துண்டு துண்டாக உடையும் டத்தோ ராதாரவியின் எதிரிகள்!!!

செவுத் இண்டியன் சினி டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ யூனியனின் 2022 – 2024 வருடத்திற்கான தேர்தல் பிப்ரவரி 24-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இந்த டப்பிங் யூனியன் தேர்தலில் இரண்டு அணிகளாக இருக்கிறார்கள்.

டத்தோ திரு ராதாரவி அவர்களின் தலைமையிலான அந்த வெற்றி அணி சேர்ந்த 23 பேர் தேர்தலில் போட்டியிடுகிறது.

சங்கத்திற்கு எதிர்ப்பாக இருக்கும் அணியினர் ஒரு பக்கம்.

செவுத் இண்டியன் சினி டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ
யூனியன் தேர்தலில் நடிகர் டத்தோ திரு ராதாரவி அவர்கள் தலைமையிலான வெற்றி அணியை எதிர்த்து எதிர் அணியினர் 12 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

மொத்தம் 23 பதவிகளுக்கு ட்த்தோ திரு.ராதாரவி அவர்களின் தலைமையிலான அணி மனுதாக்கல் செய்து விட்டனர்.

அதன் பிறகு ட்த்தோ திரு.ராதாரவி அவர்களின் தலைமையிலான வெற்றி அணியினரை எதி்ப்பதாக கூறும் எதிர் அணியினர் 12 பேர் மனுதாககல் செய்தனர்.

அதில் விசாரித்ததில்,
அவர்களோடு சேர்ந்து நிற்க மற்றவர்கள் அனைவரும் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர் அணியை சேர்ந்த 12 பேரிலும் ஒருவர் தன்னுடன் நிற்பவர்களிடமே இவர்கள் உண்மையாயில்லை என்றும்,

செயற்குழு உறுப்பினர்கள் பதவிகள் மொத்தம் 14 பேர் போட்டியிட வேண்டும்.

ஆனால் அதில் இரண்டு பேர்தான் குறைவதாக இருப்பதாகவும் தன்னையும் வேட்புமனு தாக்கல் செய்ய கேட்டுக் கொண்டதால் தாக்கல் செய்ததாகவும்,

கடைசியில் பார்த்தால், இரண்டு பேர்தான் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனுதாக்கல் செய்ததை பார்த்து

இதில் அவரையும் துாண்டி விட்டு வேட்புமனு போட சொன்னதால்தான் வேட்புமனு தாக்கல் செய்தாகவும்,

ஆனால் முதல் நாளே கடவுள் புண்ணியத்தில் அவர்கள் எவ்வளவு பொய்யானவர்கள் என்றும் எதற்கும் உதவாதவர்கள் என்பது எனக்கு தெரிந்ததால் தனது வேட்பு மனுவை வாபஸ் வாங்கி விட்டதாகவும் தெரிகிறது.

23 பேர் கொண்ட நிர்வாகத்திற்கு 23 பேரை சேர்க்க முடியாத இவர்களுக்கு தேர்தல் ஒரு கேடா என வாபஸ் பெற்ற உறுப்பினர் புலம்பினாராம்.

திரு.ராதாரவியின் வெற்றி அணிக்கு எதிராக மனு தாக்கல் செய்தது 12 பேர் .அதுவும் இப்போது 11 பேராக குறைந்து விட்டது.

அந்த எதிர் அணியில் மனுத் தாக்கல் செய்திருந்த 11 பேருக்குள்ளும் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்.

வயதில் மூத்தவரான தன்னை விட்டுவிட்டு பி.ர்.கண்ணன் தலைவராக போட்டியிடுவதில், திரு.மயிலை.எஸ்.குமார் அதிருப்தி ஆனதால் நடக்கவிருக்கும் இந்த தேர்தலை தடை செய்ய வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்களாம்.

“என்னய்யா இது நாடகம்? ஒருபக்கம் இவங்க வேட்புமனு தாக்கல் செய்வாங்களாம்…

மற்றொரு பக்கம் எதிர் அணியை சேர்ந்த இவங்களே டப்பிங் யூனியன் தேர்தல் நடக்கக்கூடாதுன்னு இவர்களே கேஸ் போடுவாங்களாம்…

என்ன நினைச்சிக்கிட்டிருக்காங்க!?
தெரியல.

ஒரு அணியா எதிர்த்து நிற்க வக்கில்ல…

சும்மா போக வேண்டியது தானே?

எதிரணியை சேர்ந்தவர்கள்
வீம்புக்குன்னா நின்னு பல லட்சம் உறுப்பினர்களின் பணம் வீணாகிறதுக்கு காரணமே இவங்கதான்…

ஆனா எதுக்கெடுத்தாலும் சங்கத்தையும் எங்க தலைவர் (ராதாரவி) அவர்களையும் வீண் பழி கூறுகிறார்கள்.

இவர்கள் அனைவரும் பசுந்தோல் போர்த்திய புலி என இவர்களுடைய இரட்டை முகம் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

பெரும்பாலான உறுப்பினர்கள் கடும் கோபத்தில் உள்ளார்களாம்.

இன்னும் தேர்தலே ஆரம்பிக்கல…

அதுக்குள்ள ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாங்க இவர்கள் ஆட்டம் அடங்கி விடும் என உறுப்பினர்களும் கூறிவருகின்றனர்.

தேர்தல் நாளுக்குள்ளயே அவனுங்க கூடாரம் காலியாயிடும் போலருக்கு என்று சிரிக்கின்றனர்.

அதில் ஒரு உறுப்பினர் கூறினார் இவர்கள் கனவில் தொலைத்ததை நிஜத்தில் தேடுகிறார்கள் என ஒரு உறுப்பினர் கூறுகிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *