வீராபுரம் 220 திரைப்பட விமர்சனம்

– by admin

வீராபுரம் 220 திரைப்பட விமர்சனம்



நடிகர், நடிகைகள்-;
அங்காடித்தெரு மகேஷ் , மேக்னா, சதீஷ், ஜெயக்குமார் , மற்றும் பலர் ,



தொழில்நுட்ப கலைஞர்கள்-;
இயக்குனர் – செந்தில்குமார். படத்தொகுப்பு : கணேஷ் ,ஒளிப்பதிவு : பிரேம்குமாரின் ,இ சை : ரித்தேஷ்-ஸ்ரீதர், ,தயாரிப்பு : சுந்தர்ராஜ் பொன்னுசாமி ,தயாரிப்பு நி றுவ னம் – சுபம் கிரியேஷன்ஸ் ,மக்கள் தொடர்பு-ஆனந்த். இணை தயாரிப்பு-குணசேகரன் கன்னியப்பன்,



திரை கதை-;
நண்பர்கள் நால்வருடன் அங்காடித்தெரு மகேஷ் அரட்டை, ஆர்ப்பாட்டமாக ஒற்றுமை யாக வலம் வருகின்றார்.இதில் ஒரு நண்பரின் திருமணம் நண்பர்களின் செய் கையால் நின்று விட, அதனால் அந்த நண்பர் இவர்களை விட்டு பிரிந்து மற்றவர்களை பழி வாங்க துடிக்கிறார். அதன் பிறகு மகேஷின் தந்தை, நண்பர் என்று அடுத்தடுத்து இற க்க, அதற்கு காரணத்தை கண்டு பிடிக்கிறாரா மகேஷ்? உண்மையில் நடந்தது என்ன? என்பதே படத்தின் இறுதி முடிவு. அங்காடித்தெரு மகேஷ், மேக்னா, சதீஷ், ஜெயக்குமார் மற்றும் நண்பகளாக நடித்திருக்கும் பலர் படத்தில் முக்கிய காட்சிகளில் சிறப்பாக நடி த்துள்ளனர்.





மணல் மாஃபியா பற்றிய கதையில் கொஞ்சம் காதல், நட்பு, பாசம், பகை, சூழ்ச்சி, விபத்து கலந்து திறம்பட பட்ஜெட் கேற்றவாறு இயக்கியுள்ளார் இயக்குனர் செந்தில்குமார். இறுதி யில் பத்து நிமிடங்கள் தான் கதையின் சாரம்சம்சத்தை சொல்லியிருக்கிறார் அதுவரை படம் எதிர்பார்த்த விறுவிறுப்பை கூட்டவில்லை என்றாலும் முயற்சியை பாராட்டலாம். சார்பில் தயாரிப்பில் வீராபுரம் 220 இரவில் நடக்கும் பகல் கொள்ளை.
படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;https://www.youtube.com/embed/S9LPVxZZkOE?start=5&feature=oembed
திரைப்பட விமர்சனம்-;
ஊருக்கு நல்லது செய்வதுபோல் நடித்து மக்களை ஏமாற்றி பொதுச்சொத்துகளைக் கொள்ளையடிக்கும் அரசியல் செல்வாக்குள்ள நபரை எதிர்க்கும் இளைஞர்கள் என்கிற கருவைக் கொண்டு உருவாகியிருக்கும் படம் வீராபுரம் 220. நாயகன் அங்காடித்தெரு மகேஷ் சில காட்சிகளில் சிறப்பாகவும் பல காட்சிகளில் பாவமாகவும் இருக்கிறார். ஊரில் நடக்கும் விபத்துகள் குறித்த இரகசியம் தெரியும்போது பொங்குகிறார்.நாயகி மேக்னா நன்றாக இருக்கிறார். இவர்போல ஆறுதலான காதலி இருந்தால் நல்லது என நினைக்க வைக்கும் வேடம். நாயகனின் நண்பர்கள் மற்றும் வில்லன் சதீஷ் ஆகியோர் ஏற்ற வேடங்களுக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.




ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். பாடல்கள் மற்றும் பி ன்னணி இசையில் குறையில்லை. பிரேம்குமார் ஒளிப்பதிவில் கிராமத்துக் காட்சிகள் நன்று. சமுதாய அக்கறையுடன் கூடிய கதையை எடுத்துக்கொண்ட இயக்குநர் செந் தில் குமார் திரைக்கதைக்கும் கூடுதலாக மெனக்கெட்டிருக்கவேண்டும்.தன் தந்தை நடத்தும் ஹோட்டலில் வேலை செய்யும் மகேஷ் தன் நண்பர்கள் நால்வருடன் ஜாலியாக ஊர் சுற்றி பொழுதை போக்குகிறார். நண்பர் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட, மற்ற நண்பர்க ளின் நடத்தையால் திருமணம் தடை படுகிறது. இதனால் ஆத்திரமடையும் நண்பர், மகே ஷ் மற்றும் நண்பர்களை புறக்கணித்து அவர்களுக்கே எதிரியாகிறார்.அதே சமயம் மகேஷின் தந்தை விபத்தால் இறக்கிறார்.


இதற்கு காரணம் தன் நண்பன் தான் முதலில் சந்தேகப்படும் மகேஷ், பின்னர் உண்மை அறிந்து கொலையாளிகளை தேடிச் செல்கிறார். மகேஷ் குற்றவாளிகளை கண்டுபிடி த்தாரா? தந்தை இறக்க என்ன காரணம்? கிராமத்தில் நடக்கும் மணல் கொள்ளைகளை எப்படித் தடுத்தார்? என்பதே க்ளைமேக்ஸ். நாயகனாக அங்காடித்தெரு மகேஷ், நாயகி யாக மேக்னா, சதீஷ், ஜெயக்குமார் மற்றும் பல புதுமுகங்கள் முடிந்தவரை முத்திரை பதித்துள்ளனர். ரித்தேஷ்; இசையும், பிரேம்குமாரின் ஒளிப்பதிவும், கணேஷின் படத் தொகுப்பும் படத்திற்கு நிறைவான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.


இயக்கம்-செந்தில்குமார்.கிராமத்தில் இரவில் நடக்கும் மணல் கொள்ளையால் அதிவே கமாக வரும் லாரியில் அடிபட்டு பலர் இறக்கின்றனர், இதற்கு காரணமாக இருக்கும் ரௌ டி, அரசியல்வாதி, இன்ஸ்பெக்டர் ஆகிய மூவரையும் இறுதியில் நாயகன் எப்படி தன் ந ண்பர்களுடன் சேர்ந்து பழி வாங்குகிறார் என்பதே கதைக்களம். முதல் பாதி காதல், நட்பு, பகை என்று நண்பர்களை சுற்றி நடக்கும் கதை, இரண்டாம் பாதி இறுதியில் தான் மணல் மாஃபியா பற்றிய முடிச்சுக்களை சொல்லியிருக்கிறார் இயக்குனர் செந்தில்குமார். மொ த்தத்தில் வீராபுரம் 220 மணல் அள்ளும் அரசியல் தந்திரம்.