திருப்பதி வெங்கடாசலபதியின் வாழ்க்கை வரலாறு

திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் சார்பாக , பிரம்மாண்ட நாயகன் திரைப்படத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது மற்றும் இறைவன் மனமார்ந்த திருப்பதியின் வரலாறு திருப்பதி வெங்கடாசலபதியின் வாழ்க்கை வரலாறு பற்றிய இரு மொழி திரைப்படம் .

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவரான திரு.துஸ்மாந்த குமார்தாஸ் , திரைப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்த பிறகு , திருப்பதி வெங்கடாசலபதி கடவுளாக நடித்த இளம் நடிகர் ஆரியன் ஷ்யமை தனிப்பட்ட முறையில் அழைத்து வாழ்த்தினார் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் சார்பாக ஒரு கடிதத்தை நடிகருக்கு அனுப்பினார் . அதில் இளம் நடிகர் ஆர்யன் ஷ்யாம் , மற்றும் இயக்குனர் திருமதி ஞானம் பாலசுப்ரமணியம் ( பம்பாய் ஞானம் ) மற்றும் பிரமாண்ட நாயகன் திரைப்படத்தின் முழு குழுவினருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்கள் .

திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவரான திரு.துஸ்மந்த குமார்தாஸ் . ஆந்திர மாநில ஆளுநர் திரு.பிஷ்வபூஷன் ஹரிச்சந்தனின் மருமகன் ஆவார் .

இளம் நடிகர் ஆர்யன் ஷ்யாமுக்கு திருப்பதி வெங்கடாசலபதி வேடத்தை ஏற்று நடிக்கும் உத்வேகம் முக்கியமாக எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ” ஸ்ரீ ராகவேந்திரா ” படத்தில் திரு.ரஜினிகாந்த் அவர்களைப் பார்த்த பிறகு வந்தது .

பிரமாண்ட நாயகன் திரைப்படத்தின் இயக்குநர் ” கலைமாமணி ” திருமதி ஞானம் பாலசுப்ரமணியம் ( பாம்பே ஞானம் ) , ஒளிப்பதிவு எஸ்.ஆனந்த் பாபு , இசை திவாகர் சுப்ரமணியம் , கிரியேட்டிவ் தலைவர் மோகன் பாபு .

நாயகனாக ஆரியன் ஷ்யாம் நடிக்கிறார் . அவர் சீனிவாசன் , வேதவன் , திருப்பதி பாலாஜி மற்றும் மகாவிஷ்ணு ஆகியோராக நடிக்கிறார் . அதிதி மகாலட்சுமியாகவும் , சந்தியா ஸ்ரீயாக பத்மாவதி தேவியாகவும் நடிக்கிறார்கள் . படம் விரைவில் வெளியாக உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *