பெயருக்கு களங்கம் -வே பொன்ராஜ் காவல்துறை ஆணையரிடம் புகார்

என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில பேர் எனது புகைப்படத்தை பயன்படுத்தி, எனது பெயரைப் பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக பத்திரிகைகளில் செய்தி பார்த்தேன்.
என் மீது களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அபாண்டமான பழிகளை ஏற்படுத்தி வரக்கூடிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை ஆணையாளரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
என் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி யாராவது தவறான செயல்களில் ஈடுபட்டால் எனக்கு தகவல் தெரிவிக்கவும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
வெ. பொன்ராஜ்