80 லட்சம் பார்வைகளை கடந்து, சாதனை படைக்கும் ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்பட டீசர்!

புரமோஷனில் கலக்கலாக களமிறங்கும், ஜெயம் ரவியின் “அகிலன்” படக்குழு !

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் “பூலோகம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, இக்கூட்டணியில் மீண்டும் ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அகிலன்”. இப்படத்தை Screen Scene Media Entertainment Pvt Ltd நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ரசிகர்களிடம் பேராதரவை குவித்து 80 லட்சம் பார்வைகளை கடந்து, சாதனை படைத்து வருகிறது.

இப்படத்தின் கதைக்களம், நாயகன் பாத்திரம் படத்தின் தன்மை ஒவ்வொன்றையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த, புதுவிதமான புரமோஷன் பாணியை கையாண்டிருக்கிறது படக்குழு. தமிழ் சினிமாவுக்கே புதுமையான ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்துவதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்வதாக இது இருக்கும்.

படத்தின் தலைப்பை வெளிப்படுத்தும் விதமாக முதலில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இப்போது டீசருக்கு முன்பாக படத்தின் களத்தை, படமாக்கப்பட்ட பிரமாண்டத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சிறு வீடியோ வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து டீசரை அறிமுகப்படுத்த டீசருக்கு முன்பாக இரண்டு சிறு வீடியோக்கள் வெளியானது, இந்த முதல் வீடியோவில் அகிலன் படத்தில் ஜெயம் ரவியின் பாத்திரத்தின் பெயர் இருக்கும், இரண்டாவது டீசரில் டீசர் வெளியீட்டு தேதியுடன், ஜெயம் ரவி பாத்திரம் எப்படி பட்டது, அந்த கதாப்பாத்திரம் என்னவெல்லாம் செய்யும், என்பதற்கான காட்சிகள் இருக்கும், அந்த காட்சிகளின் தொடர்ச்சியாகவே டீசர் வெளியானது, டீசரில் அகிலன் திரைப்படத்தின் உலகமும் நாயகனின் பயணமும் அவன் என்ன செய்கிறான் என்பதெல்லாம் இருந்தது, டீசர் முடியும் இடத்தின் தொடர்ச்சியாக அகிலனின் மொத்த உலகத்தையும் பிரமாண்டத்தையும் காட்டுவதோடு, பல கேள்விகளை ரசிகர்களுக்கு விதைப்பதாக இருக்கும். டிரெய்லரில் இரண்டு காட்சிகள் வரும், பாதியில் முடியும் அந்த காட்சிகளுக்கான தொடர்ச்சி தொடர்ந்து வெளியாகும் ஸ்நீக் பீக்கில் இருக்கும். இந்த முன் வெளியீட்டில் அகிலன் திரைப்படம் அறிமுகப்படுத்தும் அனைத்து கேள்விக்கான பதில்கள், படத்தில் இருக்கும். சிலந்தி வலை போல் ஒன்றோடொன்று பிணைந்ததாக, முன்னோட்டமே பிரமிப்பில் ஆழ்த்தும் விதமாக இந்த அகிலன் ஒரு புது உலத்திற்கு ரசிகனை அழைத்து செல்லும்.

இப்படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடிக்க, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நயாகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் ஜிராக் ஜனி, ஹரீஷ் பேரடி, ஹரீஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு : Screen Scene Media Entertainment Pvt Ltd
இயக்கம் : கல்யாண கிருஷ்ணன்
இசை : சாம் CS
ஒளிப்பதிவு : விவேக் ஆனந்த்
படத்தொகுப்பு : N. கணேஷ் குமார்
கலை இயக்கம் : விஜய் முருகன்
உடை வடிவமைப்பு : பல்லவி சிங்
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : பூஜா பிரியங்கா
தலைமை விநியோகம் : கிரண் குமார் S
பப்ளிசிட்டி டிசைனர் – தண்டோரா சந்துரு
டீசர் கட்ஸ் : விக்னேஷ் RK
விளம்பரம் & திட்டமிடல் – ஷ்யாம் ஜாக் Jack
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp