“ரெயின்போ” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை

வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குனர் S. P. ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ இணைந்து தயாரிக்கும் “ரெயின்போ” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னையில் ஆரம்பமானது, இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக
இருந்தவர் S. P. ஹோசிமின் . பரத் நடித்த பிப்ரவரி 14 , சாந்தனு பாக்யராஜ் , சத்யராஜ் நடிப்பில் ஆயிரம் விளக்கு திரைப்படங்களை இயக்கியவர்.
இவரின் இயக்கத்தில் ஜப்பான் சுமோ Yoshinori Tashiro,
மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் , யோகி பாபு , VTV கணேஷ் -நடிப்பில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிப்பில், இந்தியா மற்றும் ஜப்பானில் எடுக்கப்பட்ட எதிர்பார்ப்புக்குரிய படம் “சுமோ” விரைவில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் “BIGBOSS” புகழ் நிரூப் ஏழு கதாநாயகிகளுடன்
நடிக்கிறார். இப்படத்தின் வானவில் பிரதான கதாபாத்திரமாக வருகிறது.

இப்படத்தின் ஏழு கதாநாயகிகளாக சிம்ரன் ராஜ் ,
மற்றும் ஆறு முன்னனி கதாநாயகிகள் நடிக்க மற்றும் மைம் கோபி , மனோபாலா ,சார்லஸ் வினோத் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இடம் பெறுகிறார்கள்.

பிரமாண்ட பொருட்செலவில் பரபரப்பான திரைக்கதையில் FANTASY COMEDY படமாக உருவாகி வருகிறது .

இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்,அயலான் இயக்குனர் R.ரவிக்குமார், இயக்குனர் R. மாதேஷ் , ஜப்பான் தொழிலதிபர் குறிஞ்சி செல்வன் , நடிகர் பிக்பாஸ் புகழ் அபினய் , சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

சுமோ படத்தின் இயக்குனர் S. P. ஹோசிமின் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த விவேக் கைபா பட்டாபிராம் இந்த படத்தை இயக்குகிறார், ஒளிப்பதிவாளர் வினோத் குமார், இசையமைப்பாளர் சுபாஷ் ஆனந்த், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோர் கூட்டணியில் படப்பிடிப்பு இனிதே ஆரம்பித்தது.
குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக உருவாகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp