பிளட் மணி ஜீ5 OTT தளத்தில், அதிக எண்ணிக்கையிலான பார்வைகளை பெற்று, புதிய சாதனைகள் படைத்து வருகிறது.‘

ஜீ5- ஒரிஜினல் வெளியீடான, ‘பிளட் மணி’ (Blood Money) திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் இதயங்களை ஒருங்கே வென்றுள்ளது !ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 24 அன்று நேரடியாக வெளியான சஸ்பென்ஸ் டிராமா திரைப்படமான ‘பிளட் மணி’ (Blood Money) உலகமெங்கும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் ப்ரியா பவானி சங்கர், ஷிரிஷ், கிஷோர் நடிப்பில் வெளியான, ‘பிளட் மணி’ திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்று,

ஜீ5 OTT தளத்தில், அதிக எண்ணிக்கையிலான பார்வைகளை பெற்று, புதிய சாதனைகள் படைத்து வருகிறது.‘

பிளட் மணி’ (Blood Money) திரைப்படம் சமூகத்தில் ஊடகங்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என கூறும் படைப்பாக உருவாகி பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது, பிளட் மணி திரைப்படம், ஊடகங்களின் உண்மையான சக்தியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படமாக வந்துள்ளது.

ஒரு அற்புதமான கதையுடன், சமூகத்தின் மீதான அழுத்தமான கேள்வியுடன், எளிய மனிதர்களின் வலியை சொல்லும் படைப்பாக, இப்படம் இருப்பதாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். நடிகர்களின் நடிப்பு, சிறப்பான திரைக்கதை, தொழில்நுட்பத்தில் வலுவான உருவாக்கம் என அனைத்து அம்சங்களும் இப்படத்தினை ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவமாக மாற்றியுள்ளது. படத்திற்கு கிடைத்து வரும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்பும், பாராட்டுக்களும் படத்தின் மீதான கவனத்தை அனைத்து தரப்பிலும் பெருமளவு அதிகரித்து, பெரும் வெற்றியை தந்து வருகிறது.

இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் உருவான இப்படத்தை எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் இர்பான் மாலிக் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். உலகமெங்கும் ஜீ5 OTT தளத்தில் இப்படத்தை காணலாம்.

திரைக்கதை, வசனம் – சங்கர் தாஸ்ஒளிப்பதிவு – G பாலமுருகன் DFTஇசை – சதிஷ் ரகுநந்தன்கலை – சூர்யா ராஜீவன்படத்தொகுப்பு – பிரசன்னா GKபாடல்கள் – Kugai M புகழேந்தி

உலகமெங்கும் OTT தளங்களுக்கிடையேயான போட்டி கடுமையாகி கொண்டிருக்கும் வேளையில், ZEE5 அதன் சந்தாதாரர்களுக்கு பலவிதமான ஆச்சரியமிக்க, பொழுதுபோக்கு மற்றும் அழுத்தமான ஒரிஜினல் கதைகளை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, விநோதய சித்தம், டிக்கிலோனா, மலேசியா டூ அம்னீஷியா மற்றும் பல பிளாக்பஸ்டர் படங்களை தொடர்ச்சியாக தந்து வருவதில், உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு ZEE5 சிறந்த பொழுதுபோக்கு தளமாக கவனத்தை ஈர்க்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp