ரூபாய் 67.90 கோடி மக்கள் பணம் காப்பாற்றப்பட்டது

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் நினைவகம் கட்ட உயர்நீதிமன்றம் தடை!!
ஆம்ஆத்மி தலைவர் வசீகரன் தொடர்ந்த வழக்கின் நோக்கம் வெற்றி!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீடு வேதா இல்லத்தை இரண்டாவது நினைவு நினைவில்லம் (Memorial) கட்ட அப்போதைய திரு.எடப்பாடி பழனிசாமி அரசு முடிவு செய்தது.

அதற்காக அந்த வீட்டின் மதிப்பு தொகையாக ரூபாய் 67.90 கோடி நிலம் மற்றும் கட்டடம் மதிப்பாக நிர்ணயித்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தமிழக அரசு மக்கள் பணத்தை டெபாசிட் செய்தது,
அதில் 36.90 கோடி ரூபாய் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கிக்காக சேர்த்து மொத்த தொகையாக மேற்கண்ட ரூபாய் 67.90 கோடி தமிழக அரசால் செலுத்தப்பட்டது.

தமிழக அரசு ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருந்த நிலையில் ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கிக்காக மக்கள் பணத்தை எடுத்து செலவிட முடியாது மேலும் அது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மக்கள் தவித்துக் கொண்டிருந்த நேரம் இந்த பணம் ஏழை எளிய மக்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிதி அது
எனவே ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கிக்காக ரூ 36.90 கோடியுடன்
இந்த வீட்டின் மொத்த மதிப்பு தொகையாக ரூ 67.90 கோடி தமிழக அரசு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் செலுத்திய பணத்திலிருந்து வருமான வரித்துறை எடுப்பதை தடை செய்ய வேண்டும்.

தனிப்பட்ட ஜெயலலிதா அவர்கள் செலுத்தவேண்டிய வரி பாக்கியை தமிழக அரசு செலுத்துவது மக்கள் பணத்தை எடுத்து கொடுப்பது தவறானது இது ஒரு தவறான முன்னுதாரணம் கடந்த ஆண்டு 2020 செப்டம்பர் மாதம் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்தேன்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் 8/9/2020 விசாரனைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் ஜெயலலிதா வீடு வேதா இல்லம் தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் தொடர்ந்த வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கும்படியும், அதே வழக்கை விசாரிக்கும் அமர்வில் முறையிட்டுக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து நிலுவையிலிருந்த தீபா தீபக் அவர்களின் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது தீர்ப்பில் ஜெயலலிதாவின் வேதா இல்லம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மகன் தீபக் ஆகிய இருவருமே வாரிசுதாரர்கள் ஆகவே வீட்டை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்புனால் மக்களின் வரிப்பணம் ரூபாய் 67.90 கோடி காப்பாற்றப்பட்டு இருக்கிறது.
ஜெயலலிதா என்ற தனி நபருக்கு அவர் செலுத்தாத செலுத்த தவறிய வருமான வரி பாக்கி ரூபாய் 36.90 கோடியை அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அரசு செலுத்தியது தவறானது கண்டிக்கத்தக்கது இதற்கு நீதிமன்றம் சம்பட்டி அடியை அதிமுகவுக்கு கொடுத்திருக்கிறது.

தீபா தீபக் வழுக்கு தொடர்ந்ததன் நோக்கம் வேதா இல்லத்தை கைப்பற்றுவது.
நான் (வசீகரன்) வழக்கு தொடர்ந்ததன் நோக்கம் மக்கள் வரிப்பணம் விரயமாக்காபடுவதை தடுப்பதே.

ஆம்ஆத்மிகட்சி சார்பில் நான் (வசீகரன்) தொடுத்த இந்த வழக்கின் நோக்கம் வெற்றி பெற்றிருக்கிறது, மக்கள் பணம் ரூபாய் 67.90 கோடி காப்பாற்றப்பட்டிருக்கிறது.
இந்த தீர்ப்பை தமிழக ஆம்ஆத்மிகட்சி வரவேற்கிறது.

இங்கனம்
S.A.N.வசீகரன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஆம்ஆத்மிகட்சி
தமிழ்நாடு
25/11/2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp