வசீகரன் அறிக்கை!

சென்னையில் பேருந்து பயணிகளிடம் அரசு போக்குவரத்து பயணசீட்டு பரிசோதகர்கள் அடாவடி?

உடமைகள் எடுத்து சென்றால் தடாலடி அபராதம் வசூலிப்பு!
திண்டாடும் பயணிகள்!
போக்குவரத்து துறை அமைச்சர்
கவனிக்க வேண்டும்!

ஆம்ஆத்மி தலைவர் வசீகரன் கோரிக்கை!!

பொது மக்களின் பயன்பாட்டிற்காக தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து
கழத்திலிருந்து அனைத்து வழித்தடத்திலும் செல்லும் பேருந்து சேவை தமிழக அரசால் சிறப்பாக இயக்கப்படுகிறது.

மாண்புமிகு டெல்லி முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள்
பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை கடந்த ஆண்டு டெல்லியில் அறிவிப்பு செய்து நடைமுறை படுத்தியது நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

டெல்லியை போல் தமிழகத்திலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை தமிழக முதல்வர் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களும் அறிவித்தது சிறப்பு.
டெல்லியை போல் எல்லா பேருந்துகளிலும் மகளிருக்கு தமிழகத்தில் இலவசம் இல்லை சில குறிப்பிட்ட பேருந்துகளில் (வெள்ளை நிற பலகை) மட்டுமே வழங்கப்படுகிறது எனினும் வரவேற்கதக்கது.

இலவசங்கள் கொடுப்பதால் தான் போக்குவரத்து அதிகாரிகள் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கருதி அதை சரிக்கட்டும் விதத்தில் அப்பாவி பயணிகளிடம் மக்களிடம் அபராதம் என்ற பெயரில் அதிகபட்சமான தடாலடி வசூல்களை போக்குவரத்து அதிகாரிகள் நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

இந்த தடாலடி வசூல் சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை எழும்பூர் ரயில் நிலையம், சென்னை பிராட்வே ஆகிய இடங்களிலிருந்து செல்லும் பயணிகளிடம் மாநகர போக்குவரத்து பயணசீட்டு பரிசோதகர்கள் இடையில் வழிமறித்து பயணிகள் எடுத்துச்செல்லும் சொந்த உடமைகளான துணிமணிகள், வீட்டு பயன்பாட்டு பொருட்கள், கைப்பைகள், கைப்பெட்டிகள் ஆகிய அனைத்திற்கும் சுமை கட்டணம் பயணிகள் வாங்காமல் வந்திருப்பதாகக் கூறி அவர்களிடம் அபராதம் என்ற பெயரில் சுமார் 200 ரூபாய் வரை அவர்களிடம் அபராதமாக போக்குவரத்து பரிசோதகர்கள் அடாவடியாக வசூலிக்கிறார்கள்.

போக்குவரத்து விதிகளின் படி ஒரு பயணிக்கு குறைந்த தூர பயணகட்டணம் 5 ருபாய் எனில் சுமைகட்டணம் 5 ருபாய் தான் வாங்க வேண்டும் ஆனால் மாநகர போக்குவரத்து கழக பயணசீட்டு பரிசோதகர்கள் 10 ருபாய் சுமை கட்டணம் வாங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள் (இது வியாபார பொருட்கள் கொண்டு வருபவர்களுக்கும் அல்லது போக்குவரத்து துறை விதிமுறை அனுமதித்துள்ள எடைக்கு அதிகமாக பொருட்கள் கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்) ஆனால் அபராதமாக எல்லோரிடமும் ரூ 200 வாங்கி விடுகிறார்கள் இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளகிறார்கள்.

இலவசமாக ஏற்றிச் செல்ல வேண்டியே சுமைகளுக்கு பயணிகள் அதிக பட்ச தொகை செலுத்துகின்றனர் பேருந்தில் பயணம் செய்வோர் பெரும்பாலும் அடித்தட்டு மக்கள் தான் என்பது குரூப்பிடத்தக்கது.

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், சில வகை சுமைகள் இலவசமாக எடுத்து செல்ல
அனுமதிக்கபடுகிறது.
பயணிகளின் சொந்த உபயோகத்திற்கான
துணிகள் அடங்கிய கைப்பெட்டிகள், கையடக்கமான
பொருட்கள் போன்றவைகள் நகர பேருந்துகளில் 10 கிலோ வரையிலும்
மாவட்ட பேருந்துகளில் 15 கிலோ வரையிலும், விரைவு பேருந்துகளில் 20 கிலோ வரையிலும் எடுத்து செல்லலாம்.

சென்னை மாநகர போக்குவரத்து துறை அதிகாரிகள் அப்பாவி பயணிகள் மீது அனாவசியமாக சுமத்தப்படும் தேவையற்ற இந்த தடலாடி வசூல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இதை அரசியல் அனுபவமிக்க போக்குவரத்து துறை
அமைச்சர் மாண்புமிகு திரு ராஜகண்ணப்பன் அவர்கள் உடணடியாக தலையிட்டு பயணசீட்டு பரிசோதகர்களின் அடாவடி வசூலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக ஆம் ஆத் மி கட்சியின் சார்பாக வேண்டுகோளாக கேட்டுக்கொள்கிறேன்.

இங்கனம்
S.A.N.வசீகரன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஆம்ஆத்மிகட்சி தமிழ்நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
Facebook
YouTube
YouTube
LinkedIn
Share
WhatsApp