்டன் பிரதாப், வேதா பிரேம்குமார், லிவிங்ஸ்டன், கவிதாலயா கிருஷ்ணன், டாக்டர் எஸ்.சுதா, வின்னர் ராமச்சந்திரன்,
மற்றும் பலர்.

இயக்கம் :- கௌதம் ராமச்சந்திரன்.

ஒளிப்பதிவு :- ஸ்ரையந்தி & பிரேம் கிருஷ்ணா அக்கடு.

படத்தொகுப்பு :- ஷபிக் முஹமது அலி.

இசை :- கோவிந்தா வசந்தா.

தயாரிப்பு :- பிளாக்கி, ஜெனி, மை லெப்ட் பூட் புரொடக்ஷன்ஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *