13 வது ஆண்டில் ஆர்.கே.சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனம்

 – by admin

13 வது ஆண்டில் ஆர்.கே.சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனம்…

தமிழ்த் திரையுலகில் தற்போதுள்ள முன்னணி ஹீரோக்களில் முக்கியமானவர் ஆர்.கே. சு ரேஷ். நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று பல தளங்களில் இயங்கிவரும் இவர் விஜய்சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற வெற்றிப் படத்தை வி நியோகித்தவர். தொடர்ந்து விஜய்சேதுபதியின் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால கு மாரா’, ‘சூது கவ்வும்’, இயக்குநர் பாலாவின் ‘பரதேசி’, ‘பீட்சா’, ‘6 மெழுகுவர்த்திகள்’, ‘கோழி கூவுது’, ‘தங்க மீன்கள்’, ‘மதயானை கூட்டம்’, ‘சாட்டை’, ‘அய்யாவு’(இந்தி), ஹீரோயின் (இந்தி) உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழி ப் படங்களை ஸ்டூடியோ 9 நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ளார்.

இந்த நிறுவனம் விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’, விஜய்சேதுபதி நடித்த ‘தர்மதுரை’, ‘அட்டு’, ‘அமீரா’ போன்ற வெற்றிப் படங்களையும் தயாரித்துள்ளது.https://www.youtube.com/embed/-zQzs-kLDCk?start=14&feature=oembed

திரைத்துறையில் ஸ்டூடியோ 9 நிறுவனத்துக்கு இது 13 வது ஆண்டு. இந்த ஆண்டில் ‘டிரைவர்’, ‘குரு பூஜை‘ போன்ற படங்களை தயாரித்து வருகிறது.

தயாரிப்பாளர், விநியோகஸ்தராக மட்டுமல்லாமல் 2013 ஆம் ஆண்டிலிருந்து நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் ஆர். கே. சுரேஷ். ‘தாரை தப்பட்டை’, ‘மருது’, ‘ஹர ஹர மஹா தேவகி’, ‘இப்படை வெல்லும்’, ‘பள்ளி ப்பருவத்திலே’, ‘ஸ்கெட்ச்’, ‘டிராபிக் ராமசாமி’, ‘பில்லா பாண்டி’, ‘நம்ம வீட்டுபிள்ளை’, ‘வே ட்டை நாய்’, ‘கொச்சி ஷாதி (மலையாளம்), ‘சிவலிங்கபுரம் (தெலுங்கு) உட்பட சுமார் 25 படங்களில் நடித்து நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp