நானி மற்றும் ஸ்ரீகாந்த் ஒதாலா வின் படைப்பு “தசரா”படத்தின் படப்பிடிப்பு கோதாவரிக்கானியில் நடந்து வருகிறது

நேச்சுரல் ஸ்டார் நானி தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் தரமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது பழங்கள் சிறந்த கதைசொல்லி படங்களாகவும் அமைகிறது. இந்த வகையில் அவரது கலந்த படங்களையும் தாண்டி சிறந்த படமாக தசரா ஆக்ஷன் மற்றும் மாசு கலந்த ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்கத்தில் உருவாகி வருகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் தசரா திரைப்படம் ஸ்ரீலக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் நானியின் முதல் பான் இந்தியத் திரைப்படமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 

இத்திரைப்படத்தின் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ஒரு பாடல்  

  படப்பிடிப்பு பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரிக்கானி (தெலுங்கானா) பகுதியில் நடைபெற்று வருகிறது, படமாக்கப்பட்டு வருகிறது. RRR படத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் அமைத்து, தேசத்தையே வியப்பில் ஆழ்த்திய பிரேம் ரக்‌ஷித் மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இப்பாடலுக்காக படக்குழு கடினமாக உழைத்துள்ளது. இப்பாடல் படப்பிடிப்பில் 500 நடனக் கலைஞர்கள் பங்கேற்க, பிரம்மாண்டமாக இந்தப் பாடல் படமாக்கப்பட்டு வருகிறது.

நடிகர் நானி மாஸ் மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தசரா’  படத்தின் ‘ஸ்பார்க் ஆஃப் தசரா’ காட்சித்துணுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றது மற்றும் அதில்  நானியின் மாஸ் கெட்அப் மற்றும் மூர்க்கமான அவதாரம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

 ஒரு அழுத்தமான  டிராமா திரைப்படமாக உருவாகிறது. கோதாவரிகனியில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் கதையாக  அமைக்கப்பட்டுள்ளது.

சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

நடிகர்கள் : நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சாய் குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு: 

இயக்கம் – ஸ்ரீகாந்த் ஒதெலா

தயாரிப்பு –  சுதாகர் செருக்குரி

தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீ லக்‌ஷ்மி  வெங்கடேஸ்வரா சினிமாஸ்

ஒளிப்பதிவு –  சத்யன் சூரியன் ISC 

இசை – சந்தோஷ் நாராயணன் 

எடிட்டர் – நவின் நூலி 

தயாரிப்பு வடிவமைப்பாளர் – அவினாஷ் கொல்லா 

நிர்வாகத் தயாரிப்பாளர் – விஜய் சாகந்தி 

மக்கள் தொடர்பு –  சதீஷ் குமார் (AIM) – தமிழ் – வம்சி-சேகர் – தெலுங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *