கூகுள் குட்டப்பா

கூகுள் குட்டப்பா

இயக்கம் :- சபரி – சரவணன்.

ஒளிப்பதிவு :- அர்வி.

படத்தொகுப்பு :- பிரவீன் அண்டனி.

இசை :- ஜிப்ரான்.

தயாரிப்பு :- ஆர்கே செல்லுலாயிட்ஸ்.

நடிகர் நடிகைகள் :- கே. எஸ். ரவிக்குமார், யோகி பாபு, தர்ஷன், லாஸ்லியா, பவித்ரா லோகேஷ், சுரேஷ் மேனன், மனோபாலா, சி. ரங்கநாதன், மாரிமுத்து, பிராங்ஸ்டர் ராகுல், பூவையர், சுஷ்மிதா, மற்றும் பலர்.

மலையாளத் திரைப்பட உலகில் 2019ஆம் வருடம் வெளிவந்து ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ திரைப்படத்தின் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்திருக்கும் திரைப்படம் தான் இந்த ‘கூகுள் குட்டப்பா’.

மலையாள திரைப்பட உலகில் இந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25′ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது.

தமிழ் திரைப்பட உலகில் தொடர்ந்து மலையாளப் திரைப்படங்களின் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தற்போது வந்து கொண்டிருக்கிறது.

கதாநாயகர்களை மையப்படுத்தி உள்ள கதைகளை மொழி மாற்றம் செய்ய தேர்வு செய்யாமல்

கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மொழி மாற்றம் செய்யும் இயக்குனர்களை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.

இந்த கூகுள் குட்டப்பா’ திரைப்படத்தை சரியாக மொழிமாற்றம் செய்து இருந்தால் கூடுதலாகப் பாராட்டி இருக்கலாம்.

அறிமுக இயக்குனர்கள் சபரி – சரவணன், மலையாளத் திரைப்படத்தை கோயம்புத்தூர் பின்னணியில் நடக்கும் கதையாக கொடுத்திருக்கின்றனர்.

கோயம்பத்தூர் அருகில் உள்ள கிராமத்தில் தந்தை கே.எஸ்.ரவிக்குமார் வாழ்ந்து வருகிறார் கதாநாயகன் தர்ஷன்.

இவர் இஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு வெளிநாடு சென்று வேலை பார்க்க ஆசைப்படுகிறார் கதாநாயகன் தர்ஷன்.

படித்து முடித்த தனது மகனையும் வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப
தந்தை கே.எஸ்.ரவிக்குமார், கதாநாயகன் தர்ஷனின் ஆசைக்கு தடை போடுகிறார்.

தன் தந்தையுடன் வெளிநாடு வேலைக்கு செல்வதற்கு தகராறு செய்து வருகிறார்.

ஒருவழியாக தந்தையை சமாதானப்படுத்தி
ஜெர்மனியில் வேலைக்கு செல்கிறார் கதாநாயகன் தர்ஷன்.

மேலும், தனிமையில் இருக்கும் தன் தந்தையைப் பார்த்துக் கொள்வதற்கு தனது ஜெர்மனியில் உள்ள கம்பெனி பரிசோதித்து வரும் ரோபோ ஒன்றை தன் தந்தைக்குத் துணையாக இருக்க வைக்கிறார்.

ஆரம்பத்தில் அந்த ரோபோவை வெறுக்கும் கே.எஸ்.ரவிக்குமார், ஒரு கட்டத்தில், அதனுடன் நெருக்கமாகப் பழகி
ரோபோவின் அன்பில் விழுந்து அதையே தன்னுடைய மகனாக பார்த்து கொள்கிறார்.

நான்கு மாத பரிசோதனை காலம் முடிந்த காரணத்தால் தன முதலாளி திரும்ப கேட்க
ரோபோவை எடுத்து செல்ல இந்தியா திரும்புகிறார் கதாநாயகன் தர்ஷன்.

ஆனால், கே.எஸ்.ரவிக்குமார் ரோபோவை திருப்பி அனுப்ப மறுக்கிறார்.

இறுதியில் கே.எஸ்.ரவிக்குமார் ரோபோவை திருப்பி கொடுத்தாரா? இல்லையா?
இதன் பின் என்ன நடக்கிறது
என்பதுதான் இநத ‘கூகுள் குட்டப்பா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கூகுள் குட்டப்பா திரைப்படத்தில்
தந்தையாக நடித்திருக்கும் கேஎஸ் ரவிக்குமார், முழு கதையும் தனது தோளில் தாங்கி மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

எந்த இடத்திலும் குறை சொல்லாத அளவிற்கு தன்னுடைய அனுபவ நடிப்பை தந்திருக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமாரின்
மகனாக நடித்திருக்கும் தர்ஷன் தன்னால் முடிந்தளவிற்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இளம் கதாநாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா கொடுத்த வேலையை மிக அருமையாக செய்திருக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமாரின்
உறவினராக யோகி பாபு நடித்திருக்கிறார்.

எங்காவது ஒரு காட்சியாவது சிரிக்க வைப்பார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது.

பல காட்சிகளில் தன் வசனங்கள் பேசாத இடத்தில்கூட டப்பிங்கில் வசனங்களை பேசி விடுகிறார் அது மிகவும் கேவலமாக இருக்கிறது.

யோகிபாபு காமெடி என நினைத்து நடிக்கிறார் அது பெரியதாக எடுபடவில்லை.

ஜிப்ரானின் இசை படத்திற்கு ஓரளவு பலம் சேர்த்திருக்கிறது.

பின்னணி இசை ரசிக்க வைத்திருக்கிறார்.

அர்வியின் ஒளிப்பதிவு சிறப்பு.

படத்தொகுப்பு ஒகே ரகம்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்கள். கதையை நேராக சொல்லாமல் கதாபாத்திரங்களை சுற்றி சுற்றி காண்பித்து திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

இம்மாதிரியான திரைப்படங்களை குழந்தைகளும் ரசிக்கும் விதத்தில் எடுத்திருக்க வேண்டும்.

அதை விட்டுட்டு முதியோர் காதலைப் பற்றிச் சொல்லி பொறுமையை சோதித்திருக்க வேண்டாம்.

மொத்தத்தில் இந்தகூகுள் குட்டப்பா திரைப்படம் ஓகே பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *