திட்டமிட்டபடி பிரம்மாண்டமாக வெளியாகிறது ஜெயில்

திட்டமிட்டபடி பிரம்மாண்டமாக வெளியாகிறது ஜெயில்.. தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றியது யார் தெரியுமா?

திட்டமிட்டபடி ஜெயில் திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். ‌‌இவரது நடிப்பில் பிரபல முன்னணி இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயில். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்னதி நடிக்கிறார். மேலும் ராதிகா, ரவிமரியா, நந்தன் ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பல்வேறு பிரச்சினைகளை சந்தித்த இந்த திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. இதனையடுத்து இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது படம் திட்டமிட்டபடி டிசம்பர் 9ஆம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தை தமிழகம் முழுவதும் எம் எஸ் எம் பிலிம் டிரேடர்ஸ் நிறுவனத்தின் சார்பாக எம் செண்பகமூர்த்தி அவர்கள் வெளியிடுகிறார் என இந்த படத்தின் முதல் பிரதி தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *