ஆக்ஷன் நிறைந்த ரேஸ் – மட்டி விமர்சனம்

யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கில் நடிக்கின்றனர். கே.ஜி.எஃப் படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூப் இந்த படத்திற்க்கு இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குநர் பிரகபல் இப்படத்தை இயக்கியுள்ளார்.


அண்ணன் தம்பிகளான ரிதன் மற்றும் கார்த்தி ஒரு பிரச்சனையால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதில் கார்த்தி கல்லூரியில் படிக்கும்போது மட்டி ரேசில் கலந்துகொண்டு வெற்றி பெறுகிறார். அந்த ரேஸில் தோல்வியடைந்த ஒருவர் கார்த்தியை தோற்கடிக்க சபதம் எடுக்கிறார். இதனால் பிரச்சனை ஏற்படுகிறது.Advertisement
இதிலிருந்து தம்பியை காப்பாற்றுவதற்காக அண்ணன் ரிதன் களமிறங்குகிறார். இறுதியில் அண்ணன் தம்பி இருவரும் ஒன்று சேர்ந்து வில்லனை எதிர்த்தார்களா? ரேஸில் ஜெயித்தார்களா? என்பதுதான் படத்தின் கதை.
ஹாலிவுட் படங்களில் பார்த்து ரசித்த ரேஸ் காட்சிகள் தமிழ் சினிமாவை பார்க்கும் போது அழகாக இருக்கிறது. மலைகளில் கார் ஓட்டும் காட்சிகளிலும் சரி வில்லன் சண்டை காட்சிகளிலும் சரி அசத்தியிருக்கிறார்கள். நாயகிகளாக வரும் அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் இருவருக்கும் பெரிதாக கதாபாத்திரம் இல்லை.
மட்டி ரேஸ் பற்றி என்பது பலருக்கும் தெரியாது. அதை சரியான முறையில் திரைக்கதை அமைத்து ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமாக இயக்கி உள்ளார் இயக்குனர் பிரகபல்.
படத்தில் காதல் காமெடி காட்சிகளை விட ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை கவரும்படி உள்ளது.கே.ஜி.ரதீஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். கேஜிஎஃப் படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூப் இந்த படத்திற்கும் கூடுதல் பலத்தை சேர்த்துள்ளார்.