மலையாளம் திரைப்பட உலகில் 2015ஆம் ஆண்டு வெளியான அடி கப்யாரே கூட்டமணி என்ற ஹாரர் கலந்த காமெடி திரைப்படம்தான் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளி வந்திருக்கும் திரைப்படம்தான் ஹாஸ்டல்.

ஒரு மொழியில் வெற்றி பெற்ற திரைப்படங்களை மற்ற மொழியில் கெடுக்காமல் எடுப்பதே ஒரு கலைதான்.
அசோக் செல்வன் தெகிடி, ஓ மை கடவுளே” மன்மத லீலை என சில திரைப்படங்களில் நல்ல நடிப்பை கொடுத்தார்.கல்லூரி விடுதியில் நடக்கும் மாணவர்களின் காமெடி கலாட்டாதான் இந்த ‘ஹாஸ்டல்’ திரைப்படம்.கதாநாயகன் அசோக் செல்வன் தனது நண்பர்களுடன் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
அந்த விடுதியில் ஒருநாள் இரவு மட்டும் கதாநாயகி பிரியா பவானி சங்கர் தன்னை தங்க வைக்குமாறு கதாநாயகன் அசோக் செல்வனிடம் உனக்கு ஐம்பதினாயிரம் பணம் தருகிறேன் என கூறுகிறார் அதற்கு கதாநாயகன் அசோக் செல்வன் சம்மதம் தெரிவிக்கிறார்.
ஆண்கள் தங்கி இருக்கும் கல்லூரி விடுதிக்குள் கதாநாயகி பிரியா பாவனி சங்கர் அழைத்துக்கொண்டு விடுதிக்குள் நுழைகிறார்.ஆனால் சூழ்நிலை காரணமாக கதாநாயகி பிரியா பவானி சங்கர் அங்கு மாட்டிக் கொள்கிறார்.
ஆண்கள் விடுதியிலிருந்து கதாநாயகி பிரியா பவானி சங்கர் வெளியேறினாரா? இல்லையா? என்பதுதான் இந்த ஹாஸ்டல் திரைப்படத்தின் மீதிகதை.
கதாநாயகன் அசோக் செல்வன். ஆண்கள் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவராக கதாபாத்திரத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.இந்த விடுதிக்கு முன்னாள் ராணுவ அதிகாரி நாசர் தலைமை தாங்குகிறார்.
அடிக்கடி ஓடி ஒளிந்து கொள்வதைத் தவிர வேறு எந்த நடிப்பையும் கொடுக்க முடியாமல் தவிக்கிறார் கதாநாயகி பிரியா பவானி சங்கர்.
கதாநாயகன் அசோக் செல்வன் மற்றும் கதாநாயகி பிரியா பவானி சங்கர் ஜோடி பார்ப்பதற்கு அழகாக உள்ளது.
நாசரின் நடிப்பு அருமை.
முனிஷ்காந்த் காமெடி செய்கிறேன் என இவர் செய்வதெல்லாம் தாங்க முடியலடா சாமி.
கதாநாயகன் அசோக் செல்வனின் நண்பர்களாக வரும் சதீஷ் மற்றும் விஜய் டிவி யோகி அவர்களது கூட்டாளிகள் செய்யும் சேட்டைகள் சில இடங்களில் ரசிக்கும்படியாக உள்ளது.
பேயாக அறந்தாங்கி நிஷா. ஹாஸ்டலுக்குள் மகளைத் தேடி வரும் ரவி மரியா அன்ட் கோவை பயமுறுத்தி ஓட ஓட விரட்டுகிறாராம்.
பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு அருமை.
இசையமைப்பாளர் போபோ சாஷி குத்து பாடல்கள் கேட்கும் ரகம்.
திரைப்படத்தின் பின்னணி இசையும் படத்திற்கு ஏற்றவாறு உள்ளது.
ராகுலின் படத்தொகுப்பு கதைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது.
ஒரே ஒரு ஹாஸ்டல். அதையும் செட் போட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.
திரும்பத் திரும்பக் காட்டினாலும் எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கிறது.
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தை, தமிழ் மக்களுக்கு ஏற்றுள்ளனர்