மே 27ம் தேதி Sony Liv தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் நடிகைகள் :- மாணிக்கம், மாஸ்டர் அஸ்வின், பிரசன்னா, குமார், சாவித்ரி, சுருளி , அண்ணாமலை, நாகேந்திரன்,
மற்றும் பலர்.

இயக்கம் :- தமிழ்.

ஒளிப்பதிவு :- பிரதீப் காளிராஜா.

படத்தொகுப்பு :- C.S. பிரேம் குமார்.

இசை :- பிந்து மாலினி.

தயாரிப்பு :- நீலம் புரொடக்ஷன்ஸ்.

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்ற சிறுகதையே சேத்துமான் என்ற பெயரில் தமிழில் திரைப் படமாக உருவாகி உள்ளது.

இலக்கியத்தில் இருந்து சினிமா என்பது அற்புதமாகவும கன கச்சிதமாகவும் மிக நேர்த்தியாகவும் புதுமுக இயக்குநர் தமிழ் இயக்கியிருக்கிறார்.

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, குதிரைவால், ரைட்டர், தற்போது சேத்துமான் இப்படியான திரைப்படங்களில் தனித்துவமிக்க கதைகளை திரைப்படமாக தயாரிப்பதால் தான் நீலம் புரொடக்ஷன்ஸ் இயக்குனர் பா.ரஞ்சித்தும் தமிழ் திரைப்பட உலகில் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படியான கதைகளை எடுக்க கூடிய தைரியம் தமிழ் திரைப்பட உலகில் உள்ள பல தயாரிப்பாளர் மத்தியில் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குனர் பா.ரஞ்சித் ஒருவருக்கு மட்டுமே தைரியம் இருக்கிறது..

கொங்குப் பகுதியில் ஆதிக்கச்சாதியினரால் சிறுவன் அஸ்வினின் தாய் தந்தை கொலை செய்யப்படுகிறார்கள்

மாட்டுக்கறியை சாப்பிட்டதால் ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட தாய் தந்தையை இழந்து விடுகிறான் சிறுவன் அஸ்வின்.

சிறுவன் அஸ்வினை அவரது தாத்தா மாணிக்கம் பிறந்த குழந்தையை எடுத்து வளர்த்து வருகிறார்.

நாமக்கல் அருகே உள்ள கிராமம் அதில் கூடைப் பின்னி சந்தையில் விற்று பணம் சம்பாதிக்கும் மாணிக்கம் என்ற ஒரு தாத்தா.

தனது பேரன் அஸ்வின் உடன் வாழ்ந்து வருகிறார்.

இவரது கனவு தனது பேரன் அஸ்வின் உயர் அதிகாரியாக வேண்டும் என பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார்.

இதற்காக நெடுந்தூரம் நடை பயணமாக சென்று பள்ளியில் சென்று படிக்க வைக்கிறார்.

அந்த ஊரின் உயர்சாதி என்று கருதப்படும் பிரசன்னா ஒரு நாள் சேத்துமான் கறி (பன்றிக்கறி) சாப்பிட ஆசைப்படுகிறார்.

பிரசன்னா சேத்துமான் கறி (பன்றிக்கறி) சமைத்துச் சாப்பிட கூட்டு சேர்க்கிறார்.

அந்தக் சேத்துமான் கறியை (பன்றிக்கறி) பக்குவமாக சமைத்துக் கொடுக்கும் பொறுப்பை மாணிக்கத்திடம் கொடுத்துவிடுகிறார் பிரசன்னா.

சேத்துமான் கறியை சமைக்கும் இடத்திற்கு சிறுவன் அஸ்வினும் மாணிக்கத்துடன் செல்கிறான்.

சேத்துமான் கறி வெந்து கொண்டிருக்கும் வேளையில் நடக்கும் சம்பவங்களும் எதிர்பாராத முடிவும் தான் இந்த சேத்துமான் திரைப்படத்தின் மீதி கதை.

இந்த சேத்துமான் திரைப் படத்தில் வயதான கதாபாத்திரத்தில் மாணிக்கம் என்ற ஒரு புதுமுகம் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவட அந்தக் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என சொல்ல வேண்டும்

தமிழ் திரைப்பட உலகிற்கு கிடைத்த மாணிக்கம் என்ற பெயருக்கு ஏற்றது போல் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

அந்தப் பூச்சியப்பன் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அருமையாகவும் யதார்த்தமாகவும் நடித்திருக்கிறார்.

பேரனாக நடித்திருக்கும் அஸ்வின் யதார்த்தத்தை உணர்ந்து நடிப்பு என தெரியாமல் நடித்திருக்கிறார்.

அதேபோல, பேரனாக வரும் அஸ்வின் குறும்புத்தனத்திலும், தாத்தாவிடம் பாசத்தைக் கொட்டுவதிலும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வென்று விடுகிறான்.

அதே போல, பண்ணையாராக வரும் ‘நக்கலைட்ஸ்’ பிரசன்னா பாலசந்திரன் சிடு சிடுவென முகத்தை வைத்துக் கொண்டு, பண்ணையார்  கதாபாத்திரத்தை உணர்ந்து ஆர்ப்பாட்டமில்லாத ஒரு அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

சுப்ரமணியன் கதாபாத்திரத்தில். வரும் சுருளி அருமையான நடிப்பில் வாழ்ந்து இருக்கிறார்.

இவர ஏற்கனவே உரியடி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் மற்றும் தடம் திரைப்படத்தில்  நல்ல கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார்.

ரங்கனாக வரும் குமார், வெள்ளையன் மனைவியாக வரும் சாவித்திரி உள்ளிட்ட அனைவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது.

பிந்து மாலனியின் பிண்ணனி இசை ஆகியவையும் திரைப்படத்துக்கு பலம் சேர்க்கின்றன.

திரைப்படத்தில் இதர அனல் பறக்கும் வசனங்களும் கவனிக்க வைக்கின்றன.

இத்தனை விசயங்களையும், தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவை மிக நேர்த்தியான கலை படைப்பாக கொடுத்த புதுமுக இயக்குநர் தமிழை பாராட்டியே ஆக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *